பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நயனின் டோரா படம் டேராவுக்குள் ……

நயனின் டோரா படம் டேராவுக்குள் அடங்கியதில் விநியோகிஸ்தர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றார்களாம், இதனால் அடுத்த படமான “அறம்” படத்தினை வாங்க ஆளில்லையாம் ரஜினி என்றால் சர்ச்சை செய்யலாம், வேறு முண்ணணி நடிகர்கள் என்றால் அடுத்தபடத்திலாவது அள்ளலாம், நயனுக்கு அப்படி என்ன ரசிகர் கூட்டம் ( Babu Rao எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை போல) இருக்கின்றது?, ஆக அடுத்தபடம் எப்படியும் போகட்டும், இனி நயன் படத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்களாக பேசிகொண்டிருந்தார்களாம் இந்த நேரத்தில் டி.ஆரும் […]

தீபா மீது மோசடி வழக்கு பதிவு , இன்னும் பிற ….

கொடநாட்டு பங்களா காவலாளி அடித்து கொலை, ஆவணங்கள் திருட்டு என தகவல் என்னது காவலாளியினையுமா?…… சூறாவளி என்பது சுழன்றடிக்க வேண்டும், அமைதியான சூறாவளியினை யாரும் சீண்டுவதில்லை, அப்படி ஒன்று சாத்தியமுமில்லை எல்லாம் அதனதன் இயல்பில் இருத்தல் அழகு அப்படி மிக பொறுப்பாக ஆடும் அமைதியான கிறிஸ் கெயிலை ரசிக்க முடியவில்லை..  தீபா மீது மோசடி வழக்கு பதிவு : செய்தி “அத்தை வழி இந்த வழி ஆடி விளையாடம்மா ஆடும் வரை ஆடிவிட்டு அந்தசிறை சேரம்மா..” ஜெயா […]

உலக புத்தக விழா

உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள் எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர் அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் விஷயம் போதிக்கும் மானிடத்தை வாழ வைக்கும் மகா முக்கிய […]

பன்னீர் செல்வத்திற்காக‌ நிதித்துறையை இழக்க தயார்: ஜெயக்குமார்

பன்னீர் செல்வத்திற்காக‌ நிதித்துறையை இழக்க தயார்: ஜெயக்குமார் அப்படியே தமிழக நலனுக்காக இந்த அரசினை இழக்க தயார் என சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும் தமிழகம் எப்படி போனால் என்ன? பன்னீர் செல்வம் நன்றாக இருக்கவேண்டும் என்று அமைச்சர் ஆசைபடுவதன் அர்த்தம் என்னவோ? பன்னீர் என்னவோ மன்மோகன் சிங்கிற்கு அடுத்து 15 டாகடர் பட்டங்களை பெற்ற பொருளாதார மேதை போலவும், அமர்த்தியா சென்னுடன் அரட்டை அடிக்கும் ஒரே சீடன் போலவும் ஜெயகுமார் சொல்லி கொண்டிருக்கின்றார் சிவாஜி கணேஷனுக்கு […]

யாரையோ நம்பி கோவணம் அவித்தார் அய்யாகண்ணு !

டெல்லியில் விவசாயிளுடன் முதல்வர் சந்திப்பு எல்லா போராளியும் முதல்வரை சந்தித்துவிட்டு, பிரதமரை சந்திப்பான் தமிழக அய்யாகண்ணு மோடியினை பார்க்க போய்விட்டு இறுதியில் பழனிச்சாமியோடு திரும்பி வந்திருக்கின்றார் மிஸ்டர் அய்யாகண்ணு இந்த பழனிச்சாமியினை சென்னையில் பார்க்கமுடியாமலா டெல்லிக்கு சென்றீர்கள்? மன்னார்குடி குடும்பம் ஒதுக்கபடும் செய்திகள் வந்தவுடன், விவசாயி டெல்லி போராட்டம் முடிவுக்கு வருகின்றது அல்லது டெல்லி முறைத்தவுடம் எடப்பாடி ஓடி சென்று விவசாயிகளை அழைக்க செல்கின்றார் ஆக நாடகம் விடும் வேளையில் உச்சகட்ட காமெடி நடக்கின்றது யாரையோ நம்பி […]

பின்வாசல் வழியாக நுழையும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை: வெங்கய்யா நாயுடு

அதிமுகவினருக்கு ராமசந்திரன் தொப்பி கொடுத்த “திருடாதே” படம் ஓடிகொண்டிருக்கின்றது மனிதர் தொப்பியும் தலையுமாக வந்து தினகரனை நினைவுபடுத்திகொண்டே இருக்க்கின்றார் ராமசந்திரன் தீர்க்கதரிசி, அவரை விட அந்த படத்தின் தங்கவேலு பெரும் தீர்க்கதரிசி “பெண்கள் இங்கு காரோட்டுகின்றார்களா?” என ஆச்சரியமாக கேட்ட சரோஜாதேவியிடம் அசால்டாக சொல்கின்றார் இது என்ன பிரமாதம்?, இன்னும் 10 வருஷத்தில எல்லா ஆம்பிளையும் சமையல் கட்டில்தான் இருப்பான்” இவ்வளவு சரியாக யாராவது கணிக்க முடியுமா?, என்ன ஒரு தீர்க்கதரிசனம், 🙂 இந்த காட்சியினை கண்ட […]

மகாராஷ்டிரா : விவசாயிகளுக்கு 1 ரூபாயில் மதிய உணவு

மகாராஷ்டிரா வேளான் சந்தை ஹோட்டலில் அசத்தல் விவசாயிகளுக்கு 1 ரூபாயில் மதிய உணவு நிச்சயமாக விவசாயிகள் சுரண்டபடுவதன் தொடக்கம் இம்மாதிரி சந்தைகள்தான், அந்த பாவபட்ட விவசாயி தன் பொருளை இங்குதான் கொட்டவேண்டியிருக்கின்றது, இவர்கள் வைத்ததுதான் விலை தமிழக விவசாயி இம்மாதிரி சந்தைகளில் ஏமாற்றபடும் விதம் கொஞ்சமல்ல, உழவர் சந்தை எல்லாம் சரிவராது, விவசாயி நிலத்தை கவனிப்பானா? அனுதினமும் சந்தையில் உட்காந்து வியாபாரம் செய்வானா? கலைஞர் கொஞ்சம் சறுக்கிய திட்டம் அது..அவரை சொல்லியும் குற்றமில்லை இந்நாட்டு அரசு அமைப்பு […]

ஏராளமான பபூன்கள் என்பதுதான் சோகம்..

அது என்னமோ காமெடி என நினைத்து முதலில் கவனிக்கவில்லை, நிஜமாகவே அமைச்சர் தெர்மாக்கோலை அணையில் கொட்டியிருக்கின்றார் இது பலவகையில் கண்டிக்கதக்கது முதலில் குடிநீரில் இம்மாதிரி தெமாக்கோலை மிதக்கவிட்டதே பெரும் ஆபத்து, அது ஊறி அதிலுள்ள சில விஷயங்கள் நீரில் கலந்தால் அது நல்லதல்ல, அணைநீரினை சுத்திகரிக்கும்பொழுது சில பொருளை சேர்க்கின்றார்கள், அது உடலுக்கு கேடு எனும் செய்திகள் வரும் நிலையில் இப்படியா தெர்மாக்கோலை கொட்டுவார்கள்? அடுத்து சுற்றுபுற சீர்கேடு எனும் வகையிலும் இது நிச்சயம் வரும், பிளாஸ்டிக் […]

துணிந்து ஒரு கருத்தினை யாராவது சொன்னார்களா? : அதுதான் குஷ்பூ !!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி சர்க்கஸ் போன்று உள்ளது, அதிமுக இணைப்பு இன்னும் 4 வருடம் சம்பாதிக்க, ஆளுநர் மோடியின் கைப்பாவை, தமிழகத்தில் ஆட்சி பிடிக்க பாஜக முயற்சி : குஷ்பு இப்படி மிக துணிந்து ஒரு கருத்தினை யாராவது சொன்னார்களா?, இதுதான் குஷ்பூ , திமுகவில் கூட இப்படி அதிரடியான கருத்துக்கள் வராத நிலையில் குஷ்பூ பேசியிருப்பது என்ன சொல்கின்றது? ஒரு காலத்தில் குஷ்பூவினை கட்சியினை விட்டு விரட்டியது தவறு என சொல்கின்றது மதுரைக்கு […]

புரட்சித்தலைவன் விளாடிமிர் லெனின்

 தோற்றம் : 22-04-1870 :: மறைவு : 21-01-1924 மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான் விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் […]