பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எழுத்தாளனுக்கு இறப்பில்லை

எழுத்தாளனுக்கு இறப்பில்லை, அவன் தன் எழுத்தில் எந்நாளும் எல்லா தலைமுறையோடும் பேசிகொண்டே இருப்பான் அப்படி ஜெயகாந்தன் தற்போது என்னுடன் பேசிகொண்டிருக்கின்றார், மிக மிக உறுதியான வரிகளோடும் , உறுதியோடும், பதைபதைக்க வைக்கும் தகவல்களோடும் பேசிகொண்டிருக்கின்றார் 1990கள் ராஜிவ் கொலைநடந்த காலங்களை மிக மிக உக்கிரமாக பேசிகொண்டிருக்கின்றார். சோ ராமசாமி, ஜெயலலிதா, வாழப்பாடி ராமமூர்த்தி, மபோசி எல்லோரும் எப்படி எல்லாம் புலிகளை கண்டித்தார்கள், கலைஞரிடம் கெஞ்சினார்கள் என்ற செய்திகள் அவை கலைஞர் ஏன் 2009ல் அமைதியானார் என்பதற்கான காரணங்களை […]

அக்டோபர் 6ல் நடிகை சமந்தா திருமணம்

https://youtu.be/85NK119gUpY நிச்சயதார்த்த புகைப்பட ஆல்பம் அக்டோபர் 6ல் நடிகை சமந்தா திருமணம் நேற்றுவந்த நடிகைக்கெல்லாம் திருமணம் நடக்கும்பொழுது என்றோ வந்துவிட்ட நயனுக்கு எப்பொழுது திருமணம்? வடிவேலு சொல்வது போலத்தான் இருக்கின்றது , “எப்பவோ கல்யாணம் ஆகவேண்டியவ, இன்னமும் கோலம் போட்டுட்டே இருக்கா” நயன் திருமணத்திற்கு பின்னர்தான் திருமணம் செய்வேன் என தொடைதட்டி சவால்விட்ட Babu Rao இனி நித்திய சன்னியாசிதான் போலிருக்கின்றது..  

ரஜினி உருவபொம்மையினை எரித்த தமிழ்படை வீரலட்சுமி கைது.

ரஜினிகாந்த்துக்கு எதிராக உருவபொம்மையினை எரித்த தமிழ்படை வீரலட்சுமி கைது. ரஜினிக்கு ஏன் இந்த தமிழமைப்புகள் எல்லாம் இவ்வளவு எதிர்ப்பு? எங்களுக்கு தமிழ் கவர்ணர்தான் வேண்டும், தமிழ் தலமை செயலாளர்தான் வேண்டும், தமிழ் கலெக்டர் மட்டும்தான் வேண்டும் கல்பாக்க அணுவுலையில் தமிழ் விஞ்ஞானிகள் மட்டும்தான் வரவேண்டும் , சென்னையில் தமிழ் விமானம் மட்டும்தான் தரையிரங்க வேண்டும், சென்னையில் தமிழ் கார்கள் மட்டும்தான் ஓடவேண்டும், தமிழ் உணவுகள் விற்கும் ஹோட்டல் மட்டும்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் ஏன் கிளம்பவில்லை? சீமான் […]

கேன்ஸ் திரைப்பட விழாவில் குஷ்பு

வழக்கமாக கேன்ஸ் திரைப்பட விழாக்களில் இந்திய அழகின் பிரதியாக ஐஸ்வர்யா ராய்தான் அடையாளம் காணப்படுவார், இம்முறை சகலரின் கண்களும் குஷ்பூவினை நோக்கியிருக்கின்றன, அந்த அரங்கில் அப்படியொரு பெண்ணை முன்பின் பார்த்திராத வெள்ளையர்கள் வாயடைத்து நிற்கும் காட்சி படத்தில் தெரிகின்றது இந்தபெண் இருக்கும்பொழுது இந்தியர் ஏன் ஐஸ்வர்யா ராயினை கொண்டாடினார்கள் என்ற குழப்பம் எல்லார் முகத்திலும் தெரிகின்றது உலக திரைப்பட அரங்கில், தமிழ்திரையின் ஒப்பற்ற அடையாளம் அமர்ந்திருந்த தருணம், ஒரு அழகான‌ ஓவியம் தன்னை தானே புகைபடம் எடுக்க்கும் […]

ரஜினிகாந்த் ஒரு வியாபாரி மட்டுமே: செல்லூர் ராஜூ

ரஜினிகாந்த் ஒரு வியாபாரி மட்டுமே: செல்லூர் ராஜூ தெர்மாக்கோல் வாங்க அவரைத்தான் இவர் முதலில் அணுகியிருப்பார் போலிருக்கின்றது மிஸ்டர் செல்லூர் ராஜூ, அந்த ராமசந்திரன் என்ன செக்கிழுத்த செம்மலா? இல்லை நேதாஜியுடன் துப்பாக்கி தூக்கியவரா? ஜெயலலிதா என்ன அன்னிபெசண்ட் அம்மையாரா? இல்லை சுதந்திரத்திற்காக மவுண்ட்பேட்டனுடன் மல்லுகட்டியவரா? திமுக மொழிப்போர் நடத்தியபொழுது, தமிழகம் பற்றி எரிந்தபொழுது கோவாவில் ஆயிரத்தில் ஒருவன் படபிடிப்பில் இருவரும் கேமரா முன் “திறமை” காட்டியது மக்கள் பணியா? இப்படி ஏராளம் உண்டு ராமசந்திரனும், ஜெயலலிதாவும் […]

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர்

அமைதிபடை அட்டகாசம் தெரியாமல் பேசுகிறாய் என்கின்றனர் சிலர். அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றாம் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. ஈழ போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் இந்தியாவினை ஒதுக்கிதான் வைத்தார், போராளிகளுக்கு பயிற்சிகள் தொடங்கிய காலத்திலும் வேண்டா வெறுப்பாக இறுதியில் வந்து சம்பிரதாயத்திற்குதான் கலந்து கொண்டனர் புலிகள். அவ்வப்போது இந்தியாவுடன் மோதும் சூழ்நிலை வரலாம் என்று […]

2004ல் பிரபாகரன் பேட்டி …

2004ல் பிரபாகரனை ஒரு ஊடகவிய‌லாளர் பேட்டி எடுத்தார், தனிபட்ட பேட்டி அது, அதில் பிரபாகரன் நிறைய பேசினார், அரசியல் துளியும் இல்லை, சிங்கள பேரினவாதம் அது இது என சொல்லிகொண்டே இருந்தார் அந்த நிருபர் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டார், இப்படியாக‌ “ராஜிவ் கொலைக்கு பின் இந்தியாவில் புலி ஆதரவு எப்படி இருக்கின்றது? எம்மீதான தடையினை நீக்க இந்தியாவில் தமிழ்மக்கள் போராடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ராஜிவ் கொலையால்தானே தடை வந்தது? அது பற்றி? (இதற்கு ஒருநாளும் பிரபாகரன் […]

உலக உணவுகளை எல்லாம் சுவைக்க வேண்டும்…

உலகில் யாருக்கு என்னென்ன குறிக்கோளோ நமக்கு தெரியாது, எமக்கு தெரிந்ததெல்லாம் உலக உணவுகளை எல்லாம் ஒரு ரவுண்டு வரவேண்டும் என்பது வாழையும், பனையும் அடிமுதல் முடி வரை பலன் கொடுக்கும், அதில் எதாவது வீணாகுமா? என 3ம் வகுப்பில் ஆசிரியர் சொன்னபொழுது, ஆடு வெட்டினால் அதன் தலை முதல் கால் வரை பயனாகிறது, தலைகறி குழம்பு, நெஞ்செலும்பு சாம்பார், கறி வறுவல் , குடல் இரத்த பொறியல், வறுவல், ஆட்டுகால் சூப் என அதில் கூட ஒன்றும் […]

தைரிய நாயகி குஷ்பூ

முன்பெல்லாம் பிரபாகரன் மீது பெரும் பிம்பம் இருந்தது, கலைஞரே பட்டும் படாமல்தான் விமர்சித்து கொண்டிருந்தார் சோ ராமசாமி மட்டும் துணிச்சலாக விமர்சித்தார், ஜெயகாந்தனும் முழங்கிகொண்டிருந்தார் ஆனால் ஒரு மாதிரியாக விமர்சித்து நிறுத்துவார்கள், ஊடக வெளிச்சமும் பாயாது 2009ல் பிரபாகரனை பெரும் தெய்வம் அளவிற்கு சிலர் உயர்த்தினர், விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனித பிம்பமாக சித்தரிக்க கிளம்பினார்கள், பெரும் அழிச்சாட்டியம் பிரபாகரனை தூக்கில்போடவேண்டும் என முதலில் என்றோ சொன்ன தமிழக குரல் ஜெயலலிதா, அவர் முதல்வராகவும் எதிர்கட்சி தலைவராகவும் இருந்ததால் […]

ரஜினி கன்னடர், அவர் எங்கள் தமிழ் மண்ணை ஆளகூடாது : சீமான்

ரஜினி கன்னடர், அவர் எங்கள் தமிழ் மண்ணை ஆளகூடாது : சீமான் பன்னீர் எனும் பச்சை தமிழனை ஆளவிட்டுவிடலாமா? ஏன் இப்பொழுதும் பழனிச்சாமி எனும் தமிழன் தானே ஆள்கின்றார், அதனால் இவர் கட்சியினை கலைத்துவிட்டால்தான் என்ன? தீபா வரும்பொழுது சீமானிடம் அவர் கன்னடர் எனும் சத்தமே இல்லை, ஆனால் ரஜினியினை கண்டால் மட்டும் சத்தம் வருகின்றது சீமான் சொல்லவருவதெல்லாம் இதுதான், பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் தமிழகம் சீரும் சிறப்புமாக இருக்கின்றது, அவருக்கு எதிர்கட்சியாக தமிழன் பன்னீருக்குத்தான் […]