பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சின்னம்மா கடிதம்… சீமான் பேட்டி….

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க – பிரதமருக்கு சசிகலா கடிதம் இப்பொழுதெல்லாம் தமிழக மக்கள் மீதும், தமிழகம் மீதும் சசிகலாவிற்கு பீறிட்டு வரும் அக்கறை கொஞ்சமல்ல, எல்லா பிரச்சினைக்கும் பிரதமருக்கு நேரடியாகவே கடிதம் எழுத தொடங்கிவிட்டார் முதல்வர் பன்னீர் செல்வமும் கடிதம் எழுதுகின்றார், சசிகலாவும் எழுதுகின்றார், ஆனால் பிரச்சினை ஒன்றேதான். பின் ஏன் இரட்டை கடிதம் என நாம் கேட்க கூடாது. ஆக தமிழகத்திற்கு இரு முதல்வர்கள் என தெரிகின்றது ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வர், இன்னொருவர் […]

அண்ணன் காட்டிய வழியம்மா!

அண்ணாவிடமிருந்து கண்ணதாசன் வெளிவந்த காலங்களில் அவரின் மனம் என்ன பாடுபட்டதோ கிட்டதட்ட நம் மனநிலையும் அதனை போலவே இருக்கின்றது அக்காலங்களில் கண்ணாதாசன் எழுதிய கட்டுரைகளை படித்து ஆறுதல் தேடிகொண்டாலும், அவர் எழுதிய மிக பிரமாதமான பாடலை பார்க்க முடிந்தது உயிராய் நினைத்தவர்களின் புறக்கணிப்பினை கவியரசை தவிர யாரும் இவ்வளவு அழுத்தமாக‌ சொல்லமுடியாது, கம்பன் கூட இந்த இடத்தில் தடுமாறுவான், ஆனால் கண்ணதாசன் அழகாக அடித்துபோட்டு செல்கின்றார். அண்ணாவினை பிரிந்து செல்ல அவர் எடுத்த மனநிலையின் இப்படி பாடலாக […]

முதல்வர் திரு பன்னீர் செல்வம்…

  கலைஞருக்கு பின் சகலத்தையும் பொறுத்துகொள்ளும் ஒரு முதல்வர் உண்டென்றால் அது சாட்சாத் நமது இன்றைய முதல்வர்தான் எத்தனை வகையான கிண்டல்கள், எத்தனை வகையான மீம்ஸ்கள் இனிப்புகடை பண்டங்களின் அத்தனை பெயர்களில் அழைக்கபட்டாலும் மனிதர் பொதுவாழ்க்கையில் அசாத்தியமாக இயங்குகின்றார் ஆட்சி பற்றி ஏதும் சொன்னால் கடும் போக்கு எடுக்கும் கட்சிதான் அது, அக்கட்சியின் தலைவர்கள் வழி வந்திருந்தால் இந்நேரம் மிரட்டல், அவதூறு வழக்கு, பத்திரிகை விரட்டு என கடும் நடவடிக்கைகளை எடுத்திருப்பார் இவர் அக்கட்சி என்றாலும் அரசியலில் […]

உடன்பிறப்பே…

உடன்பிறப்பே நடந்து முடிந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியான தொடக்கமாகவும் , நோக்கம் நிறைவேறினாலும் விரும்பதகாத முடிவாகவும் நான் கண்டதை போலவே நீயும் கண்டிருப்பாய் அன்று இந்திக்கு எதிராக நம் பகுத்தறிவு ஆசான் பெரியார் காட்டிய வழியில் தமிழகம் பூண்ட போர்கோலத்திற்கு கொஞ்சமும் குறையாத எழுச்சி அது. என் இளமை காலத்தில் போராடிய அந்த ஊக்கமான போராட்டத்தை ஒவ்வொரு மாணவ கண்மணியிடமும், இன்று சக்கர நாற்காலியில் இருந்து என்னையே கண்ட வீரவரலாறு இது. இதனை எண்ணி எண்ணி பேருவ‌கை கொள்கின்றேன், […]

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது

மறுபடியும் அந்த கும்பல் ஆரம்பித்துவிட்டது லாரன்ஸ் வந்தேறி, அந்த ஹிப்காப் (அது என்ன ஹிஹிஹிஹ் காப்?) தமிழன் வந்தேறி, பாலாஜி வந்தேறி, அவர்கள் துரோகம் செய்ததால் போராட்டம் கலைக்கபட்டது என ஓப்பாரி தொடங்கிவிட்டது அடேய் காவல்துறையினை கைவசம் வைத்திருக்கும் முதல்வர் பச்சை தமிழன், அவரின் ரிமோட்டை வைத்திருக்கும் சசிகலா தமிழச்சி, சசிகலாவினை ஆட்டிபடைக்கும் நடராஜன் பச்சை தமிழன் நடராஜனின் தோழர்கள் நெடுமாறன், சீமான் எல்லாம் பச்சோந்தி தமிழர்கள் ஆக காவல்துறையினை ஏவிவிட்டது தமிழர்கள், காவல்துறையின் கலவர தடுப்பு […]

ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்? இன்னும் பிற …

ஜல்லிகட்டு எழுச்சியில் அந்த தீபா என்ன ஆனார்? ராஜபக்சேயே மெரினா வந்து, கூட்டத்தில் நின்று “தமிலெருக்கு ஜொல்லிகொட்டு வோணும்” என பிரபாகரன் படத்தோடு நின்றிருக்கலாம்.. வாட்டாள் நாகராஜ் கூட ஒரு ஜல்லிகட்டு பேனருடன் மெரினா வந்து போயிருக்கலாம், யாருக்கு தெரியும்? இதில் தீபா எல்லாம் எந்த மூலைக்கு… சென்னையா? இல்லை பெங்களூருக்கே போய்விட்டாரா? எல்லாவற்றையும் தீர விசாரிக்க வேண்டும் கர்ப்பிணி வேடத்தில் வயிற்றில் குண்டு கட்டி மருத்துவமனைக்குள் புகுந்தல், ராணுவ வீரன் உடையணிந்து அரச கட்டத்துக்குள் புகுந்து […]

சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று

தமிழக மாணவர்களின் பெருமை மிகு போராட்டம், பெரு மகிழ்வோடு முடியவேண்டிய நேரத்தில் சில விஷமிகளால், சில வீணர்களால் இறுதிநேரத்தில் பெரும் குழப்பமாயிற்று நிச்சயமாக மாணவர்களின் போராட்டம் கண்ணியமும், மிகுந்த கட்டுப்பாடோடும் நடந்தது, உலகமே உற்று கைதட்டிகொண்டிருந்தது எல்லாம் எதுவரை? அரசுகள் ஜல்லிகட்டுவிளையாட தடையில்லை என சொல்லும் வரை அதன் பின் தான் இந்த ஜல்லிகட்டினை வைத்து தமிழ்நாட்டை இந்தியாவிற்கு எதிராக கொம்பு சீவிவிடும் கொடூர சிந்தனையாளர்களின் மனதில் அச்சம் உதித்தது, போராட்டம் அவ்வளவுதானா? வெற்றியோடு முடிந்துவிடுமா? விட […]

நமக்கும் காலம் வரும், நிச்சயம் வரும்

சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு பின்ன, மெரினாவில் அவ்வளவு பெரிய கலவரம் நடக்கும் பொழுது இவர்கள் எப்படி உள்ளே இருப்பார்கள், இப்பொழுது மெரீனா நோக்கி நடந்து போராடும் மாணவர்களை காக்க போகின்றார்கள். அதான் வெளிநடப்பு செய்து நடக்கின்றார்கள். இன்னும் ஸ்டாலின் தலமையிலான திமுக குழு மெரீனாவினை அடையவில்லை, இன்னும் 500 கிமீ தூரம் இருப்பதால் சென்று அடைய இன்று சில நாட்கள் கூட ஆகலாம் அடிவாங்குங்கள் தமிழர்களே, வோட்டு போட்ட விரலை காட்டி அதனை நொறுக்க சொல்லி […]

ஜல்லிக்கட்டு எதிராக உச்ச நீதி மன்றத்தில் மேனகா மனு…. இன்னும் பிற ..

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பாஜக மத்திய அமைச்சர் மேனகா காந்தி உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் இந்திரா காந்தி ஏன் இவரை விலக்கி வைத்திருந்தார் என்பது இப்போது புரியும் அம்மா தமிழிசை, அய்யா பொன்னார் இதோ உங்கள் கட்சிக்காரரே தடை வாங்க சென்றிருக்கின்றாரே, இதனை பற்றி உங்கள் கருத்து? இது மேனகாவின் சொந்த விஷயம் என்றுமட்டும் வழக்கம் போல சொல்லிவிடாதீர்கள்.. மேனகா காந்தியினை அனுமதிக்கும் பாஜக , தமிழகத்தில் ரத்த களறி ஏற்பட மறைமுக சிக்னல் கொடுக்கின்றது இது […]

போராட்டத்தில் தலைவனோ தலைமையோ உருவாகவில்லை…

இவ்வளவு பெரும் போராட்டம் நடந்திருக்கின்றது, இதிலிருந்து கூட ஒரு தலைவனோ தலைமையோ உருவாகவில்லை இதே போன்றதொரு போராட்டங்கள் பலவற்றில்தான் பெரியார், கலைஞர் எல்லாம் தானொரு மிகபெரும் ஆளுமையாக உருவெடுத்தார்கள் என்பது வரலாறு. ஆக ஆற்றல்மிக்க வருங்கால தலைமுறை தலைவனுக்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் வருத்தம் மிஞ்ச பார்க்க வேண்டியிருக்கின்றது நிச்சயம் இப்போராட்டம் ஒரு நம்பிக்கை தலைவனை காட்டியிருக்க வேண்டும், ஆனால் நடக்கவில்லை எனும்பொழுது நல்ல தலைவன் உருவாகவில்லை என்பது தெரிகின்றது வருங்கால தமிழகத்தை வழிநடத்த ஒரு இளம் […]