பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடியை குற்றம் சொல்பவன், உலக நாடுகளை காணுதல் நல்லது

மோடியின் நடவடிக்கையினை குற்றம் சொல்பவன் எல்லாம் உலக நாடுகளை காணுதல் நல்லது. ஐரோப்பிய நாடுகளில் வரி என்ன? அமெரிக்காவில் வரி என்ன? அரபு நாடுகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு, இஷ்டம் போல எண்ணெய் பணத்தில் ஆடினார்கள், இன்று கச்சா எண்ணெய் விழுந்ததும் மலங்க விழிக்கின்றார்கள். வரி வசூலிப்பின் முறையான நிர்வாகமும் எவ்வளவு அவசியம் என அறிந்து பல புதிய வரிகளை விதிக்க தொடங்கிவிட்டார்கள் ஒவ்வொரு நாடும் வரி எனும் கொடுமையில் மிக கறாறாக இருந்து மக்களை கசக்கி […]

டொனால்ட் ட்ரம்ப் -அதிபதியான கதை (காணொளிகள்)

தங்கத்தால் ஆன சொந்த மாளிகை உட்பட 50 ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டில் பணம் சம்பாதித்துவிட்டு ஆட்சிக்கு வருகின்றார்கள், இங்கு ஒன்றுமில்லாமல் ஆட்சிக்கு வந்து டிரம்ப் அளவிற்கு சேர்த்துவிடுகின்றார்கள் அமெரிக்க நிலை அப்படி, நமது தலையெழுத்து இப்படி. https://youtu.be/5HuaZkA-ci8 டொனால்ட் ட் ரம்ப்  : சுய விவரம் https://youtu.be/0FdCOpUbKR0 Making of a President Part 1: Donald Trump’s New York City Childhood https://youtu.be/yKSEMUSrsF4 Making […]

5000 நண்பர்களை தாண்டி …

நட்பு பட்டியல் 5000 நண்பர்களை தாண்டி செல்கின்றது, ஒரு சாமான்யனுக்கு விரைவில் இத்தனை நண்பர்கள் சேர்வது எம்மை பொறுத்தவரை பெரும் விஷயம் பின்னால் வரும் நண்பர்கள் இணைய என்ன செய்யலாம்? கொஞ்ச பேர் “தளபதி”யினை பழிக்கின்றயா என கிளம்பியிருக்கினர். கலைஞரின் சித்துவிளையாட்டுக்களை ரசிக்கலாம், எழுதலாம் அதற்காக அவர் பெற்றுவைத்த மைதா மாவு மூட்டைகளை எல்லாம் கொண்டாடும் அவசியம் இல்லை. கொஞ்சமும் திறமையோ ஆற்றலோ இல்லாதவர் பற்றி, பின்னால் ஏதும் எதிர்பார்த்து அலையும் “மங்குணிகள்” பேசலாம், நாமும் பேச […]

கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன் இணையத்துல‌…

20% சதவீத மக்களுக்காக எடுக்கும் நடவடிக்கைக்கு 80% சதவீத மக்களை பற்றி அரசு கவலைபட்டிருக்க வேண்டும் : நடிகர் விஜய் எத்தனை ஐ.ஏ.எஸ் எத்தனை நிபுணர்களை கொண்டு வகுக்கபட்ட திட்டத்திற்கு, 4 டைரக்டர்களையும் சில நடன இயக்குனர்களையும் தவிர் ஏதும் தெரியாத இவர் ஆலோசனை சொல்கின்றாராம் சரி, கொஞ்சநாளாக அமைதியாக இருந்த அண்ணன் ஏன் இப்பொழுது முணுக ஆரம்பிக்கின்றார்?, தலைவா படம் வரும்பொழுது புரட்சி தலைவி அம்மா என அழுதது மறந்துவிட்டதா? அல்லது அந்த சிங்கம் நோயில் […]

நிச்சயமாக நான் பெரும் குழப்பவாதி

கடுமையாக கேள்வி கேட்கின்றார்கள், நீ ஒருமுறை ஒன்றை எழுதுகின்றாய், இன்னொரு முறை இன்னொன்றை எழுதுகின்றாய், சரியல்ல, நீ சரியே அல்ல.. நீ குழப்புகின்றாய், உனக்கு எது சரி, எது நியாயம் என தெரியவில்லை (நான் என்ன சுப்ரிம் கோர்ட்டு நீதிபதியா??) கடும் தொணிகள். செல்லாது செல்லாது என நாட்டாமையாக தீர்ப்பிட்டு, பலர் வந்து கருத்து சொல்கின்றார்களாம், சிலர் அறிவுரையும் சொல்கின்றார்களாம், சொல்லட்டும் அதாகபட்டது நானே இத்தேசத்தின் நடப்புகளை பார்த்து குழம்பியோய் இருக்கின்றேன், உன்னிப்பாக உலக விவகாரங்களையும், இந்திய […]

பண மாற்றம் …

இனி பணம் மாற்ற வந்தால் கையில் மை’- மத்திய அரசு அறிவிப்பு சும்மாவே அழுதுகொண்டிருக்கின்றார்கள், இதில் மை வேறு பூசுவார்களாம், சோலி சுத்தம் வாக்குசாவடியில் மை வைக்கும் பொழுது இந்த வங்கி இம்சை நினைவுக்கு வந்து எவனாவது மறுபடி வாக்களிப்பானா? கொஞ்சம் யோசித்திருக்கலாம், இதற்கு பதிலாக ஹேர் டை அடித்தல், கண்களில் மை பூசிவிடுதல் போன்ற மக்கட்பணிகளில் ஈடுபட்டாலவது மக்களுக்கு ஒரு திருப்தி இருக்கும் எந்த வங்கி வாசலில் ஊழல்வாதிகள் நிற்கிறார்கள்? எந்தப் பாமர மக்கள் வரவேற்கிறார்கள்? […]

கட்சிகளின் ஆதாரமே கருப்பு பணத்திலே பதுங்கி இருக்கின்றது!

அண்ணாவிற்கு பின் எல்லாம் ஊழல், திமுகவில் கணக்குவேண்டும் என ஒற்றைகாலில் நின்றார் மா.கோ ராமச்சந்திரன், இவ்வளவிற்கும் அவர்தான் பொருளாளர். ஒரு பொருளாளரே கட்சியின் கணக்கு சரியில்லை என கொடிபிடித்து தனிகட்சி நடந்த விசித்திர தமிழகம் இது. சரி அவர் தொடங்கிய கட்சியின் கணக்கு வழக்கு என்ன என பார்த்தால் சில வழக்குகள் மட்டும் கண்ணுக்கு தெரிகின்றன‌. திமுகவில் அதன் பின் சத்தமே இல்லை, ஊழலை எதிர்த்து களம் கண்ட அடிமை கட்சியிலும் அதன் பின் கட்சி கணக்கு […]

சிதறல் செய்திகள்

எதற்கும் வாய்திறக்கா ரஜினி மோடிக்கு பாராட்டு தெரிவித்தது ஏன்? : இயக்குநர் அமீர் சீற்றம் எதற்கும் சீறாத இவர், மோடியினை கண்டு சீறுவது ஏன்? நேற்று மன்சூர் அலிகான், இன்று அமீர். நாளை யார் சீறுவார்களோ தெரியாது, அது ஏன் சினிமாக்காரர்களுக்கு கடுமையான கோபம்? கருப்புபணமின்றி சினிமா இயங்காது என்பதை தவிர என்ன இருக்க முடியும்? ஒரு தேசத்து பிரதமர் சினிமாகாரர்களை கேட்டுவிட்டுத்தான் முடிவெடுக்க வேண்டுமா? அப்படி சினிமாகாரராக இருந்தும் மோடியினை பாராட்டிய ரஜினியும், குஷ்பூவும் பரவாயில்லைதான். […]

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி காலமானார்.

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி காலமானார். அவர் இயற்பெயர் நாராயண சுவாமி, சுயமரியாதை இயக்கத்தில் கலந்தபின் நெடுஞ்செழியன் என தன் பெயரை மாற்றிகொண்டு முழங்கினார். பெரியார் கழகத்திலும், திமுகவிலும் நெடுஞ்செழியனின் இடம் பிரதானம், திமுகவினை தாங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர், அதனால் அவர்களாக “நாவலர்”,”நடமாடும் பல்கலைகழகம்” என்றெல்லாம் பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர் அவர்களுக்கென்ன பட்டம் கொடுப்பது என்ன நோபல் கமிட்டியா? ஐ.நா வா? இவர்களாக அறிஞர், பேரரிஞர், கலைஞர், போர்வாள், தளபதி, நாவலர், புரட்சி நடிகர் என […]

மோடிஜி, தேசம் உங்கள் பின்னால் இருக்கின்றது

ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கவில்லை, அது மதிப்பிழந்து போயிற்று எனவும் அறிவிக்கபடவில்லை இதனை மாற்றிகொள்ளுங்கள், கொஞ்ச சிரமத்தை எதிர்கொள்ளுங்கள் என்றே அறிவிக்கபட்டிருக்கின்றது, சில சிரமம் இருக்கலாம் அவ்வளவுதான், அதற்குள் மோடி எல்லோர் சொத்தையும் பிடுங்கி விட்டதை போலவும், சாப்பிட்டிகொண்டிருக்கும் பொழுது தட்டை பிடுங்கியதை போலவும், கல்லா பெட்டியினை பிடுங்கிவிட்டு கடைகாரனை விரட்டியது போலவும் உடைகளை களைந்துவிட்டு மக்களை கோவணத்துடன் நிறுத்தியது போலவும் ஏக அழிச்சாட்டியங்கள். இந்த சிரமத்தை கூட தாங்கமுடியாத தேசத்து மக்கள்தான், பாகிஸ்தானை அப்படி […]