பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜப்பான் சாமி … ஹரியானா சாமி …

முன்பு ஜப்பானில் ஒரு ஆசாமி சாமியாக இருந்தார், அவர் பெயர் ஷோகா ஆஷகரா. நான் தான் சிவன், இயேசு மற்றும் புத்தனின் மொத்த கலவை என சொல்லி போதித்தார், அவரின் அட்டகாசங்கள் ஏராளம், காமெடிகள் பெரும் சுவாரஸ்யம், அதனை எல்லாம் எழுதினால் பல நாட்கள் ஆகும். அதனால் சுருக்கமாக சொல்லிவிடலாம். நானே கடவுள் என கஞ்சா கலந்து அவர் கொடுத்த தீர்த்தத்தில் மயங்கி கிடந்தனர் சீடர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார் பின் ஓம் ஷிரிங்யோ எனும் ஆசிரமத்தை […]

அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன்

மிக அபத்தமான ஆய்வு ஒன்றில் இறங்கியிருக்கின்றது நக்கீரன் பத்திரிகை அதாவது தாதுமணல் என்பது அணுசக்தி பொருளாம், அதனால் அதனை ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்திவிட்டதாம், இல்லையென்றால் பாகிஸ்தானும் சீனாவும் இந்திய மணல் கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்குமாம் இப்பொழுது இங்கு தாதுமணல் நின்றுவிட்டதால் இலங்கையில் இருந்து வாங்கி  அணுகுண்டு செய்கின்றார்களாம் இதனை விட பெரும் அபத்தமாக ஒரு பத்திரிகை உளற முடியாது. தாது மணலில் தோரியம் எனும் அணுசக்தி ஒரு விஷயம் மிக குறைந்த அளவில் இருப்பது உண்மை, […]

அதிமுக அதிகார மோதல்….

பன்னீரும் பழனிச்சாமியும் ராமலட்சுமணர்களாக இருக்க வேண்டும் : அதிமுகவினர் வாழ்த்து பாஜகவிற்கு அடிமையான பின் இப்படித்தான் புத்தி போகும், போகட்டும் ஆக தசரதன் யார்? கைகேயி யார்? கூனி யார்? என்று சொல்லாமல் சொல்கின்றார்கள் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது ரத்து: அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் என்னது சசிகலா நியமணம் ரத்தா? இனி தினகரன் கோஷ்டி சும்மா இருக்குமா?, நாஞ்சித் சம்பத் எல்லாம் இனி அந்த ஷெரில் மாதிரி ஆடுவார் பாருங்கள் “சின்னம்மா ஜிமிக்கி கம்மல் பழனிச்சாமி சுட்டுட்டு […]

பாடகி சுவர்ணலதா நினைவு நாள். அந்த குயிலுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

மிக இனிய குரல் அது, பெரும் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்திய பாடகர் அவர். இன்றும் அவர் பாடிய பாடல்களை கேட்கும்பொழுது அவர் நினைவு வந்துகொண்டே இருக்கும். நிச்சயமாக அவர் சாகவேண்டிய வயதே அல்ல, ஆனாலும் விதி முந்திகொண்டது. இன்றுவரை அவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பதும் சொல்லபடவில்லை என்பது வேறு விஷயம். அவர் இல்லை அவ்வளவுதான். குரலினை உலகில் அழுத்தமாக பதிவு செய்துவிட்டு அதில் எல்லா நாளும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார் சுவர்ணலதா இன்று அவரின் நினைவு நாள். அந்த குயிலுக்கு ஆழ்ந்த […]

அனிதா பற்றி வரும் செய்திகளில் பல நெருடல்கள்

அனிதா பற்றி வரும் செய்திகள் பல நெருடல்களை ஏற்படுத்துகின்றன‌ அவர் அண்ணனே சொல்கின்றார், “பொறியியல் கலந்தாய்வு சென்றோம், கால்நடை மருத்துவ கலந்தாய்வு சென்றோம் அதெல்லாம் சென்றுவிட்டுத்தான் திமுக பிரமுகர் உதவியுடன் உச்சநீதி மன்றம் சென்றோம்” என்கின்றார். டெல்லி சென்ற விமான செலவு, வழக்கு செலவு பற்றியெல்லாம் அவர் ஒன்றும் சொல்லவில்லை ஆக மருத்துவம் அனிதாவின் ஒரே கனவு என்பது அடிபட்டு போகின்றது, மருத்துவம் தவிர வேறு படிக்கவும் அனிதாவிற்கு விருப்பம் இருந்திருக்கின்றது என்பது தெரிகின்றது, உச்ச நீதிமன்றம் […]

குஷ்பூ ரசிகர் மன்றம் சும்மா விடாது

அய்யா ராமதாஸ், சின்ன அய்யா பாகுபலி எல்லாம் எங்கய்யா போய் தொலைந்தீர்? சினிமாவில் அமலா பால் சிகரெட் குடிக்கின்றார் அய்யா, அதுவும் மூக்கு வழியாக வேறு புகை விட்டு தொலைக்கின்றார். இந்த கவித்துவமான காட்சிக்கு ஒருவன் இசையும் அமைத்திருக்கின்றான் ரஜினி சினிமாவில் சிகரெட் பிடித்து தமிழக இளைஞர்களை கெடுக்கின்றார் என என்னவெல்லாம் செய்தீர்கள்? அவர் படபெட்டியினை எல்லாம் தூக்கி அழிச்சாட்டியம் செய்யவில்லையா? இப்பொழுது என்ன அமைதி? உத்தரவிட்டால் உங்கள் பாட்டாளி தொண்டர்கள் படபெட்டிக்கு பதிலாக அமலா பாலையே […]

கீழவெண்மணியில் ரஞ்சித் எங்கிருந்தார்

கீழவெண்மணியில் ரஞ்சித் எங்கிருந்தார், இன்னும் பெரும் சாதிய படுகொலையில் ரஞ்சித் என்ன செய்தார் : சீமான் சீற்றம் அட பைத்தியக்கார சீமான், கீழவெண்மணி நடக்கும்பொழுது, இம்மானுவேல் படுகொலையின் பொழுது ரஞ்சித் பிறந்திருக்கவே மாட்டானே? சரி மிஸ்டர் சைமன், முன்பு 1983 இலங்கை கலவரம், ஈழ அகதிகள் வருகை, அதனை தொடர்ந்த இந்திய ஆதரவு, கலைஞர் அமிர்தலிங்கம் சந்திப்பு, கலைஞர் அமைதிபடை மீட்க பாடுபட்டது, பத்மநாபா கொலையில் சம்பந்தமாக கலைஞர் ஆட்சியினை இழந்தது . ஈழ போராட்டத்தில் தமிழகம் […]

மொத்தத்தில் 2 பயலும் பிராடுதான்..

அனிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டு எல்லா சாதியும் போராடுகின்றார்கள், ரஞ்சித் இப்பொழுது சாதியம் பேசுவது பைத்தியகாரதனம் : சீமான் ஏம்பா சீமான், இப்படித்தான் 1987ல் கலைஞர் டெசோ என அழைத்தபொழுது வாஜ்பாய், பரூக் அப்துல்லா, பஞ்சாபியர்கள், பட்நாயக், மராட்டிய அரசியல்வாதிகள் உட்பட பலர் வந்து ஈழதமிழருக்கு ஆதரவாய் பேசினர் , போராடினர் அதாவது அப்பொழுது இந்தியாவே ஈழ தமிழருக்கு ஆதரவாய் இருந்தது 1991ல் ராஜிவ் கொலைக்கு பின்புதான் அந்த ஆதரவு அற்று போயிற்று ஆக இந்தியா ஒரு […]

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள்

தமிழகத்தில் ஒவ்வோர் மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அது என்ன மாவட்டம் தோறும்? ஊர் தோறும் திறந்தால் என்ன? எங்கிருந்தோ வந்த பிரிட்டன் காரனும், அரபுகாரனும் சில பள்ளிகளை தமிழகத்தில் நடத்துவதை காண முடிகின்றது. இந்த இந்திய பள்ளிகளை தமிழக முழுவதும் விரிவுபடுத்தினால் அது நல்ல விஷயமே. தமிழுக்காய் போராட்டம் என சொல்லி ஆட்சிக்கு வந்த கட்சிகளின் பிரமுகர்கள் ஆங்கில பள்ளிகளை நடத்தி பணம் குவித்துகொண்டிருப்பது ஒன்றும் […]

குஷ்புவே நமஹ! : 9

சதிகார கேள்விகள்! தப்பிக்கும் குஷ்பு!   திமுகவில் குஷ்பூவினை குறிவைத்து எதிர்ப்புகள் வலுத்தன, சர்ச்சைகள் அதிகமாகின. திமுக எனும் பெரும் இயக்கத்தில் இப்படியான நிகழ்வுகள் உண்டு, பெரும் தலைவர்கள் எல்லாம் நீக்கபட்டிருக்கின்றார்கள், சிலர் தாமாக விலகியிருக்கின்றார்கள். குஷ்பூ திமுகவிலிருந்த நிலை, 1960களில் ஈவிகே.சம்பத் இருந்தது போல் இருந்தது, அவர் திமுகவின் ஆரம்ப கால தலைவர். திமுகவின் தூண்களில் ஒருவர். அண்ணாவும் அவரும் ஒன்றாக பெரியார் பாசறையில் வளர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் புரிதலும் பற்றும் அதிகம். ஆனால் கட்சி […]