பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்து கொண்டிருக்கின்றது

ஒரு பெரும் சிக்கலை தமிழகம் சந்தித்துகொண்டிருக்கின்றது, இது மிக எளிதாக கடந்து போகும் விஷயம் அல்ல, ஏராளமான பாதிப்புகளை கொண்டுவரும் விஷயம் 6 ஆண்டு அதிமுக ஆட்சியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுகொண்டிருக்கின்றது, பொதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வேர்கள் பட்டு மரம் சரியும் பொழுதுதான் சத்தம் வரும், 6 ஆண்டுகள் தமிழக தொழில்துறை கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி இப்பொழுது பெரும் ஓலமாக மாறுகின்றது முன்பு ஹூண்டாய் மற்றும் போர்டு ஆலைகளின் விஸ்தரிப்பினை தடுத்து அவற்றை குஜராத்திற்கே விரட்டிவிட்டது […]

திருப்பூர் காங்கேயம் அருகில் ஒரு மலைகோவில்…

திருப்பூர் காங்கேயம் அருகில் ஒரு மலைகோவில் உள்ளதாம், அந்த சிவன் மிக உக்கிரமானவர் என்கின்றார்கள். யாராவது பக்தரிடம் சிவன் கனவில் வந்து ஒரு பொருளை ஆலயத்தின் பெட்டியில் வைக்க சொல்வாராம், அப்படி வைத்தால் அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம் அதுவும் பூசாரிகள் இன்னொரு முறை வாக்கு கேட்டு உறுதி செய்வார்களாம், பின் மகா எச்சரிக்கை தேவையாம் இதுவரை அரிசி, நீர் எல்லாம் வைக்க சொன்னாராம், வைத்தார்களாம். அப்பொழுது அரிசி விலை உயர்வு, சுனாமி எல்லாம் வந்ததாம் […]

இன்று திப்பு சுல்தானின் நினைவுநாள்

இன்று திப்பு சுல்தானின் நினைவு நாள். இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும். இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், […]

உலகில் பல நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது

உலகில் பல நாடுகளிடம் அணுகுண்டு இருக்கின்றது, ஏவுகனையும் இருக்கின்றது, அவற்றை வைத்துகொண்டு அவை எல்லாம் மிரட்டும் தொணி தாளமுடியவில்லை இஸ்ரேல், ஈரான், வடகொரியா எல்லாம் அந்த வகை. எதும் அண்டை நாடுகளோடு சிக்கல் என்றால் அவர்கள் சீற்றம் அப்படி இருக்கும் அணு பலம், ஏவுகனை பலம் கொண்டு ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளை எல்லாம் ஆட்டி வைக்கின்றது, எல்லா ஆயுத அரசுகளும் அப்படித்தான் இந்த உலகில் மட்டுமல்ல, அண்ட சராசரத்திலே அணுகுண்டை வைத்து கொண்டு ஒரு நாடு […]

எங்கோ இருக்கும் பஞ்சாபியர் இந்த சாதியா?

எங்கோ இருக்கும் பஞ்சாபியர் இந்த சாதியா? அட்டகாசத்திற்கு ஒரு அளவே இல்லையா? (எல்லா நாடுகளிலும் அவனவன் நாட்டுக்காரனை சொந்த நாட்டுக்காரன் என்றுதான் அழைப்பார்கள், அத்ற்காக‌ அவர்கள் எல்லாம் நாடார் ஜாதிகளா? நாட்டுக்காரன் எல்லாம் நாடார் என்றால், சந்துக்குள் வாழ்ந்தவன் எல்லாம் சாணாரா?) ஜஸ்ஸா சிங் நாடாரா? அப்படியானால் அய்யா வைகுண்டர் என்ன குஜராத்தியா? இந்த ஐதரபாத் நிஜாம் ஓஸ்மான், ஆற்காடு நவாப், திப்பு சுல்தான், மங்கள் பாண்டே, பிளாசி சுல்தான், பிஜப்பூர் சுல்தான், மலபார் மன்னன் எல்லோரும் […]

துணுக்கோ துணுக்கு….

இன்னொவா காரின் புதிய மாடல் இன்று வெளியீடு ஓஹோ.., நாஞ்சில் சம்பத் அய்யாகண்ணு அளவிற்கு கத்துவதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது, விவஸ்தையே இல்லாமல் பேசுவதிலும் விஷயம் இருக்கின்றது, நாஞ்சில் நாக்கு சும்மா அசையாது புதிய இன்னொவா மாடல் கார் வருவது அவருக்கு முன்பே தெரிந்திருக்கின்றது விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள் பற்றி 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. வைகை நீர் விவகாரத்திலே தெர்மாக்கோல் அளவிற்கு யோசித்தவர்கள், விவசாயிகளை […]

அமெரிக்கருக்கு ட்ரம்ப் வேலை கிடைக்க வழிசெய்துவிட்டார்

அமெரிக்காவில் 10 ஆயிரம் அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துகின்றது இன்போசிஸ் அதாவது 10 ஆயிரம் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு அமெரிக்கருக்கு செல்கின்றது ஆக 10 ஆயிரம் அமெரிக்கருக்கு ட்ரம்ப் வேலை கிடைக்க வழிசெய்துவிட்டார், வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி என அவர் முழங்கலாம்

கரிபூசும் வேலையினை ஆனந்தவிகடன் செய்கிறது…

கலைஞரை பற்றி எழுதுகின்றோம் என சொல்லி, அவரை பற்றி தவிர்க்கமுடியாத சாதனைகளை சொல்லிவிட்டு, வஞ்சகமாக கரிபூசும் வேலையினை ஆனந்தவிகடன் செய்துள்ளது கலைஞர் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர் அல்ல என்று தொடங்கி ஈழபோரில் அவர் அமைதிகாத்தார் என்று கொண்டு முடித்திருக்கின்றார்கள் பெரும் வரலாற்று திரிபுனையும் செய்திருக்கின்றார்கள் அதாவது பிரமாணர்களின் காங்கிரசை எதிர்த்த கலைஞர் எப்படி காங்கிரசோடு கூட்டு வைத்தார் என கேட்கின்றார்களாம் பிராமணரான‌ ராஜாஜிதான் காமரஜரை வீழ்த்த கலைஞரோடு முதலில் கூட்டு சேர்ந்தார் என்பதை மறைக்கின்றது விகடன், […]

23 வருடத்திற்கு முன்பே கொரியாவினை யூதர்கள் குறி வைத்துள்ளனர்…

23 வருடத்திற்கு முன்பே கொரியாவினை யூதர்கள் குறிவைத்திருக்கின்றார்கள் என்பதற்கான ஆதாரம் இது, ஒரு யூத ரபி தன் மதகூட்டத்தில் பேசும் பேச்சு இது எப்படி யூத இனம் விழிப்பாக இருக்கிறது என்றால் இப்படித்தான், சதாம் தோற்கடிக்கபட்டு , கடாபி போன்றோர் இருந்த காலங்களிலே மிக சரியாக கொரியாவினை கணித்திருக்கின்றார்கள். கொரியாவால் இஸ்ரேலுக்கு ஆபத்து என இந்த கோட் போட்ட ரிஷி கத்தியிருக்கின்ரார் இந்த தாடிக்காரர் ஒரு யூத போதகர், தீர்க்கதரிசி வேறாம். அவர்களுக்கென்ன? யாரை கொன்றாலும் கடவுள் […]

வடகொரியாவிற்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதியா?

சுதந்திர இந்தியா யுத்தம் பல கடந்து, சோதனை பல சந்தித்து வளர்ந்தது, வங்க போரில் வென்றது, 1974ல் இந்தியா அணுகுண்டு செய்தது, அதுமுதல் உலகநாடுகளின் பார்வை இந்தியாவின் மேல் இறுகின, பல வகை தொந்தரவுகளை கொடுத்துபார்த்தார்கள், இந்தியா அசைந்து கொடுக்கவில்லை, இந்தியா பெரும் வளர்ச்சி பெறுவதை விரும்பாமல் உலகநாடுகள் பழிவாங்க எண்ணின, எப்படி பழிவாங்கினார்கள்? பாகிஸ்தான் அணுகுண்டு செய்வதனை கண்டும் காணாமல் விட்டார்கள், அவர்கள் நினைத்திருந்தால் என்றோ பாகிஸ்தானை தடுத்திருக்கலாம், தடுப்பது என்ன? சதாமின் அணுகுண்டு, லிபியாவின் […]