பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒளி கொடுத்த போராளி : ஹோ சி மின் : 01

வியட்நாம் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றதும் இதே செப்டம்பர் 2ம் நாள், அந்த விடுதலைக்கு அடித்தளமிட்ட அந்த நாயகன் இறந்ததும் இதே நாள். இந்த நூற்றாண்டின் மாபெரும் போராளி அல்லது புரட்சியாளன் யார்? என்பதில் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது வியட்நாமின் ஹோ சி மின். உலகம் உள்ள காலம் வரை நிற்கும் அவரது சாதனை. காரணம் யாரும் எளிதில் அந்த சாதனை சிகரத்தின் அடிவாசலை கூட நெருங்குவது சிரமம். சோழர்கள் காலத்திலே நாம் வியட் அல்லது […]

“பாண்டியன்” என்றொரு குஷ்பூ நடித்த படம்

“பாண்டியன்” என்றொரு குஷ்பூ நடித்த படம் ஓடிகொண்டிருக்கின்றது, சைடு ஆர்டிஸ்ட்டாக ரஜினிகாந்த் என்பவரும் நடித்திருக்கின்றார். குஷ்பூ நடித்திருக்கின்றார் என்பதை விட வேறு ஒரு விஷயமும் படத்தில் இல்லை “அன்பே நீ அந்த கண்ணனோ..” பாடலில் வரும் குஷ்பூ, அவர் “இந்த நூற்றாண்டின் மிக சிறந்த அழகி” என்பதை நிரூபிக்கின்றார். படத்தில் ஒரு நடனபோட்டியில் ரஜினிகாந்தும் குஷ்பூவும் ஆடினார்கள், மன்னாதி மன்னனில் ராமசந்திரனும் பத்மினியும் ஆடிய போட்டி நடனம் நினைவுக்கு வந்தது. ஆனால் ராமசந்திரனின் நடனம், இந்த ரஜினி […]

கலைஞர் அமைதியானார், எல்லாம் அடங்கிபோயிற்று

ராஜாஜியின் கல்வி திட்டத்தை, குல கல்வி திட்டம் என பெயர்வைத்து போராடி, அவர் ஆட்சியினையே விரட்டி உரிமைகளை காத்த தமிழகம் இது இன்று நீட் தேர்வால் மாணவர் தற்கொலை அளவு நிலமை சென்றாலும் பெரும் எதிர்ப்பு ஏதுமில்லை திமுகவினை அடக்கினால் தமிழக உரிமை குரல்களை அடக்கலாம் என டெல்லி அன்றே திட்டமிட்டது மிக சரியான கணக்கு என்பதை காலம் சொல்லிற்று. பெரியார் , அண்ணா, கலைஞர் வரிசையில் ஒருவரும் உருவாகி வராததும் தமிழக சோகம்.. பெரியார் இறந்தார் […]

அனிதா எனும் மாணவிக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி…

அனிதா எனும் மாணவிக்கு ஏற்பட்டிருப்பது அநீதிதான், சந்தேகமே இல்லை மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்றால் இந்த நுழைவு தேர்வுகள் எல்லாம் தேவையே இல்லை. இன்று நுழைவுதேர்வு வந்துவிட்டதால் ஒரு ஏழைபெண்ணின் மருத்துவ கனவும் தகர்ந்துவிட்டது என கொதிக்கும் தமிழகத்தில்தான், எத்தனையோ உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு உயர் கல்விகள் அவர்கள் உயர்சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக மறுக்கபட்டது என்பதை வசமாக மறைத்துவிடுகின்றார்கள். இட ஒதுக்கீடால் பாதிக்கபடும் மாணவர்களுக்கு இழைக்கபடுவதும் அநீதியே, இம்மாதிரி போதிய மதிப்பெண் இருந்தும் நுழைவு தேர்வு […]

அனிதா : தற்கொலைகள் ஒரு தீர்வினையும் தராது

அந்த பெண் நிச்சயம் புத்திசாலி , நன்றாக படித்திருக்கின்றார், மதிப்பெண்களை அள்ளியிருக்கின்றார். மிகபெரும் தைரியமும் இருந்திருக்கின்றது, நீட் தேர்வினை எதிர்த்து வழக்கு எல்லாம் தொடுத்திருக்கின்றார். ஆனால் தன்னம்பிக்கை என்றால் என்ன என தெரியாமலும், இச்சிக்கல் எல்லாம் கடந்து செல்லகூடியது என்பதும், படிப்பு மட்டும் வாழ்கை அல்ல என்பதும் தெரியாமல் இருந்திருக்கின்றது. கனவு படிப்பு கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்வதெல்லாம் ஏற்றுகொள்ள கூடியது அல்ல, பள்ளி தேர்வுகளில் தோல்வியுற்றதற்காக சிலர் தற்கொலை செய்வது போலத்தான் இதனை கருதமுடியும். இந்த […]

தியாக திருநாள் பக்ரீத் தின வாழ்த்துக்கள்

அந்த பெரியவர் இன்றைய பாக்தாத் பக்கத்தில் ஒரு ஊரில் வாழ்ந்துவந்தார், குழம்பவேண்டாம், அந்த ஊரின் பெயர் “ஊர்” தான். மிக‌ நிச்சயமாக தமிழ்பெயர்தான், அந்த பகுதி கஸ்திம் அல்லது கல்தேயா, ஹீப்ரு மொழியின் மூலபிரதி அப்படித்தான் சொல்கிறது, நமது பகுதியில் பல ஊர்கள் இருப்பது போல, அது கஸ்திம் ஊர் அல்லது ஊர் கஸ்திம். அவரும் எதற்காகவோ அந்த பகுதியினை விட்டு விலகி வெகுதொலைவில், அதாவது இன்றைய துருக்கியில் அன்று ஹாரன் என அழைக்கபட்ட இடத்திற்கு வந்தார், […]

மு.க ஸ்டாலினே போதும்

காலத்தின் கடுமையினை பொறுத்துதான்  தலைவர்கள் தமிழகத்தில் உருவாகுவார்கள் போல.. கடும் பிராமண அதிகார காலத்தில் பெரியார் உருவானார். குமாரசாமி ராஜா, ராஜாஜி காலத்தில் அண்ணா, கலைஞர், ஜீவா எல்லோரும் உருவானார்கள். இந்திரா காலத்தில் கலைஞர் மிக பெரும் எதிர்ப்பு சக்தியாக நின்றார். இப்படி இருந்த தமிழகத்தில் இந்த மோடி, அமித்ஷா, தமிழிசை, எடப்பாடி காலங்களுக்கு மு.க ஸ்டாலினே போதும் என காலம் முடிவு செய்திருக்கலாம்

உண்மைபேசும் ஒரே ஊடகம் ஜெயா டிவி !

அகில உலகிலே இந்த நொடியில் உண்மைபேசும் ஒரே ஊடகம் இந்த ஜெயாடிவிதான். யார் என்ன சொன்னாலும் இதனை என்னால் உறுதியாக சொல்லமுடியும், இப்பொழுது அதுதான் மகா உண்மையினை சொல்கின்றது அதாவது இந்தியாவில் மத்திய அரசும் சரியில்லையாம் , மாநில அரசு மகா மோசமாம். தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழலாம். மாநில முதல்வருக்கு பொறுப்பே இல்லையாம், சுயநலத்தில் மாநில நலனை விட்டுவிட்டாராம். தமிழநலன் இந்த அரசால் மிக கடுமையாக பாதிக்கபட்டிருக்கின்றதாம். இப்படி மிக துணிவாக சொல்கின்றது ஜெயாடிவி […]

மிக மிக தடுமாறுகின்றார்

வருகின்ற பல செய்திகள்படி சொல்வதென்றால், நாடு மோசமான நிலையினை எட்டிகொண்டிருக்கின்றது. ரூபாய் நோட்டு ஒழிப்பு இன்னபிற நடவடிக்கை எல்லாம் ஒரு விளைவினையும் ஏற்படுத்தவில்லை, மாறாக பல முன் தயாரிப்பில்லா பல திட்டங்கள் நாட்டை பல சிக்கல்களில் ஆழ்த்தியிருக்கின்றது தொழில் முடக்கம் ஏற்படுகின்றது, வேலை வாய்பில்லா சிக்கல் பெருகுகின்றது, பொருளாதாரம் சரிகின்றது. இது முன்பே சொல்லபட்ட விஷயங்கள்தான். இந்தியா மிகபெரிய நாடு, பெரும் மக்கள் தொகை உள்ள நாடு. எல்லா மாற்றங்களும் தேவைதான், ஆனால் அவையெல்லாம் ஒரே நாளில் […]

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறை

மலேசிய தினம், பக்ரீத் என நீண்ட விடுமுறையாகிவிட்டது. என்ன செய்ய முடியும்? எல்லா உணவையும் மாயா பஜார் ரங்கராவ் போல “ஹாஹ.. ஹாஹ.. ஹா” என ஒரு ரவுண்ட் வரவேண்டியதுதான். அப்படியே டிவியில் குஷ்பூ படத்தை ஓடவிட்டால் விடுமுறை சட்டென்று முடிந்துவிடும். குஷ்பூ நடித்த “ஜாதி மல்லி” படத்தில் இருந்து தொடங்குகின்றது விடுமுறை… ஆமாம்டா, அந்த விவேகம் படம் பாகுபலி வசூல் மட்டுமல்ல, டைட்டானிக் மற்றும் அவதார் படத்து வசூலை விட பல மடங்கு வசூலித்துவிட்டது என […]