பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன்

மறுபடியும் சுஜாதாவினை சீண்டுகின்றார் ஜெயமோகன், சுந்தர ராமசாமி என்பவர் சுஜாதா இலக்கியவாதி அல்ல, அவரிடம் சரக்கு இல்லை என என்னமோ சொல்லிவிட்டு செத்தாராம் சுஜாதா சுந்தர ராமசாமியிடம் மதிப்பு பெறவே இல்லையாம் , அதனால் செல்லாதாம் சுஜாதா சுந்தர ராமசாமி நடத்திய ஏதோ ஒரு அறிவான இதழில் எழுத முயன்றாராம், ஆனால் சு.ராமசாமி அவரை எழுத அனுமதிக்கவில்லையாம், ஆம் தரம் கெட்டுவிடுமாம் சிந்து சமவெளி படத்தில் ஜெயமோகனின் வசனத்தால் கெடாத தரம், சு.ராமசாமி பத்திரிகையில் சுஜாதா எழுதினால் […]

சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு

சட்டமன்ற கூட்டதொடரை எளிதாக நடத்திவிட்டது அதிமுக அரசு, திமுக பெரும் சவால் எல்லாம் கொடுக்கவில்லை, வெளிநடப்போடு சரி குட்கா விவகாரம் உட்பட பல விஷயங்களில் திமுக கோட்டை விட்டது, அடித்து ஆடவேண்டிய அந்த விவகாரத்தில் திமுக சமாளித்து ஒதுங்கியது எல்லாம் ஹிஹிஹிஹ் ரகம்.. இன்னும் என்னென்ன விஷயங்களில் சறுக்குமோ தெரியவில்லை , இந்த இத்துபோன அரசுக்கே சவால் கொடுக்க தெரியவில்லை என்றால் என்ன சொல்ல? அன்றைய கலைஞர் திருச்செந்தூர் வைரவேல் உட்பட பல பிரச்சினைகளில் நடைபயணம் செய்து […]

இதற்கா உயிர்நீத்தான் மாவீரன் அழகுமுத்துகோன்

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோனின், 307வது பிறந்த தினம் கொண்டாடபடுவதையொட்டி தூத்துகுடியில் 144 தடை உத்தரவு எப்படிபட்ட கொடுமை பார்த்தீர்களா? ஒரு சுதந்திரபோராட்ட வீரனின் பிறந்த நாளை, இச்சுதந்திர நாட்டில், சுதந்திரமாக கொண்டாட முடியாமல் சாதிவெறி ஆட்டி படைக்கின்றது அந்நியருக்கு எதிராய் மகா வீரத்துடன் போரடிய மாவீரனை ஏதோ வெங்கடேஷ பண்ணையார், பசுபதி பாண்டியன் அளவில் கொண்டு நிறுத்தியிருக்கின்றது சாதி வெறி இது வெட்கபடவேண்டிய விஷயம், இதற்கா உயிர்நீத்தான் அந்த மாவீரன்? 2006ம் ஆண்டு இதே நாளில் […]

இன்று உலக மக்கள் தொகை தினம்

இன்று உலக மக்கள் தொகை தினமாம் அன்றைய பிரிக்கபடாத‌ இந்தியாவின் மக்கள் தொகை லட்சங்களுக்குள் முடிந்திருக்கின்றது, அதனால்தான் மிக குறுகிய எண்ணிக்கையுள்ள வெள்ளையன் ஆளமுடிந்திருக்கின்றது பின்னர் பாரதி “முப்பது கோடி முகமுடையாள் சிந்தனை ஒன்றுடையாள்” என அகண்ட பாரதத்திலிருந்து பாடுகின்றான், அதாவது அகண்ட இந்திய மக்கள் தொகை 30 கோடி, 1920களில் பின் இந்தியா பிரிந்து நாற்பது கோடியாகின்றது, கண்ணதாசன் கூட “நால்வகை மதமும் 40 கோடி மாந்தரும் வருகின்றார்” என பாடல் எழுதுகின்றார் அப்படி இருந்த […]

மத தீவிரவாதிகள் அல்ல, சாத்தானின் குழந்தைகள்

அமர்நாத்தில் புனித யாத்திரை சென்ற பக்தர்களை அந்த கொடூர, மனிதநேயமற்ற, மதமற்ற தீவிரவாதிகள் அதாவது மதத்தின் அருமை தெரியாத மிருகங்கள், ஐஎஸ் போன்ற இஸ்லாம் என சொல்லி சாத்தானான பேய்கள் சுட்டுகொன்றிருக்கின்றார்கள், இவர்கள் மத தீவிரவாதிகள் அல்ல, சாத்தானின் குழந்தைகள் பலர் காயமடைந்திருக்கின்றார்கள் இது மிக வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமல்ல, மிக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் அவர்களுக்கு மதமுமில்லை, மனிதமுமில்லை மிருகங்களை விட மகா கேவலமானவர்கள் இவர்கள், அழித்தொழிக்கபட வேண்டியவர்கள் இஸ்ரேல் சென்ற […]

ராகுலின் செயல் வாழ்த்துகுரியது

எல்லையில் அட்டகாசம் செய்கின்றது சீனா, உண்மையில் அது மல்லுக்கு நிற்பது பூட்டானுடன், பூடான் எதிர்க்கின்றது அதன் பிண்ணனியில் இந்தியா இருக்கின்றது காரணம் இந்த டோல்கம் அல்லது தொங்லாக் சீன வசம் சென்றால், அதன் பின் வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவோடு இணைக்கும் கோழி கழுத்து எனப்படும் முடிச்சினை சீனா நெருங்குவது மிக எளிது அதன் பின் யுத்தம் வெடிக்குமாயின் வடகிழக்கு மாநிலங்கள் துண்டிக்கபடும், அது மிக பெரும் குழப்பமாகும், இந்தியா அஞ்சுவது அதற்குத்தான், சீனா திட்டமிடுவதும் அதற்குத்தான் இது […]

பெரியார் கண்ட புதுமைபெண்ணாக கஸ்தூரி ….

நடிகை கஸ்தூரி மிக கீழ்தரமான விமர்சனங்களை எல்லாம் எதிர்கொள்கின்றார், கருத்துசொல்லும் பொழுது எம்மாதிரி வசவுகளை எல்லாம் சொல்லகூடாதோ அப்படி எல்லாம் அவரை நோக்கி நா கூசும் வார்த்தைகள் பிரயோகிக்கபடுகின்றன‌ அவரின் தனிபட்ட வாழ்வு யாருக்கும் தேவையில்லை, ஆனால அதற்காக அறவே சம்பதமில்லா விஷயங்களை சொல்வது சுத்த அபத்தம் முன்னாள் விடுதலைபுலி கருணாவினை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது பற்றி அவரே கொதிக்கின்றார், இது நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்று புலிகளிடமிருந்து தன் உயிரை காக்க ஓடவேண்டிய நிலையில் இருந்த […]

ஓரளவு உண்மையினை சொல்லும் டிவி அல் ஜசீரா

கத்தாருக்கும் அரபுநாடுகளுக்கும் இடையிலான முறுகல் முற்றுகின்றது, கத்தாரின் பெரும் வருமானமான விமான சேவை பல வழிகள் சுற்றி செல்வதால் பெரும் இழப்பினை சந்திக்கின்றது, சில கோரிக்கைகளை வைக்கின்றது ஆனால் அரபு நாடுகளோ தங்கள் கோரிக்கையில் மிக உறுதியாக இருக்கின்றது இறுதி எச்சரிக்கையாக 48 மணிநேர கெடு விதித்திருக்கின்றன, அந்த 13 கோரிக்கைகளில் அல் ஜசீரா டிவியினை மூடவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றன‌ இந்த உலக மீடியாக்களிலே ஓரளவு உண்மையினை சொல்லும் டிவி அதுதான், ஆப்கன் போர், பின்லேடனின் […]

என்ன பெரியார் பூமி இது?

எல்லோரும் சேர்ந்து எனக்கொரு கார் வாங்கி தாருங்கள் ,  ஊரெல்லாம் சென்று பார்ப்பான் என திட்ட வசதியாக இருக்கும் என்பதை அன்னார் மறைமுகமாக கேட்கின்றாராம் பெரியாரின் சொத்துக்களை வைத்து வீரமணி என்னவெல்லாமோ செய்யும் பொழுது, பெரியாரின் கொள்கைகளை வைத்து இவர் ஒரு கார் கூட வாங்க முடியவில்லை என்றால் என்ன பெரியார் பூமி இது? ஆக இது பெரியார் பூமி என்றால் இவருக்கு கார் வாங்கி கொடுத்து நிரூபிக்கட்டும். கார் கொடுத்தால் அடுத்து விமானத்தில் வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக […]

பிக் பாஸ் வகையறா….

தினமும் இந்தியாவினை விட 2.5 மணநேரம் சூரியன் முன்னால் சூரியன் உதிக்கும் மலேசியாவில் இப்பொழுதுதான் கஞ்சா கருப்பினை வெளியே தள்ளுகின்றார்கள் ஏதோ அணுகுண்டு வீசிய அமெரிக்காவின் அதிகாரபீடத்தை கண்டித்து ஐன்ஸ்டீன் வெளிவந்த காட்சிகள் போல கஞ்சா கருப்பு வெளியேறும் அழிச்சாட்டியம். சீனாவும் இந்திய எதிர்ப்பு பாகிஸ்தானும் சந்தித்து ஒரு மாதிரி பேசிகொள்வது போல இந்த காயத்திரியின் இம்சை அரசியலில் வைகோ போல இந்த பரணி ஒரு மாதிரி தனியாக அலைகின்றார்.. ஏதோ ஒரு பாக்யராஜ் படத்தில் பைத்தியகார […]