பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதாண்டா மொசாத் : 02

முதல் குறி டாக்டர் ஷம்சாரிக்கு வைக்கபட்டது, அவர் பிரான்சில் செல்வாக்காக வாழ்ந்துகொண்டிருந்தார், பிரென்ஞ் பெண்ணைத்தான் திருமணமும் செய்திருந்தார், அந்த ஏரியாவின் குறிப்பிடதக்க புள்ளி. ஆனால் முனிச் படுகொலையில் அவர் சம்பந்தபட்டிருப்பதோ, அவரின் பெரும் தொடர்புகளோ வெளியே தெரியாது. அவர் செய்வதெல்லாம் ஐரோப்பிய பத்திரிகைகளி பாலஸ்தீன நியாயங்களை உணர்ச்சிகரமாக எழுதுவார், அவ்வளவுதான் உலகிற்கு தெரியும், மறுமுகத்தினை மொசாத் மட்டும் அறிந்திருந்தது. நிச்சயமாக அவரை தெருவில் சுடமுடியாது, பிரச்சினை ஆகிவிடும். வீடு புகுந்தால் மனைவி பிரான்ஸ் குடிமகள் அதுவும் பிரச்சினை. […]

மூத்த எழுத்தாளர் கல்புர்கி கொல்லபட்டார்

முன்பு மூத்த எழுத்தாளர் கல்புர்கி கொல்லபட்டார், இப்பொழுது கவுரி லங்கேஷ் எனும் பெண் எழுத்தாளர் சுடபட்டிருக்கின்றார். இதில் கல்புர்க்கி கொலையில் அடிப்படைவாத இந்துத்வா சக்திகள் இருப்பதாக சொல்லபட்டது, இப்பொழுது இப்பெண் எழுத்தாளர் கொலையிலும் அதே பெயர் அடிபடுகின்றது. தேசிய கட்சிகள் ஆட்சியில் இம்மாதிரி சில விஷயங்கள் நடக்கும் அபாயம் இருக்கும் போலும், மக்கள் உரிமைக்கான பிரச்சினைகளை எழுதுவர்கள் மீது தாக்குதல் நடத்துவது காட்டுமிராண்டிதனம் ஐ.எஸ், தாலிபான் ஆளும் நாடுகளில் நடக்கும் கொடூரம் இந்தியாவிலும் எட்டிபார்ப்பது முளையிலே கிள்ளி […]

கமலஹாசனை சந்தித்தார் நக்மா

கமலஹாசனை சந்தித்தார் நக்மா இந்த காங்கிரசுக்கு என்ன ஆனது? முன்பு ரஜினியினை சந்திக்க அனுப்பினார்கள், இப்பொழுது கமலஹாசனை சந்திக்க அனுப்பியிருக்கின்றார்கள். இந்த நக்மாவினை தூதாக அனுப்பினால் எப்படி இவர்கள் காங்கிரசுக்கு வருவார்கள்? இவர்களை காங்கிரசுக்குள் கொண்டுவர ஒரே ஒரு வழிதான் உண்டு. தலைவி குஷ்பூவினை தமிழக காங்கிரஸ் தலைவராக்கினால், இருவரும் அடித்து பிடித்து ஓடிவந்து சத்யமூர்த்திபவனில் நிற்பார்கள் அதனை செய்யாமல் எதனையோ செய்து காலத்தை வீணாக்குகின்றது டெல்லி காங்கிரஸ். தலைவி காட்டும் இந்த கைதான் காங்கிரசின் ஒரே […]

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: டிடிவி தினகரன் அறிவிப்பு தன் 45 வருட காலத்தில் அதிமுக இப்பொழுதுதான் உருப்படியான போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கின்றது. இப்பொழுதும் டெல்லி பழனிசாமி எனும் பொம்மலாட்டம் நடத்தவில்லையென்றால் இதுவும் இல்லை, எப்படியோ அந்த புகழ் மோடியினையே சேரும் வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசினை எதிர்த்து அதிமுக நடத்தபோகும் போராட்டம் இது. மேள தாளத்தோடு, குங்குமம் சந்தணம் எல்லாம் பூசி அமர்க்களமாக வருவார்கள் பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் தினகரன் மீதான பெரா […]

ஸ்டாலின் சொதப்பியது நன்றாக தெரிகின்றது

திமுக செயல் தலைவர் மிச்சர் தின்பதோ அல்லது அல்வா உண்பதோ அவர் விருப்பம், எதுவும் உண்ணட்டும் ஆனால் தமிழகத்தில் எழும் கேள்வி ஒன்றுதான். அனிதாவிற்கு நீட் விஷயத்தில் ஆதரவுகரம் அதிமுக நீட்டவில்லை, அது நீட்டவும் நீட்டாது. ஆனால் திமுக நீட்டியிருக்கின்றது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு என்ற அளவிற்கு சென்றிருக்கின்றார்கள் முன்பு கனிமொழிக்கும் ஆண்டிமுத்து ராசாவுக்கும் ராம்ஜெத்மலானியினை வாதாட வைத்தது திமுக, அதில்தான் ஜாமீன் பெற்றார் கனிமொழி. தயாநிதிமாறனுக்காக வழக்காடிய வக்கீலின் சம்பளம் என்ன என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை இப்பொழுது […]

தமிழருக்காக சீறும் இயக்குனர் வ.கௌதமன்

இவ்வளவு காலமும் எங்கிருந்தார் என தெரியாமல் இருந்துவிட்டு, இப்பொழுது தமிழருக்காக சீறும் வ.கௌதமன் எனும் இயக்குநரின் அழிச்சாட்டியம் அதிகரிக்கின்றது. பிரபாகரனின் கதையினை படமாக எடுப்பேன் என சொல்லி, பிரபாகரனை தமிழக குத்தகையாக எடுத்திருக்கும் அங்கிள் சைமனை வகையாக சீண்டுகின்றார். நிச்சயமாக கௌதமன் அங்கிள் சைமனின் ரோட்டில் கிராஸ் செய்துகொண்டே இருப்பது தெரிகின்றது. அங்கிள் சைமன் இவர் விஷயத்தில் மகா அமைதியாக இருந்தாலும், இப்பொழுது இந்த கவுதமன் யார்? அவன் தமிழனா? தெலுங்கனா? இல்லை ஏலியனா? எனும் ஆராய்ச்சியில் […]

கப்பல் வாங்கவைத்த தமிழன் வ.வு.சி பிறந்த நாள்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிது, அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம். அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு. ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, […]

தமிழக கல்வி முறை : 2

நான் தேடிய என் ஆசிரியர் அன்று மாணவர்களுக்கு 12 கட்டத்திலும் சனி, அவருக்கோ செவ்வாயோ சூரியனோ அல்லது இரண்டுமோ மகா உச்சம். முதல் மாணவன் நோட்டை பார்க்கும் பொழுதே அக்னி தெரித்தது, அப்படியே முதுகில் முஷ்டியை இறக்கினார், தலையில் கொட்டினார், நிமிர்ந்தால் முகத்திலும் அடி, வெளியே ஓடினான் மாணவன், அவனே அன்று பிள்ளையார் சுழி அல்ல பிள்ளையார் குத்து. பின்னர் உள்ளே டம்டம், டப்டப், அம்மா……, டும்ம்ம்ம்ம்ம்ம்ம் என சத்தம் கேட்டு கொண்டே இருந்தது , மாணவன் […]

இதுதாண்டா மொசாத் : 01

(மாவீரன் நெப்போலியனை பார்த்துகொண்டிருந்தோம், இடையில் இந்த முனிச் படுகொலைக்கு பழிதீர்த்த மொசாத் பற்றி பார்துவிட்டு அவர் பக்கம் வரலாம், நெப்போலியன் எங்கும் போய்விடமாட்டார்) பலமுறை அவ்வப்போது நாம் பார்த்த மொசாத்தின் பராக்கிரமங்கள் உண்டு, அவ்வரிசையில் உலகினை மொத்தமாக மிரட்டி, அனைத்துலகும் ஆச்சரியமாக பார்த்த மொசாத்தின் ஆப்ரேஷன்களின் ஒன்றுதான் முனிச் படுகொலை பழிவாங்கல், அதாவது கருப்பு செப்டம்பர் சம்பவத்திற்கு திருப்பி அடித்தது. கருவாகி உருவான நாள்முதலே எதிரிகள் அதிகமுள்ள தேசம் இஸ்ரேல், பல போர்களை சந்தித்தாலும் எதிரிநாடுகளிடமிருந்து கி.மீ […]

குருவே நமஹ…குருவே துணை

குருவே நமஹ…குருவே துணை ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். குருவில்லாத வித்தை பாழ், குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு […]