பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சசிகலா புஷ்பா என்ன ஆனார்?

“நேத்தைக்கு நான் முழு மப்புல இருந்தேன்…” என்ற ஒரே ஒரு போன் உரையாடல் மூலம் பிரபலமானவர் சசிகலா புஷ்பா பின் அதனை மறைக்க திருச்சி சிவாவினை கும்மாங்குத்து குத்தியது, சசிகலாவுடன் மல்லுக்கு நின்றது என அவர் செய்த அதிரடிகள் ஏராளம். ஜெயா என்னை அடித்தார், என சொல்லி அவர் எற்படுத்திய சர்ச்சை கொஞ்சம் அல்ல, ஆனால் ஜெயா அடி எப்படி இருக்கும் என தெரியும் முன் அவர் போய் சேர்ந்தது சசிகலா புஷ்பாவிற்கு நல்ல நேரம் ஜெயா […]

யாழ் காலண்டர்….

ஜூலி என அழைப்பது தமிழாகாதாம், அது தமிழ் வார்த்தை இல்லையாம் மாறாக “யூலி” என அழைக்கபடவேண்டும் என சீமானின் தும்பிகள் சொல்லிகொண்டிருக்கின்றன, ஜூன் ஜூலை எல்லாம் யூன் யூலை என்றுதான் தமிழாக்க வேண்டுமாம், அப்படி ஜூலி இல்லையாம் யூலியாம், ஜூலியஸ் சீசர் கூட இவர்களுக்கு யூலியஸ் தானாம் அந்த யாழ்பாணத்தான் வெள்ளையன் அடிமை. அன்றே தமிழ் காலண்டரை பின்பற்றாமல் வெள்ளையன் காலண்டரை தமிழ்படுத்தியிருக்கின்றான் அதுவும் அவனின் தை மாதம் நம்மை போல ஜனவரி 14ல் வராது, மாறாக […]

காவேரி என்பது என்ன?

ஒரு சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்களாம், அதாவது கபினி எனும் காவேரியின் துணையாரில் அணைகட்டினால் கன்னடடட்தை பழிவாங்கலாமாம் சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்பது இதுதான், கூடவே மணமகன் முகத்தில் துப்பும் நிகழ்வும் நடக்கும் காவேரி என்பது என்ன? அது ஆடுதாண்டும் காவேரிதான் சந்தேகமில்லை. மேகதாது அல்லது மேக்க தாட்டு என சொல்லபடுவது என்ன? கன்னடத்தில் ஆடு தாண்டுதல் என பொருள் வரும் காவேரி என்பது பல ஆறுகளின் தொகுப்பு, கபினி ஹேமாவதி, ஹேரங்கி என […]

ஈழம் இந்திய நட்பு நாடு என்கிறார்களே ?

இலங்கையில் சீனா காலூன்றிவிட்டதாம், ஈழம் இருந்திருந்தால் இந்தியாவிற்கு மிக பாதுகாப்பாக இருக்குமாம், ஈழம் இந்தியாவின் நட்புநாடாக இருக்குமாம், ஈழம் அமையாததுதான் தவறாம் சிலர் சொல்லி கொண்டிருகின்றான் ஈழம் அமைந்தாலும் என்ன நடந்திருக்கும்? சிங்களன் வலிய கேட்டு சீனபடையினை நிறுத்தியிருப்பான் சரி அதனை விடுங்கள் ஈழம் இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்குமாம் 1500 இந்திய வீரர்களை கொன்று, இந்திய நாய்களுக்கு இங்கு என்னவேலை என கேட்டு, பெரும் இந்திய‌ தலைவனையும் சிதறடித்து, இன்றுவரை இந்தியாவினை பகையாக சொல்லிகொண்டிருக்கும் ஈழம் இந்தியாவின் […]

வெள்ளையனே வெளியேறு இயக்கம்…

இந்தியாவினை வெள்ளையன் ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பிகொண்டே தான் இருந்தது, அது சிப்பாய் புரட்சி, வேலூர் கலகம் , பகத்சிங் காலம், சென்பகராமன் காலம் என பல இருந்தாலும் பெரும் முன்னேற்றமில்லை காரணம் அன்றைய 40 கோடி மக்களுக்கும் ஒரே தலைவர் இல்லை, பஞ்சாப் முதல் குமரி வரை, பலுசிஸ்தானில் இருந்து டாக்கா வரை பரந்திருந்த இந்த பெரும் நாட்டிற்கு ஒன்றுபட்ட தலைவர் இல்லை, ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் கேட்கும் எளிதாக அடக்கினான் வெள்ளையன், இன்னொன்று […]

எங்களுக்காகப் போராட வேண்டாம்…

எங்களுக்காகப் போராட வேண்டாம், இரோம் ஷர்மிளாவுக்கு கொடைக்கானல் ஆதிவாசி மக்கள் எதிர்ப்பு நக்சலைட்டுகள் நடமாடும் கொடைக்கானலில் இரோம் ஷர்மிளா எதற்கு கண்ணிவைக்கின்றார் என ஆதிவாசி மக்களுக்கே புரிந்துவிட்டது வாழ்த்துக்கள். அம்மணி ஷர்மிளா, இந்த கொடைக்கானல் மக்களுக்கேதான் போராடவேண்டுமா? இந்தியாவில் வேறு இடமே இல்லையா? கிளம்புங்கள்.. டிகிரி முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.51,000 நிதி: மத்திய அரசு அப்பெண்கள் மேற்கொண்டு படிக்க இந்நிதி வழங்கபடுமாம், நிச்சயமாக நல்ல திட்டம்தான், வரவேற்க கூடியது. ஆனால் இஸ்லாமிய பெண்களுக்கு மோடி அரசு […]

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ….

காவிரிக்கரையில் படர்ந்த பெரியார் தத்துவங்கள் ஜெர்மனி ரைன் நதிக்கரையில் கிளைத்தன!:கி.வீரமணி மார்க்ஸின் கொள்கைகள் கியூபாவில், சீனாவில் கிளைத்தன என்றால் கொஞமாவது அர்த்தம் உண்டு பெரியார் கொள்கைக்கும் ஜெர்மனுக்கும் என்ன சம்பந்தம்? ஒரே ஒருமுறை பெரியார் ஜெர்மன் சென்றாராம், அவ்வளவுதான் விஷயம் ஜெர்மன் என்னமோ பெரியாரின் தத்துவத்தில் மூழ்கி கருப்பு சட்டை போட்டு பகுத்தறிவு பேசும் தேசம் போல அன்னார் கதைவிடுகின்றார், அப்படி பேசியிருந்தால் ஜெர்மன் உருப்பட்டிருக்கும்? மிஸ்டர் வீரமணி, பெரியார் காசியில் கூட சிலமாதம் தங்கியிருந்தாராம், கங்கை […]

பிக் பாஸ் : எப்படி நாமெல்லாம் வாக்களிப்பது?

இந்த சினேகனுக்கும், காயத்திரிக்கும் மனநலம் கடுமையாக பாதிக்கபட்டிருப்பது அந்த மொகரைகளிலே நன்றாக தெரிகின்றது அவர்களுக்கு மனநல சிகிச்சை அளிக்க சொல்லபோவது யார்? பைத்தியங்கள் தன்னை ஒரு பைத்தியம் என ஒப்புகொண்டதே இல்லை, மாறாக சுற்றி இருப்பவர்கள்தான் பிடித்து சிகிச்சைக்கு அனுப்புவார்கள். இவர்களுக்கு மனநல சிகிச்சை அவசியம் என எப்படி நாமெல்லாம் வாக்களிப்பது?

ரஜினி அரசியலுக்கு வர சிறப்பு யாகம் இன்னும் பிற..

மதுரா கைம்பெண்களிடம் 1500 ராக்கி கயிறுகளை பெறுகிறார் மோடி எல்லையில் சீனன் தூக்கு கயிரோடு வந்து நிற்கின்றான், இவர் இங்கே ராக்கி கட்டி விளையாடி கொண்டிருக்கின்றாரா? மோடி எதனை செய்தாலும் வரவேற்கும் தமிழிசையினை காணவில்லை, யாருக்கு ராக்கி கட்டிகொண்டிருக்கின்றாரோ? அநேகமாக முதல்வர் பழனிச்சாமிக்கு கட்டி கொண்டிருக்கலாம். ரஜினி அரசியலுக்கு வர சிறப்பு யாகம் அந்த யாக‌ தீயில் அவரை தூக்கிபோட்டாலும் எரிவாரேயன்றி, அரசியலுக்கு எல்லாம் வரவே மாட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையினை கண்டால் அவன் நீண்ட கத்தி […]

ஆரவ் உள்ளேயே இருப்பது நல்லது.

அந்த ஆரவ் இனி விஜய் டிவி வழங்கும் “நூறு நாள் வேலைதிட்டம்” முடிந்த பின்னும் உள்ளேயே இருப்பது நல்லது. Omm Prakash போன்றவர்கள் சந்திரமுகி ஜோதிகாவாக கொதித்துகொண்டிருகின்றார்கள், கையில் ஆரவ் கிடைத்தால் கதற கதற இழுத்து சென்று, ஓவியா காலில் போட்டு “போடு மெட்டியினை” என பின் மண்டையிலே அடிப்பார்கள் போல, அவ்வளவு ஆக்ரோஷம். வெளிவந்தால் ஆரவ் நேரே சென்று ஐ.எஸ் இயக்கத்தில் இணைவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழி