பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சொந்த மண்ணுக்கு செல்லும் போது…

சொந்த மண்ணுக்கு செல்லும் டிக்கெட் கையில் கிடைத்துவிட்டாலே ஒரு இனம்புரியாத ஏக்கம் மனதில் வந்துவிடுகின்றது சோறு இறங்காது, தூக்கம் வராது, அந்த நினைவுகளை தவிர‌ வேறு எதுவும் தோன்றா நிலை அது இன்னும் சிலநாட்களில் அம்மண்ணை மிதிக்கபோகின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சி, ஆனால் சுவரில் அடிக்கபட்ட பந்தினை போல வேகமாக‌ திரும்பவேண்டும். என்ன வாழ்க்கை இது? பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால்தான் நிம்மதி என்பார் கண்ணதாசன், அது உண்மையும் கூட‌ அப்படி சென்றவுடனும் அழவேண்டும், விட்டு பிரியும்பொழுதும் […]

தமிழகம் முழுவதும் ரயில் மறியல் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரயில் மறியல் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ரயில்மறியல் அவர்களின் ஸ்பெஷல் போராட்டம், ரயிலுக்கும் அவர்களுக்கும் உள்ள “ரயில் சிநேகம்” அப்படி. கலைஞருக்கு ரயில் பயணம் மிக பிடிக்கும், அதனால் “திருட்டு ரயில்” என அவரை கலாய்த்தவர்களும் உண்டு வைகோ கூட அந்த “ரயில் பயணத்திலே..” என சொல்லி கலைஞரை தாக்குவார் கலைஞரின் அசத்தல் போராட்டம் அப்படி ரயில் மறியலில்தான் தொடங்கியது, கல்லக்குடி எனும் ஊர் பெயரினை டால்மியாபுரம் என மாற்றிவிட திமுக துடித்தெழுந்தது, ஊர்வலமாக […]

ஏ.ஆர் ரகுமான் கண்டனத்தை தெரிவித்து உண்ணாவிரதம்…

தன் பிரச்சினைகளுக்கு வழக்கறிஞர்களாகவும், அடுத்தவர் பிரச்சினைக்கு நீதிபதிகளாவும் மனோபாவம் கொண்டிருந்த தமிழர்களை, பாதிக்கபட்டவர்களாக கத்தும் ஓரே புள்ளியில் நிறுத்தியிருப்பதற்காக பீட்டாவிற்கு நன்றி போராட்டம் வெற்றிபெற்றபின் காளை படம் போட்ட நினைவு பரிசினை தமிழர் சார்பாக அனுப்பவேண்டும் எதிலும் வாய்திறக்காத ஏ.ஆர் ரகுமானே கண்டனத்தை  தெரிவித்து போரட வந்திருப்பது வியப்பானது ஆனால் அவர் தனியாக உண்ணாவிரதம் இருப்பது நல்லதல்ல, மோடி அரசின் மீது இஸ்லாமிய வெறுப்பு என மதசாயம் பூசிவிடுவார்கள், இங்கு எல்லா வதந்தியும் சாத்தியம் மதிப்பிற்குரிய ரகுமான் […]

ஜல்லிக்கட்டுக்கு திரை உலகம் ஆதரவு….

இந்தியா தாண்டி, உலகமே திரும்பி பார்த்து ஆதரவளிக்க தொடங்கி, தீவிரமாக போராட்டம் நடந்துகொண்டிருக்கும் பொழுது இந்த கூத்தாடி சினிமா கும்பல் தனியாக “கூத்து” கட்ட போகின்றதாம் இதுதான் திசை திருப்பும் செயல், இந்த சினிமா கும்பல் ஒன்றும் உண்மை விளம்பிகள் அல்ல, அரசு கண்ணசைத்தால் குரங்காட்டம் ஆடும் கும்பல் கட்சிகளே மிரண்ட நிலையில், மொத்த தமிழகமும் பொங்கி நிற்கும் நிலையில் இவர்கள் வந்து “நூற்கபோவது என்ன?” அவர்கள் தொழில் நடிப்பதும், சினிமாவும். அதில் எப்படி எதிர்ப்பு தெரிவிக்கலாம்? […]

தமிழர் தமிழகத்திற்காக‌!! தமிழருக்கு தமிழரே!!!

அன்று இந்தி கட்டாய மொழி, எல்லா தமிழரும் இந்தி கற்றே தீரவேண்டும் என அறிவிக்கபட்டது, தமிழகம் பொங்கியது என்னை மீறி இந்தி வந்துருமாண்ணேண்… என சீறினார் காமராஜர் உங்களை மீறி வந்தால் ,நாங்கள் தடுக்கட்டுமா என களமிறங்கியது திமுக, தமிழக மாணவர்படை களம் இறங்கியது அதாவது ஆளும் கட்சியும் தமிழருக்காக நின்றது , வலுவான எதிர்கட்சியும் தன் பங்கினை செய்து அசத்தியது. முடிந்தவரை முரண்ட டெல்லி அதன்பின் இந்தி கட்டாயம் அல்ல என இறங்கி வந்தது இந்த […]

ஜல்லிகட்டுக்கு வாதாடி என்ன கிடைக்கும்?

முதல்வர் பன்னீர் செல்வம் மோடியிடம் முறையிட்டாராம், மோடி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றது, என்னால் உதவ முடியாது ஆனால் வேறு எல்லா உதவியும் (டீ போட்டு கொடுத்து விமானம் ஏற்றி விட்டிருப்பாரோ) செய்ய தயார் என சொன்னாராம் உடனே பன்னீரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கின்றதா? அப்படியா என சொல்லிவிட்டு வந்துவிட்டாராம் இதே உச்சநீதிமன்றத்தில் ஜெயாவிற்காக நொடிபொழுதில் வாதாட ராம்ஜெத்மலானி வருவார், பால் நரிமன் வருவார் இன்னும் பல பிரசித்திபெற்ற வக்கீல்கள் வருவார்கள் ஆனால் ஜல்லிகட்டிற்கு நியமிக்கபட்டிருக்கும் வக்கீல் யாரென […]

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவுகள்…

கலைஞர் அரசில் மந்திரி பதவி கேட்டார் ராமசந்திரன், நடிப்பதை நிறுத்தினால் பதவி என கட்டளையிட வெகுண்டெழுந்த ராமசந்திரன் நடிப்பே முக்கியம் என சொல்லி என்ன செய்தார் தெரியுமா? புதுகட்சி தொடங்கினார். அதன்பின் முதல்வரானாலும் நடிக்கும் ஆசை இருந்தது, முதல்வராக இருந்தும் நடிக்க கிளம்பினார், அதாவது சினிமாவினை விடமாட்டாராம். அந்நாளைய பிரதமர் மொரார்ஜி தேசாய் ஒன்று நடியுங்கள் அல்லது முதல்வராக இருங்கள், நடித்துகொண்டே முதல்வராக இருப்பதை மத்திய அரசு அனுமதிக்காது என்றார் அவ்வளவுதான், சினிமா நடிப்பு அத்தோடு முடிந்தது […]

குஷ்பூ வாய்திறந்து ஜல்லிகட்டினை ஆதரித்து பேசவேண்டும்

ஜல்லிகட்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக வாய்திறக்கவில்லை, காரணம் ஜெய்ராம் ரமேஷ் செய்திருக்கும் தேசசேவை அப்படி வாய்திறந்தால் வாயிலே குத்துவிழும் என்பது தெரிந்து எல்லா கோஷ்டியும் கப்சிப் எப்படிபட்ட கட்சி அது? அரசியல் ஜல்லிகட்டுக்கே பெயர்பெற்றது சத்தியமூர்த்தி பவன். எப்பொழுது எந்த காளை சீறும், எப்படி அடக்குவார்கள் என்பதெல்லாம் சுவாரஸ்யமான காட்சிகள் நிலமை எல்லைமீறி செல்லும்பொழுது டெல்லியிலிருந்து வந்து மூக்கணாங்கயிறு போடுவார்கள் இப்படி அவர்களுக்குள்ளே அடிக்கடி ஜல்லிகட்டு நடப்பதாலும், சில மைனஸ் பாயிண்டுகள் இருப்பதாலும் திருடனுக்கு தேள் கொட்டிய […]

வெங்கய்யா நாயுடு, ஆளுனர் , ஜெயா தொலைக்காட்சி…

ஜெயா சாகும்முன்னாலும் செத்தபின்னாலும் அப்பல்லோவில் காவல் கிடந்த ஆளுநரையும், வெங்கய்யா நாயுடுவினையும் இப்பொழுது காணவே இல்லை மெரீனா பக்கம் வந்து பார்க்கலாம் அல்லவா? எங்கே சென்று தொலைந்தார்கள்? ஒரு ரிட் மனு போட்டு இருவரும் உயிரோடுதான் இருக்கின்றார்களா? என நீதிமன்றத்தில் கேட்க வேண்டும் தமிழகமே வங்க கடலில் மூழ்கினாலும், அல்லது பெரும் களபேரத்தில் கலங்கி நின்றாலும், வாழ்வா சாவா என பெரும் யுத்தம் நடத்திகொண்டிருந்தாலும் ஏன் அணுகுண்டே விழுந்து இரண்டாக பிளந்தாலும் ஜெயா டிவியில் மட்டும் சின்னம்மா […]

சந்தித்தார் மோடியை… முதல்வர் பன்னீர்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். மனதிற்குள் இப்படி அழுதிருக்கலாம் “முடியல சார், எங்காவது ஓடிரலாம் போல இருக்கு, சொல்லாம ஓடினா நாட்டுக்கு அவமானமுன்னு இங்க வந்தேன் ஒரு டீ மாஸ்டரோட‌ கஷ்டம் இன்னொரு டீ மாஸ்டருக்குத்தான் புரியும்ணு வந்திருக்கேன்.. ஒரு கப்பையும் எடுத்து ஆத்த முடியல்ல, ஜல்லிகட்டுல என் மூஞ்சிமேலேய வெந்நீர் ஊத்துறாங்க… எல்லாத்துக்கும் என்னையே போட்டு அடிக்கிறாங்க, அம்மா இருக்கும்போது ஒரு பய ஏதும் கேட்டனா? ரொம்ப வலிக்குது சார்… […]