பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரூ 2000 நோட்டு மற்றும் சில…..

  ஆயிரம் ஐநூறு நோட்டினை பதுக்குகின்றார்கள், கறுப்பு பணம் பெருகுகின்றது அதனால் அவை செல்லாது, உங்களிடம் இருந்தால் கொடுத்துவிட்டு புதுநோட்டு வாங்குங்கள் என மக்களை பாடாய் படுத்திறது அரசு பின் என்ன செய்தது? இதோ மொத்தமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டு, இது தொழில்நுட்பம் மிக்கது, பதுக்கினால் அதுவாக மோடி காதில் இருக்கும் இடம் சொல்லிவிடும் என ஏராள விளம்பரத்துடன் 2 ஆயிரம் நோட்டினை வெளியிட்டார்கள் வெளியிட்டு மூன்று வாரம் ஆகியிருக்கலாம், என்ன நடந்தது? மிக வசதியாக […]

லெஜ்ஜியன் ஹேக்கர்ஸ் : அப்போலோ தகவல்கள் கடத்தல்…

சென்னை அப்போலோ மருத்துவமனை கணினி விவரங்களை வசப்படுத்தியுள்ளோம் என‌ வாஷிங்டன் போஸ்டுக்கு ‘லெஜ்ஜியன்’ ஹேக்கர்ஸ் குழு பேட்டி லெஜ்ஜியன் குழுவோ, லெக்கின்ஸ் குழுவோ அந்த ரகசியத்தை படீரென்று சொன்னால்தான் என்ன? தமிழகத்திற்கு ரகசியத்தை சொல்லாமல் வாஷிங்டன் போஸ்ட்டுக்கு என்ன சொல்லிகொண்டிருக்கின்றீர்கள்? என்னமோ ரெட்டிக்கு மிகவும் சோதனையான காலம், சின்னம்மாவிற்கு சிக்கலான காலம் விரைவில் லெஜ்ஜியன் ஹேக்கர்ஸ் குழு உண்மை வெளியிடலாம் அல்லது சிகிச்சைக்காக ரெட்டி வசூலித்த மொத்த பணமும் ஹேக்கர்சுக்கு செல்லலாம் இனி என்ன நடக்கும்? அறிவாலயத்தின் […]

குடி வீட்டை , நாட்டை கெடுக்கும்..

குடி குடும்பத்தை கெடுக்கும் என்பார்கள், அது ஒரு மாநிலத்தை கெடுத்திருக்கின்றது மதுகடைகளை கலைஞர் திறந்து பல சர்ச்சைகளை தொடங்கினார், திமுக மீது ஊழல் மற்றும் சாராயகடைகளை திறந்துவிட்டார்கள் என்ற குற்றசாட்டை வைத்து ஊர்வலம் எல்லாம் சென்று கட்சி தொடங்கி நடத்தினார் எம்ஜிஆர் பின்னாளில் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த எம்ஜிஆருக்கும் நிதி சிக்கல் தொடங்கிற்று, மதுகடைகள் நடத்தும் முடிவுக்கு வந்தார் தாய்குலங்கள் முகம் சுழித்தன, நாயகனின் பிராதான வோட்டு வங்கியே தாய்குலம் அல்லவா?, ஒரு வசீகரமான அதிமுக பெண் […]

நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொன்னாருங்க …..

நாஸ்ட்ராடாமஸ் அப்படி சொல்லியிருக்கின்றார், இப்படி சொல்லியிருக்கின்றார் ஜெயா பற்றி சொல்லியிருக்கின்றார் என ஏக அழிச்சாட்டியம் அப்படி ஒருவர் சுமார் 500 ஆண்டுகாலம் முன்பு இருந்தார், கிறிஸ்தவர் ஆனால் ஜோசியர், ஜாதகம் எல்லாம் அவருக்கு அத்துபடி. கண்ணில் பட்ட மனிதர் மட்டுமல்ல, ஆடு, மாடு, பன்றி உட்பட எல்லோரின் ஜாதகமும் கணித்தார் அதன் பின் உலகின் ஜாதகம் பற்றி எழுதினார், அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்கா இல்லை, போப் ஆண்டவர்தான் உலக சக்கரவர்த்தி பின்னாளில் உலகில் நிகழும் மாற்றம் […]

ரத்தத்தின் ரத்தங்கள் இப்பொழுது பித்தத்தின் பித்தங்களாக….

உண்மையில் ” புரட்சி தலைவி” எனும் பட்டம் வி.என் ஜானகிக்குத்தான் சென்றிருக்க வேண்டும், “புரட்சி தலைவரின்” அதிகார்வ பூர்வ மனைவிதானே “புரட்சி தலைவியாக” இருந்திருக்க வேண்டும், திருமணம் முறையாக நடக்கவில்லை என்பதால் விட்டுவிட்டார்களோ? அந்த மகோ.ராமசந்திரன் எதனைத்தான் உருப்படியாக செய்தார்? சரி இது புரட்சி சமாச்சாரம் ஜெயலலிதாவிற்கு திருமணம் இல்லை, கணவன் இல்லை. அதனால் அம்மா என அவரை அழைக்கும்பொழுது “அப்பா” என ஒருவரை அழைக்கும் அவசியம் வரவில்லை இனி சசிகலா” சின்னம்மா” என்றால், நான் தான் […]

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 10 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள் உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார் அவர் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று […]

பரிதாப வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றார் ஜெயலலிதா….

ஜெயலலிதா சொத்துகுவிப்பில் கூட இல்லாத மர்மம் எல்லாம் அவரின் மரணத்தில் கிளம்புகின்றது மரணம் நேரம் அறிவிக்கபட்ட குழப்பம் என்ன? 75 நாள் ஒரு படம் கூட வராத மர்மம் என்ன? என்பதெல்லாம் கடந்து, அவரின் கைரேகையில் மர்மம், என்பார்மிங் மர்மம் என பல வந்துகொண்டிருக்கின்றன‌ இதெல்லாம் ஒரு படி மேலே சென்று ஜெயலலிதாவின் கால்கள் எங்கே? என ஒரு கும்பல் கிளம்பியிருக்கின்றது தினமும் வணங்கிய கால்கள் அல்லவா? அவர்களில் யாரேனும் ஆற்றாமையில் “எங்கே அம்மா அந்த கால்கள்” […]

சென்னை விரைவில் இயல்பாகட்டும்….

அம்மா உத்தரவுபடி மழை பெய்ததால் நன்றி என முன்பொரு காலத்தில் பேனர் வைத்த அந்த கலெக்டர் எங்கிருக்கின்றார் என தெரியவில்லை, ஆனால் அவரை தேடி வர்தா புயல் வந்திருக்கலாம். அம்மா மறைந்த துயரால் வங்ககடல் கொந்தளித்தது என இதுவரை யாரும் சொல்லவில்லை, சொல்லாமல் இருப்பது வரை அவனுக்கு நல்லது வர்தா புயலுக்கு முன்பு மும்பையினை மிரட்டிய தமிழர் “வர்தா பாய்” (வரதராஜ முதலியார்) பெயரினை வைத்தார்களோ என்னமோ, அதே வேகம். அதே மூர்க்கம் ஆடி தீர்த்திருக்கின்றது புயல் […]

சென்னை 600028 : 2 வது இன்னிங்ஸ் : திரை விமர்சனம்

  சென்னை 600028 என்றொரு படம் வந்திருக்கின்றது, வழக்கமான வெங்கட் பிரபு படம்தான், ஆனால் இந்த இரண்டாம் பாகம் படம் பல நினைவுகளை மனதில் கிளறிவிட்டு சென்றது பம்பரம், கோலி, இன்னும் ஏராளமான கிராம விளையாட்டுக்களை விழுங்கி கிரிக்கெட் கிராமங்களில் வளர ஆரம்பித்த 1980களில் வளர்ந்தவர்களுக்கு அப்படம் ரசிக்கும் சாதாரண ரப்பர் பந்தையும், தென்னை மட்டையினையும் கொண்டு விளையாடி, பக்கத்து ஊர்களுடன் பகையாட்டாம் ஆடாத அக்காலத்தவர்கள் மிக குறைவு, கபடியின் ஆக்ரோஷத்தினை கிரிக்கெட் அப்படியே உள்வாங்கியிருந்தது கபில்தேவ் […]

சின்னம்மா வந்து நாற்காலியில.. இன்னும் பிற…

செங்கோட்டையன், தம்பிதுரை, சரஸ்வதி எல்லாம் முன்மொழிந்தாகிவிட்டது. “சின்னம்மாவா வந்து நாற்காலியில அமரணும்னு காத்துகிட்டிருக்க்கோம்” என நாஞ்சில் சம்பத்ம் சொல்லிகொண்டிருக்கின்றாராம் “இனி என்னை டிரம்ப் பார்ட்டில கூப்புட்டாக…சீன கம்யூனிஸ்ட் கட்சியில கூப்பிட்டாக, புடின் கட்சில கூப்பிட்டாக அதனையெல்லாம் விட்டுவிட்டு என் கெரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்….” என சசிகலா அறிக்கை விட்டு பொறுப்பேற்பதுதான் பாக்கி கார்த்திகை தினமாம், பொதுவாக முருக பக்தர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் அவரை விட, அதாவது உலெகல்லாம் சுற்றி பழம் பெருவதை விட, அம்மா அழுக்கிலிருந்து […]