பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை…

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க டெல்லி மேல்-சபையில் அ.தி.மு.க. கோரிக்கை தமிழகம் வறட்சியில் இருக்கின்றது, குடி நீர் தட்டுபாடு மோசமாகிகொண்டிருக்கின்றது, பட்ஜெட் அறிவிப்பிலும் தமிழகத்திற்கு பெரும் திட்டங்கள் இல்லை கச்சா எண்ணெய் கடலில் கவிழ்ந்து அப்பகுதி மீணவர் எல்லாம் பாதிக்கபட்டு திகைக்கின்றனர், கிட்டதட்ட 2 ஆயிரம் டன் கிலோ மீன்கள் கேட்பாரற்று கிடக்கின்றன‌ இன்னும் எத்தனையோ பெரும் சிக்கல்களும், பிரச்சினைகளும் தமிழகத்திற்கு உண்டு ஆனால் இவர்கள் கவலை எங்கிருக்கின்றது பார்த்தீர்களா? இனி என்ன செய்வார்கள் தெரியுமா? […]

மாறன்ஸ் விடுவிப்பு … குவைத் விசா வழங்க தடை…. மெரினா எண்ணை கழிவு … இன்னும் பிற …

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது நீதிமன்றம். நல்லவேளையாக மாறன் சகோதரர்களால் பாதிக்கபட்ட‌ சிவசங்கரன் தான் குற்றவாளி தீர்பளித்து அவரை உள்ளே தள்ளாமல் விட்டார்களே, அதனால் ஆனந்த கண்ணீரோடு உணர்ச்சி பொங்க சொல்லலாம் . நிதிகளை விடுவித்த இந்திய நீதி வாழ்க…… இனி அந்த மலேசிய ஆனந்தகிருஷ்ணன் இந்தியா வந்து ஆனந்தமாக உச்சநீதிமன்றம் முன்பு போட்டோவிற்கு போஸ் கொடுப்பார் அவருக்கும் ஏதோ ஒரு விருது கொடுத்து கவுரவித்தாலும் கவுரவிப்பார்கள். அமெரிக்கா பாணியில் குவைத்: 5 இஸ்லாமிய […]

அறிஞர் அண்ணா நினைவு தினம்

  பன்னீர் செல்வம் முதல்வராகவும் , சசிகலா பவுடர் பூசிகொண்டு அடுத்த முதல்வராக தயாராகிகொண்டிருப்பதும் அண்ணாவின் சாதனைகளில் ஒன்று என்பதுதான் இன்றைய அவரின் நினைவு நாளில் கண்முன் நிற்கின்றது. சினிமாவினை அரசியலில் கலக்கவிட்ட அவரின் பெரும் தவறுதான் இன்று தமிழகத்தை சீரழித்து நிற்கின்றது ஆனாலும் அந்த நாளை நினைத்து பார்க்கும்பொழுது கலைஞர் கண்முன் வருகின்றார் அப்பொழுது அவருக்கு 45 வயதுதான், கட்சியில் அவருக்கு முன் பெரும் வரிசை இருந்தது, சீனியாரிட்டிபடி முதல்வராவது என்றால் இன்றும் கலைஞர் தலைவராக […]

விரைவில் சீனாவுடன் போர்…

விரைவில் சீனாவுடன் போர்- ட்ரம்பின் முதன்மை ஆலோசகர் அறிவிப்பு ஒருவேளை அமெரிக்காவும் சீனாவும் மோதி இந்த இரு காளைகளில் எந்த காளை செத்தாலும் நமக்கு லாபமே. ஆனால் துணிந்து இருவருமே சண்டையிடுவார்களா? என்றால் மாட்டார்கள். இருவரும் தங்கள் பலத்தினை தங்கள் எல்லைக்குள் காட்டிவிட்டு எங்களை தாக்கினால் என்னாகும் தெரியுமா? என மிரட்டிவிட்டு அமைதியாகிவிடுவார்கள் காரணம் பெரும் போரினை எதிர்கொள்ள இன்றைய உலகில் எந்த நாடும் தயாராக இல்லை, அதில் சீனாவும் அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. வடகொரியாவினையே தாக்க பலமுறை […]

தமிழக தலைவர்கள் வாய்மொழி..

பழைய கள் – புதிய மொந்தையே மத்திய பட்ஜெட்: கி.வீரமணி இவர் மட்டும் அதர பழைய‌ கள்ளான திராவிட கொள்கை, பகுத்தறிவு என அரசியல் செய்யலாமாம், பிஜேபி அரசு பழைய காங்கிரஸ் பட்ஜெட்டை காப்பிபடித்தால் அது தவறாம்.. சட்டமன்றம் இன்றைக்கு அதிமுகவின் துதிபாடும் மன்றமாக மாறி விட்டது: மு.க.ஸ்டாலின் கண்டனம் அதிமுக ஆட்சியில் அது அப்படித்தானே இருக்கும், எம்ஜிஆர் காலத்திலிருந்து ஜெயாகாலம் வரை அது பாட்டுமன்றமாகத்தானே இருந்தது மனிதருக்கு என்னவோ ஆகிவிட்டது போல, திடீரென எதனையோ பார்த்தது […]

போட்டாஷாப்பில் அஜித்குமார் உடலினை மாற்றியிருக்கின்றார்கள்

ஏதோ ஒரு புது படத்திற்காக போட்டாஷாப்பில் அஜித்குமார் உடலினை மாற்றியிருக்கின்றார்கள், அப்படியே சினிமாவிலும் ஏதும் செய்து தொலைக்கலாம் தொழில்நுட்பம் கைகொடுக்கும், அல்லது உடலில் பலூன் கட்டிவைத்து சட்டைபோட்ட‌ விவேக் நுட்பமும் கைகொடுக்கும், ஆனால் “ய்யயயயேய்ய்ய். .. ம்ம்ம்ம்ம்….. .அஅஅஅஅஅவன…… ஈஈஈஈஇ ஈஈ இஇஇஇவன… “ என அவரின் தமிழ் தடுமாறி திக்கி வரும் குரலை டைரக்டர் எப்படி சரி செய்வாரோ தெரியாது, அதற்கும் ஒரு தொழில்நுட்பத்தை டைரக்டர் கண்டடையட்டும்.  

ஊரில் ஒரு சீமான் அடிப்பொடியினை சந்திக்க நேர்ந்தது…

ஊரில் ஒரு சீமான் அடிப்பொடியினை சந்திக்க முடிந்தது, மனிதர் கொஞ்சம் அமைதியாகத்தான் பேசினார். சீமான் இப்பொழுதெல்லாம் ஈழம் அமைத்துவிட்டு, எரிதிரியா பக்கம் அழுது கொண்டிருந்த இருந்த பிரபாகரனை அழைத்து பொறுப்பினை கொடுத்துவிட்டதால் அவர் பார்வை தமிழகம் மீது விழுந்திருக்கின்றது, இப்பொழுது தமிழகத்தை மீட்க போராடுகின்றாராம் சைமன். ஜல்லிகட்டினை சீமான் மீட்டாராம், இனி பாரம்பரியங்களை மீட்பாராம். இவரும் அந்த போராளியாம். அதாவது இவர் சீமான் வழியில் போராடுவாராம், பெப்சி கோக் எல்லாம் புறக்கணிப்பாராம். தமிழக இயற்கை பானம் மட்டும் […]

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

  தன் இனம் பிரிந்த‌ மான்குட்டியொன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகின்றது என் கையில் ஆண்டவன் இந்த குட்டி தேவதையினை ஒப்படைத்து இன்றோடு 6 ஆண்டுகள் ஆகின்றன. எந்த துயரமென்றாலும் அம்முகத்தை பார்த்த ஒருநொடியில் பறந்துவிடுமாறு இறைவன் எனக்கு கொடுத்த ஆறுதல் அவள். நாளை உலகில் அவள் வாழ எல்லா வழிகளையும் செய்ய போகும் இறைவன் இன்று எல்லா தெய்வங்களும் சூழ நின்று… என் கண்முன் வளைய வரும் குட்டி தேவதையினை வாழ்த்தட்டும்   அற்புதமான மர சிற்பங்களில் […]

சென்னை அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டன

சென்னை அருகே இரு கப்பல்கள் மோதிகொண்டதில் கடலெல்லாம் கச்சா எண்ணை மிதக்கின்றது இது நிச்சயம் பெரும் சுகாதார அழிவு, கடலில் அதனால் இறந்த கடல்வாழ் உயிரினம் முதல், மீணவர் வாழ்வு வரை பாதிக்கபட்டிருப்பது கொஞ்சமல்ல‌ மீட்புபணி 5 நாட்களாக எப்படி நடக்கின்றது என்பதில்தான் இந்தியாவின் கேலிகூத்தே உலகிற்கு தெரிகின்றது, அவ்வளவு மெதுவான மீட்பு பணி எனும் காமெடி அது என்னவோ தெரியவில்லை, வேகம் நமக்கு வராது. போர் என்றே இருகட்டும், என்ன சொல்வார்கள் தெரியுமா? 4 நாட்களில் […]

டிரம்ப் காளை எங்கே பாய்கிறது ?

மனிதர் இப்படித்தான் கண்ணை மூடிகொண்டு எதிலும் கையெழுத்து இடுவார் போலும்…    எதிர்பார்த்தபடியே உலக ஜல்லிகட்டு தொடங்கிவிட்டது, டிரம்ப் எனும் காளை துள்ள தொடங்கிவிட்டது. முதல் பாய்ச்சலாக பல இஸ்லாமிய நாட்டு மக்களுக்கு தடை, அந்நிய தொழிலாளர்களுக்கு தடை என அழிச்சாட்டியம் செய்கின்றார் டிரம்ப். உலகம் உற்று கவனிக்கின்றது இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால் அவர் தடை செய்திருக்கும் சில நாடுகள் அமெரிக்க கைபாவை அரசுகள் என்பதுதான் பெரும் காமெடி அதாவது அந்நாடுகளில் மறைமுகமாக நடப்பது அமெரிக்க […]