பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சொல்லி அடிக்கும் சூரன் பாரு….

சுனாமி காலத்தில் உள்வாங்கி பொங்கும் கடல்போல பன்னீர் பொங்கியிருகின்றார், உள்ளே விட்டு அடித்திருக்கின்றார் பாட்ஷா படத்தில் , ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய ரஜினி, திடீரென ஆனந்தராஜ் கும்பலை துவைத்து எடுக்கும்பொழுது எப்படி எல்லோரும் வியப்பாக பார்ப்பார்களோ அப்படி தமிழகமும் பன்னீரை பார்த்து கொண்டிருக்கின்றது. தமிழகம் என்ன இந்தியாவே பார்த்துகொண்டிருக்கின்றது. முன்பு “இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா..ஓஓஓ…” என அழுதுகொண்டிருந்த தமிழகம், இப்பொழுது உற்சாகமாக இப்படி பாடுகின்றது “ஏய் பன்னீர் பாரு..பாரு வேட்டி சட்டை […]

இதுவும் இதே தமிழகத்தில்தான் நடக்கின்றது.

தமிழகத்தில் முன்பு காமராஜர் என்றொருவர் இருந்தார், முதல்வராகவும் இருந்தார் நன்றாகத்தான் ஆண்டார் என இன்றளவும் சொல்வார்கள், ஆனால் எதிர்கட்சிகள் செய்த அழிச்சாட்டியத்தில் தேர்தலில் தோற்றார், தோற்ற பின்னாலும் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருந்தது, வோட்டு வங்கி இருந்தது காமராஜர் மேல் அன்றைய முதல்வர் கலைஞருக்கு அச்சம் இருந்தது, அவ்வப்போது சீண்டிகொண்டே இருந்தார் ஒரு கட்டத்தில் கலைஞர் காமராஜரை சீண்டும் விதமாக “முதல்வர் பதவிக்கு ஆசைபட்டுத்தான் காமராஜர் இப்படி உழைக்கின்றார்” என்பது போல பேசிவிட்டார் சீறிய காமராஜர் சொன்னார் […]

பன்னீர் செல்வம் மீது டெல்லிக்கு ஒரு அனுதாபமிருந்தது… தமிழக அரசியல் இப்படி…

பன்னீர் செல்வம் மீது டெல்லிக்கு ஒரு அனுதாபமிருந்தது. தமிழக‌ மக்களிடமும் அவருக்கு பெரும் எதிர்ப்பில்லை, பக்கத்து வீட்டு பெரியவர் போலவே எளிமையாக இருக்கின்றாரே அடடே என எல்லோருக்கும் அவர் ஏற்றுகொள்ள முடிந்தவராகத்தான் இருந்தார் நல்ல எதிர்காலம் அவருக்கு இருப்பது போலவே சூழல் இருந்தது ஆனால் வலிய ராஜினாமா என சென்று அந்த அனுதாபத்தை கோபமாக மாற்றி தொலைத்துவிட்டார் மக்களுக்கும் டெல்லிக்கும் பன்னீர் மீது பெரும் வருத்தம் உண்டான நேரமிது, பன்னீரின் வரலாற்று பிழை இந்த ராஜினாமா. பின்னொரு […]

விலகல் விலகல் விலகல்….

முதல்வரின் தனிபிரிவு செயலாளர் சாந்த ஷீலா விலகல் ஷீலா பாலகிருஷ்ணன் விலகல், முதல்வர் பன்னீர் செல்வம் விலகல், இப்பொழுது சாந்த ஷீலாவும் விலகல் ஆச்சரியமாக கவர்ணரை காணவே இல்லை திகில் படத்தில் வருவது போல காட்சிகள் வருகின்றன, இன்னும் யாரெல்லாம் விலகி ஓட போகின்றார்களோ தெரியாது. அனேகமாக சின்ன அம்மா நுழையும்பொழுது ஒரு ஈ காக்கா கூட கோட்டையில் இருக்காது போல‌

சம்போ சிவசம்போ சிவ சிவ சம்போ..

மனிதர் இந்த தொல்காப்பியன் சினிமாக்காரர் போல தெரிகின்றது கொஞ்சம் சினிமாத்தனமாக பேசி, சினிமாக்காரர்களுக்கு உரித்தான அதே அரசு ஜால்ராவுடன் பதிவிட்டுவிட்டார் இவ்வளவு கீழ்தரமாக ஜெயலலிதாவினை விமர்சித்துவிட்டு சசிகலாவிற்கு ஆதரவு திரட்டுகின்றாராம் இவர் கருத்துபடி ஜெயலலிதா மகா மோசம் என்றாலும் கூட, அந்த மோசக்காரியினை இத்தனை ஆண்டுகாலம் ஆட்டுவித்த சசிகலா எப்படிபட்டவர் என இவர் சொல்லவே இல்லை. ஆபத்து இவரை நெருங்கலாம்.. இவரை விட மகா ஆபத்து யாருக்கு தெரியுமா? இவருடன் படத்தில் நிற்கும் இயக்குநர் சசிகுமாருக்கு பெரும் […]

பாண்டியனா கொக்கா கொக்கா…

என்ன இருந்தாலும் நெல்லை பாண்டியர்களின் வீரமே தனி சசிகலா புஷ்பா எனும் வீரமங்கை ஒரு பக்கம் சவால் விட்டுகொண்டிருக்க, பி.எச் பாண்டியன் பரபரப்பான கருத்துக்களை அசால்ட்டாக வெளியிடுகின்றார். மருத்துவமனையில் நடந்ததை மறைக்கலாம், அதற்கு முன் நடந்ததை விளக்கவேண்டும் என அவர் குரலெழுப்புகின்றார். விவகாரம் இறுதிசுற்று கட்டத்தினை எட்டிவிட்டது. தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லாத மாவீரம் மானமும் நெல்லையர்களிடம் இருப்பதில் பெருமை அடைகின்றோம்

ஆளுநருக்கு என்ன தயக்கம்??

சசிகலாவினை முதல்வராக்க ஆளுநருக்கு என்ன தயக்கம்?? ஆளுநர் எல்லை மீறுகின்றார், ஆளுநர் அராஜகம் ஒழிக என்றெல்லாம் சில அதிமுக அடிமைகள் கத்த தொடங்கிவிட்டன‌ முன்பு காரணமே இல்லாமல் கலைஞர் ஆட்சியினை டெல்லி கலைத்தபொழுது இவர்கள் எல்லாம் இது அத்து மீறல் அராஜகம் என ஒரு வார்த்தையும் பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது. பாத்திமா பீவி போன்ற அடிமை கவர்ணர்கள் இருந்த பொழுதும் சத்தமே இல்லை ஆக கலைஞர் ஆட்சி கலைத்தவர்கள், மற்றும் பாத்திமா பீவி போன்றவர்கள் எல்லாம் அத்து […]

தடுப்பு ஊசி போட்டுக்கலாமா?

ஒரு வித்தியாசமான தொற்றுநோய் இப்பொழுது கிளம்பியிருக்கின்றது, அதாவது எது என்றாலும் ஆஆஆ இலுமினாட்டி சதி என அலறுவது உலக மாற்றத்திற்கும், சில மாற்றங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அலறும் வியாதி அது. இயற்கை விவசாயம் வரவேற்கபடவேண்டியது, ஆனால் அதற்கு பெரும் நிலபரப்பில் விவசாயம் செய்யபடவேண்டும், நாம் மன்னர்கள் காலத்தின் பின் ஒரு வயல் அல்லது ஒரு குளம் புதிதாக உருவாக்கியிருப்போம்?, மாறாக அழித்துகொண்டிருக்கின்றோம் 1950களில் நம் மக்கள் தொகை 50 கோடி, ஆனால் அந்த 50 கோடி மக்களுக்கும் […]

இனி சசிகலா அதிமுகவிற்கு கடிவாளம் போடபோவது யார்

இதுவரை ஜெயா எனும் முகமூடி போட்டு ஆண்ட சசிகலா இனி தன் சொந்த முகத்துடன் ஆளபோகின்றார் அவ்வளவுதான் ஒரு முகமூடியினை கொண்டாடிய தமிழகம், அதன் உண்மை முகத்தை கண்டவுடன் முகம் சுழிக்கின்றது. சசிகலா எப்படி ஆளுவார்? அவர் கொள்ளை கூட்ட கும்பல் அல்லவா என சரமாரி கேள்விகள், அட அன்று ஜெயாவினை முன்னிறுத்தி பின்னால் நின்று இவர்கள் அடிக்காத கொள்ளையா? அவர் ஆளாதா ஆட்சியா? 1996க்கு பின் வாய்ப்பே கொடுக்காமல் விரட்டியிருந்தால் சசிகலாவிற்கு இந்த தைரியம் வந்திருக்குமா? […]

பீலேயின் பீலா!!!

“ஜெயலலிதா சுயநினைவை இழந்தபோது அவரை லண்டன் அழைத்து செல்ல ஆலோசித்தோம். ஆனால் அதை அவர் விரும்பவில்லை -லண்டன் மருத்துவர் பீலே அதாவது ஜெயலலிதாவிற்கு சுயநினைவே இல்லையாம், ஆனால் லண்டன் செல்வோமா? என்றால் மட்டும் சுயநினைவுக்கு வந்து வேண்டாம் என சொல்லிவிட்டு கோமா நிலைக்கு சென்றுவிட்டாராம். அப்படி காப்பாற்றவேண்டும் என்ற அக்கறை இருந்திருதால் சுயநினைவு இல்லாத ஜெயலலிதாவினை தூக்கி சென்றால் என்ன? மறுக்கும் நிலையிலா ஜெயலலிதா இருந்தார்? எங்க வந்து டூப்பு விடுற டேய்…. ஜெயாவிற்கு எல்லாம் சரியாக […]