பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சீனாவில் கசகஸ்தானில் தொடரும் நாய் சண்டை

சீனாவில் கசகஸ்தானில் தொடரும் நாய் சண்டை அதாவது நமது சேவல் சண்டை போலவே இந்நாடுகளில் நாய் சண்டை பிரசித்தம், நாய்களை மோதவிடுவார்கள், மோதலென்றால் இப்பொழுது பன்னீர் செல்வத்தையும், திவாகரனையும் கோதாவில் விட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் அப்படி ஒன்றையொன்று கடித்து குதறிவிடும் , சிலது செத்தே விடும், வாயெல்லாம் ரத்தத்துடன் வெல்லும் நாய்க்கு கோப்பை இன்னும் பல மதிப்புகள், காரணம் அதன் மூலம் பெறும் குட்டி வீரியமான நாயாக இருக்குமாம் நேற்று கூட ஒரு போட்டி […]

தீர்ப்பு என்னாகும், சசிகலா உள்ளேயா வெளியாயா?

தீர்ப்பு என்னாகும், சசிகலா உள்ளேயா வெளியாயா? என பலர் மங்காத்தா ஆட தொடங்கியாயிற்று. தீர்ப்பு சசிகலாவிற்கு சாதகம் என்றால் அவர் முதல்வராவார், அது பாதகம் என்றால் சசிகலாவின் பினாமி முதல்வராகலாம் என்பது ஒரு புறம் இல்லை ரிசார்ட் எம் எல் ஏக்களிலும் பன்னீருக்கு ஆதரவானர்கள் உண்டு , ஆக இது பெரும் இழுபறி எனும் தியரி ஒரு புறம் தீர்ப்புவந்த பின் ஆளுநர் சும்மா இருக்க முடியாது, பன்னீருக்கு பெரும்பான்மை நிருபிக்க உத்தரவு, அல்லது சசிகலாவிற்கு உத்தரவு […]

எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன் : சசிகலா

“எம்ஜிஆருக்கு பின் ஜெயலலிதாவினை நானே பாதுகாத்தேன், கட்சியினை வழிநடத்தினேன் அன்று எம்ஜிஆருக்கு ஜெயா உதவியாளராக இருந்து அவர் மறைவுக்கு பின் ஒதுங்க நினைத்தபொழுது நானே அவரை தடுத்தேன், கட்சிக்காக உழைத்தேன், கட்சியினை நடத்தினேன் அன்று எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயா எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில்தான் நானும் இருகின்றேன்” : சசிகலா இதன் மூலம் சின்னம்மா சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், அரசியலிலிருந்து விலக நினைத்த ஜெயலலிதாவினை பிடித்து அரசியலில் திணித்து அவரை முதல்வராக்கியது இவர்தான் […]

இன்று காதலர் தினம் …

காதலர் தினம் கொண்டாட‌ போகின்றார்களாம், அதுவும் பிரவரி 14 விடியற்காலை தொடங்கி நள்ளிரவு வரை மட்டும் கொண்டாடுவார்களாம். அன்றுதான் காதலை வாழவைக்க வந்த வாலண்டைன் நாளாம். அவர்தான் காதலுக்கு வடிவம் கொடுத்தவராம். அதற்கு முன்னால் காதலே இல்லை என்பது, வெள்ளையர் வருமுன் இந்தியாவில் மனிதர்களே இல்லை என்பதை விட பெரும் பொய். எவ்வளவு பெரிய பொய்யினை நம்பவைக்கபட்டு இருக்கின்றோம், அதற்கு இச்சமூகம் தலையாட்டிகொண்டு பின்செல்கிறது. ஒருவேளை செத்தாலும் சேர்ந்து சாகலாம் என ஏவாள் ஆதாமுக்கு பழம் கொடுத்த […]

வெரி ஃபன்னி லேடி …..

பன்னீர் ஆட்சிக்கு வந்தாலும் சசிகலா கும்பல் ஆளவிடாது, கவிழ்க்க வழிதேடும் சசிகலா ஆளவந்தாலும் பன்னீர் கும்பல் எப்பொழுது கவிழ்க்கலாம் என சிந்திக்கும், இன்னொன்று 119 பேருக்கும் அமைச்சர் பதவி, இதர பதவிகள் என்றால் போலிஸ் கமிஷணர் பதவி தவிர எல்லா இடத்திலும் சசிகலா ஆதரவு எம் எல் ஏக்கள் நிறைந்திருப்பார்கள் அது யதார்த்ததிற்கு சரிவராது, ஆனால் அதிருப்தி கும்பல் விடாது ஆக நிலையான ஆட்சி இருவருக்குமே சாத்தியமில்லை எனவே ஆளுநர், வெற்றிலை துப்பிவிட்டு “இனி தேர்தல் தாண்டா […]

சசிகலா நிலமையும் அப்படித்தான் உள்ளது….

“தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும் வெறியில் மதிமாறும் எதிரி அது சமயம் இடம் கண்டு அடிப்பான் வெறி மேலும் ஓங்கும் வெறியில் நெறிகெட்டு, அறம் கெட்டு, தடம் மாறி படுகுழியில் வீழ்வான் ..இல்லை எதிரி விழ வைப்பான் இந்த அநீதியில் கை தேர்ந்தவன் சகுனி..” கர்ணன் படத்தில் என்.டி ராமராவ் இப்படி சிவாஜி கணேசனுக்கு போதித்துகொண்டிருக்கின்றார் சசிகலா நிலமையும் அப்படித்தான் உள்ளது. சசிகலாவும் அப்படித்தான் தோல்வியால் எழுந்த வெறியியில் மதி கெட்டு, தடம் மாறி படுகுழியில் விழுந்துகொண்டிருக்கின்றார், எந்த […]

சிங்கம் சசிகலா பேசுகிறார்..

ஜெயலலிதாவும் நானும் சென்னை ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு ஜெயிலையும் பார்த்திருக்கிறோம் :சசிகலா ஆமாம், திகார் ஜெயிலை இனி இவர் மட்டும் பார்க்க போகின்றார் சரி, இவர் சென்னை சிறைக்கும், பெங்களூர் சிறைக்கும் எதற்காக சென்றா? நாட்டு விடுதலை? இந்தி எதிர்ப்பு? சாதி ஒழிப்பு? காவேரி பிரச்சினை? அணுவுலை? விவசாயிகள் பிரச்சினை? மீணவர் பிரச்சினை? ஜல்லிகட்டு? குறைந்த பட்சம் மதுகடை எதிர்ப்பு? இப்படி ஒன்றுமே இல்லை மாறாக கொள்ளை அடித்த வழக்கில் உள்ளே சென்றுவிட்டு , ஏதோ தியாக […]

சமாதிகளுக்கு முதலில் சமாதி கட்ட வேண்டும்

தமிழகம் எப்படிபட்ட வரலாற்றினை கொண்டது சங்ககாலம் முதல் அதன் சிறப்பென்ன? எத்தனை பெரும் மன்னர்களும், ராஜராஜன் போன்ற அழியா புகழுடை முடிகள் இருந்தன? கம்பன், வள்ளுவன் என அதுகொடுத்த சிறப்பென்ன? அகத்தியன், போகன் என அதன் சித்தர் வரிசையென்ன? சீனிவாச ராமானுஜம் முதல் அப்துல்கலாம் வரை விஞஞான வரிசை என்ன? பெரியார், காமராஜர் என இந்தியாவினில் உயர்ந்த தலைவர்கள் என்ன? பூலித்தேவன் முதல் சிதம்பரனார் வரை எத்தனை தியாகிகள்? வள்ளலார் முதல் எத்தனை பெரும் அவதாரங்கள் உதித்த […]

ராதாபுரம் தொகுதி மட்டும் ஏன் அமைதியாக இருக்கின்றது?

ஒரு காலத்தில் தமிழகத்தின் ஒரே சுயேட்சை எம் எல் ஏவினை தேர்ந்தெடுத்து தமிழகத்தினை திரும்பி பார்க்க செய்தது ராதாபுரம் தொகுதி இன்றோ சசிகலாவிற்கு எதிராக பெரும் அலையடிக்க, அவர் ஆதரவு அதிமுக தொகுதி எம் எல் ஏக்களை கொண்ட மக்கள் எல்லாம், தங்கள் தொகுதி எம் எல் ஏக்களை கண்டிக்கவும் , விரட்டவும் தொடங்கியுள்ள நிலையில்.. மக்களின் எதிர்ப்புக்கு பயந்தே எம் எல் ஏக்கள் எல்லாம் பன்னீரிடம் ஓடி செல்லும் நிலையில்.. ராதாபுரம் தொகுதியில் ஒன்றும் நடந்ததாக […]

கூவத்தூர் வேண்டாம், சுவிட்சர்லாந்து வேண்டும்…

  ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அடிமைகளை விற்க செல்லும் கப்பலில் அடிமைகள், தங்கள் குடிநீர் கோரிக்கைக்காக‌ அந்த காவலர்களிடம் கேட்பார்கள், அது கூட‌ கிடைக்காத பட்சத்தில் மிரட்டுவார்கள் நாங்கள் கடலில் குதித்தோ அல்லது பட்டிணி கிடந்தோ செத்துவிட்டால் எங்களை அடிமைகளாக‌ விற்க முடியாது, எனவே எங்களை நன்றாக கவனித்தால் உங்களுக்கு லாபம் என மணிமாறன் வேடத்தில் ராமச்சந்திரன் தொடங்க, நாகேஷ் அழிச்சாட்டியம் தொடங்கும் முதலில் தண்ணீர் கேட்ட அவர், அதன் பின் பாயாசம் வேண்டும், கால் அமுக்க […]