பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா

இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடித்தவன் வாஸ்கோடகாமா . கேரள கள்ளிகோட்டையில் வந்திறங்கினான். கோவா போன்ற பகுதிகளை பிடித்தபின் அவனை வைஸ்ராய் ஆக்கினார் போர்த்துகீசு மன்னர். வாஸ்கோடகாமா கள்ளிகோட்டை பகுதியில் பல பகுதிகளை ஆண்டிருக்கின்றான். இலட்சதீவுகள் எல்லாம் அவன் கட்டுபாட்டில் இருந்திருக்கின்றன , கப்பம் வசூலித்திருக்கின்றான். பல யுத்தங்கள் நடந்திருக்கின்றன, அதில் ஒரு யுத்தத்தில் இந்தியாவிலே கொல்லபட்டிருக்கின்றான், அது 1524ம் வருடம், அவன் கல்லறை இன்றுவரை கேரளாவில் உண்டு. அவன் கொல்லபட்டபின்னரே போர்த்துகீசியர் அடக்கி வாசித்திருக்கின்றனர், அதன் பின் பெரும் […]

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி கேட்கிறார்கள்…

மாவீரன் நெப்போலியனை எழுத சொல்லி பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள். வரலாற்றில் மிக மிக அசாத்திய மனிதன் அவன். அலெக்ஸாண்டர் மன்னனாக பிறந்தான் பேரரசனாக மரித்தான்,ஜூலியஸ் சீசரும் அவ்வகை. சமுத்திர குப்தனுக்கோ சாணக்கியன் எனும் ஆசான் இருந்தான். ஆனால் தன் வாழ்வில் ஒவ்வொரு நொடியினையும் தானே செதுக்கியவன் நெப்போலியன். கிடைத்த வாய்ப்பினில் எல்லாம் தன்னை தூக்கி நிறுத்தி எழும்பியவன். அபூர்வ சகோதரர்களில் நாகேஷ் அப்பு கமலை பார்த்து கேட்பார் அல்லவா, “பாதி இங்க இருக்கு மீதி எங்கே?” அப்படிபட்ட குள்ள […]

குஷ்புவே நமஹ ! : 8

குஷ்புவை சூழ்ந்த கருமேகங்கள்!    எங்கள் வாழ்வும், எங்கள் மகிழ்வும் மங்கா குஷ்பூ என சங்கே முழங்கு.. தனக்கு திமுக மிக சரியான கட்சி என எண்ணி அதில் 2010ல் ஒரு மே மாதத்தில் இணைந்தார் குஷ்பூ, சூரிய கட்சியில் அந்த அழகு சூரியன் இணைந்தது. குஷ்பூ போன்ற வசீகர முகத்தின் தேவை திமுகவிற்கும் இருந்தது. திமுகவில் அவருக்கு பொறுப்புகள் கொடுக்கபட்டன. திமுக மேடை என்பது வெறும் முகத்தை காட்டிவிட்டு வரும் இடமல்ல, அங்கு நிறைய பேசவேண்டும், […]

இன்றைய தமிழகம்…

நான் நினைத்திருந்தால் சசிகலா என்னை முதல்வராக்கியிருப்பார், ஆனால் நான் தான் ஆகவில்லை : தினகரன் அதாவது திண்ணையில் கிழவர்கள் அமர்ந்து கொண்டு, அந்த காலத்திலே நான் கட்ட வேண்டிய பெண் அது என எங்கோ இருக்கும் கிழவினையினை பார்த்து சொல்வது போல அன்னார் சொல்லிகொண்டிருக்கின்றார். சசிகலாவே முதல்வராக ஆசைபட்டு, விழா பந்தல் எல்லாம் போடபட்டு, பன்னீரை கழுத்தைபிடித்து விரட்டி, கூவத்தூரில் பாசறை அமைத்து என்னவெல்லாம் செய்தார், பின் வழக்கு வாள் வீசபட்டு அம்மையார் சிறைக்கு சென்றார் பின் […]

பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை

பாலியல் வழக்கில் சாமியாருக்கு தண்டனை, அதனை எதிர்த்து பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் வன்முறை பலர் பலி, பெரும் பதற்றம் பக்தி முற்றிபோனால் இப்படித்தான் பகுத்தறிவு வெளியேறும். சிந்தனை வெளியேரிய மனம் கண்மூடித்தனமான ஆதரவிற்கு வழிவகுக்கும். சமூகம் இப்படி சாமியார் பிடிக்குள் செல்லும்.100 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகமும் இப்படித்தான் இருந்தது. இன்று வடக்கே நிலை இப்படி, தமிழக நிலை எப்படி? இங்கும் சில சாமியார்கள் கொலை வழக்கில் சங்கராச்சாரி உட்பட‌ கைதானார்கள், சிலர் கற்பழிப்பு வழக்கில் பிரேமானந்தா போல […]

தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை

ஆளுநர் நடவடிக்கை எடுக்க தவறினால்ஜனாதிபதியை சந்திப்போம்: தங்கதமிழ்செல்வன் ஆளுநரே இப்படி என்றால் ஜனாதிபதி அதுவும் புதிதாக பாஜகவினால் கொண்டுவரபட்டிருக்கும் ஜனாதிபதி எப்படி இருப்பார்? ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்க தவறினால் ஐ.நாவிற்கு செல்வார்களோ?   தற்போது தேர்தல் வருவது நல்லதல்ல: தமிழிசை யாருக்கு நல்லதல்ல மேடம்? நிச்சயமாக தமிழக பாஜகவிற்கு. அதனை தெளிவாக சொன்னால் என்ன மேடம்? “ஆட்சி நிலைப்பு பற்றி கவலை இல்லை, எல்லாவற்றையும் டெல்லி பார்த்துகொள்ளும்” : எடப்பாடி அணி ஆமாம், தேயிலை செடியில் ஓரு […]

பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம்….

இன்றுவரை தான் யாழ்பாணம் சென்று புலிகளோடு பழகியது பற்றியோ, சிவராசனுக்கு வயர்லெஸ் பேட்டரி மற்றும் பைக் வாங்கி கொடுத்தது பற்றியோ பேரரிவாளனும் மூச் விடவில்லை அவன் தயார் அற்புதம்மாளும் சொல்லவில்லை. சொன்னது எல்லாம் நாங்கள் நிரபராதி என்ற ஒரு சொல் மட்டுமே. பேரரிவாளனின் நிலைக்கு முதல் காரணம் அவன் தந்தை, திராவிடம் என்பதை வெறியாக அவர் மகனுக்கு போதித்ததே மகன் இன்று வாழ்வு தொலைத்து நிற்பதற்கு காரணம். அந்த அதிதீவிர திராவிடரை சந்திக்கத்தான் பேரரிவாளன் பரோலில் வருகின்றாராம். […]

“சாலையோரத்தில் வேலையற்றதுகள்” என்பது இதுதான்.

ஒரு சிலர் கிளம்பியிருக்கின்றான், தமிழர் வரிபணத்தில் நடக்கும் தமிழக மருத்துவ கல்லூரியில் வடமாநிலத்துக்காரன் படிப்பதா என கடும் ஆர்ப்பாட்டம். பல்கலைகழக மானிய நிதி எல்லாம் தமிழக கல்லூரிகளுக்கு வருவதே இல்லையா? அப்படியானால் தமிழர்கள் வட இந்திய நிறுவணங்களில் படிக்கவிலையா, வேலை செய்யவில்லையா? வடக்கே ஐஏஸ் முதல் பொறியில் வரை, டெல்லி பல்கலைகழகம் வரை எத்தனை தமிழர்கள் படித்து கொண்டிருக்கின்றார்கள். அம்மாநில மக்கள் எல்லாம் இப்படி கிளம்பினால் என்னாகும்? வட இந்தியாவில் தமிழர்களே வாழவில்லையா? மும்பை டெல்லி எல்லாம் […]

இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் !

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன். நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார். இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், ஒரு […]

மாநில கல்வி உரிமைகளை வைத்து நடந்த விஷயங்கள் என்ன?

மருத்துவ கல்வியில் மாநில உரிமை பறிக்கபட்டுவிட்டது, இது அநீதி , ஆரிய படையெடுப்பு என பல சத்தங்கள் மாநில கல்வி உரிமைகளை வைத்து இங்கு நடந்த விஷயங்கள் என்ன? சீனிவாச ராமானுஜம் பெயர் சூட்டபடவேண்டிய பல்கலைகழகம் விஞஞானம் தெரியாத அண்ணா பெயர் சூட்டபட்டு முதலில் மதிப்பிழந்தது. ராமசந்திர உடையார் எனும் சாராய வியாபாரி கல்வி தந்தையானார். சாதாரண கான்ஸ்டபிளான பனிமயராஜ், ஜேபிஆர் எனும் கல்வி தந்தையானார், பச்சைமுத்து இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியானார். அது சரி […]