பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வெல்ல பிறந்தவன் : 03

அன்று ஜுலை 26, கி.மு 356 அலெக்ஸாண்டர் பிறந்திருந்தான் பிலிப்பிற்கோ ஏக மகிழ்ச்சி, பெரும் விழாவாக அவனின் பெயர் சூட்டும் விழாவினை நடத்தி கிரேக்க குருமார்கள் புடைசூழ அவனுக்கு மூன்றாம் அலெக்ஸாண்டர் என பெயரிட்டார், அதாவது அவனுக்கு முன்பும் அலெக்ஸாண்டர்கள் இருந்திருக்கின்றார்கள் தம்பிடிக்கு பிரயோசனம் இல்லை. இவனை பெரும் வீரனாக்கி மாசிடோனியாவின் புகழை பரவச்செய்வேன் என அவர் முழங்கியபொழுது நிச்சயம் சுபமுகூர்த்த நேரமாகத்தான் இருந்ந்திருக்க வேண்டும் அலெக்ஸாண்டர் தாயின் மடியில் தவழ ஆரம்பித்தான், தந்தையோ போர்க்களம் செல்லுதல் […]

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டம் பாய்கிறது

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டத்தினை பாய்ச்சுகின்றது, பெரும் மிரட்டலான விஷயம் இது கவனியுங்கள், இவர்கள் எதற்காக கிளம்புகின்றார்கள்? பசுமை காக்க, சுற்று சூழல் காக்க, மீத்தேன் என்பது பெரும் பசுமை எதிரி என கிளம்புகின்றார்கள், இவர்களைத்தான் குண்டர் என உள்ளே தள்ளுகின்றது அரசு. ஆக தமிழ்நாடு நாசமாக்கி தீருவது என இந்த ஆட்சி கங்கணம் கட்டி அலைகின்றது, ஆற்றுமண், கடல்மண், மலை என எல்லாம் விழுங்கி இன்னமும் விழுங்கத்தான் வெறியோடு அலைகின்றது இதனை எதிர்ப்பவர்கள் மீது […]

எசமான் ஆட்சியை கலைச்சிராதீங்க….

எசமான், உங்க திட்டங்களுக்கு எதிரா பேசுரவன எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டு உங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கேன், கருணை காட்டுங்க எசமான் ஆட்சியெல்லாம் கலைச்சிராதீங்க…. சே..சே நாங்க என்ன முட்டாளா? தனியா 132 எம்.எல்.ஏ வாங்கி தமிழகத்தில் நாங்க ஆட்சி அமைக்க முடியுமா? நீங்கள் இருக்கும் பொழுது நாங்க ஏன் ரிஸ்க் எடுக்கணும்? அந்த பன்னீரெல்லாம் நம்ம பய, பயப்படாம போங்க. ஆனாலும் நீங்கதான் தமிழ்நாட்டை ஆளுவதாக சிலர் நம்புகின்றார்கள் பார்த்தீர்களா? அதுதான் காமெடி சொல்லுங்கள் […]

ஆயிரம் ஓவியாக்கள் வந்தாலும் அசைக்க முடியாதவர் குஷ்பூ.

ஓவியா பாசறைகளின் கனிவான கவனத்திற்கு, இதோ தமிழகத்தின் “நிரந்தர பிக்பாஸ்”… ஏண்டா டேய்..வெறும் இந்த 25 நாட்களில் காயத்திரி, ஆர்த்தி, ஜூலி, கஞ்சா கருப்பு போன்ற அல்லக்கைகளை மட்டும் எதிர்த்து நிற்கும் ஓவியாவிற்கே ரசிகர்களாக சிலர் கூடும்பொழுது.. 30 வருடமாக எத்தனையோ எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும், பெரும் சக்திகளின் சதிகளையும், வழக்குகளையும், சில கலவரங்களையும் கல்வீச்சையும் தாண்டி, அவற்றை எல்லாம் அசால்ட்டாக தாண்டி வந்து, எல்லா எதிர்ப்புகளையும் வீழ்த்தி தமிழகத்தில் நிலைத்து நிற்கும் குஷ்பூவிற்கு எவ்வளவு கோடி ரசிகர்கள் […]

கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான்

கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான் அடேய் எங்கே 23% வரி இருக்கின்றது? எல்லா பொருளுக்குமா கட்டிகொண்டிருக்கின்றோம்?, 53% வரி என எந்த இடத்தில் இந்த அறிவாளி கண்டார்? எந்த வியாபாரி 53% கட்டுவதாக சொன்னான்? எந்த அதிகாரி 53% கட்டு என வியாபாரி கழுத்தை பிடித்தான்? அது என்னடா? கடை என்னுடையது, முதலீடு என்னுடையது? நீ வாழும் நாட்டின் பாதுகாப்பு என்ன? அரசு ஊழியர்களின் […]

கொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை …

சிறுதாவூர் பங்களா மர்மம், அப்பல்லோ மர்மம், கொடநாடு மர்மம் , கூவத்தூர் மர்மம், பரப்பான அக்ரஹார சிறை மர்மம் என்றேல்லாம் சர்ச்சை வந்தது அதாவது வேறு விவகாரங்கள் ஆனால் தமிழக தலமை செயலகத்திலே மர்மமாம், குட்கா சம்பந்தபட்ட கோப்புகளை காணவில்லையாம். மர்மமான வீட்டு பூசாரியினை ஆலய கருவறையில் விட்டால் அங்கும் மர்ம விஷயங்கள் நடக்கும், தலமை செயலகம அப்படி ஆகிவிட்டது இவர்கள் காலப்ட்ட இடமெல்லாம் இப்படி பல மர்மங்கள் நடக்கும் போல, மாநிலத்தின் தலமை செயலகத்திலே மர்ம […]

எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா?

ஜிஎஸ்டி என்பது பற்றி சீமானை எல்லாம் பேசவைத்து பார்க்கும் ஊடகங்களில் ரஷ்ய mic 25 விமானம் நல்லதா? இஸ்ரேலிய பிரெஞ்ச் விமானம் நல்லதா? என எவனாவது விளக்குகின்றானா? சீனா வளைக்க நினைக்கும் கோழிகழுத்து மலைப்பகுதி பற்றி எவனாவது, எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா? கதிராமங்கலம் எரியும் பொழுது, இப்படி அசாமிலும், கோதாவரி படுகையிலும் மீத்தேன் எடுக்கின்றார்கள், அஞ்சவேண்டாம் என நம்பிக்கை கொடுக்கின்றதா? அல்லது அங்கெல்லாம் இப்படி அழிவு அதனால் நமக்கு வேண்டாம் என்றாவது சொல்கின்றதா சுத்தமாக இல்லை, […]

இதாம்ல‌ திருநெல்வேலிக்காரன், அவன் கிட்ட முடியுமால…

நெல்லையில் கலெக்டர் அன்புசுவர் எழுப்பியிருக்கின்றார், அதாவது வீணாக எறியும் துணி முதல் உணவு வரை அந்த சுவரின் அறையில் வைத்துவிடலாமாம், தேவைபட்டோர் எடுத்துகொள்வர் நல்ல திட்டம்தான், குப்பை தொட்டியில் எறியவேண்டியவற்றை இந்த சுவரில் வைக்கின்றோம், தேவையிருப்பவர்கள் பயன்படுத்தலாம் ஆனால் அதிலும் சில சிக்கல் உண்டு, உணவினை விடுங்கள், பழைய ஆடைகளை எடுத்து சென்று பின் சலவை செய்துவிற்றுவிடும் கூட்டத்திற்கு, பழைய காலணிகளை பழுதுபார்த்து காசாக்கும் கூட்டத்திற்கு இது வாய்ப்பாகிவிட கூடாது முறையாக பலனளித்தால் அருமையான திட்டம் இந்த […]

சீமான் என்கிற பொருளாதார மேதை ….

ஜிஎஸ்டி வந்தது கூட சிக்கல் இல்லை, தேசம் சமாளித்து முன் செல்கின்றது, ஆனால் இந்த சீமான் எல்லாம் ஏதோ பொருளாதார மேதை போலவும், பத்துமுறை பொருளாதார பாடத்தில் நோபல் பரிசு பெற்றவர் போலவும் பேசுவதைத்தான் சகிக்க முடியவில்லை இந்த அல்லக்கை கருமாந்திரம் எல்லாம் ஜி.எஸ்டி பற்றி பேச் என்ன தகுதி இருக்கின்றது? என்ன தெரியும் அன்னாருக்கு ஆனாலும் அள்ளி விடுகின்றார் அந்த தந்தி ஊடகம் அந்நாளிலிருந்தே தமிழக சாபக்கேடு, தமிழை கெடுத்ததும் அவர்கள்தான் , சினிமா செய்தியினை […]

புனித அன்னம்மாள்

உலகம் நாளை அந்த புனித சுவக்கீன் அன்னம்மாளின் திருவிழாவினை கொண்டாட தயாராகிகொண்டிருக்கின்றது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் அது பொன்னாள். சுவக்கீன் அன்னம்மாள் தம்பதியர்கள் அவர்கள், சுவக்கீன் என்றால் “இறைவனது தயாரிப்பு” என்றும், அன்னாள் என்றால் “ஆண்டவனின் அருள்” என்றும் பொருள் அவர் பெயர் அன்னா, ஆன் என்றும் ஆனி என்றும் பல பெயர்களில் அழைக்கபடும், ஆங்கிலத்தை விடுங்கள் அது அவ்வளவு மரியாதையான மொழி அல்ல, ஆனால் தமிழ் என்றுமே மரியாதையான மொழி அல்லவா? அன்+அம்மாள் என்பது அன்னம்மாள் […]