பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாஸ்கோடகாமா கேரளாவின் கோழிகோட்டை அடைந்த நாள் இன்று…

ஐரோப்பியர்கள் குளிர்தேசத்தினர், ஆசிய தொடர்போ அல்லது இன்னொரு நாட்டிலிருந்து ஏதும் கிடைக்காமலோ அவர்கள் வாழமுடியாது, சீனாவிலிருந்து பட்டும் இந்தியாவிலிருந்து மிளமும் இன்னும் பலவும் இரு வழியாக ஐரோப்பா சென்றுகொண்டிருந்தது ஒன்று பட்டுசாலை என துருக்கி வழியாக செல்லும் சாலை, இன்னொன்று கேரளாவிலிருந்து அரேபியாவுக்கு கப்பலில் சென்று அங்கிருந்து பட்டுசாலை மூலமாக ஐரோப்பா நுழைவது இரண்டாவது வழிதான் சாலமோன் அரசரும், ரோமானியரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்ட வழி, கிறிஸ்தவமும் இஸ்லாமும் கேரளாவில் தொன்றுதொட்டு வளர காரணமான வழி நமக்கும் […]

பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வந்துள்ளார்

பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வந்துள்ளார். அவரை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். சமீபத்திய செய்திகளில் கவனிக்கவேண்டிய செய்தி இதுதான், இந்திய பாலஸ்தீன உறவுகள் அப்படியானவை இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா நெடுங்காலம் அங்கீகரிக்கவே இல்லை, பாடபுத்தகங்களில் கூட பாலஸ்தீனில் இயேசு பிறந்தார், பாலஸ்தீன ஜெருசலேம் மசூதி என்றுதான் வார்த்தைகள் இருந்தன‌ இன்று இந்தியாவில் பாலஸ்தீன் நாடு எனும் வார்த்தை கேட்க முடியுமா? எல்லா இஸ்ரேல் என மாறிற்று? […]

திமுக ஆட்சிக்கு வர நினைத்தால் விடமாட்டோம் : ஆர்எஸ்எஸ் … இன்னும் பிற

அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வர நினைத்தால் விடமாட்டோம் : ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அட பதர்களா? இவ்வளவுதானா உங்கள் அறிவு அதிமுக என்பது செம்மறியாட்டு கூட்டம், அதனை புலியாக உருவாக்கி ஷோ காட்டியது டெல்லி, உண்மையில் அதிமுக புலி மேக் அப் போட்ட ஆடுதான் இப்பொழுது ஓநாய்கள் அந்த அதிமுக எனும் ஆட்டு கூட்டத்தை ரத்தம் உறிஞ்சி கூறுபோடுகின்றன‌, புலிகள் என்றால் பாயும், ஆடுகள் என்ன செய்யும்? கத்தத்தான் செய்யும் அதுவும் கழுத்தில் கடித்தால் சத்தமே […]

மக்களோடு களம் இறங்குங்கள்: ரஜினிக்கு சேரன் வேண்டுகோள்

மக்களோடு களம் இறங்குங்கள்: ரஜினிக்கு சேரன் வேண்டுகோள் சமீபத்தில் தன் வழக்கமான 30 வருட புலம்பலை ரஜினி புலம்பியபின், அவருக்கு இப்படி திரைதுறையில் இருந்து பலர் ஆலோசனை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் தமிழக முதல்வர் பதவி நெடுங்காலத்திற்கு பின் இப்பொழுதுதான் பன்னீர், பழனிச்சாமி என திரையுலகம் சாராத இரு முதல்வர்களை கண்டிருக்கின்றது, அது இவர்களுக்கு பொறுக்கவில்லை மறுபடியும் தமிழக முதல்வர் பதவியினை கைபற்ற அந்த துறை துடியாய் துடிக்கின்றது ஆனால் அது ரஜினி எனும் உப்புகுதிரை அல்லது மண்குதிரையினை […]

உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ’எஸ்மா’சட்டம் பாயும் : ஐகோர்ட்

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ’எஸ்மா’சட்டம் பாயும் : ஐகோர்ட் பொதுமக்களின் நலன் மீது ஐகோர்ட் வைத்திருக்கும் அக்கறை பாராட்டதக்கது, பணிக்கு வராத தொழிலாளர்கள் மீது சட்டம் பாயும் என மிரட்டியிருக்கின்றது ஆனால் இதே மிரட்டலை முன்பு கூவத்தூரில் கூடியிருந்த 122 மக்கள் பிரதிநிதிகள் மீதும் காட்டியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவர்கள் மக்கள் பணியாளர்கள் இல்லையா? அவர்கள் மீது சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? அப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இதோ பொதுமக்கள் பாதிக்கபடுகின்றார்கள் என […]

இன்றைய நாள் இந்திர ராஜதந்திரத்தில் முக்கியமான நாள்

இன்றைய நாள் இந்திர ராஜதந்திரத்தில் முக்கியமான நாள் சிக்கிம் எனும் பகுதி இந்தியாவோடு இன்றுதான் இணைக்கபட்டது, அது மிகசிறிய பகுதி ஆனால் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதி 1975 வரை சிக்கிம் தனிநாடு, அதற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை, அதனை விழுங்கும் எண்ணமும் இந்தியாவிற்கு இல்லை, இந்தியாவின் சில பிடிகள் அங்கு இருந்தாலும், இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை ஆனால் சிக்கல் சீனா திபெத்தினை ஏப்பமிட்டபின் வந்தது சிக்கிம் சிறிய மாநிலமாயினும் நாதுலா எனும் கணவாய் அங்குதான் உள்ளது, இந்திய திபெத்தின் […]

உலகம் முழுக்க கணிணிகள் ஊடுருவும் வைரசால் பாதிப்பு

உலகம் முழுக்க கணிணிகள் ஊடுருவும் வைரசால் பாதிப்பு, கணிணிகளை காப்பாற்ற‌ உலக நாடுகள் தீவிர நடவடிக்கை ஆண்டவா இந்த செய்தி தமிழக அமைச்சர்கள் கண்ணில் படாமல் போகட்டும், இந்த வைரஸ் விஷயம் அவர்களுக்கு தெரிந்தால் , படு பயங்கர நடவடிக்கையில் இறங்குவார்கள் ஆம்,லேப்டாப்பிற்கு எல்லாம் தடுப்பூசி போட்டு மாத்திரை கொடுக்கும் வேலையில் இறங்கி விடுவார்கள். இதனை கூட பொறுத்துகொள்ளலாம், ஆனால் இந்த உலகளாவிய கம்பியூட்டர் சிக்கலுக்கு காரணம் கலைஞரும் அவரின் ஆட்சியும்தான் என ஒரு கும்பல் வருமல்லவா? […]

கூடங்குளம் : ஓர் சரித்திர குறிப்பு…

கூடங்குளம் அணுவுலை என சொன்னால் அது 1989ல் கலைஞர் அனுமதித்தது என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், வியாதி அப்படி, மருந்தே இல்லாத வியாதி தமிழகத்தில் முதல் அணுவுலையினை கல்பாக்கத்தில் அனுமதித்தது முகராசன் எம்ஜி.ராமசந்திரன், இந்திரா சொன்னால் பாகுபலி சத்யராஜ் போல ஆகட்டும் தாயே என விழுந்துகிடந்தவர் அவர், அவர்தான் அனுமதித்தார் அதன் பின் கூடங்குள திட்டம் எம்ஜிஆர் அந்திமகாலத்தில் தொடங்கபட்டது, அவர் தடையேதும் சொல்லவில்லை, எம்ஜிஆர் எனும் கட்டப்பாவிற்கு இந்திரா சிவகாமி என்றால், ராஜிவ்காந்தி அமரேந்திர பாகுபலி, அப்படி இருந்தது […]

வெளிநாட்டு படிப்புகளில் தமிழனுக்கு அவசியமானது நல்ல தமிழ்..

இந்தியாவில் நீட் அது இது என ஏகபட்ட விஷயங்களில் இந்த அரசு இறங்க, வெளிநாட்டு மருத்துவபடிப்பிற்கு ஓடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்கின்றார்கள் இந்தியாவில் நீட் இம்சையால் அழுபவர்களை பிடிக்க பல வெளிநாட்டு மருத்துவ படிப்பு கல்லூரிகள் கையில் வலை, தூண்டில் சாக்கோடு சுற்றுகின்றார்களாம், தமிழகத்தில் நிறைய கும்பல் சுற்றுகின்றது என்கின்றார்கள். சிக்கியவர்களை அப்படியே அமுக்கி தூக்கி செல்கின்றார்களாம்.. ரஷ்யா, முன்னாள் சோவியத் நாடுகள் இன்னபிற நாடுகளுக்கு மருத்துவகல்விக்கு அழைத்து செல்லும் கும்பல்கள் இப்பொழுது கடும் மகிழ்வாக இருப்பதாக […]

ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி துறை சோதனை

ப.சிதம்பரம் வீட்டில் வருமானவரி துறை சோதனை மோடிக்கும், ஜெட்லிக்குமே இவ்வளவு அறிவு இருக்குமென்றால், செட்டியாருக்கு எவ்வளவு இருக்கும்? ஒரு துரும்பினை எடுத்துவிட முடியுமா? இவர்கள் இம்மாதிரி விஷயங்களில் தொடக்கபள்ளி என்றால் அவர் அனைத்துலக பல்கலைகழகம்.. அதென்ன ஐடி அதிகாரிகள் எல்லாம் தமிழகத்திலே ரெய்டு நடத்துகின்றார்கள், இந்த அம்மானி, டாட்டா, அதானி அலுவலகங்களில் எல்லாம் ஒரு சோதனையுமே நடக்காதா? தென்னிந்தியாவில் பெரும் சம்பளம் வாங்கும் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில்தான் இருக்கின்றார், எந்திரன் 2.0 சம்பளம் எந்திரத்தாலும் எண்ணமுடியாது என்கின்றார்கள், […]