பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்மையான ” பெரியம்மாவும்”, “சின்ன பெரியம்மாவும்”…

உண்மையான “பெரியம்மா” சரோஜா தேவி இதோ இருக்கின்றார், இன்றும் என்பார்மிங் செய்யபட்ட முகத்தோடு எம்ஜிஆர் புகழ் பாடிகொண்டிருக்கின்றார் இந்த “சின்ன பெரியம்மா” வெண்ணிற ஆடை நிர்மலா என்பவருக்காக‌ தமிழக மேல்சபையே கலைக்கபட்டதாம். நிர்மலா அமராத மேல்சபையில் எவருமே அமரகூடாது என அந்த எம்ஜிஆரா கோபத்தில் கலைத்தாராம்.. ஆக உண்மையான ” பெரியம்மாவும்”, “சின்ன பெரியம்மாவும்” , இங்கிருக்க, யாரெல்லாமோ அந்த மன்னனின் கட்சிக்கு வாரிசு என வருகின்றார்கள் இதற்குத்தான் சரோஜா தேவியும், நிர்மலாவும் ஒரு ரசிகர் மன்றம் […]

நீங்கள் கூடவா மிஸ்டர் நல்லகண்ணு?

பெரும் சிந்தனையாளர்களான ராஜாஜி, ம.பொ.சி போன்றோர்கள் கூட கலைஞர் பின்னாலும் எம்.ஜி.ஆர் பின்னாலும் சென்ற தமிழகத்தில் இன்று பலர் சசிகலாவினை ஆதரிப்பதில் என்ன இருக்கின்றது. அவர்கள் நிலை அது, அரசியலில் குதித்துவிட்டார்கள், கரையேற தெரியவில்லை அல்லது முடியவில்லை என்ன செய்வது? கிடைத்த கட்டையினையோ, பாறையினையோ பிடித்து வாழ்வினை காக்க வேண்டியதுதான் பெரும் திறமையானவர்கள் தமிழக அரசியலில் காலம் கடத்திகொண்டிருப்பது இப்படித்தான். ஆனால் தேசிய கட்சிகள் வித்தியாசமானவை, ஓரளவு திறமையும் நற்பெயரும் கொண்டவனை அது பயன்படுத்திகொள்கின்றது, தமிழக நிலை […]

செரீனாவை ஞாபகமிருக்கிறதா?…

எல்லோரும் ஒப்புகொண்டாகிவிட்டது, சின்ன அம்மா (சின்னம்மா இல்லையாம்) வந்து பதவியில் அமரவேண்டும் என கதறிகொண்டிருக்கின்றார்கள் பின் ஏன் தாமதம்? அவர் வந்து சொன்னதும் பதவி ஏற்பு வைபவம் நடக்கலாம், யார் அவர்? அவர் செரீனா, அந்த விமான பணிப்பெண் செரினா இது உறவுகள் எல்லாம் ஒன்றிணையும் நேரம், பழுத்த மரத்தில் பறவைகள் கூடும் காலம் அந்த பழைய பறவையும் வரலாம் அவருக்கு “குட்டி அம்மா” என்ன பட்டமும் கொடுக்கலாம் சின்ன அம்மா, சின்ன சின்னம்மா, குட்டி அம்மா […]

ஜெ மறைவிற்குப் பிறகு அரசியல் மாற்றங்கள்…

தமிழகத்தில் எந்த பொறுப்பிலுமே இல்லாத, எம் எல் ஏவினை விடுங்கள், ஒரு வார்டு கவுன்சிலர் பதவியில் கூட இல்லாத கட்சியின் வைகோ பிரதமரை சந்திக்கின்றார் சந்தித்து புயல்சேதம், ஜல்லிகட்டு, ராமேஸ்வர மீணவர் பிரச்சினை என பல கோரிக்கைகளை வைக்கின்றார் இந்த கோரிக்கைகளைத்தான் அவர் கோரினார் என சொல்வார்கள் அதனை நாம் அப்படியே நம்ப வேண்டும் சரி இவ்வளவு நாளும் வைகோ எங்கிருந்தார்? கடந்த 6 மாதமாக‌ வைகோ வானத்தில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தார், […]

போயஸ் கார்டனில் ஜெயா ஆவி …

https://youtu.be/s0iZvKahd4U போயஸ் கார்டனில் ஜெயா ஆவி நிலவுவதாக சர்ச்சை, மாந்த்ரீகம் செய்ய மலையாள மந்திரவாதிகள் வருவதாகவும் செய்திகள் நிறைவேறாத ஆசை உள்ளவர்கள் இறந்தால் அவர்கள் ஆவிகளாக அலைவார்கள் என்பது ஐதீகம் அப்படி ஜெயாவிற்கு இருந்த ஆசைகள் மிக அதிகம், பிரதமர், ஜனாதிபதி அதற்கு மேல் உலக தலைவர்கள் வரை ஆகும் ஆசையும் இருந்திருக்கலாம் திமுகவினை அழிக்கும் ஆசையும் இருந்தது எந்த அமைச்சரும் 5 வருடம் நிம்மதியாக பதவியில் இருக்க கூடாது என்ற ஆசையும் இருந்தது பின் எப்படி […]

சசிகலாவினை விமர்சித்தால் உடனே போலிசை விட்டு தூக்குமாம் ….

அதிமுக பற்றியோ, சசிகலாவை பற்றியோ சமூகவலைத்தளங்களில் யாராவது வதந்தி பரப்பினால் மற்றும் கிண்டல் மீம்ஸ்கள் பதிவேற்றினால் அவர்கள் மீது பொலிசார் மூலம் கடும் நடவடிகை எடுக்கப்படும் : அதிமுக தொழில்நுட்ப பிரிவு கட்சிக்கு தொழில்நுட்ப பிரிவு உண்டாம், அது முழு வேலையாக சமூக வலை தளங்களை கண்காணிக்குமாம் இவை எல்லாம் எதிர்கட்சி சதியாம், கட்சிக்காரன் எழுதும்போது எப்படி எதிர்கட்சி என்று யாரும் கேட்டுவிட கூடாது பிரபாகரனை ஆதரித்தால் மட்டும் அவன் தமிழுணர்வாளன் என்பது போல சசிகலாவினை ஆதரித்தால் […]

சிரியாவில் என்னதான் நடக்குது?

உலக அரசியல் எப்படி எல்லாம் அப்பாவி மக்களை கொல்லும் என்பதற்கு சிரியாவே பெரும் உதாரணம் பெரும் நாடுகளின் சண்டைக்கு நடுவில் அது அழிந்துகொண்டிருக்கின்றது, சிரிய மக்களின் கதறலையும், அவர்களின் வீடுகள் விமானங்களால் நொறுக்கபட்டு நடுவீதியில் விரட்டபடுவதையும் காண சகிக்கவில்லை ஒரு சிறிய நாடு, அதுவும் இனவாத அடையாளங்களை கொண்டநாடு தீவிரவாதத்திலும் அதன் எதிரொலியாக‌ வல்லரசுகளின் கையில் சிக்கிவிட்டால் என்னாகும் என்பதற்கு அதுவே உதாரணம் புடின் இரும்புபிடியினை விடுவதாக இல்லை, அமெரிக்கா இன்னும் முழுமையாக களம் இறங்கவில்லை ஒரு […]

உங்களில் யார் அடுத்த சின்னம்மா?

கட்சியின் பொதுசெயலாளர் யார்? என பலர் குழம்ப‌ எம் எதிர்பார்ப்பு அடுத்த சின்னம்மா யார்? என்பதிலே இருந்தது, காரணம் அக்கட்சியில் பொதுசெயலாளரை விட , இந்த “சின்ன” பதவியில் இருப்பவர்களுக்கே சக்தி அதிகம் இளவரசி, அவர் இவர் என நிறைய பேர் இருந்ததால் “உங்களில் யார் அடுத்த சின்னம்மா?” என கேட்கவேண்டும் போல் இருந்தது அவர்களே சொல்லிவிட்டார்கள் “சின்ன சின்னம்மா” என அடைமொழியோடு செல்லம்மா, பொன்னம்மா எல்லாம் இல்லை, சின்னமாவின் அடுத்த பதவி “சின்ன சின்னம்மா” இனி […]

வர்தா புயலுக்கு பின்னர்…..

ஒரு பக்கம் பன்னீர் விழுந்து விழுந்து சென்னையினை சீரமைக்கின்றார், இன்றிரவே சென்னை இயங்கும் என பாராட்டு பத்திரம் இன்னொரு பக்கம் சென்னை மீள பல வாரமாகும், மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை மீட்புபணி சரியில்லை, அத்தியாவசிய பொருள் தட்டுபாடு இன்னும் உண்மைநிலை வெளிகாட்டபடவில்லை என செய்திகள் வழக்கம்போல ஒன்றுமே புரியவில்லை… சென்னை செய்திகள் என்றாலே இப்பொழுதெல்லாம் மகா மர்மம்…. இப்போதைக்கு வர்தா புயல் தாக்கியது என்பதுமட்டும்தான் நம்பகமான செய்தி அப்படியே பன்னீர்செல்வம்தான் முதல்வர் என்பதனையும் நம்பலாம் சென்னையில் […]

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதியுள்ளாராம்..

ஜெயலலிதா யாருக்கோ உயில் எழுதி வைத்திருக்கின்றாராம், சம்பந்தபட்ட நபர் சென்று தன் அடையாளங்களை எல்லாம் சொன்னால் உடனே சொத்துக்கள் கிடைத்துவிடுமாம், இப்படி ஒரு செய்தி வருகின்றது இப்பொழுது என்ன நடக்கும்? சம்பந்தபட்டவர் சென்று தன் அடையாளத்தை உறுதி செய்தால்தானே வாரிசு ஆகும்? அப்படி ஒரு ஆள் இல்லை என்றால், சரி அப்படி ஒருவர் இருந்து என் சொத்துக்களை எல்லாம் முத்து ரஜினியாக கட்சிக்கு தாரை வார்க்கின்றேன் என சொல்லிவிட்டு காவி உடுத்தினால்? எதுவும் நடக்கலாம், செய்தி உண்மையானால், […]