பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன் : டி.டி.வி.தினகரன்

கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன் : டி.டி.வி.தினகரன் “இன்று போய் நாளை வா..” எனும் வசனத்தை கேட்டிருக்கின்றோம், “நேற்று போய் இன்று வந்தேன்” எனும் அரசியல் வசனத்தை இப்பொழுதுதான் கேட்கின்றோம் அன்னார் நேற்று ஒதுங்கியதாக இன்று கூட்டத்தை ரத்து செய்துவிட்டு சொல்லிகொண்டிருக்கின்றார் அன்னாருக்கு ஞானம் வந்துவிட்டது… “ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? சூழ்ந்ததோர் சுற்றம் என்ன? கையினை விட்டு ஆட்சி போனால் கூடவே வருவதென்ன?” —–என்பதுபோல் பேசிகொண்டிருக்கின்றார் நாஞ்சில் சம்பத், வளர்மதி போன்றவர்கள் கூட வரமாட்டார்கள் […]

அதிமுக உட்கட்சி குழப்பத்திற்கும் , பாஜகவிற்கும் சம்பந்தமில்லை : வெங்கய்ய நாயுடு

  அதிமுக உட்கட்சி குழப்பத்திற்கும் , பாஜகவிற்கும் சம்பந்தமில்லை : வெங்கய்ய நாயுடு மிசஸ் சவுந்திரராஜன், எங்கே சென்று தொலைந்தீர்கள்? இப்பொழுது இவர் இப்படி பேசலாமா? ஓடி சென்று வாயில் துணி வைத்து அடையுங்கள், அது காவி துணி என்றாலும் பரவாயில்லை.. தினகரன் கோஷ்டி கொலைவெறியில் இருக்கும் நேரம் இவர் ஏதாவது சொல்ல போய் உங்கள் மீது ஆசிட் வீசும் ஆபத்து இருக்கின்றது அப்படி நடந்தால் நாடு தாங்குமா? மிஸ்டர் நாயுடு, பாஜகவிற்கும் எதற்கும்தான் சம்பந்தம் இருக்கின்றது? […]

மனுஷ்ய புத்திரன் என்பவரை ஏன் விமர்சிக்கிறேன்?

“மண்டை சிலுப்பி” மனுஷ்ய புத்திரன் என்பவரை ஏன் விமர்சிக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் கவிதைக்காக அவரை விமர்சித்தால், அவர் கவிஞன் என ஒப்புகொண்டதாகிவிடும் அது கவிதையும் அல்ல அவர் கவிஞரும் அல்ல, அது ஒரு வகை புலம்பல் விஷயம் கவிதை அல்ல‌ 2006களில் எப்படி எல்லாம் இந்த மண்டை சிலுப்பி தன் முடியினை சிலுப்பிகொண்டு திமுகவினை விமர்சித்தார் என்பது அப்பொழுது இவரை வாசித்தவர்களுக்கு தெரியும் இன்றைய திராவிட மனுஷ் அல்ல அவர், அன்று அவரிடம் பார்ப்பண […]

சசிகலா தலமையினை ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன?

அவர்கள் சசிகலா தலமையினை ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன? அதிமுக எனும் கப்பல் மூழ்க தொடங்கி 6 மாதம் ஆயிற்று, அதன் சத்தம் மட்டும் இப்பொழுது கேட்கின்றது யார் வந்தாலும் இனி காப்பாற்றமுடியாத கட்சி அது. தவித்த ஒருவருக்கு மருத்துவமனையி சிகிச்சை அளிக்காமல், இறந்தபின் அடக்கம் செய்யும் இடத்தில் காப்பாற்ற முயற்சி நடப்பது போல இருக்கின்றது இவர்கள் செயல்பாடு இவர்கள் யாரும் சுய தைரியத்தில் பேசவில்லை, திரைமறைவில் நிற்கும் நபரை பார்த்து பார்த்து பேசுவது நன்றாக தெரிகின்றது […]

மங்கள்யான், சந்திராயனுக்கு எல்லாம் இந்த ஆரியபட்டாதான் முன்னோடி

சுதந்திரம் பெற்றபொழுது பின் தங்கிய இந்தியா, வெள்ளையன் சுரண்டிபோட்ட பாண்டமாக கிடந்தது, போதாதற்கு பிரிவினை வேறு ரத்தம் தெளித்து குற்றுயிராக‌ கிடத்தியிருந்தது பெரும் தொழிலோ, விஞ்ஞானமோ அதனிடம் இல்லை. யுத்தங்களை எதிர்கொள்ளும் வசதியோ, தொழில்நுட்பமோ இல்லை, சோவியத் யூனியன் ஓரளவு கருணை காட்டினாலும் இந்தியாவிற்கு அது சாதமாக இல்லை 1959களில் இருந்தே யுத்தம் விண்வெளிக்கு மாறியிருந்தது, விண்வெளி அறிவின்றி இனி ஏதும் சாத்தியமில்லை என உலகம் வேகமாக பறக்க எத்தணித்தது இந்தியாவும் அதில் கலந்தது, அது இந்திரா […]

மிஸ்டர் மல்லையா..

இந்திய அரசு “பிராது” கொடுத்திருப்பதால் தன் மீது நெருக்கடிகள் அதிகரிப்பதை உணர்ந்த மல்லையா லண்டன் காவல் நிலையத்தில் ஆஜராகியிருக்கின்றார், நடைமுறைப்படி கோர்ட்டில் நிறுத்பட்டிருக்கின்றார் இப்ப்பொழுது ஜாமீன் வழங்கபட்டிருக்கின்றது, கவனிக்கவும் உடனடியாக இந்தியாவிற்கு விலங்கு போட்டு அனுப்பிவைக்கபடவில்லை இனி சட்ட ரீதியான தர்க்கம், அது இது என ஏக நடைமுறைகள் உண்டு, பெரும் தொழிலதிபரான மல்லையா ஏன் ஆஜரானார்? என்ன முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றார் என ஒவ்வொன்றாக வெளிவரும் ஆனால் உடனடியாக இந்தியா கொண்டுவரும் வாய்ப்பு குறைவு அதற்குள் ஏதோ […]

மன்னார்குடி குடும்பம் கப்பலேற்றபடுமோ?

கப்பலுக்கு சென்று “அதோ அந்த பறவை போல வாழவேண்டும்..” என பாடியதில் யாருக்கு ஞானம் வந்ததோ இல்லையோ அமைச்சர் ஜெயகுமாருக்கு வந்திருக்கின்றது “கோடிமக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில்போல நாடுவாழ வேண்டும் விடுதலை” “அச்சமின்றி ஆடிபாட வேண்டும் விடுதலை, தரணிவாழும் பூமிஎங்கும் வேண்டும் விடுதலை” என பாடியிருக்கின்றார், கரையேறியதும் பல்லவியினை தொடங்கிவிட்டார் “ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்” பபபப்பபா பபப்பாய்ய்ய்ய் என பன்னீரிடம் சென்றுவிட்டார் இவர் தனியாக பாடினாலும் […]

“ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி..” திரைப்படம்…

“ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி..” படம் டிவியில் ஓடிகொண்டிருக்கின்றது பாக்யராஜின் நல்ல திரைக்கதை, மனிதர் நிச்சயமாக மகா சுவாரஸ்யமானவர், இல்லாவிட்டால் இம்மாதிரி ரசனையாக கதைகளை சொல்லமுடியாது எல்லாம் சரி, நாயகி மீனா பொம்மையாக இருக்கின்றார், மகாராணிக்குரிய “களை ” மட்டும் மிஸ்ஸிங் இம்மாதிரி கதைகளுக்கு குஷ்பூவினை சேர்த்திருக்கலாம், மகாராணிக்குரிய அழகும், கம்பீரமும், வசீகரமும் அவரை தவிர யாருக்கும் இல்லை அப்படி குஷ்பூ நடித்திருந்தால் இப்படம் இன்னும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும்…. பாக்யராஜ் ஏனோ இதனை மறந்துவிட்டார்.

அதிமுகவினரின் இம்சை ஒருபுறம், தமிழிசை காமெடி இன்னொருபுறம்….

அதிமுகவினரின் இம்சை ஒருபுறம், தமிழிசை காமெடி இன்னொருபுறம், இன்னும் பல இம்சைகள் தமிழகத்தில் இருக்க இந்த மனுஷ் என்பவரின் இம்சையும் தாளமுடியவில்லை யாரோ எங்கோ ஏதோ சொல்லிவிட்டார்களாம், அந்த கதையினை, காதோர செய்தியினை கலைஞர் சாகித்ய அகாடமி விருதுக்கு ஆசைபட்டாரா எனும் அளவிற்கு கேள்வியாக்கி, கலைஞர் அப்படி செய்தார், இப்படி எழுத்தாளர்களை கொண்டாடினார், இவருக்கு சீட் கொடுத்தார், இவருக்கு வீடு கொடுத்தார் என சொல்லி மனிதர் ஏதோ குழப்பியடித்திருக்கின்றார். அதாவது இல்லாத ஒரு சர்ச்சையினை இவரே சொல்லி, […]

தமிழக மர்மம் ஒரு காலமும் புரியாது…

தமிழகத்தின் கடன் தலைக்கு மேல் 10 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது, விவசாயம் வீழ்ந்து கிடக்கின்றது, விவசாயி செத்துகொண்டிருக்கின்றான் கடும் வறட்சியால் மக்கள் படும் பாடு கொஞ்சமல்ல, ஒரு குடம் நீர் சில நூறு ரூபாய்களை தொட்டுவிட்டது என்கின்றார்கள், வாழ்வு பெரிதும் பாதிக்கபட்டிருக்கும் நிலை டாஸ்மாக் கொடுமைக்கு எதிரான போராட்டம், குடிநீருக்கான போராட்டம் என தமிழகம் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது எல்லா தரப்பு மக்களும் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும் மாநிலத்தில், வாழவே முடியாது எனும் நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் மாநிலத்தின் […]