பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதற்கு இவ்வளவு நாடகமா?

பொதுகுழு தான் தலைவரையோ பொதுசெயலாளரையோ தேர்ந்தெடுக்குமாம்… நம்பிகொள்வோம் பொதுகுழு கூடி தேர்தல் நடக்கும் பின் தலைவரை அறிவிப்பார்கள், ஜனநாயக கட்சி தேர்தலாம் அதன் பின் சொல்வார்கள், இந்த முடிவு பொதுகுழுவின் முடிவு, பொதுகுழுவினை கூட்டியது யார்? பொதுகுழு செயற்குழு வழிகாட்டலில் நடந்தது செயற்குழு யார் வழிகாட்டலில் நடந்தது? அது தலைவர் வழிகாட்டலில் நடந்தது. இதற்கு பொதுகுழுவினை கூட்டி தன்னை தலைவர் என அறிவிக்க, தலைவரே சொன்னார் என சொன்னால்தான் என்ன? இதற்கு இவ்வளவு நாடகமா?

இளம் வயது கங்கை அமரன் ஒரு பாடல் எழுதினார் … வீரமணி ஜால்ரா போடுகிறார்…

தமிழக திரையுலகில் குறிப்பிடதக்க கலைஞர் கங்கை அமரன், இளையராஜா எனும் சூரியன் முன் அவர் திறமை மங்கலாக தெரிந்திருக்கலாமே ஒழிய , மிக திறமையான கிராமிய கலைஞன் அவரின் பல பாடல்களுக்கும், வைரமுத்துவின் பாடல்களுக்கும் கூட வித்தியாசம் தெரியாது எனும் அளவிற்கு அவர் திறமை அபாரமானது. அவருக்கும் அதிமுகவிற்கும் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம் இளம் வயது கங்கை அமரன் அக்காலத்தில் ஒரு பாடல் எழுதினார் “நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப […]

இலங்கை தேநீரும், மலையக தமிழரும்…

இலங்கை தேநீருக்கு அப்படி ஒரு சுவை, தமிழரின் உழைப்பில் விளைவதாலோ என்னமோ எந்த பானமும் கொடுக்காத திருப்தியினை மலையக தேநீர் கொடுக்கின்றது உலகில் மிக மோசமான அபலை வாழ்க்கை வாழும் தமிழர்கள், அந்த தேயிலை தோட்ட தமிழர்கள் ஆனால் அவர்களின் நிலைபற்றி யாரும் பேசமாட்டார்கள், எந்த உணர்வாளனும் பேசமாட்டான், முழங்கமாட்டான் சரி அவர்கள் உழைப்பின் தேநீரையாவது தமிழகத்தில் கிடைக்கவிடுவானா என்றால், அய்யகோ அது இலங்கை அரசுக்கு செல்லும் பணம் அதனால் புறக்கணிப்போம் என கிளம்புவார்கள் அது தமிழுணர்வு, […]

இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு …

பரபரப்புக்கிடையே இன்று கூடுகிறது அ.தி.மு.க. பொதுக்குழு அப்பட்டமாக தெரிகின்றது சசிகலா பொதுசெயலாளராக போகிறார் என்று, இதில் என்ன பரபரப்பு வேண்டி இருக்கின்றது? பெரும் எதிர்ப்புகள் ஏதுமில்லை,சிலர் கத்தி ஒன்றும் ஆகபோவதுமில்லை கட்சி இப்பொழுது ஆட்சியில் உள்ளதால் சசிகலா என்ன? கோவை சரளா பொதுசெயலாளர் ஆனாலும் யாருக்கும் சிக்கல் இருக்காது. அவர்களுக்கென்ன? யார் ஆண்டால் என்ன? இன்னும் 4 வருடம் சம்பாதிக்க வேண்டும், அதற்கு யார் காலிலும் விழ, அல்லது எந்த தலமைக்கும் தலைகொடுக்க அவர்கள் தயார் ஒரு […]

அதிமுகவில் இணைவேன்: டி. ராஜேந்தர்

  அழைப்பு வந்தால் அதிமுகவில் இணைவேன்: டி. ராஜேந்தர் அதிமுகவில் இணையாமலே கங்கை அமரனின் வீடு வரை பிடுங்கினார்கள், இவரிடம் எதனை எல்லாம் பிடுங்க போகின்றார்களோ?? கவனமாக செல்லுங்கள் டி.ஆர் அங்கு ஏராளமான பிடுங்கிகள் உண்டு ஆனாலும் ஒரே ஒரு சந்தேகம் பொதுவாக வைகோவினை போட்டு தாக்குபவர் டி.ஆர், இன்றோ வைகோ இன்னும் சசிகலாவிற்கு பல்லாக்கு தூக்காதது தான் பாக்கி, இதில் எப்படி இருவரும் இணைந்தார்கள்?? என்னமோ எம்ஜிஆரை எதிர்த்தவன், எம்ஜிஆருக்க அஞ்சாமல் தமிழகத்தில் இருந்த ஒரே […]

சிறு குறு செய்திகள்….

இந்த ஆண்டின் மிக சிறந்த படம் “இறுதி சுற்று”, மிக சிறந்த இயக்கமும் நடிப்பும் அதில் மின்னியது கொஞ்ச வருடத்திற்கு இனி அப்படி ஒரு படம் சாத்தியமே இல்லை மிக சிறந்த பாடல் “அவளும் நானும்” மிக சிறந்த பொழுதுபோக்கு படம் “சென்னை 600028 II” மிக சிறந்த சீரியசான காமெடி படம் “கபாலி” ஜெ. மரணத்தில் சந்தேகம் உள்ளது, மன்னார்குடி குடும்பத்திடம் ஆட்சி சிக்கிவிட கூடாது : கராத்தே வீரர் உசேனி அட பரிதாபமே, ஹுசைனி […]

‘மநகூ’விலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவிப்பு, ஜெ ஆவி உக்கிரம்…

‘மநகூ’விலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவிப்பு சிரிய போரில் அமெரிக்க கூட்டணியாக இருந்தவர், கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார், இனி உலகில் அணு ஆயுத யுத்ததிற்கு வாய்ப்பு கூடுகின்றது பங்குசந்தை முதல் கச்சா எண்ணெய் வரை இனி பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு இதுபற்றி விவாதிக்க ஐநா சபை அவசரமாக கூடுகின்றது, டிரம்பும் புட்டீனும் சந்தித்துகொள்ள ஜெனிவா விரைகின்றனர் ஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது! 2023 வரை இங்குதான் இருக்கும்! பிரபல சாமியார் அசோக்ஜி பரபரப்பு தன் நாற்காலியில் இன்னொருவர் […]

சீன முன்னாள் மந்திரிக்கு 10.5 ஆண்டு ஜெயில்..

லஞ்சம் வாங்கிய வழக்கில் சீன முன்னாள் மந்திரிக்கு 10.5 ஆண்டு ஜெயில்.. நாடா அது? இங்கு அதெல்லாம் நடக்குமா? ஒரு தலமை செயலாளரை சும்மா தொட்டாலே அது அரசியல் சாசன அவமானம், மத்திய அரசின் கொடுமை என்றெல்லாம் பொங்குவது எங்கள் ஸ்டைல், தண்டனை எல்லாம் கிடையவே கிடையாது. வருமான வரி சோதனையா? வா வந்து எடுத்துகொள் அவ்வளவுதான், மேற்கொண்டு தண்டனை அது இது என நீனும் பேச கூடாது நானும் பேசமாட்டேன் என்பது எங்கள் கொள்கை எத்தனை […]

ஜெயா இருந்தால் இப்படி நடக்குமா? : ராம் மோகன ராவ் புலம்பல்

என்னவோ வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டதை போலவும், அதனை வெள்ளையன் அரசு பிடுங்கிவிட்டு இவரை புல்வெட்ட போட்டது போலவும் ராம மோகன் ராவ் பேட்டியளித்துகொண்டிருக்கின்றார் இவரை பதவி நீக்கிய பின்னும் என்ன பேசி கிழிக்கவேண்டியிருக்கின்றது, குற்றமில்லை என்றால் நீதிமன்ற கதவினை தட்டி சொல்லலாம். இங்கு இருந்து கொண்டு இது மத்திய சதி, மாநில சதி , இது அரசியல் சாசன அடி என்று சொல்வதெல்லாம் பெரும் காமெடிகள் அதிகாரிகளும் அரசியல்வாதிகளாகிகொண்டிருக்கும் அவலம நடந்துகொண்டிருக்கின்றது இவர் தலமை செயலாளராம், […]

தமிழக நிலை என்ன?

நாட்டின் இன்றைய மகா முக்கிய பிரச்சினை கரன்சி மாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் எந்த கட்சியாவது இதனை உருப்படியாக பேசுகின்றதா என்றால் இல்லை, பாஜக் கட்சி தலைவர்களே வண்டு முருகன் வடிவேலு போல “தத்தப்ப்பத்தப்ப்ப்” என சொல்லிகொண்டிருக்கின்றார்கள் தமிழக நிலை என்ன? ப.சிதம்பரம் தனக்கே உரித்தான நிபுணத்துவத்திலும், அனுபவத்திலும் பின்னி எடுக்கின்றார். அழகாக அர்த்தமாக பேசி உண்மை நிலையினை உணர்த்துகின்றார், இன்னும் சில மகா பெரும் பிம்பங்கள் மணி சங்கர் அய்யர் போல உண்டு பாஜகவின் தமிழிசை […]