பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜாக்டோ ஜியோ அமைப்புகள் மீது அரசு மிக கடுமை காட்ட வேண்டிய நேரமிது

மிக பெரும் தொகையில் சம்பளம், வேலை நேரம் என்பது ஒரு நாளில் 5 மணிநேரமே இருக்கும், வாரம் இருநாள் விடுமுறை மற்றும் அரசு விடுமுறை. இன்னும் சம்பளத்தோடு கூடிய ஏகபட்ட விடுமுறைகள் அவர்கள் எடுத்துகொள்ளலாம். காலாண்டு , அரையாண்டு, மேமாதம் என சம்பளத்தோடு கூடிய விடுமுறை. மற்ற அலுவலகர்கள் யாருக்காவது இப்படி உண்டா? இவர்களுக்கு மட்டும் அந்த பெரும் சலுகை உண்டு. சம்பளம் போக அந்த படி இந்த படி என பல சலுகைகள், இது போக […]

இன்று திலீபன் உண்ணாவிரதம் தொடங்கிய நாள்.

இன்று திலீபன் என்பவர் இலங்கையில் அன்று உண்ணாவிரதம் தொடங்கிய நாள். அதனால் ஆரம்பித்தாயிற்று அங்கிள் கோஷ்டி. இந்தியா திலீபனை காப்பாற்ற தவறியது, இந்திய துரோகம், இந்தியா ஒழிக. ஹேய்ய்ய் இன்னபிற ஆட்டங்கள். திலீபனை காப்பாற்ற வாய்ப்பு இருந்தது, அவன் கேட்டது உடனே நிறைவேற்றபடும் கோரிக்கை அல்ல. அதற்கு சில அவகாசம் வேண்டும், அவனை உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என்ற இந்தியாவின் வேண்டுகோரிக்கையினை புலிகள் கண்டுகொள்ளவே இல்லை அன்று திலீபனின் சாவு அவர்களுக்கு வேண்டியிருந்தது, அதனை வைத்து மக்களை உணர்ச்சியூட்டும் […]

இன்று அண்ணாவின் பிறந்த நாள்

ச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது, டெல்லி என்ன டெல்லி?, உலக நாடுகளின் பெரும் […]

இன்று கலைஞரின் திருமண நாள் !

மெய்விவாகம், நமஸ்காரம், ஆசீர்வாதம், பந்து மித்திரர், ஸ்ரிமான், ஐஸ்வர்யம் போன்ற அந்நாளைய அழைப்பிதழ் வார்த்தைகள் இன்னபிற ஜோதிட நேரங்கள் இல்லை. அந்நாளைய வழக்கபடி இது பெரும் மாறுதல், பெரும் சீர்திருத்தம். மனிதர் அன்றே அசத்தியிருக்கின்றார். ஆனானபட்ட விஸ்வாமித்திரர் நடத்தி வைத்த ராமர் திருமணமே சிக்கலான உலகில், அண்ணாதுரை நடத்திவைத்த திருமணம் பெரும் வாழ்வு வாழ்ந்தாயிற்று அவரவருக்கு விதித்தபடி நடக்கும் என்பதும், ஒருவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும் , அது முன் ஜென்ம புண்ணியமோ இல்லை அடுத்த ஜென்மத்திற்கான […]

நவோதய பள்ளிகள் தமிழ் கல்விக்கு ஆபத்தா?

நவோதய பள்ளிகள் தமிழ் கல்விக்கு ஆபத்து என பலர் பொங்கி கொண்டிருக்கின்றார்கள், எதிர்ப்பதில் முக்கால்வாசி மெட்ரிகுலெஷன் பள்ளி வகையறா, மீதி திராவிட வகையறா. சரி, இவ்வளவு நாளும் தமிழ் கல்வியினை , தமிழை எப்படி காத்தீர்கள் என கேட்டால் பதில் இருக்காது. ஆங்கிலமும் சரியாக தெரியாமல், சுத்த தமிழும் தெரியாமல் ஒரு வித்தியாசமான மொழியினை உருவாக்கி வைத்ததை விட இங்கு ஒன்றும் கிழிக்கவில்லை. பிரபல தமிழ் தலைவர்களின் வாரிசுகள் கூட தமிழ் கல்வி படித்ததில்லை என்பது வேறு […]

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்

நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம்:  பிரதமர் மோடி துவக்கி வைப்பு நாடு முழுவதும் இது அவசியம், விரைவில் இது எல்லா பெருநகரங்களையும் இணைக்கட்டும் ஆனால் இந்த பரிவார கும்பல் அயோத்தி டூ மும்பை, அயோத்தி டூ சென்னை புல்லட் ரயில் அவசியம் , அப்பொழுதுதான் ராமர் கோவில் கட்ட கரசேவகர்களை விரைவாக திரட்டமுடியும், ஓடி சென்று பசுமாடுகளை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைக்கும் ஆபத்தும் உள்ளது

சல்யூட் சார், மிஸ்டர் டிரம்ப்…

இந்த டிரம்ப் என்பவரை கொஞ்சம் கவனிக்கத்தான் வேண்டியிருக்கின்றது, மனிதர் கொஞ்சம் சவால்களை எடுக்கின்றார் அதாகபட்டது சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே அமெரிக்க நிதியில் இயங்கும் நாடு பாகிஸ்தான். அவர்களுக்கும் அன்றைய சோவியத்துடனான மோதலிலும், இன்னபிற விஷயங்களிலும் பாகிஸ்தான் தேவைபட்டது. அதுவும் தாலிபான்களுக்கு கொம்பு சீவி விட்டு ரஷ்யாவினை ஆப்கனிலிருந்து விரட்டிய காலங்களில் எல்லாம் அமெரிக்காவின் பெரும் செல்லபிள்ளை பாகிஸ்தான். அதற்கு அமெரிக்கா கொடுத்த ஆயுதங்கள் கொஞ்சமல்ல, அவர்கள் அணுகுண்டு செய்ததை கூட தடுக்க அமெரிக்கா விரும்பவில்லை காஷ்மீர் […]

ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள்…

ஆளாளுக்கு நீட் என புலம்புகின்றார்கள், கூட்டம் நடத்துகின்றார்களே தவிர, உருப்படியாய் போராட ஒருவரிடமும் திட்டமில்லை. முதலில் தூக்கி எறியபடவேண்டியது மாநில அரசு, அந்த இடத்தில் சரியான திராவிட பார்வை உள்ள அரசு அமைந்தால் ஒழிய நீட்டிற்கு தீர்வு இல்லை நிச்சயம் பாஜக இறங்கிவராது. தமிழக எதிர்ப்பால் அவர்களுக்கு ஒரு நஷ்டமுமில்லை. காரணம் இங்கு கட்சியே இல்லை, மக்கள் எப்படி எதிர்த்தால் அவர்களுக்கு என்ன? நிச்சயம் கண்டுகொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு லாபமோ, நஷ்டமோ இல்லா சிக்கல் இது. நிலமை எல்லை […]

“ஆதி” என்பது என்ன வார்த்தை? தமிழ் வார்த்தை

ஆதித்தன் என்பது தமிழ்பெயரல்ல, அதனால் சி.பா ஆதித்தனார் தமிழர் அல்ல என மறுபடியும் ஒப்பாரி ஆதி என்றால் என்னவென்று கூட தெரியாமல்தான் தமிழகத்தில், தமிழ், தமிழர் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் போல‌ “ஆதி” என்பது என்ன வார்த்தை? தமிழ் வார்த்தை. திருகுறளில் கூட வள்ளுவன் அதனைத்தான் சொல்கின்றார். ஆதி என்றால் தொடக்கம் , மூலம் என்று பொருள். இதனால்தான் வடமொழியில் சூரியன் ஆதித்யன் எனபட்டது, உலகின் மூலம் என்று அதன் பொருள். ஆதி எனும் தமிழ்வார்த்தையே சமஸ்கிருதத்தில் கலந்தது. […]

நவோதயா பள்ளி வந்தாவது தாய்மொழியினை காக்கட்டும்

 நவோதயா பள்ளிகளில் இந்திக்கு முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு இவர் நடத்தும் பள்ளியில் முழுக்க முழுக்க ஆங்கிலம், இதனை எல்லாம் குற்றம்சாட்டுவது யார்? கேரளா, கன்னடம், தெலுங்கானா எல்லாம் இந்தி திணிப்பு ஆபத்தை புரிந்துகொண்டன, கட்டாய தாய்மொழி விஷயத்தில் இறங்கிவிட்டன. தாய்மொழி கற்பிக்காக கல்வி நிலையங்கள் இயங்கமுடியாது என்பது முதல் பெரும் நடவடிக்கையில் அவை இறங்குகின்றன. அவர்களின் மொழிபற்று வாழ்த்துகுரியது இவ்வளவிற்கும் தெலுங்கானா தவிர (அதுவும் காங்கிரஸ் அடிமைதான்) மற்ற இரண்டும் தேசிய கட்சி ஆளும் மாநிலங்களே, ஆனாலும் […]