பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தொப்பியுடன் ஆர்கே நகரில்….

கலைஞராக இருந்தால் இப்படித்தான் கலாய்பார் “காரிருள் முடிந்து தகதகவென சூரியன் உதிக்கும் வேளை இது, அந்த வெளிச்சம் தரணிக்கெல்லாம் ஒளிகொடுக்கும், கன்னமிடும் திருடர்களை ஓடசெய்யும்.. உதய சூரியனின் வெளிச்சத்தில் எதற்கு மின் விளக்கு?” சிந்திப்பீர், ஆதரிப்பீர் உதய சூரியன்  

ஆர்கே நகர் :பெயரும் சின்னமும் குழப்பமும் …..

ஒரு வழியாக தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்கபட்டிருக்கின்றதாம் முதலில் பேட் என்றார்கள், வேண்டாம் அதை கொண்டே கட்சிக்காரர்கள் + திவாகரன் போன்ற குடும்பத்தார் அடிக்க வரலாம் என்பதால் மாற்றிவிட்டார்கள் பின் ஆட்டோ என்றார்கள், முன்பு ஆட்டோக்களில் ரவுடிகளை அனுப்பிய சொந்த காட்சிகளே கண்ணுக்குள் வந்ததால் விட்டுவிட்டார்கள் அதுவும் 100 பேர் கொண்ட மன்னார்குடி குடும்பத்திற்கு ஆட்டோ சின்னம் என்றால் அவர்களுக்கே கோபம் வராதா? ஆட்டோவில் 3 பேர்தானே அமரமுடியும் சசிகலா, தினகரன், திவாகரன் என அமர்ந்து நடராஜன் […]

எவனுக்கும் இல்லாத வரலாறு கலைஞருக்கு இருக்கின்றது

பார்ப்பனர்கள் என்போர் இந்தியாவில் அவர்கள் மிக மிக சிறுபான்மை இனம் ஆனால் பார்ப்னிய கட்சி எனப்பட்ட‌ காங்கிரசுக்கும், பின்பு பார்பானிய மதவாத கட்சி எனப்பட பாஜகவும் பெரும்பலத்துடன் இந்தியாவினை ஆளுவது எப்படி? தாழ்த்தபட்டவருக்கு ஆதரவாத களமிறங்கும் எல்லா கட்சிகளும் ஒரு கட்டத்தில் காணாமலே போய்விடுகின்றன‌ விபி சிங் முதல் மாயாவதி வரை அதே நிலைதான், பெரும்பான்மையான வோட்டுவங்கி இருந்தும், மக்கள் தொகையில் அதிகமிருந்தும் அவை எப்படி அழிகின்றன? தமிழகத்தின் நிலை வேறு, திராவிட கட்சிகள் இன்றளவும் ஆதிக்கம் […]

ஜிடி நாயுடு நிச்சயமாக தமிழகத்து எடிசன்..

விஞ்ஞானிகள் பலவகை ஒவ்வொருவரும் ஒருவகை ஒரு கூட்டம் சிந்தித்து தியர் எழுதிகொண்டே இருக்கும், நியூட்டன், ஐன்ஸ்டீன் அவ்வகை இன்னொரு கூட்டம் சிந்தித்து செயலபடுத்தி ஒரு பொருளை உருவாக்கி மக்களுக்கு பயனுற கொடுத்து சம்பாத்தித்துகொண்டிருக்கும் எடிசன் போன்றோர் அவ்வகை தமிழகத்தில் முதல்வரிசையில் இடம்பெறுவது சீனிவாச ராமானுஜம் என்றால் இரண்டாம் வரிசை ஜி.டி நாயுடு கோபால்சாமி துரைச்சாமி நாயுடு, சுருக்கமாக ஜி.டி நாயுடு.படிக்காத மேதைகள் நிறைந்த தமிழகத்தில், பாமர விஞ்ஞானி அவர். எடிசனுக்கும்,ஹென்றிபோர்டுக்கும் ஏன் ஜெர்மானிய பென்சுக்கும், ஜப்பானியரான ஜெனிச்சி […]

மருத்துவர் ராமதாஸின் இந்த குரல் நியாயமானது…

அடிக்கடி பேசிகொண்டிருந்தாலும் எப்பொழுதாவது உருப்படியாக பேசகூடியவர் மருத்துவர் ராமதாஸ் இப்பொழுது பெரும் ஆபத்து ஒன்றைபற்றி எச்சரிக்கின்றார், உண்மையில் மருத்துவரின் இந்த குரலுக்காக‌ அவரை பாராட்டலாம். அதாவது இன்று விவசாயிகள் பெரும் துயரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே ஆறுதல் இலவச மின்சாரம், இன்று நிலத்தடி நீர்மட்டம் 300 அடிகளுக்கு சென்றுவிட்ட நிலையில், சில இடங்களில் 700 அடியினை தொட்டுவிட்ட நிலையில், இன்றைய விவசாயியின் ஆதாரம் அந்த இலவச மின்சாரம் மட்டுமே இது கலைஞரால் அறிவிக்கபட்ட மிக சிறந்த திட்டம் […]

ஆர்கே நகரில் சரத்குமார் கட்சி போட்டி….

ஆர்கே நகரில் சரத்குமார் கட்சி போட்டி கடந்த மாதம்தான் இவர் பன்னீர் அணியினை ஆதரிப்பதாக கூறினார், இந்த மாதம் தனியாக நிற்கபோவதாக அறிவிக்கின்றார் அப்படி ஒன்றும் பெருவெற்றி பெற்றவர் அல்ல அவர், திருச்செந்தூர் தொகுதியிலே அவரின் செல்வாக்கு தெரிந்தது பின் ஏன் இங்கு தனியாக நிற்கவேண்டும்? பாஜகவில் சேர்ந்த 30 நிமிடத்தில் போயஸ் கார்டனில் விழுந்தவர் அப்படித்தான் இருப்பார். செத்து செத்து அரசியல் செய்வது அவர்தான். இதோ இன்னொரு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்… டிடிவி தினகரனை விட […]

இரட்டை இலை சின்னம் முடக்கம்

தேர்தல் ஆணையம் முன் தினகரனும் பன்னீர் செல்வம் இரட்டை இலையினை இழுத்த இழுப்பில் சின்னத்தை தற்காலிகமாக முடக்கி விட்டது ஆணையம் இனி இவர்கள் கோர்ட்டுக்கு சென்று மல்லுகட்டி மீட்கமுடியுமா என்பது பின்னாளைய காட்சிகள், ஆனால் ஆர்.கே நகர் தொகுதியில் அதிமுக எனும் கட்சி பெயரும் இல்லை, இரட்டை இலை எனும் சின்னமும் இல்லை அதனை அடித்த வால்போஸ்ட்டுகளை அடுப்பிலும், எழுதிய சுவர்களில் சுண்ணாம்பும் தெளித்துவிட வேண்டியதுதான் இது நிச்சயமாக தினகரனுக்கு பெரும் பின்னடைவு, பன்னீர் கும்பல் வருத்தபட்டாலும், […]

முத்து என்றொரு படம்…

https://youtu.be/ooQcFZIGJCw அது ரஜினிகாந்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த காலம், ஜெயலலிதாவுடன் அவருக்கு பிரச்சினை இருந்த காலம் அப்பொழுதுதான் முத்து என்றொரு படம் வந்தது, தன் படத்தில் அரசியல் பொடி தூவும் ரஜினி அதிலும் தூவியிருந்தார் அதாவது மீனாவும், காந்திமதியும் , வடிவேலுவும்(ஜெயா சசிகலா தினகரன்) எல்லாம் நாடக கம்பெனி நடத்துவார்கள், நாடகம் பார்க்கும் ரஜினிக்கும் மீனாவிற்கும் மோதும் நான் நடிக்கும் பொழுது நீ எப்படி தும்மலாம் என மீனா கேட்க, தும்மினால் கூட தப்பா? என காட்சிகள் […]

அப்பாவியான மனைவி எவ்வளவு பெரும் வரம் …

திருமணத்திற்கு என்னவெல்லாம் கேட்கின்றார்கள் இக்கால பெண்கள்? கோபிநாத் முன் வைக்கும் கோரிக்கைகளை கண்டால் அம்பானி குடும்பங்களை போன்றோரை தவிர யாருக்கும் திருமணம் ஆக வாய்ப்பில்லை எனக்கென்னமோ அந்த ஜட்டிசாமியார் தன் மகளுக்கு செய்த அந்த ஹெலிகாப்டர் சகித திருமணம் இந்த பெண்களை பாதித்திருக்கலாம், அவருக்கென்ன “அத்தனைக்கும் ஆசைபடு” என மகளுக்கும் சொல்லியிருக்கின்றார் அந்த பெண்கள் சொல்லவரும் விஷயம் “அம்மா அப்பாவினை கொன்றாவது சொத்துக்களை கொண்டு செல்வேன், புருஷனிடம் சொத்து இல்லை என்றால் அவனையும் கொல்வேன்” உடன்பிறந்தவர்களை கொஞ்சமும் […]

ஜூன் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தபடும் : செய்தி

ஜூன் 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தபடும் : செய்தி சும்மாவே எகிறிகொண்டிருக்கும் விலைவாசியில் எண்ணெய் ஊற்றுகின்றார்கள், ஜூனிலிருந்து பெரும் விலைவாசி உயர்வு இருக்கலாம் சிறு, குறு வியாபாரிகளை முன்னமே தயார்படுத்திவிட்டு வசூலிக்க ஆரம்பித்தால் சிக்கல் பெரும்பான்மையாக இருக்காது, இல்லாவிட்டால் வியாபார உலகம் பெரும் சிக்கலை சந்திக்க நேரும் இந்த புதுவிதமான வரிவிதிப்பு அவர்களுக்கு தொடக்கத்தில் பெரும் குழப்பத்தை கொண்டுவரும் என்பது உறுதி மக்களுக்கு இது ஒரு கசப்பான மருந்து என்றாலும், உணவு பொருட்களுக்கு இந்த வரி […]