பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கையில் கருணா கைது

இலங்கையில் கருணா கைது செய்யபட்டிருப்பது ஒருவிதமான பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது, விஷயம் பல கோணங்களுக்கு செல்கிறது பிரபாகரனின் மெய்காப்பளராகவும் டாப் வரிசை தளபதியாகவும் இருந்தவர் கருணா அம்மான். இயற்பெயர் விநாயக மூர்த்தி முரளிதரன் , இயக்க பெயர் கருணா அம்மான் (அம்மான் என்றால் தமிழில் மாமன் என்றொரு பொருளில் வரும் உறவு முறை, அங்கு கருணா அம்மான், பொட்டு அம்மான் என பல அம்மான்கள் உண்டு, அதனால்தான் நாம் சீமான் அம்மான் என்பவரை அங்கிள் சைமன் என அழைக்கின்றோம்) […]

நாடா புயல் வருது….

ஓடி வருது நாடா புயல்  தமிழகத்தை தாக்க வருகின்றது நாடா எனும் பெரும் புயல், எப்படி எதிர்கொள்வது என எல்லோரும் சிந்தித்துகொண்டிருக்க நண்பர் Babu Rao அவர்கள், புயலால் நயன் தாராவிற்கு ஏதும் ஆகிவிட கூடாது, என கடும் கவலையில் இருக்கின்றார். கடும் பிரார்த்தனை நண்பரே கடந்தமுறை வெள்ளம் வரும்பொழுது குஷ்பூவிற்கு ஏதும் ஆகிவிடகூடாது என்ற எமது கடும் பிரார்த்தனை பலித்தது போல உங்கள் பிரார்த்தனையும் பலிக்கட்டும். நாம் இப்பொழுதும் , எப்பொழுதும், என்றென்றும் பிரார்த்திப்பது போல, […]

மருத்துவமனையில் பிரபலங்கள்…

முதல்வர் அப்பல்லோவிலும், அவரின் குருநாதர் சோ ராமசாமியும் அப்பல்லோவில் அனுமதிக்கபட்டுள்ளார் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். கலைஞர் கருணாநிதி நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌ நாட்டினை ஆட்டிவைக்க அவர்களுக்கொரு காலம் இருந்தது என்றாலும் மருத்துவர் கைகளில் விழவும் ஒரு காலம் இருக்கின்றது மருத்துவமனையில் இருக்கும் இந்த பிரபலங்களின் மனநிலை எப்படி இருக்கும்? ஆட்சியும் அதிகாரமும் திரும்ப வேண்டும், கண்டிப்பாய் வேண்டும் என்றா இருக்கும்? நலம் பெற்று திரும்பினால் போதும் என்றுதான் கெஞ்சிகொண்டிருக்கும். ஆண்ட […]

காதலிக்காக தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன்

காதலிக்கு ரூ.2 லட்சம் செலவு செய்ததால் ஏற்பட்ட தகராறில் தாய், தங்கை, தந்தையினை கொன்ற மகன், திருபத்தூர் அருகே பரிதாப‌ சம்பவம் இவனை எல்லாம் ஏன் குழந்தை திருடும் கும்பல் பிறந்த‌ அன்றே தூக்கவில்லை, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் ஏன் கடத்தவில்லை? காதலிக்காக கொலை செய்திருக்கின்றார், அதுவும் பெற்றவர்களையும், உடன் பிறந்தவர்களையும். இனி என்னாகும்? கொஞ்சநாளில் அப்பெண் இன்னொருவரை திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடுவார். இவரோ குடும்பத்தை அழித்துவிட்டு, தானும் அழிந்து ஜெயிலில் செட்டிலாகிவிட்டார் […]

மோடி அரசு விரைவில் பாடம் படிக்கலாம்…

“ஒரு நாடு சரியாக வளராமல் அதன் நிர்வாகத்தில் மாற்றம் செய்தால் சோவியத் போல சிதறும், அதன் அடிப்படைகளை மிக வலுவானதாக செய்துவிட்டே மாற்றங்களை செய்யவேண்டும், அல்லாவிட்டால் குழப்பங்களும் மக்களிடம் வெறுப்புமே மிஞ்சும்” : முன்னாள் சீன அதிபர் டெங் சியோ பிங் அதாவது வளர்ச்சி அடைந்த நாடுகளின் செயல்பாட்டினை வசதிகுறைந்த நாடுகள் முயற்சிக்க கூடாது, எல்லா வசதியும் பெற்றபின்பே சிக்கலான பிரச்சினைகளை கையில் எடுக்க வேண்டும் மோடி அரசு இதனைத்தான் செய்ய தவறியது கையிலும், பர்சிலும், சுருக்கு […]

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் – உச்சநீதிமன்றம் உத்தரவு எல்லா நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் தினமும் தேசிய கீதம் பாடுகின்றார்களா? இல்லையா? என தெரியாது, இனி தியேட்டரில் கட்டாயமாக‌ படிக்க வேண்டுமாம், எல்லா தொலைகாட்சி, வானொலி நிலையங்கள் தினமும் தேசிய கீதத்தை கண்டிப்பாக ஒளிபரப்ப சட்டம் இருப்பதாக தெரியவில்லை. அது ஏன் திரையரங்குகளில் மட்டும், அங்கு இருப்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களோ? என்னவோ இனி திருட்டு விசிடியில் தேசிய கீதம் வந்தால் உள்நாட்டில் சுட்டது, வரவில்லை என்றால் வெளிநாட்டில் […]

காஸ்ட்ரோவின் புலிபார்வை இப்படி இருக்க‌

பிடல் காஸ்ட்ரோ பெரும் போராளி, போராடி புரட்சி செய்து ஆட்சியினை பிடித்தவர்,மக்கள் நலம் காத்த வீரன் ஆனால் அவரது கவனம் எல்லாம் வித்தியாசமானது, யார் போராளி? யார் கட்டபஞ்சாயத்து கும்பல் என்பதில் கவனமாக இருந்தார். இந்தியா அவருக்கு பிடித்தமான நாடு, சே குவாரேவினை கியூப பிரதிநியாக இந்தியாவிற்கு அனுப்பியவர் அவர், இது இன்னொரு பக்கம் ஆனால் ஒரு இடத்திலும் புலிகளையோ அதன் தறுதலை போராட்டங்களையோ அவர் ஆதரித்ததாக ஒரு செய்தியும் இல்லை, ஒருபடி மேலே சென்று 2006ல் […]

கச்சதீவு அந்தோணியார் கோவில்

கச்சதீவு அந்தோணியார் கோவிலில் தமிழக உரிமை புறக்கணிக்க படுகின்றது பெரும் சர்ச்சை அந்தோணியார் என்பவர் போர்ச்சுக்கலில் வாழ்ந்த கிறிஸ்தவ மகான், ஆபத்தான கடல்வழி பயணத்தை மேற்கொண்ட அக்கால போர்த்துகீசியர் எல்லாம் அவரையே தங்கள் கடல் பயண பாதுகாப்பு தெய்வமாக கொண்டிருந்தனர் வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு பத்திரமாக வந்தபின் அந்த நம்பிக்கை கூடிற்று, தமிழக கடற்பரப்பிலும் வட இலங்கையிலும் போர்த்துகீசியர் ஆண்ட காலத்தில் அந்த நம்பிக்கை இங்கும் வந்தது, கடலோடும் மீணவர்களின் தெய்வமாக மாறிப்போனார் அந்தோணியார் போர்த்துகீசியர் சென்றபின்னும் இலங்கை, […]

காஸ்ட்ரோவின் வாழ்வும், மரணமும் பெருமைப்டதக்கது

     முதற்படம் புலிகள், அடுத்தபடம் பூனைகள்  பிடல் காஸ்ட்ரோ மறைந்ததிலிருந்து உலகின் பார்வை கியூபா மீது குவிந்திருக்கின்றது காரணம் மற்ற தலைவர்கள் மறைவதற்கும், அமெரிக்க எதிர்ப்பு தலைவர்கள் மறைவதற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு செல்வசெழிப்பாக இருந்த ஈராகும், லிபியாவும் இன்று சுடுகாடாய் கிடக்கின்றன, ஓரளவு எழும்பி வந்த வெனிசுலாவும் நாசமாய் சீரழிந்து கிடக்கின்றது இவைகள் மூவற்றிற்கும் உள்ள ஒற்றுமை இவற்றின் முன்னாள் ஆட்சியாளர்களான சதாம், கடாபி, சாவேஸ் மூவரும் அமெரிக்க எதிர்ப்பார்ளர்கள், அவர்கள் வீழ்ந்த பின் […]

என்.எஸ் கிருஷ்னன் : ஒரு நினைவாஞ்சலி

தோற்றம் : 29-11-1908    ::   மறைவு : 30-08-1957 இன்று என்.எஸ்.கே பிறந்த நாள் மனிதர் சிரித்து சிந்திக்க வைக்கவே அவதரித்தவர், நாகர்கோவில் கொடுத்த மகா கலைஞர்களில் என்றும் முதன்மையானவர் நிறைய எழுதியாகிவிட்டது கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார் பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி […]