பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அய்யகோ, பாஜக கொடுமை பாரீர்னு புலம்புவார்…

அய்யகோ இனி பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆளும், பலர் கவலை அச்சம் தமிழகம் ஒரு வித்தியாசமான மாநிலம், இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்றது அல்ல‌ 1970களில் அது திமுகவின் விஸ்வரூபத்தில் சிக்கி இருந்தது, காமராஜர் கக்கன் போன்றவர்களை கூட தூக்கி எறிந்த விஸ்வரூப வெற்றி அது அதன் பின் கொஞ்ச நாளையிலே அது உடைக்கபட்டதும் அதன் பின் டெல்லியின் கைப்பாவையாக ஒரு கட்சி ஆனது முதல் தமிழகத்தில் டெல்லி ஆதிக்கமே நடந்தது திமுகவும் பின் டெல்லி […]

ஜெயா வாழும்பொழுது ….

ஜெயா வாழும்பொழுது எங்கள் அம்மாவினை அமெரிக்கா வணங்கியது, ரஷ்யா தாலாட்டியது, சீனா தலைசீவி விட்டது, எங்கள் உலக நாயகியே என கத்தி பேனர் வைத்து, பாட்டுபாடி இல்லாத அழிச்சாட்டியம் செய்தார்கள் நேற்று உண்மையில் உலகெல்லாம் இருந்து பெரும் நாடுகளிடமிருந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி வந்தது பாகிஸ்தான், இலங்கை, இஸ்ரேல், சிங்கப்பூர் என பல நாடுகள் அந்த பெண் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர் , உலகளாவிய உன்னத பெண் அரசியல்வாதிகள்டமிருந்தும் வாழ்த்து வந்தது ஒரு பயலும் அதனை சொல்லி அழுததாக […]

சாவிலும் சர்ச்சையா?

என்ன ராசியோ தெரியவில்லை எம்ஜிஆரின் அடியொற்றி, அவர் வாழ்ந்தது போல வாழ்ந்து, அவரை போலவே தீரா புகழுடன் அமரர் ஆனார் ஜெயலலிதா ஆனால் சாவில் சர்ச்சை என கிளம்புகின்றார்கள் எம்ஜிஆருக்கும் இப்படித்தான் கிளம்பினார்கள், அதிகாலை எப்படி செத்தார்? ஏன் இரவு மோர் குடித்தார், உடல் நீலநிறமானதா? என பல சர்ச்சைகள் அன்று வெடித்தன‌ அவர் நோயுற்று அமெரிக்கா எல்லாம் சிகிச்சை பெற்று, நோயுடன் போராடி ஒரு அதிகாலை மாரடைப்பில் இறந்தார் ஜெயாவிற்கும் கிட்டதட்ட அதே நிலை, 5 […]

பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார்

சோகத்தின் மேல் சோகம் சூழும் நேரம் பத்திரிகையாளர் சோ ராமசாமி காலமானார் நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை அவர்தான் தொடங்கி வைத்தார் நல்ல அறிவாளியும், சிந்தனையாளரும், தொலைநோக்கு பார்வையும் எல்லாவற்றிற்கும் மேல் மிகுந்த தைரியமும் கொண்ட எழுத்தாளர் அவர் திமுக புரட்சி காலம், மிசா காலம், புலிகள் கொலைக்கார காலம் என எல்லாவற்றிலும் அவரின் பேனா சீறிகொண்டே இருந்தது எல்லாவற்றையும் விட மேலாக வணங்க வேண்டியது அவரின் […]

அம்மா விதைக்கப்பட்டார்…

https://youtu.be/_-FevnkOIyk  எதற்கு வைரமுத்து இன்று கவிதை எழுதினார்? அன்றே இருவரில் அற்புதமாக எழுதிவிட்டார் “எள்ளின் நுனி அளவும் இப்போது கசப்பில்லை புல்லின் நுனி அளவும் இப்போது பகையில்லை மரணத்தை போல மனம் வெறுக்க மருந்தில்லை” இதோ அடக்கம் செய்ய கொண்டு செல்கின்றார்கள் அந்த ரோஜாப்பூ முகம் நிரந்தரமாக மண்மூடும் நேரம் ஆயிரம் சர்ச்சைகள் அவர் மீது இருந்தாலும் மனம் வெடித்து கிளம்பும் கண்ணீரை மறைக்க முடியவில்லை எம்ஜிஆர் புதைக்கபடும்பொழுது டிவியில் பார்த்த கலைஞர் தான் குலுங்கி அழுததாக […]

ராஜாஜி அரங்கில் அம்மா ….

76 நாட்களுக்கு முன் உயிரோடு பார்த்தவரை இன்று உடலாக பார்க்கும் போது நெஞ்சம் கலங்கத்தான் செய்கிறது   ஏதோ விஷேஷ வீட்டிற்கு வந்தது போல மன்னார்குடி கும்பல் கலகலப்பாக எல்லோருக்கும் வரவேற்பும் நன்றியும் சொல்லிகொண்டிருக்கின்றது எந்த முகத்திலும் கவலையின் ரேகைகள் இல்லை சொந்த குடும்பம் என்றால் நிலமை இவ்வளவு மோசமாக இருக்காது, இதுவரை நடந்ததை விட இதுதான் மகா சோகம் அங்கு ஒரு சடலம் இருப்பதே அவர்களுக்கு சில நேரங்களில் மறந்துவிடுகின்றது ஒருமுறை எழுந்து காரி துப்பிவிட்டு […]

என்னதான் நடக்கும்?

கொஞ்சபேர் கிளம்பிவிட்டான், அய்யகோ இனி திராவிடம் வீழும், வடக்கத்திய கட்சிகள் தமிழ்நாட்டை விழுங்கும், அய்யகோ என ஒரே ஒப்பாரி பாஜகவிடமும் காங்கிரசிடமும் கவனமாக இருந்து அவர்களை விரட்டி தமிழக நலன் காக்க வேண்டுமாம் இவ்வளவு நாளும் திராவிட கட்சிகள் ஆண்டு என்ன நலன் காத்தீர்கள்? அணுவுலைகள் வந்தன, ஆபத்தான பல திட்டங்கள் வந்தன இன்னும் பல உரிமைகள் சர்ச்சைகுள்ளாயின மணல் கொள்ளையும், கிரானைட கொள்ளையும், மலையடிவார நில கொள்ளையும் நடத்துவது யார்? எல்லாம் திராவிடனே இங்கு ஆண்டுகொண்டிருப்பது […]

சந்தியா மகளுக்கு இந்தியா அழுகின்றது…

எத்தனையோ தலைவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தபட்ட ராஜாஜி ஹால் ஜெயலலிதாவினையும் சுமந்து நிற்கின்றது முதன் முதலாக கண்மூடிய ஜெயலலிதாவினை பார்க்கும்பொழுது மனம் கனக்கத்தான் செய்கின்றது, அவரின் பெரும் அடையாளம் நம்பிக்கை மின்னும் அந்த கண்கள், அது மூடிகிடக்கும் கொடுமை காண முடியவில்லை உத்தரவிட்ட வாய் உலர்ந்திருக்கின்றது கட்சிக்கொடிக்கு பதிலாய் தேசியகொடி போர்த்தபட்டிருப்பது அவரின் நாட்டுபற்றிற்கு பெரும் அடையாளம், (அண்ணா எம்ஜிஆருக்கு எல்லாம் கட்சி கொடியே போர்த்தபட்டிருந்தது..) அருகில் சசிகலாவும் அவரது குடும்பத்தாருமே வளைய நிற்கின்றார்கள், ஓரமாக அவர் […]

பன்னீர் செல்வம் : புதிய தமிழக முதல்வர்

நள்ளிரவில் பதவியேற்ற பன்னீர் செல்வம் அரசு அவசரமாக செய்ய வேண்டியது மத்திய அரசிடம் இருந்து பாதுகாப்பு படைகளை கோருவது இந்த பெரும் மக்கள் கூட்டத்தை சமாளிக்க மாநில போலிசால் முடியுமா? என்பது சந்தேகமே. நள்ளிரவிலே இந்த கூட்டமென்றால் பகலில் தாங்காது எத்தனை கோடி மக்களின் அபிமானம் பெற்றவராக இருந்திருக்கின்றார் என்பதை பார்க்கும்பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது ஜே பற்றி கவனித்து வந்தால் ஒன்று புரியும், பெங்களூர் சிறைவாசத்தின் பின் அவர் பெரிதும் தன்னை வெளிகாட்டவில்லை, ஓதுங்கியே இருந்தார் […]

ஜெயலலிதா : ஒரு சகாப்தம்

தன்னபிக்கைக்கும், போராட்ட குணத்திற்கும் பெரும் அடையாளமாய் விளங்கிய ஜெயலலிதா இனி இல்லை மனம் நம்ப மறுக்கின்றது, ஏற்றுகொள்ள முடியவில்லை. ஆனால் ஏற்றுகொண்டுதான் ஆகவேண்டும் எந்த ராஜாஜி ஹாலில் அவருக்கு சவால் விடபட்டதோ,எங்கு அவமானபடுத்தபட்டாரோ, அதே ராஜாஜி ஹாலில் தன் வெற்றியினை பதித்துவிட்டு அமராராக சயனனமாகிவிட்டார் பெரும் மக்கள் திரட்சி, காவல்துறை திணறத்தான் செய்கிறது, ஏதேனும் மத்திய படைகள் வராமல் இன்றைய தினம் அமைதியாக கழிய வாய்ப்பில்லை மைசூரில் பிறந்த குழந்தை எங்கெல்லாமோ சுற்றி, பின்னாளில் அரசியலுக்கு வந்து […]