பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரே தாஜ்மஹால்..ஒரே நிலா..ஒரே குஷ்பூ

நண்பர் Vengadesh Mothilal இதற்காக அவர்களை கண்டித்து உங்கள் உடைவாளை உருவிக்கொண்டு சீற வேண்டாம், தீ குளிக்கவும் வேண்டாம் குஷ்பூவிற்கு ஆயிரம் எதிரிகள் உண்டு அதனின்று அவரை காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உண்டு என உணர்ந்தால் போதும். Kushboo Guardians added 3 new photos. பதிவு…. டிவி பஞ்சாயத்து தேவையில்லை, நடிகைகள் கலையினை மட்டும் செய்ய வேண்டும் , நடிகை ஸ்ரிப்பியா, வெட்கக்கேடான நிகழ்ச்சி; குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை ரஞ்சனி இப்படியாக சில […]

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும்..

கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள், அப்படி நடந்திருப்பது மூவேந்தர் மூவிஸ் மதன் என்பவருக்கு மனிதரின் தொடர்புகளும், அவரின் நடவடிக்கைகள் விசாரணையும் பெரும் பரபரப்பானவை, சினிமா உலகின் பெரும் கைகள், கழுத்துகள் வரை அது செல்கின்றது இன்றைய பணம் மாற்றுதல், தங்க கட்டுப்பாடு என பெரும் சர்ச்சைகள் இருப்பதால் அன்னாரின் சாகசங்களும் பராக்கிரமங்களும் அதிகம் பேசபடுவதில்லை இதுவே மற்ற நாட்கள் என்றால் இந்நேரம் இன்னொரு கன்னட பிரசாத் எனும் அளவிற்கு போட்டு தாக்கி இருப்பார்கள், உச்சிமுடி நடிகை […]

எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை அளிக்கின்றதா?

மழை பெய்தாலே பள்ளி கல்லூரிகளை அடைக்கும் அளவிற்கு கட்டமைப்புகள் உள்ள நாட்டில்தான் மின் அட்டை, போன் பரிவர்த்தனை என பேசிகொள்கின்றார்கள் மாடிவீட்டுகாரன் போல ஓலை குடிசைக்காரனும் போன் வைத்துகொண்டால் மட்டும் சரி சமமானவர்கள் ஆகிவிட முடியாது எத்தனை பெரிய வெள்ளத்திலும் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் வாழும் வகையினை மற்ற நாடுகள் செய்திருக்கின்றன, மழை அவர்களின் அன்றாட நிகழ்வு எனினும் ஒரு தெருவோர நாய் கூட பாதிக்கபடுவதில்லை உலகில் கொடும் புயல் தவிர எந்த நாடாவது பருவமழைக்கு விடுமுறை […]

விஜய் மல்லையா, விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார்ககள்…

விஜய் மல்லையா கடன் வாங்கினார், விஜய் பட தயாரிப்பாளர் கடன் வாங்கினார் என வங்கிகள் காட்டும் நஷ்ட கணக்கு ஏராளம் ஆனால் இந்த வங்கிகள் மூலம்தான் மக்கள் கணக்கு வழக்குகளை வைத்துகொள்ளவேண்டுமாம், பண பரிவர்த்தனைகள் எல்லாம் வங்கிகள் மூலமே நடக்க வேண்டுமாம் அதாவது மக்கள் பணமெல்லாம் வங்கியிலே இருக்கவேண்டும், வங்கி யாருக்கும் பணம் கொடுக்கலாம், நன்கொடையாக, வாரா கடனாக கொடுக்கலாம், வட்டி வசூலிக்கலாம், சம்பாதிக்கலாம் அல்லது வங்கி மூலமாக பெரும் தொழிலதிபர்கள் பொதுமக்கள் பணத்தினை ஏப்பம் விடலாம் […]

சாமான்யர்கள் நாம்….

மோடி முடிவால் சாமானியர்களுக்கு மிகப் பெரிய பலன்: முகேஷ் அம்பானி நம்பிக்கை அட இவரையும் இவர் போன்றவர்களையும் மிக சாமனியராக நினைத்துகொண்டார் போல, பெரும் தன்னடக்கம்தான். இந்தியாவில் இவரே சாமானியர் என்றால், அடிதட்டு மக்கள் எல்லாம் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கீழேதான் புதிய வர்க்க அகராதி எழுதபட்டுகொண்டிருக்கின்றது. கலைந்திடும் கனவுகள்.. கண்ணீர் சிந்தும் நினைவுகள்.. இப்படியும் ஒரு காலம் இருந்தது   நான் இனி முன்பு போல பேச மாட்டேன்: டி.ராஜேந்தர் அப்படியே ஆடவும் மாட்டேன் என சொல்லுங்கள்.

மாவோ … நமோ …

  என்னதான் பெரும் புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தாலும் திபெத்தினை தவிர மாவோவால் பெரும் வெற்றி பெறவில்லை. அருணாசல பிரதேசத்தை தன்னோடு இணைக்கும் முயற்சி அவருக்கு தோல்வி சோவியத்துடன் எல்லை தகறாறிலும் பின் வாங்கினார், கொரியபோரும் முழு வெற்றி என சொல்லமுடியாது தன் பெயர் சீனாவில் சரிவதை கண்ட மாவோ அதிரடியாக மக்கள் மீது பாய்ந்தார். சில காரியங்களை செய்தார், அதாவது நகரங்களில் சுற்றிகொண்டிருந்தவர்களிடம் மாவோவின் படையினர் உனது பூர்வீகம் எது என்பார்கள், அந்த சீனர் ஒரு […]

பண கட்டுப்பாட்டினை தொடர்ந்து தங்க கட்டுப்பாடு

பண கட்டுப்பாட்டினை தொடர்ந்து தங்க கட்டுப்பாடும் அறிவித்துவிட்டார்கள், ஒரு பெண் 500 கிராம் வைத்துகொள்ளலாமாம், ஒரு ஆண் 100 கிராம் வைத்துகொள்ளலாம், அதற்கு மேல் வைத்திருந்தால் அரசு சும்மா இருக்காதாம் இவர்களுக்கு என்ன ஆயிற்று என தெரியவில்லை, ஒரு மாதிரியாக அறிவித்துகொண்டே இருக்கின்றார்கள். அடுத்த குறி நிச்சயம் நிலமாக இருக்கும், அது இந்திரா காலத்திலே வந்ததுதான் எனினும் இவர்கள் எப்படி அறிவிப்பார்கள் ஒருவனுக்கு 1 செண்ட் நிலம் போதும், 4 பேர் உள்ள குடும்பம் 3 அறை […]

பாபிலோனா பாட்டி மனு , நாசர் வேதனை இன்னும் பிற…

ந‌டிகை பாபிலோனா மந்திரவாதியிடம் சிக்கியிருக்கின்றார், அவரை மீட்க வேண்டும் : போலீஸ் கமிஷனரிடம் பாட்டி மனு அதே நேரம் பாபிலோனா என் கணவர் மந்திரவாதி அல்ல என பதில் அறிக்கை கொடுத்திருக்கின்றார் ஆக எவனோ ஒரு மந்திரவாதி பாபிலோனாவுக்கு அனுப்பிய ஆவி, வேறு ஏதோ பெண்ணை கடத்தியிருக்கின்றது. ஆவி சென்ற நேரம் பாபிலோனா மேக்கப் இல்லாமல் இருந்திருக்கலாம், அதனால் ஆவி குழம்பி திரும்பி வேறு எங்கோ கடத்த சென்றிருக்கலாம். 400-க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி […]

மக்கள் பாவலர் இன்குலாப்

பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்திற்கு பின் மக்கள் கவிஞராய் வாழ்ந்த கவிஞர் இன்குலாப் மறைந்துவிட்டாராம் சாக வேண்டிய எத்தனையோ இம்சை கவிஞர்கள், நவீனத்துவ கவிஞர்கள் அப்படி சொல்லிகொண்டிருப்பவர்கள் உயிரோடு இருக்க, ம‌க்களுக்காக எளிய கவிதைகளை உணர்ச்சியாய் சொன்ன கவிஞன் செத்துவிட்டாராம் சாவு அவரின் உடலுக்கே அன்றி அவரின் படைப்புகளுக்கு அல்ல‌ பட்டுகோட்டையார் போலவே மானிடத்தை நேசித்த ஒரு பெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

தோழர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் மறைவு.

தோழர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் மறைவு. ஒரு நல்ல சமூக போராளிக்கு, சம்பாதிக்க தெரியா அரசியல்வாதிக்கு மனைவியாய் வாழ்வது ஒரு பெரும் தியாகம் அவ்வகையில் அந்த மகராசி இந்த சமூகத்திற்காய் பாடுபட்ட ஒருவரை இதுகாலம் வரை காத்து பெரும் சேவையினை தமிழக மக்களுக்கு செய்திருக்கின்றார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின் அல்ல, அவனின் தியாக வாழ்விற்கு பின்னும் ஒரு பெண் நிச்சயம் உண்டு கஸ்தூரிபாய், கமலா நேரு, நாகம்மை எல்லாம் அவ்வகை, நிச்சயம் ரஞ்சிதம் […]