பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெ கொடுத்த இன்னோவாவை தலைமை கழகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத்

ஜெ கொடுத்த இன்னோவா காரினை தலைமை கழகத்தில் ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத் அதற்கென்ன சம்பத், ஒரு வார்த்தை சொல்லுங்கள் பென்ஸ் காரில் வந்து திமுகவினர் அழைத்து செல்வார்கள். எதற்கு அந்த சாவியினை தலமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்? ஜெயா சமாதியில் எறிந்திருந்தால் இன்னும் எப்படி பரபரப்பாகியிருக்கும்? சசிகலா தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்- நாஞ்சில் சம்பத் இது என்ன? தன் தகுதியினை நிரூபித்துதானே பொதுசெயலாளர் ஆகியிருக்கின்றார் அந்த தகுதிக்கு அஞ்சிதானே இவர் ஓடி வந்திருக்கின்றார். இன்னும் நிரூபிக்க […]

ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் …

அலங்காநல்லூரில் இன்று திமுக ஆர்ப்பாட்டம், 18 கிமீட்டருக்கு வரவேற்பு அடேய் அவர் போராடி போராட்டம் வெற்றிபெற்று விட்டால் இப்படி ஒரு வரவேற்பினை கொடுக்கலாம், போராட வருவதற்கே இப்படியா? சரி அவர் போராட்டம் வெற்றிபெறவில்லை என்றால் என்ன செய்வார்கள்? ஒன்றும் செய்யமாட்டார்கள் இது அலங்காநல்லூர் ஜல்லிகட்டுக்கான போராட்டமா? அல்லது அழகிரி எனும் காளையினை மதுரையில் அடக்கும் போராட்டமா? என்பதுதான் தெரியவில்லை இரண்டாவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்

குஷ்பூவினை ஓவியமாக பார்க்கும் பொழுது…

அர்ச்சுணா கலைகளில் நான் ஓவிய கலை என பகவான் சொன்னது எவ்வளவு உண்மை குஷ்பூவினை ஓவியமாக பார்க்கும் பொழுது அது அக்கலையின் மாண்பு தெரிகின்றது தமிழகத்தில் நம்மை போல பலர் இருப்பார்கள் போலிருக்கின்றது, இனியும் என்ன தாமதம்? சங்கத்தை உடனே தொடங்கி விட வேண்டியதுதான்.   · 

ஜெயலலிதா மரணத்தின் மர்மம்தான் என்ன?

சின்னம்மா, பன்னீர் என அதிரடி செய்திகள் வந்துகொண்டிருக்க மிக முக்கியநபரின் பேட்டி மறைக்கபடுகின்றது அது தடவியல் நிபுணர் சந்திரசேகரனுடையது, ராஜிவ் கொலைவழக்கில் மிக நுட்பமாக கொலைநடந்த விதத்தை சொன்ன அதே சந்திரசேகரனுடையது ஜெயலலிதா சர்ச்சையில் நீதிமன்றம் உத்தரவிட்டால் உடல்கூறு செய்து அதற்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம் என சொல்கின்றார் அவர் அனுபவம் பல இடங்களில் துப்பு துலக்கியவரும், பத்மபூஷன் பதக்கம் பெற்றவருமான அவரை எளிதில் நிராகரிக்க முடியாது வரலாற்றில் எந்த தலைவரின் மரணமாவது இப்படி உடற்கூற்றில் நிரூபிக்கபட்டதா? […]

கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தால் பெட்ரோல் விலை 1 ரூபாய் கூட்டுகின்றார்கள்

கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தால் இவர்கள் 1ரூபாய் கூட்டுகின்றார்கள் அது விலை குறைந்தால் இவர்கள் குறைக்கவே மாட்டார்கள் என்பது வேறு விஷயம் எமது கவலை எல்லாம், இப்படி கச்சா எண்ணெய் விலை 1 டாலர் உயர்ந்தாலும் அடுத்த மைக்ரோ செக்கெண்ட் 1 ரூபாய் கூட்டும் இவர்கள் முந்தைய கச்சா எண்ணெய் விலையான 100 டாலரை எட்டினால் என்ன செய்வார்கள்? இப்போது கச்சா எண்ணெய் விலை கிட்டதட்ட 55 டாலர், முன்பெல்லாம் 120 டாலர் வரை […]

மனதால் ஏற்கனவே செத்துவிட்ட விவசாயி இன்று உடலாலும் சாகிறான்

பெற்றெடுத்த குழந்தையும் வயலில் இருக்கும் பயிரும் விவசாயிக்கு ஒன்றுதான் குழந்தையினை ஒருவன் கண்ணும் கருத்துமாய் பார்ப்பதை போலவே பயிரையும் அவன் வளர்ப்பான், தூங்காமல் உண்ணாமல் பயிரோடு பயிராகவே அவன் வாழ்வு இருக்கும் அந்த பயிர் கருகுவதை நல்ல விவசாயியால் ஏற்றுகொள்ளமுடியாது, அவன் கதறத்தான் செய்வான் புத்திரசோகத்தை விட பெரும் சோகத்தை, கண் முன்னால் பயிர்கள் கருகி கிடப்பது விவசாயிக்கு கொடுத்துவிடும் தாங்கமுடியாத விவசாயி வாழ்வினை முடித்துகொள்கின்றான், எண்ணிக்கை கிட்டதட்ட டஜனை தாண்டி செல்கின்றது மனதால் ஏற்கனவே செத்துவிட்ட […]

வைத்திய சிகாமணிகள் செய்த பெரும் அருமருந்து இது

முன்பு திருவாரூர் பக்கம் ஒரு நாட்டு வைத்தியர் இருந்தாராம், பிரமாதமன வைத்தியர் இல்லை, ஏதோ கைமருந்து, பூச்சிகடி மந்திரித்தல் என செய்துகொண்டிருந்தாராம், கசாயம் எல்லாம் காய்ச்சுவாராம், அவர் பெயர் முத்துவேலர் அந்த வைத்தியரின் மகன் கலைஞர் கருணாநிதி. மைசூர் சமஸ்தானத்தின் குறிப்பிடதக்க டாக்டரின் பேத்தி ஜெயலலிதா என்கின்றது ஒரு செய்தி அப்படியே மன்னார்குடி பக்கம் ஒரு வைத்தியர் இருந்தாராம், அவரும் வைத்தியர்தான் ஆனால் காலம் மாறியபின் மருந்துகடை வைத்திருந்தாராம், அவர் காலத்தில் கசாயம் எல்லாம் இல்லை, அது […]

இன்று கட்டபொம்மனின் பிறந்தநாள், இன்னும் பிற

இன்று கட்டபொம்மனின் பிறந்தநாள் வெறும் 39 வயதிலே மானத்துடன் உயிர் நீத்த அவனுக்கு, பெரும் அவமானத்தோடு இன்னும் வாழும் வை.கோ அஞ்சலி செய்து வீரவுரை ஆற்றுவார் கட்டபொம்மனுக்கு இதனை விட என்ன அவமானம் வேண்டும்? கட்டபொம்மனின் வீரத்திற்கும் தன்மானத்திற்கும் உண்மையான அஞ்சலி செய்யவேண்டுமென்றால் வைகோ பாஞ்சாலங்குறிச்சி பக்கம் போகாமல் இருக்கட்டும்.   விரைவில் முதல்வராகிரார் சசிகலா இன்னும் ஜெயா இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு வேகமா? விரைவில் பன்னீரை அகற்றிவிட்டு சசிகலா முதல்வராவர் […]

தம்பிதுரைக்கு பன்னீர் செல்வம் மீது ஏதோ பெரும் கோபம்…

  கட்சியின் சீனியரான தம்பிதுரைக்கு நிச்சயம் கட்சி மீதும் பன்னீர் செல்வம் மீது ஏதோ பெரும் கோபம் இருக்க வேண்டும், காரணம் அவரின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன‌ சின்னம்மா பொதுசெயலாளராக வேண்டும் என முதலில் சொன்னவர் அவர்தான், இப்பொழுது சின்னம்மா முதல்வராக வேண்டும் என சொல்பவரும் அவர்தான் அதுவும் தன் துணை சபாநாயாகர் லெட்டர் பேடில் கடிதம் எழுதும் அளவுக்கு கடும் ஆர்வம் ஏன் கோபம் இருக்கும்? பலமுறை வாய்ப்பு வந்தபொழுதும் கட்சியின் சீனியரான தன்னை விட […]

கலைஞரின் அறிக்கை இல்லா முதல் புத்தாண்டு தொடங்கிவிட்டது

கலைஞரின் அறிக்கை இல்லா முதல் புத்தாண்டு தொடங்கிவிட்டது இனி இப்படித்தான் தமிழகம் என்பதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் ஆனால் அதனை கடந்து செல்வதுதான் மிக சிரமம் திமுக ஏன் அமைதியாகிவிட்டது என பல குரல்கள், இதில் என்ன ஆச்சரியம் வேண்டி இருக்கின்றது? திமுக எனும் கட்சிக்கு போர்குணம் கொடுத்ததே கலைஞர், சாதரண இயக்கமான அது கலைஞரின் எழுத்து,பேச்சு, போராட்டம் என்பதாலே உச்சம் தொட்டது கல்லகுடி போராட்டம் முதல் எத்தனையோ போராட்டங்களை வெறும் எதிர்ப்பாக காட்டவேண்டிய இடங்களில் அதனை பெரும் […]