பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்னதான் செய்கின்றது பீட்டா?

நியுசிலாந்தில் இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன, நிச்சயமாக மானிட தவறு என்கின்றார்கள் பெரும் உயிர்வதை அங்கு நடந்திருக்கின்றது ஆனால் அங்கு பீட்டாவினையும் காணோம், ராதா ராஜன் என்பவரையும் காணவில்லை, ஒரு புளூகிராஸ் அமைப்புகளையும் காணவில்லை காரணம், இந்த திமிங்கல சாவுக்கு காரணம் பெரும் கைகள் எனும் சர்ச்சை வருகின்றது, ஆக பீட்டா நம் ஜல்லிகட்டு என்றால் பாயும், திமிங்கலங்கள் சாவு என்றால் வாயினை மூடி கொள்ளும். சென்னையில் எண்ணெய் கசிந்து ஆமைகளும் மீன்களும் சாகும் பொழுதும் […]

கவர்னர் வீணாக காலதாமதம் செய்கிறார் :சசிகலா எரிச்சல்.

கவர்னர் வீணாக காலதாமதம் செய்கிறார் :சசிகலா எரிச்சல். என்னது 2 நாள் என்பது காலதமதமா? 27 வருடமாக இவர்களால் பாதிக்கபட்ட குடும்பம் எத்தனை, கங்கை அமரன் முதல், பாலு ஜூவர்லர்ஸ் வரை எத்தனை குடும்பம நீதிக்காக‌ இன்னும் அழுதுகொண்டிருக்கின்றது இன்னும் தெரியாதது எத்தனை ஆயிரம் குடும்பமோ? சொத்துகுவிப்பு வழக்கு 18 வருடம் இழுத்தது, எப்படி எல்லாம் வாய்தா வாங்கினார்கள், எப்படி எல்லாம் இழுத்தடித்தார்கள், அப்பொழுது ஆச்சார்யா உட்பட எத்தனை பேருக்கு எப்படி இருந்திருக்கும்? 2 நாட்கள் இவர்களால் […]

கூவத்தூருக்கு சசிகலா காவடி எடுத்து செல்கின்றார்…

கூவத்தூருக்கு சசிகலா காவடி எடுத்து செல்கின்றார், பன்னீர் செல்வம் வீட்டில் பக்தர்கள் பால்குடம் எடுக்க தொடங்கியாயிற்று வீரமணி, நெடுமாறன் போன்ற பழமரம் கண்ட பறவைகள் சுற்றி சுற்றி கத்துகின்றன‌ சந்தடி சாக்கில் சு.சாமி வேறு குட்டையினை குழப்பமுடியுமா? என சகுனி வேலை பார்க்க தொடங்கிவிட்டார் நடிக அரசியல்வாதிகள் ஆளாளுக்கு காமெடியில் இறங்கிவிட்டனர் ஆகும் வரை ஆகட்டும், எக்காரணம் கொண்டும் அசைந்துவிட கூடாது ஆளுநர் கடும் அமைதியில் விரதம் இருக்கின்றார் ரிசார்ட் எம் எல் ஏக்கள் என்ன ஆனார்கள் […]

இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாள்…

           இன்று ஆபிரகாம் லிங்கன் பிறந்தநாளினை உலகம் கொண்டாடி கொண்டிருக்கின்றது இந்த மானிட வரலாற்றில் அடிமை முறையினை ஒழித்த நாயகன் அவர். அதுவும் அதற்காகவே படித்து அதற்காவே அரசியலுக்கு வந்து, பெரும் போராட்டம் போராடி பதவி அடைந்து, அதனை நிகழ்த்தியும் காட்டினார் கருப்பர்களை மனிதர்கள் என அமெரிக்காவில் அங்கீகரித்தவர் அவர், அதனால் எழுத்த உள்நாட்டு சண்டையில் அமெரிக்கா உடையாமல் காத்தவரும் அவர் அடிமை முறை ஒழிந்த ஆத்திரத்தில் ஒரு வெள்ளை வெறியனால் […]

பன்னீரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ராமராஜன் …

பன்னீரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ராமராஜன் ராமராஜனே கட்சி மாறிவிட்டார் என்றால் இனி சொல்ல என்ன இருக்கின்றது? மனிதரும் எத்தனை நாள்தான் சும்மா இருப்பார்? பன்னீரை ராமராஜன் சந்தித்ததை விட மகா முக்கியமான விஷயம் பன்னீர் வீட்டில் சில மாடுகள் உண்டு என்பது, அதில் கறவை மாடுகளும் உண்டு பன்னீருக்கு எத்தனை சிக்கல்கள் ஒரே நேரத்தில் தீருகின்றது பார்த்தீர்களா? இதுதான் நேரம் வந்தால் எல்லாம் சரியாகும் என்பது சரத்குமார், ராமராஜன் என எல்லோரும் வரும்பொழுது நமது எதிர்பார்ப்பு […]

ஜெயா சமாதியில் சசிகலா காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கலாம்

உச்சகட்டத்தினை அடைகின்றது தமிழக சிக்கல், பொறுமைக்கும் எல்லை உண்டு, வேறு வழியில் போராடுவோம் என்றெல்லாம் நேற்று மிரட்டினார் சசிகலா ஜெயா சமாதியில் காலவரையற்ற உண்ணாவிரதம் அவர் இருக்கலாம் என சில தகவல்கள் சொல்கின்றன‌ தமிழகத்தில் முதலில் செய்யவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை ஜெயா சமாதி, போயஸ் கார்டன், அதிமுக அலுவலகம் இம்மூன்றையும் சீல் வைத்து யாரும் நுழையாதவாறு தடுப்பது இவைகளை மூடினாலே பெரும் குழப்பம் தானாக தீரும் சசிகலா உண்ணாவிரதம் இருந்தால், அதனை அனுமதித்தால் அது நிச்சயம் பெரும் […]

கொஞ்சம் பக்கத்து நாட்டையும் பார்ப்போம்…

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன : சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார். இப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டாம் தளபதியாரே. புலிகளை அழித்தது கலைஞரும் சோனியாவும் என எவ்வளவு கஷ்டபட்டு இங்கு பேசவைத்திருக்கின்றார்கள், அதனை கெடுக்கவா பார்க்கின்றீர்?? புலிகளின் கப்பலை கடலில் நீந்தி சென்று பார்த்து காட்டி கொடுத்தது கலைஞர், உடனே அமெரிக்காவிடம் சொல்லி அழித்தது சோனியா, இந்த கலைஞர் சொன்னவுடன் சோனியாவிடம் நள்ளிரவிலே […]

சு.சுவாமி ராஜதந்திரத்துடன் பேசுவதாக நினைப்பா?

சசிகலாவினை மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இடைதேர்தலில் மக்கள் தோற்கடிகட்டும் : சுப்பிரமணியன் சுவாமி மிஸ்டர் சுவாமி நீங்கள் மிகுந்த ராஜதந்திரத்துடன் பேசுவதாக நினைப்பா? சசிகலா எம் ஏல் ஏ ஆவது மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மக்கள் இடைதேர்தலில் தோற்கடிக்கட்டும் என்றால் சரி ஆனால் சசிகலா முதல்வராவதை மொத்த தமிழகத்திற்கும் பிடிக்கவில்லை என்பதாலும், 130 எம் எல் ஏக்களை அவர் மிரட்டி வைத்து இருப்பதாலும், இன்னொரு பினாமி மூலம் தமிழகத்தை ஆள வாய்ப்ப்பு இருப்பதாலும் தமிழகத்திற்கு மறுதேர்தலே சரி […]

மீட்போம் தமிழகத்தை, காப்போம் ஜனநாயகத்தை

அதிமுகவினரின் சிரிப்பு கேள்விக்கு கலைஞர் பதில் இப்படித்தான் இருந்திருக்கும் ஸ்டாலினும் பன்னீரும் சிரித்துகொண்டிருந்தார்கள் என அம்மையார் சீறுவதை நினைத்து எனக்கே சிரிப்பு வருகின்றது சிரிப்பதும் இவர்கள் கட்சியில் குற்றமா? நடிகையாக ஜெயா இருக்கும் பொழுது பல மேடைகளில் அவர் என்னை பார்த்து சிரிக்காத சிரிப்பா? ஏன் நானும் எம்ஜிஆரும் சிரிக்காத சிரிப்பா? இன்னும் எம்ஜிஆரும், ஜெயாவும் சிரித்த சிரிப்புகளை சொன்னால் சந்தி சிரித்துவிடும், எனினும் கட்சியினருக்கு அதிகவினரை பார்த்து சிரிக்க வேண்டாம், என கேட்டு கொள்கின்றேன், மறுபடியும் […]

பன்னீர் vs சின்னாத்தா

பெண் இருந்த இடத்தில் பெண்தான் வரவேண்டும் : சி.ஆர் சரஸ்வதி ஏம்மா சரஸ்.. இப்பொழுது நடராஜனுக்கு இன்னொரு மனைவி தேடுகின்றார்களா என்ன? பன்னீர் செல்வத்திற்கு பொன்னையன் ஆதரவு நடக்கும் திருப்பங்களில் பெரும் திருப்பம் இதுதான், இன்று மதியம் வரை சின்ன அம்மா என வாழ்க என சொல்லிகொண்டிருந்தவருக்கு, போயஸ் தோட்டத்தின் ஏதோ மரத்தடியில் ஞானோதயம் ஏற்பட்டிருக்கின்றது பொன்னையனுக்கு முதுகில் தட்டி வாழ்த்துக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா கும்பல் கரைந்து கொண்டிருக்கின்றது, இனி என்ன செய்வார்? அந்த திடீர் […]