பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஷ்பூ காலம் தந்த தலைவி

கொஞ்சம் தீவிர அரசியலுக்கு திரும்பியிருக்கின்றார் குஷ்பூ, ராகுல் காந்தியினை சந்தித்திருக்கின்றார் , வழக்கமான அதிரடியில் பேச ஆரம்பித்துவிட்டார் மன்னார்குடி கும்பலை விரட்டிவிட்டு அதிமுகவினை தன் கைபாவையாக்க பாஜக களமிறங்குவது யாருக்கும் தெரியாததல்ல, இனி அதிமுகவின் கட்டளை கமெண்டராக தமிழிசை கூட செயல்படலாம் எனும் நிலை இந்நிலையில் வலுவான எதிர்குரலாக குஷ்பூவினை காங்கிரஸ் முன்னிறுத்துவது தெரிகின்றது, அவரும் பல அதிரடி கருத்துக்களை சொல்ல தொடங்கிவிட்டார் பாஜகவினை தைரியமாக கிழித்தெறிய தொடங்கிவிட்டார் குஷ்பூ, பாஜகவின் கனவு பலிக்காது என அவர் […]

பண்ருட்டியார் என்று மறுபடி இணைந்தாரோ அன்று தொடங்கியது சிக்கல்

பலர் அதிமுகவில் இணையும் பொழுதும் சிக்கல் இல்லை, ஆனால் பண்ருட்டியார் என்று மறுபடி இணைந்தாரோ அன்று தொடங்கியது சிக்கல் மனிதர் ஒரு மாதிரியானவர், வைகோவின் அட்டகாசம் வெளியில் தெரியும் ஆனால் பண்ருட்டி அமைதியான சாகசக்காரர் இதனை முதன் முதலில் சொன்னவர் கலைஞர், பல இடங்களில் எம்ஜிஆருக்கே சொன்னவர் இன்று பண்ருட்டியார் அமைதியாக இருப்பதாக தோன்றலாம், ஆனால் என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்பது அவரை தவிர ஆண்டவனுக்கும் தெரியாது இன்றைய அதிமுக சீனியர் அவர்தான், மகா சீனியர். மனிதர் […]

9 மணிநேர விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் கைது

9 மணிநேர விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் கைது நமது தமிழக காவல் நிலையத்தில்தான் “சும்மா” விசாரணை என அழைத்துசென்று பின் பட்டாபட்டி டவுசரோடு அமர வைப்பார்கள் என்றால், டில்லி போலிசும் அப்படித்தான் போலிருக்கின்றது ஏதோ ஒரு படத்தில் வடிவேலு சொல்வது போல “நம்பி போனேன்” அங்க 4 பேர் மொத்துனாங்க, அப்புறம் மீன்பாடி வண்டில போட்டு அனுப்புனாங்க, அப்புறம் இன்னொருத்தனிடம் அனுப்புனாங்க” எனும் வகையில் வறுத்திருக்கின்றார்கள் ஏதோ கடும் கோபத்தில் டெல்லி களமிரங்கியிருப்பது தெரிகின்றது, மன்னார்குடி […]

கலைஞர் கரையேறிவிட்டார், ஸ்டாலின் நீந்திகொண்டிருக்கின்றார்

கலைஞர் அடிக்கடி அந்த சம்பவத்தை சொல்வார், அதாவது அவரும் அவர் நண்பர் தென்னனும் அந்த திருவாரூர் கோயில் குளத்தில் குளிக்க சென்றார்களாம், நடுவில் இருக்கும் மண்டபத்தை தொட நீந்தினார்களாம் பாதியில் திணறிய தென்னன், திரும்பி விடுவோம் என்றாராம், கலைஞரோ நாம் திரும்பினாலும் பாதி தூரம் நீந்தவேண்டும், அதற்கு பதிலாக மண்டபம் நோக்கி நீந்தினால் அதனை அடைந்துவிடலாம் என சொல்லி , அயராது நீந்தி மண்டபத்தை அடைந்தாராம் தான் சோர்வுற்ற நேரமெல்லாம் இச்சம்பவத்தை சொல்லி, இன்னும் நான் எதிர்நீச்சல் […]

விரைவில் இப்படி செய்திகள் வரலாம்

விரைவில் இப்படி செய்திகள் வரலாம் யோகியினை அவசரமாக அழைத்தார் மோடி, உடனே யோகி இப்படி சொன்னார் “அய்யா என்னிடம் இருப்பது இருபது ரூபாய்தான், அதில்தான் இன்றைய சப்பாத்தி சாப்பிடவேண்டும் அதனால் உடனடியாக வர பணமில்லை, ஏதும் உருளைகிழங்கு லாரி டெல்லிக்கு வந்தால் அதில் வந்துவிடுகின்றேன், திரும்பி வருவதற்கு இன்னொரு டீசல் லாரியில் என்னை திருப்பி அனுப்ப நீங்கள் உத்திரவாதம் கொடுக்க வேண்டும்” இப்படி எல்லாம் விரைவில் அவிழ்த்துவிடுவார்கள்,வர வர இவர்கள் அழிச்சாட்டியம் தாங்கமுடியவில்லை இப்பொழுதெல்லாம் ரசிக்க கூடிய […]

நடிகை கஸ்தூரியின் பேட்டி…

நடிகை கஸ்தூரியின் பேட்டியினை கேட்கவில்லை, ஆனால் அவர் இடஒதுக்கீடு குறித்து சில விஷயங்களை சொன்னதாக செய்திகள் சொல்கின்றன‌ இது தொடக்கமே, இன்னும் பற்பல குரல்கள் எழும்பலாம். இக்குரல்கள் 1930க்கு முன்பு உச்சத்தில் இருந்தன பின் தமிழகத்தில் பெரியாரால் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கின‌ பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் சுத்தமாக அடங்கின, வடக்கே விபிசிங் காலத்தில் பலமாறுதல்கள் வந்தன‌, விபி சிங் காலம்தாம் சுதந்திர இந்தியாவில் ஓரளவு இடஒதுக்கீடுகளை சுதந்திரமாக விவாதித்த காலம், ஆனால் கொஞ்ச காலமே.. […]

ஓ.பி.எஸ்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு

ஓ.பி.எஸ்க்கு “Y” பிரிவு பாதுகாப்பு ஆம், , அல்கைதா, ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது, வட கொரிய அதிபரை சட்டையினை பிடித்து இழுத்தது, காஷ்மீரில் கலகம் செய்யும் பாகிஸ்தானின் பிரதமரை செருப்பால் அடிக்க சாடியது.. மகிந்த ராஜபக்சேவினை அவர் கழுத்தில் இருந்த ஷால் கொண்டு கழுத்தை இறுக்கியது டிரம்பினை அவர் டையினை பிடித்து இழுத்து குத்தியது என படுபயங்கர சாகசங்களை செய்தவர் சுருக்கமாக சொன்னால் அமெரிக்க கென்னடி, சோவியத் குருச்சேவிற்கு அடுத்து உலகினை மிரட்டிய […]

மாநில அரசே பதவி விலகு…

ஏற்கனவே ஏழை தமிழரை காத்துவிட்டு, அதன் பின் தமிழை காத்து வளர்த்துவிட்டு, பின் ஈழதமிழரை வாழவைத்துவிட்ட தமிழக கட்சிகள் இப்பொழுது விவசாயிகளை காக்க கிளம்பிவிட்டன‌ எல்லா நாட்டிலும் உணவு போடுபவன் விவசாயி என்றால், இம்மாநிலத்தில் வோட்டு போடுபவன் என்ற நோக்கில் மட்டும் பார்க்கின்றார்கள் இவை எல்லாம் வெற்று ஆர்பாட்டம், வறட்டு கூச்சலே அன்றி விவசாயிகளுக்கான விடிவு அல்ல, அல்லவே அல்ல‌ வாய்ப்பு கிடைக்கும் பொழுது சாராய அதிபர்களையும், கல்வி தந்தைகளையும் வளர்க்க வேண்டியது, ஆட்சி போனபின்பு விவசாயிகளுக்காக […]

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

சத்தீஸ்கர்: நக்ஸல் தாக்குதலில் 25 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி மனதை மிகவும் பாதித்த செய்தி இது, சீனா பாகிஸ்தான் இலங்கை அட்டாகசங்களை அடக்கும் முன்னால் இந்த உள்நாட்டு கொடூரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் இந்த நக்சலைட்டுகளுக்கு முடிவு கட்டினாலே அது மோடியின் மாபெரும் சாதனை என சொல்லபடும், இன்றைய தேதியில் இந்தியாவின் மிகபெரும் சவால் இவர்கள்தான் அவர்களிடம் போராடி நாட்டிற்காய் இன்னுயிர் நீத்த அந்த தியாக வீரர்களுக்கு, வீரவணக்கம் வந்தே மாதரம்..

தமிழக அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

தமிழக அரசின் பென்சன் கொள்கையினை கண்டித்து தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் நாளைமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் கோடைவெயில் கொடுமைக்கு தப்புவதற்காக போராட்டம் அறிவித்துவிட்டார்களோ என்னமோ? லட்சகணக்கான பட்டதாரிகள் வேலையின்றி இருக்கும் தமிழகத்தில், அரசு ஊழியர்கள் இப்படி அழிச்சாட்டியம் செய்ய தொடங்கியபொழுதுதான் ஜெயா அதிரடி மூலம் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிய காட்சி எல்லாம் நடந்தது ஜெயா செய்த சில உருப்படியான காரியங்களில் இதுவும் ஒன்று, அதன்பின் ஜெயா இருக்கும் வரை இவர்கள் மூச் காட்டவில்லை என்பது குறிப்பிடதக்கது. அம்மையார் […]