பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞரை சீண்டிய பெண்மணி

அந்த பெண்மணி கலைஞரை சீண்டியது தவறாக இருக்கலாம், ஆனால் சுறா எனும் விஜய்படத்தை பற்றி சொன்னது தவறாகவே இருக்க முடியாது. ஒரு மரணதண்டனை கைதிக்கு அடிக்கடி போட்டு காட்டி அவனை சாகடிக்கும் வகையில் வைக்க வேண்டிய படம் அது. உண்மையினை ஒப்புகொள்கின்றாயா? இல்லை 10 முறை சுறா படம் போட்டு காட்டுவோம் என காவல்துறை கையாள வேண்டிய கொடூர உத்திகளில் ஒன்று அந்த படம். ஐ.எஸ், அல்கய்தா போன்ற குற்றவாளிகளிடம் உண்மையினை கண்டுபிடிக்க அமெரிக்க ராணுவமே அதனை […]

சீன எல்லை விவகாரம்

சீன எல்லை விவகாரம் விஸ்வரூபமாகின்றது, சாலை அமைப்பது இந்திய‌ பூடானையொட்டிய பகுதி. ஆனால் அது அமைந்துவிட்டால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகபெரும் ஆபத்து என இந்தியா பூடான் மூலம் நெருக்கடி கொடுக்கின்றது அந்த இடம் கொஞ்சம் சிக்கலானது, கோழி கழுத்து என்பார்கள். வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கும் சிக்கிம் பகுதி அது. யுத்தம் தொடங்கி சீனா அந்த பகுதியில் இறங்கிவிட்டால் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கபடும். இந்தியா பூடான் மூலமாக நெருக்கடி கொடுக்க, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆதரளித்து […]

வெல்ல பிறந்தவன் : 07

அன்றைய பாரசீகம் பல நாடுகளாக இருந்தது, இன்றைய துருக்கி உட்பட்ட நாடுகளை மாமன்னன் சைரஸ் என்பவரின் வாரிசாக‌ அச்செமின்ட்ட் என்பவர்கள் ஆண்டனர். சிரியா பக்கம் அசீரியர்கள், லெபனான் பக்கம் டயர், எகிப்தில் பாரோக்கள் என சிற்றரசுகளாய் ஆண்டனர். (சைரஸ் குறிப்பிடதக்க பாரசீக மன்னன், அவன் மேற்கு பாரசீகத்தில் பெரும் அரசை அமைத்திருந்தான், அவனின் வரலாறும் மிக பெரிது.) இவர்கள் மேதிய பெர்சிய அரசனான டார்சியுஸ் என்பவருக்கு கட்டுபட்டவர்கள். டார்சியுஸ் பாபிலோனில் இருந்தான், இன்றைய பாக்தாத் அது அன்றைய […]

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகிறது

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தடை நீங்குகிறது; புதிய இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஷியா வக்பு வாரியம் சம்மதம் எப்படியோ அந்த பிரச்ச்சினை முடிந்தால் சரி, நாடு அமைதியாகட்டும், இத்தோடு பிரச்சினை முடியும் என்றா கருதுகின்றீர்கள்? இல்லை மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடத்தில் ஒரு கோயில் கட்டவேண்டுமாம், அங்கு என்ன மசூதி இருக்கின்றதோ இனிதான் தெரியும் இவர்கள் இனி பரசுராமர், பலராமன் என கோயில் கட்டிகொண்டே இருப்பார்கள், இருக்கட்டும் நமது தலையாய கடமை என்னவென்றால் மும்பை அந்தேரியில் […]

உனக்கு என்னம்மா பிரச்சினை?

உனக்கு என்னம்மா பிரச்சினை? நாலாவதாக உன்னை அவர் திருமணம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது என்றா? உன்னை சொல்லி குற்றமில்லை, அவர் தமிழுக்கும் ஆற்றலுக்கும் நீ மயங்கவில்லை என்றால்தான் தவறு. அதற்கு இனி புலம்பி என்னாக போகின்றது?, ஆண்டாள் போல வேண்டுமானால் வாழ்ந்துகொள்.   ரகுமானும், இளையராஜாவும் அறவே சிந்திக்க தெரியாதவர்கள். அவர்கள் ரசிகர்கள் இன்னும் மோசமோ மோசம் என்பது அன்னாரின் பொன்மொழி            

பெரும்போரின் களப்பலி : 03

ஹிரோஷிமா பெரும் போர் கூடங்குளம் அணுவுலையின் கழிவினை எங்கு பாதுகாப்பீர்கள் என திரு.உதயகுமார் கேட்ட‌ கேள்விகளுக்கு குழப்பமான பதிலை சொல்லிவந்த மத்திய அரசு, ஒரு கட்டத்தில் சொல்லியது,முதலில் அணுகழிவினை எடுத்துசெல்ல முடிவு செய்த ரஷ்யா,இப்பொழுது மறுக்கின்றது. காரணம் இதுதான், கார்ப்பசேவின் கசப்பு மருந்து ஓவர்டோசாக வேலை செய்து, சோவியத் யூனியனை பக்கவாதத்தில் தள்ள, கருணை கொலையாக சோவியத்தை கலைத்தார். கோர்ப்பசேவ். 17 துண்டாக ரஷ்யா சிதற அவர்களின் அணு ஆயுத மையங்களும் சிதறின, யாருக்கு எதன் மீது […]

சொன்னார்கள் : இளங்கோவன், சீமான், கிருஷ்னசாமி, தமிழருவி, ஜெயகுமார், திருமா, தம்பி துரை ….

அப்படியும் ஆதிச்சநல்லூரை அறவே மறந்துவிட்டு கீழடிக்கு வந்துவிட்டான் அல்லவா? இதுதான் சினிமாக்காரன் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சர்வாதிகாரியாக மாறி வருகிறார் மோடி: இளங்கோவன் இன்னும் இவர் இந்திரா காந்தி அளவுக்கு சர்வாதிகாரியாக‌ வரவில்லை என்பதை நினைத்து சந்தோஷபடுங்கள் மிஸ்டர் இளங்கோவன். சீனாவில் மாவோ செய்த புரட்சியினை நான் தமிழகத்தில் செய்து கொண்டிருக்கின்றேன் : சீமான் இப்படி எல்லாம் அள்ளிவிட்டால் தானும் “புரட்சி தலைவர்” என ஆகிவிடலாம் என அங்கிள் கனவு காண்கின்றார். சீனா ஏன் இந்தியாவோடு போர் […]

முத்த பிரச்சினை ….

தமிழகம் கண்ட முத்தபிரச்சினையில் இந்த பிரச்சினைதான் பெரும் பிரச்சினையாக வரலாறு சொல்கின்றது. ஆனால் ஓவியாவின் முத்த பிரச்சினை பரவிய அளவுக்கு இந்த முத்த பிரச்சினை பரவவில்லை என்பதுதான் விஷயம்..  

மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் …

வணக்கத்தில் கூட தமிழர் அடையாளமில்லாத இந்த சைமர் தமிழினத்தின் புது காவலராம், அவரே சொல்கின்றார். மரியாதைகுரிய தமிழனின் வணக்கம் இப்படி ஒரு கையில்லாதவனின் வணக்கம் போலவா இருக்கும்? இந்த வணக்கத்தை எல்லாம் சபை அநாகரீகம் என சொல்லியிருந்தான் தமிழ் முப்பாட்டன், முதலில் தமிழர் பண்பாட்டு வணக்கத்தை படியும் அய்யா, அதன் பின் தமிழ்நாட்டை காப்பாற்றலாம்.. இன்னொரு கையில் என்ன குஷ்டமா? இப்படிபட்ட செய்கை எல்லாம் விஜயலட்சுமியிடம் காட்ட வேண்டியது அய்யா, பொது இடத்தில் அதுவும் வணக்கம் தெரிவிக்க […]

பிக்பாஸ் ஆரவ்…

அரவம் என்றால் பாம்பு என்று பொருள், அரவான் என்றால் எல்லோருக்கும் தெரியும் கூத்தாண்டவர் கோவில் சாமி அவர். அரவத்தை சுருக்கினாலும், அரவானை சுருக்கினாலும் அது “அரவ்” அல்லது “ஆரவ்” என வந்துவிடும் பெயருக்கேற்றபடி அவன் பாம்பாக இருக்கவேண்டும், இல்லையென்றால் ஓவியா மீதும் காதல் வரவில்லை எனில் அவன் கூத்தாண்டவர் கோவில் சாமியாக இருக்கவேண்டும் ஆக இரண்டாவது வகை உண்மையாக இருக்கலாம் என்ற அளவு ஓவியாவின் நினைவால் பாதிக்கபட்ட விழுதுகள் ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டன‌ ஓவியா மீதும் காதல் […]