பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்த காயத்திரி என்பதன் பொருள் என்ன?

“யுரேகா யுரேகா” என ஆர்கிமிடீஸாக அலைகின்றார் நண்பர் Omm Prakash , அவரின் அதிமகிழ்ச்சிக்கு காரணம்  ” ஹெலன்” எனும் கிரேக்க பெயரின் தமிழாக்கம் கண்டுபிடித்துவிட்டாராம் “ஹெலன்” என்பது கிரேக்க அழகு தேவதையின் பெயராம், தமிழில் “அதியசய ஒளி வடிவம்”, “போரோளி வடிவம்”, “ஓளி ஓவியம்” என வருமாம், அதாவது “ஒளி ஓவியா”, சுருக்கமாக ஓவியா இப்படி நேரடி அர்த்தமே இருக்கின்றது என துள்ளி குதிக்கின்றார், இனி எவனும் அவரிடம் “ஹெலன்” என சொல்லமுடியாது, அவர்வேறு தமிழ் உணர்வாளர் என்பதால் […]

காமராஜரின் நாட்டுபற்று… புலிக்கு தடை…

காமராஜரின் நாட்டுபற்று தமிழகத்தை கண்டுகொள்ளா பொறுப்பற்றதனமாக சொல்லபடும் மாநிலத்தில், அப்துல்கலாமின் நாட்டுபற்று ஆர்.எஸ்.எஸ் சார்பு என சொல்லபடுவதில் என்ன ஆச்சரியம்?? அப்துல் கலாம் ஆர்.எஸ்.எஸ் என்றால் காமராஜரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் என சந்தேகமின்றி சொல்லலாம்.. நாட்டுபற்று என்றால் என்ன? ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன என ஒன்றும் தெரியாத ஒரு தலைமுறை இம்மாநிலத்தில் உருவாகிவிட்டதுதான் பெரும் சோகம்… விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ, ராமதாஸ், வேல்முருகன், மணியரசன், நெடுமாறன் உள்ளிட்ட கோஷ்டிகள் […]

அகண்ட பாரதம் அமைக்க தொடங்கிவிட்டார்கள்!

இந்து மக்கள் கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூடுகின்றார்களாம், அதாவது அந்த ஜி, இந்த ஜி என பல ஜிக்கள் கலந்து கொள்வார்களாம். பல ஜி’க்கள் கலந்து கொள்வதால் இது ஜி’7 உச்சமாநாடு, ஜி20 உலக மாநாடு என நினைத்துவிட கூடாது, இந்த ஜி3 வேறு வகையறா, Gillettine கூட ஜியில் தான் தொடங்கும் அவர்கள் கட்சி, அவர்கள் ஜி3 கூட்டம் அது சிக்கல் இல்லை ஆனால் இந்த காசியானந்தன் என்பவரும் இந்த “ஜி” கூட்டத்தில் கலந்திருப்பதுதான் ஆச்சரியம் […]

‘தமிழ் ஒன் இண்டியா’ – வில் நம் பதிவு …

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர்… நமக்கு அப்துல் கலாம்! #DrAbdulKalam A tribute to late Dr Abdul Kalam, the People President, on the day of his memorial opening. TAMIL.ONEINDIA.COM   ஒரு சில தளங்களை போலவே இந்த தளத்தில் நம் பதிவுகள் வருகின்றன, பெரும் வாசகர்களை கொண்ட தளமாக தெரிகின்றது , நம் கலாம் பதிவினையும் பதிந்திருக்கின்றார்கள். நம்மையும் ஒருவர் மதிப்பதே பெரும் விஷயம், அதுவும் நம் […]

முகநூல் ஐ.டி முடக்கலும் மீட்டலும்

Devi Somasundaram முகநூல் ஐ.டி முடக்கபட்டதாம், பின் மீட்டுவிட்டாராம். முகநூலில் அவருக்கு எதிரிகள் எப்பொழுதும் அதிகம், இவ்வளவு நாளும் இல்லாமல் இப்பொழுது ஏன் முடக்குகின்றார்கள்? சும்மா சொல்ல கூடாது, ஒரு நாளைக்கு 10 எதிரிகளை உருவாக்கியே தீருவேன் என பதிவிட்டுவரும் அம்மணி கொஞ்சம் வித்தியாசமானவர்தான் அதாகபட்டது அம்மணி கொஞ்சநாட்களாக முகநூலில் மகளிர் விழிப்புணர்வு பதிவு இட்டுகொண்டிருந்ததார், முகநூலில் பெண்கள் எப்படி இருக்கவேண்டும்? எப்படி எல்லாம் சுதாரிப்பாக தன்னை காத்துகொள்ளவேண்டும்? யாரையெல்லாம் துண்டிக்க வேண்டும், ஆண்களிடம் எப்படி எல்லாம் கவனமாக […]

தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல..

காமராஜர் எனும் மகானை முதல்வராக்கியதும் தேசிய கட்சி, அப்துல்கலாம் எனும் மாமனிதனை ஜனாதிபதியாக்கியதும் தேசிய கட்சி காமராஜரை வீழ்த்தியதும் மாநில கட்சிகள், கலாம் மறுபடி ஜனாதிபதியாக முடியாமல் தடுத்ததும் மாநில கட்சிகள் ஒரு தமிழன் பிரதமராக முடியாமல் குழப்பியதும் இதே மாநில கட்சிகள். தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல.. ஏதும் கேட்டால் இந்தியா தமிழரை வெறுக்கின்றது, நசுக்குகின்றது , இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என ஆயிரம் விளக்கம் என்னதான் விளக்கினாலும் , […]

அப்துல் கலாம் என்னதான் செய்தார்?

அப்துல் கலாமினை விமர்சித்து சில திராவிட, தமிழ் குஞ்சுகள் பேசும் கொடுமைகளை என்ன சொல்லி அழுவது என்றே தெரியவில்லை.   1985களில் பள்ளி மாணவனாக இருக்கும்பொழுதே பல ஆசிரியர்கள் அப்துல் கலாமை மேற்கோள்காட்டுவார்கள், அந்த ஆசிரியர்கள் அடிக்கடி சொல்லிகாட்டாவிட்டால் கலாமை பற்றி 2002ல் தான் எமக்கெல்லாம் தெரியவந்திருக்கும். பிரித்வி, அக்னி,நாக், திரிசூல் என சூப்பர்ஹிட் ஏவுகனைகளாக வந்து குவிய குவிய அவர் பிரபலமானார். உச்சமாக காளி எனும் லேசர் கதிரில் எதிரி விமானங்களை சிதறடிக்கும் நுட்பத்தில் இந்தியா […]

நமது தலைமுறைக்கு அப்துல் கலாம் …

அந்த தலைமுறைக்கு காந்தி, அடுத்த தலைமுறைக்கு காமராஜர், நமது தலைமுறைக்கு அப்துல் கலாம். இந்திய வான் வெளி எல்லைக்கு நெருப்பு வேலி இட்ட மாமேதை அவர், ஒரு இந்தியனாக பகை நாடுகளுக்கு சவால் விட்டவர், அக்னி ஏவுகனை மூலம், நெருப்புடா…..நெருங்குடா பாப்போம் என சவாவே விட்டவர். ஒரு பின் தங்கிய தீவுபகுதி,பெரும் ஏழ்மை குடும்பம், அதனிலும் போராடி கொஞ்சம் கொஞ்சமாக தன்னை செதுக்கி, கல்வியும் உழைப்பும் ஒரு மனிதனை கைவிடாது என்பதை நிரூபித்தவர், அவரது போராட்டம் பெரிது, […]

ஹெலன் எனும் கிரேக்க வார்த்தை….

அவரை யாரோ “ஹெலன்” என சொல்லிவிட்டார்களாம், அந்த ஆர்மிக்கு கோபம் தாங்கவில்லை ஹெலன் எனும் கிரேக்க வார்த்தைக்கு மிக சிறந்த தமிழ்பெயரினை கண்டுபிடிப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவித்துவிட்டார்கள் பல தருமிக்கள் விழுந்தடித்து ஹெலன் எனும் கிரேக்க சொல்லுக்கு மிக சிறந்த தமிழ்பெயரை தேடிகொண்டிருக்கின்றார்கள். ஹெலன் எனும் கிரேக்க வார்த்தை இருக்கட்டும், காயத்ரி எனும் சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன பொருள் என நாம் தேடிகொண்டிருக்கின்றோம் அண்ணே அப்துல் கலாமிற்காக அழுங்கள், ஆனால் அந்த “ஹெலன்” என்பதன் தமிழ் […]

புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள்

“ஐரோப்பாவில் புலிகள் மீதான தடையினை நீக்கிவிட்டார்கள், நியாயம் வென்றது, நீதி வென்றது, வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி சரி, யுத்ததின் போது தடையினை அவர்கள்தான் போட்டிருந்தார்கள் ஏன்? அது அப்பொழுது, இப்பொழுது புலிகளை உலகம் மதிக்கின்றது, இது எங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி சரி, அடுத்து என்ன செய்வீர்கள்? அதெல்லாம் தெரியாது, இது மாபெரும் வெற்றி ஐரோப்பாவில் இருந்து படைதிரட்டி வந்து யுத்தம் தொடங்குவீர்களா? யுத்தமா? அதெல்லாம் எதற்கு? இது உனக்கு புரியாது, பெரும் வெற்றி அதவது […]