பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஜினி என்பவர் யார்? : ஜெ தீபா

ரஜினி என்பவர் யார்? மொழிப்போர், மதுக்கடை, சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மருத்துவம், காவேரி, முல்லைபெரியார், ஈழம், மாணவர் கல்வி, அணுவுலை, மீத்தேன், விவசாயிகள் ஜல்லிகட்டு என பெரும் போராட்டம் நடக்கும்பொழுதெல்லாம் அவர் என்ன செய்தார்? 30 ஆண்டுகளாக அவர் தமிழருக்கு செய்ததென்ன? நடிப்பும், அரசியலும் எப்படி ஒன்றாகும்? அந்த மனிதரிடம் எப்படி நல்லாட்சி எதிர்பார்க்கமுடியும்? புனிதமான அரசியலுக்கு அவர் எந்த அடிப்படையில் வரலாம்? இப்படி எல்லாம் பெரும் அறிக்கை வந்த உடன் மனம் பரபரத்தது, அட […]

திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர் வார வைத்து விட்டான் இறைவன் : தமிழிசை

திமுகவினரை வைத்தே கோயில் குளங்களை தூர் வார வைத்து விட்டான் இறைவன் – தமிழிசை ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றுதான் திமுகவின் அரசியல் வாழ்வே தொடங்கிற்று இந்துமதத்தின் மூடபழகங்களைத்தான் திமுக சாடியதே தவிர மொத்த நம்பிக்கையினையும் அல்ல‌ கடவுள் நம்பிக்கை இல்லா பெரியார் வைக்கத்தில் ஆலய நுழைவில் தாழ்த்தபட்டோருக்காக போராடிய காலமும் உண்டு கலைஞர் ஆட்சியில் என்றுமே ஆலயங்களுக்கான காரியங்களில் கட்டுபாடு விதிக்கபட்டதே இல்லை, திருவாரூர் தேருக்கும் கலைஞர் செய்தது கொஞ்சமல்ல‌ திருச்செந்தூர் வைரவேலுக்கு நீதிவேண்டி […]

என்னா கதை விடுகின்றார் ராஜ்கிரண்???

மகாத்மா காந்தியின் ஆட்சியினை 10 வருடமாக ஈழத்தில் நடத்தினார் பிரபாகரன், அதனால் உலக நாடுகள் அழித்தன : ராஜ்கிரண் நல்ல மனிதர் என நினைத்தால் உளறி கொட்டுகின்றார் மிஸ்டர் ராஜ்கிரண், உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி, அந்த பொன்னான ஆட்சிக்கு ஏன் உலகெல்லாம் இருந்த ஈழதமிழர் திரும்பவில்லை தமிழகத்தின் படுபயங்கரமான அகதிகள் முகாமில், ஆஸ்திரேலிய முகாமில் இருந்தெல்லாம் அகதிகள் ஏன் அந்த பொன்னான பூமிக்கு செல்லவில்லை? எல்லா அகதிகளும் நாடு திரும்புங்கள் பொற்கால ஆட்சி நாங்கள் தருகின்றோம் […]

படத்தில் சுவரோடு முட்டிகொண்டிருப்பது யார்? சாட்சாத் டிரம்ப்தான்

படத்தில் சுவரோடு முட்டிகொண்டிருப்பது யார்? சாட்சாத் டிரம்ப்தான் இஸ்ரேலிய ஜெருசலேமில் பழைய சாலமோன் ஆலய சுவர் உண்டு, யூதர்களின் பெரும் அடையாளமான அது அழிக்கபட்டு ஒரு சுவர்தான் மிஞ்சியிருக்கின்றது, யூதர்கள் எல்லாம் அதனை தொட்டு அழுவார்கள் மற்றவர்கள் சென்று அழவும் யூதர்கள் தடுப்பதில்லை அப்படி நேற்று ஜெருசலேம் சென்ற டிரம்ப் அந்த சுவரில் யூதமுறைபடி தொப்பி வைத்து அழுதிருக்கின்றார் எல்லோரும் எதற்கு அழுவார்களோ தெரியாது, டிரம்ப் இப்படி அழுதிருக்கலாம் “இந்த வறுமைபட்ட‌ வடகொரியாவினை அடிக்க முடியவில்லை, சிரியாவினை […]

இங்கிலாந்தில் தற்கொலை தாக்குதல் : 20 பேர் பலி

இங்கிலாந்தில் தற்கொலை தாக்குதல் 20 பேர் பலி, சற்றுமுன் சம்பவம் தீவிரவாதம் எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை லண்டன் உணரும் தருணமிது உலகின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் முன்பு அடைக்கலமானது லண்டனில்தான், அவர்கள் போராளிகள் என லண்டனும் சேர்த்துகொள்ளும் காலிஸ்தான் தீவிரவாதிகள் முதல் புலிகளின் கிட்டு, பாலசிங்கம் எல்லாம் அடைகலமானது அங்குதான். அங்கிருந்துதான் உலகெல்லாம் தீவிரவாதத்திற்கு கட்டளைகள் பறந்தன, தங்கள் நாட்டில் பிரச்சினை செய்யாமல் அடுத்த நாட்டில் செய்வதை லண்டனும் ரசித்தது உலகில் தீவிரவாதம் வெகு வேகமாக […]

இதுதான் ஆரிய சூது, அவர்கள் எழுத நினைக்கும் புதிய மனுநீதி

ஆரிய சூது என்றால் என்ன என்பது பலருக்கு புரியாது, இப்பொழுது அதற்கான காட்சிகள் கண்முன்னே தெரிகின்றன‌ ப.சிதம்பரம் மீது நடந்த சோதனையும், அவர்கள் அள்ளிவிடும் கட்டுகதைகளும் எல்லோருக்கும் தெரியும் நகரத்து செட்டியார்களுக்கு, அதுவும் கானாடுகாத்தான் வம்சத்தாருக்கு கோடிகணக்கில் சொத்துக்கள் இருப்பதில் என்ன ஆச்சரியம்? விலைவாசி உயர்ந்துவிட்ட காலத்தில் அவர்கள் அரண்மனை தேக்குமரங்களே தங்கத்திற்கு நிகரான சொத்துக்கள், அவர்களுக்கு 13 என்ன? 130 நாடுகளில் வியாபாரம் இருந்தாலும் அதில் ஆச்சரியமென்ன? அன்றே கிழக்காசியா முழுக்க பொருளாதாரத்தால் கட்டுபடுத்திய வம்சத்திற்கு […]

குல்பூஷன் ஜாதவ் என்பரின் சர்ச்சை

கொஞச நாளாக குல்பூஷன் ஜாதவ் என்பரின் சர்ச்சை உலக அளவில் பரபரப்பாக விவாதிக்கபடுகின்றது, அவர் நமது இந்தியர் இப்பொழுது பாகிஸ்தானில் மரணத்தின் நிழலில் நிற்கின்றார் அவர் மகராஷ்ட்ராக்காரர் கப்பல்படையில் பணி, அப்படித்தான் ஈரானில் இந்தியா செய்யும் சில துறைமுக பணிகளுக்காக அனுப்பட்டார் என்கின்றார்கள. அப்படி அவரை ஈரான் பாகிஸ்தான் எல்லையில் கடத்தபட்டார் என ஈரானிய செய்திகள் சில சொல்கின்றன‌ ராணுவத்திலிருந்து அவர் விலகினார், சொந்த தொழில் செய்தார் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் பலமுறை தொழில் விஷயமாக சென்றவர்தான் இம்முறை […]

அதிமுக அரசு ஒருவருடத்தினை கடக்கின்றது

இன்றோடு அதிமுக அரசு ஒருவருடத்தினை கடக்கின்றது, என்ன செய்திருக்கின்றது இந்த அரசு என கேட்டால் அவர்களே சிரித்துவிடுவார்கள் அவ்வளவு காமெடிகளை ஒரு வருடத்தில் செய்திருக்கின்றது, மூன்று முதல்வர்கள் வந்திருக்கின்றார்கள், குழப்பத்தில் பெரும் குழப்பம் நடக்கின்றது 2 லட்சம் கோடி அந்நிய முதலீடு என்றார்கள், ஆனால் அரசு கடன் 4 லட்சம் கோடி இப்பொழுது இருக்கின்றது ,அந்த அந்நிய முதலீடு என்ன ஆனது? அப்படியானால் இந்த அரசு 2 லட்சம் கோடி ஊழலா செய்திருக்கின்றது? கலைஞர் அரசு என்றால் […]

“ஸ்டாலினை பிரதமர் சந்திக்க வேண்டியதில்லை” : தமிழிசை

“அரசியல் ஆதாயத்திற்காக டெல்லி வரும் ஸ்டாலினை பிரதமர் சந்திக்க வேண்டியதில்லை” :தமிழிசை பன்னீர் செல்வம் என்பவர் மட்டும் பொது நல பித்தனா? அவர் என்ன தமிழக குடிநீருக்காக காவேரியினை திறந்துவிடுங்கள் என வற்புறுத்தவா டெல்லி வந்தார்? அவரை ஏன் பிரதமர் சந்தித்தார் தமிழ்நாட்டில் அனாமதேயமாக அலைபவர்களை எல்லாம் பிரதமர் சந்திப்பாராம், ஆனால் வலுவான எதிர்கட்சியின் தலைவரை பிரதமர் சந்திக்க கூடாதாம் தமிழிசை இப்படி சொல்வதற்கு பதிலாக தமிழகத்தில் எங்களின் ஒரே பயம் திமுக என சொல்லிவிட்டு போகலாம்.

போனஸ் பதிவுகள் …..

நந்தினி சீரியலில் குஷ்பூ பேயாக வருகின்றார், இனி பேய்களும் ரசிகர் மன்றம் தொடங்கும் என முன்பே சொல்லியிருந்தோம் சின்னதம்பியிலும் அவர் நந்தினி, இந்த அழகான பேய் சீரியலிலும் அவர் நந்தினி ஆக வருங்காலத்தில் நமது சங்கம் பெரும் ஆலமரமாக வளரும்பொழுது ஒரு பிரிவிக்கு “நந்தினி பிரிவு” என பெயரிட்டே தீரவேண்டும் என்பது சங்க முடிவு.. டெல்லிக்கு செல்கின்றார் எடப்பாடி மோடியினை சந்திக்க திட்டம் கடந்தவாரம்தான் பன்னீர்செல்வம் மோடியினை சந்தித்தது குறிப்பிடதக்கது பரமானந்த குருவின் கதையில் அவரின் சீடர்கள் […]