பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது…

தமிழ்நாட்டை “இனி ஆண்டவனாலும் காப்பாற்றமுடியாது” என ஒரு காலத்தில் சவுடால் பேசிய ரஜினிகாந்த் இன்று தனுஷ் படத்திற்கு கிளாப் அடித்துகொண்டிருக்கின்றார் அவர் எப்போழுது பேசுவார்? என்ன பேசுவார்? என யாருக்கும் தெரியாது, ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசவே மாட்டார். மத்திய அரசு கஜானாவை நிரப்புவதிலேயே கவனம்: திருநாவுக்கரசர் மத்திய அரசு இந்திய கஜானாவினை நிரப்புவதில் கவனமில்லாமல் பாகிஸ்தான் கஜானாவினை நிரப்புவதிலா கவனமாக இருக்கும்? இவர் அம்மா இறந்த அதிர்ச்சியில் என்னவெல்லாமோ பேசிகொண்டிருக்கின்றார், பேசட்டும் இவரின் கவனம் எங்கிருக்கின்றது? […]

ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா?: திருநாவுக்கரசு

திருநாவுக்கரசர் ஜெயா மீண்டும் வந்துவிடுவாரா? என சொன்னதற்கு, இப்படி சொன்னால் ராஜிவ் மீண்டும் வந்துவிடுவாரா? என இனவுணவாளர்கள் கேட்க எவ்வளவு நேரமாகும் என பதிவிட்டிருந்தோம் சொல்லி வைத்தாற்போல அடுத்த 5 நிமிடத்திலே சீமான் அதே பாணியில் சீறிவிட்டார். நம்மை கண்காணித்து கொண்டிருப்பாரோ? ஆனால் சில அதிரடி கேள்விகளையும் கேட்டார், நடராஜனின் நெருங்கிய நண்பரான சீமான், திடீரென சசிகலாவினை எதிர்க்கும் நோக்கம் தெரியவில்லை. ஜெயா மரணத்தில் அவருக்கு உண்மை வேண்டுமாம் ஆச்சரியமாக அவரின் அண்ணன் பிரபாகரன் மர்மத்தில் அப்படி […]

சசிகலா எப்படி இன்னொரு நாட்டின் அதிபருக்கு கடிதம் எழுதினார்?

பெரும் சர்ச்சையொன்று கிளம்புகின்றது அதாகபட்டது இலங்கை தூதர் எழுதிய கடிதத்தில் உங்கள் கோரிக்கைக்கு ஏற்ப மீணவர்களை அனுமதிக்கின்றோம் என எழுதி தொலைத்துவிட்டார் அய்யா.. அதாவது உங்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கின்றோம் என்றால், அதற்கு முன் கூட்டியே சசிகலா கோரிக்கை வைத்திருக்க வேண்டும் அல்லவா? ஆக எந்த பொறுப்பிலும், பதவியிலும் இல்லாத சசிகலா எப்படி இன்னொரு நாட்டின் அதிபருக்கு கடிதம் எழுதினார் என சர்ச்சை வெடிக்கின்றது. வைகோவோ, சீமானோ, திருமாவோ, திருமுருகன் காந்தி கூட எழுதாத கடித்தத்தை சசிகலா எப்படி […]

பிரபாகரன் இப்படிபட்ட பைத்தியக்காரனா?

கலைஞர் ஈழத்தில் தமிழர் சாகும்போது வேடிக்கை பார்த்த்தாராம், அதனால் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது இவர்கள் வேடிக்கை பார்ப்பார்களாம் இப்படி சிலர் கிளம்பியிருக்கின்றார்கள் கலைஞர் புலிகளுக்கு செய்த உதவியும், அமைதிபடை காலத்தில் அவர் காட்டிய புலி அபிமான செயல்கள், ஆட்சி இழந்தது என பல பார்த்தாகிவிட்டது ஈழப்போர் எப்படி நடத்தபட்டது என்பதையும் சொல்லியாகிவிட்டது, பிரபாகரன் எப்படிபட்ட பைத்தியக்காரனாக இருந்தான் என்பதனை சமீபத்தில் இலங்கை பத்திரிகையாளர் எழுதியதில் புரிந்துகொள்ளலாம், அவர் பாலசிங்கத்திற்கு நெருக்கமானவர் அதாகபட்டது நார்வே, ஜப்பான் என எல்லா […]

போக்குவரத்து நெரிசலில் சிக்கினார் முதல்வர் பன்னீர் செல்வம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கினார் முதல்வர் பன்னீர் செல்வம் : செய்தி அம்மா இருந்தவரை முதல்வரின் போக்குவரத்த்து எப்படி இருந்தது? இரண்டுமணி நேரம் வரை மக்களை நடுரோட்டில் நிறுத்திய சம்பவங்கள் உண்டு இன்னும் ஏராள மக்கள் விரோத செயல்கள் உண்டு ஆனால் பன்னீர் செல்வம் இப்படியே மக்களை கொடுமை படுத்தாமல் ஒதுங்கி நின்று, இனி பிளாட்பாரத்தில் நடந்து, ஏதும் பிரச்சினை என்றால் ஹெலிகாப்டரில் வராமல் கால் தேய ஓடிவந்து கடமை ஆற்றினால்.. கோடை என்றால் கொடநாடு மாளிகை கட்டாமல் […]

மரணம் யாருக்கும் வரலாம், எப்பொழுதும், எந்த நொடியிலும் வரலாம்

மரணம் யாருக்கும் வரலாம், எப்பொழுதும், எந்த நொடியிலும் வரலாம் 94 வயதுவரை ஒருவித போராட்ட வாழ்க்கை வாழ்வதும், எழுதுவதும், அரசியல் செய்வதும் பெரும் சாதனை அதுவும் எத்தனையோ நெருப்பாறுகளை கடந்து வந்து இந்நிலையில் இருப்பது ஒரு வகை ஆசீர்வாதம் காமராஜருடன் இந்திரவுடன் மல்லுகட்டியவர் பன்னீர்செல்வத்துடனும் சசிகலாவுடனுமா அரசியல் செய்யவேண்டும்? அந்நிலை அவருக்கு வாய்க்காவிட்டால் மகிழ்ச்சியே எல்லோரும் ஒரு நாள் கிளம்பவேண்டிய உலகிது, யார் தப்பிவிட முடியும்? இதில் சிலர் என்னவோ வாழவேண்டிய புதுமாப்பிள்ளை சாக கிடப்பதை போல […]

ராஜாஜி ஒரு சிந்தனையாளர்…

ராஜாஜி ஒரு சிந்தனையாளர் என்றால் உடனே பொங்குகின்றார்கள், அவர் பார்ப்பன வெறியன் என ஏகபட்ட குற்றசாட்டுகள் படித்தவர், பெரும் அறிவாளி. பெரும் தீர்க்கதிரிசியும் கூட அன்றைய இந்தியாவில் விரல்விட்டு எண்ணபட கூடிய பெரியவர்களில் அவரும் ஒருவர், அதனால்தான் வெள்ளையன் கவர்னர் ஜெனரல் பதவியினை அவருக்கு கொடுத்திருந்தான் காந்தி அவர் வீட்டோடு சம்பந்தம் செய்திருந்தார், ஒரு தமிழன் காந்தியின் சம்பந்தி. ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியின் முதல்வரானார் ராஜாஜி, அன்று பள்ளிகளும் குறைவு, தொழில் வாய்ப்புகளும் குறைவு உலகளாவிய அனுபவம் […]

இப்படியா திருநாவுக்கரசு வாயினை கொடுத்து மாட்டுவார்…

இப்படியா ஒரு மனிதன் வாயினை கொடுத்து மாட்டுவான் அய்யா நாவுக்கரசா, நீர் இருப்பது இப்பொழுது காங்கிரஸ் அதிமுக அல்ல, அதிமுகவில் மனதளவில் சேர்ந்துவிட்டார் போல. நாளையே இனவுணர்வாளர்கள் 7 பேரினை தூக்கில் போட்டால் ராஜிவ் வந்துவிடுவாரா?, 7 பேரை அடைத்தே வைத்தால் ராஜிவ் திரும்பிவிடுவாரா என்றால் என்ன ஆகும்? கேட்கமாட்டார்களா? நிச்சயம் கேட்பார்கள். இந்த ஒரு வாக்கியத்தை வைத்து அவர்கள் விளையாடமாட்டார்களா? மிஸ்டர் ராகுல் காந்தி, காங்கிரசுக்கு ஏதும் செய்ய வேண்டும் என்றால் இவர் கழுத்தில் ஒரு […]

அவர் தா. பாண்டியன் அல்ல…

  நூறுவருடங்களுக்கு முன்னால் ரஷ்யா ஜார் மன்னனின் அழிச்சாட்டியத்தில் சிக்கி இருந்தது, கடும் கொடுமைகள் அதிலும் ராணிகளின் ஆட்டமே படு அமர்க்களம், ஒரு மகுருவுடன் சேர்ந்து அவர்கள் அடித்த கொட்டம் வரலாற்று கொடுமை அங்கேதான் செங்கொடி உயர்ந்து அந்த மன்னர்களையும், ராணிகளையும், அதிகார சக்திகளையும் உடைத்தெறிந்தது உலகெல்லாம் கம்யூனிஸ்டுகள் உருவானார்கள், அதிகாரங்களை தூக்கி எறிந்து மக்களுக்கான அரசினை உருவாக்கினார்கள் உலக கம்யூனிஸ்டுகள் லெனின் முதல் காஸ்ட்ரோ வரை அதனை செய்தார்கள் தமிழக கம்யூனிஸ்டுகள் என்ன செய்கின்றார்கள், அன்று […]

தமிழகத்தை மிக கவனமாக கவனித்துகொண்டிருப்பது சிங்களர்கள்

தமிழகத்தை யார் கவனிப்பார்களோ இல்லையோ, மிக கவனமாக கவனித்துகொண்டிருப்பது சிங்களர்கள் அடிக்கடி தமிழக அரசியலை வாருவார்கள், கலாய்ப்பார்கள். காரணம் தங்கள் நாட்டில் தீவிரவாதத்தை தமிழகம்தான் வளர்த்துவிட்டது என்ற வன்மம் அவர்கள் மனதில் எந்நாளும் உண்டு போரின் போது, முன்பு ராணுவ தளபதி தமிழக ஈழ அரசியல்வாதிகள் பெரும் கோமாளிகள் என சொன்னது நினைவிருக்கலாம். ஜெயாவின் மரணத்திற்கு ராஜபக்சே பெரும் இரங்கல் அறிக்கை தெரிவித்திருந்தார், சீமான் கடும் துக்கத்தில் இருந்ததால் ஈழதாய்க்கு அவர் அஞ்சலி செலுத்தியதை கண்டுகொள்ளவில்லை இப்போது […]