பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓபாமா ஆட்சி எப்படி முடிந்தது என பல அலசல் நடக்கின்றது….

பிரிட்டனிடம் இருந்து போராடி சுதந்திரம் பெற்ற நாடு அமெரிக்கா, மற்ற நாடுகளை போல அது ஒரே கலாச்சாரம் கொண்டதல்ல மாறாக குடியேற்ற நாடு. அதனால் அதற்கான கலாச்சாரத்தை அவர்களாக உருவாக்கினார்கள். எப்படி? எல்லாவற்றிலும் பிரிட்டனை கிண்டல் செய்தார்கள். அது ஆங்கில வழக்கிலும் இன்றுவரை எதிரொலிக்கின்றது. அவர்கள் பஸ் ஸ்ட்டாண்ட் என்றால் இவர்கள் பஸ் ஸ்டேசன் என்பார்கள், அவர்கள் பியுயல் என்றால் இவர்கள் கேஸ் என்பார்கள், அவர்கள் லைன் என்றால் இவர்கள் கியூ என்பார்கள். அவர்கள் பிரதமர் என்றால் […]

ஈழ போராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் விஷயங்கள்

ஈழபோராட்டத்தின் வரலாறையே மாற்றிபோடும் பல விஷயங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன, அதிலொன்று பிரபாகரன் சிங்கள அரசோடு செய்த பெரும் ராஜதந்திரம் எனும் துரோகம் முன்பு அமைதிபடையுடன் மோத சிங்களனோடு கை கோர்த்தது போல, பின்பும் கருணாவினை அழிக்க சந்திரிகாவோடு கை கோர்த்திருக்கின்றார் என்கின்றார்கள். எதற்காக செய்தார்? கருணாவிற்கா கருணா என்ன சொன்னான், சண்டை முடிவில்லாதாக போகிறது, இந்தியா இனி சமாதானத்திற்கு வராது, அதனை மீறி உலகநாடுகளும் வராது, இன்னொன்று சாவதற்கு கிழக்கு மக்கள், வாழ்வதற்கு வடக்கு மாகாணமக்களா என்றதுதான் பிரச்சினை […]

ஏமாந்துபோக கலைஞர் என்ன அத்வாணியா?

            ஒரு சிலருக்கு விதி வேறு மாதிரி அமைந்துவிடுகின்றது அதாகபட்டது விழுந்து விழுந்து உழைப்பார்கள், ஆனால் பலனை இன்னொருவர் அனுபவத்துகொண்டிருப்பார், சிலருக்கு அனுபவிக்கும் யோகமே இருக்காது வரலாற்றில் உதாரணம் உண்டு பைபிளில் படாதபாடுபட்டு மோசே என்பவன் எகிப்தில் இருந்து இஸ்ரேலிய மக்களை வழிநடத்தி இன்றிருக்கும் இஸ்ரேலுக்கு கொண்டு சேர்த்தான், ஆனால் அவனுக்கோ இஸ்ரேலில் கால் வைக்கும் பாக்கியம் இல்லை. ஆனால் அவனே மூலம் மாவீரன் அலெக்ஸாண்டர் 20 வருடமாக போராடி […]

சபரிமலை பெண்கள் நுழைவது பெரியார் வெற்றி, அண்ணா வெற்றி என முழங்கிகொண்டிருக்கின்றன‌

இதோ பெரியாரிஸ்டுகள், திராவிட திண்ணை வாசிகள் எல்லாம் சபரிமலை பெண்கள் நுழைவது பெரியார் வெற்றி, அண்ணா வெற்றி என முழங்கிகொண்டிருக்கின்றன‌ இன்னும் நுழையும் நிலை வரவில்லை வருவதும் எளிதல்ல‌ என்பது ஒருபுறம் இருக்கட்டும் இந்து மத கொண்டாட்டம், கட்டுப்பாடு என்றால் சீறுபவர்கள், கோயில் திருவிழா என்றால் பகுத்தறிவு பேசுபவர்கள். சினிமா நடிகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை, சில ஸ்டார் நடிகர்களின் பிரமாண்ட சினிமா வெளியீட்டை அந்த விளம்பரத்தை கண்டிப்பார்களா என்றால் இல்லை ஏன்? இந்த சினிமா நடிகனை வளர்த்துவிடுவது, […]

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி : கேரள அரசு

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி என கேரள அரசு தெரிவித்துள்ளது, இது எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை ஏற்கனவே ஆகம விதிப்படியே கோயில்களில் செயல்படவேண்டும் என எங்கோ ஒரு நீதிமன்றம் சொல்லியிருந்தது கவனிக்கவேண்டியது. அரசு சொல்லிவிட்டது என்பதால் இனி நயந்தாராவும், திரிஷாவும், மஞ்சுவாரியாரும் இருமுடி கட்டுவார்கள், யாத்திரை செல்வார்கள், பாவம் அவர்கள் தேங்காய் உடைக்க வலுவில்லாதவர்கள், நாமும் சென்று உதவலாம் என எதிர்பார்க்கமுடியாது இது இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டும், அவ்வளவு எளிதானது அல்ல. […]

சுற்றுப்யணத்தின் கதை….

கன்னியாகுமரி குழு ஒன்று சுற்றுபயணமாக வந்திருந்தது, சில விஷயங்களுக்காக தெளிவு கேட்டார்கள், விளக்கி சொல்ல சென்றதின் விளைவு இரு நாட்களை விழுங்கிவிட்டது சிங்கப்பூர் செல்லும் பயண ஆலோசனை, பஸ் நிலையம் என கேட்டார்கள். டிராவல் ஏஜென்ட் எனப்படுவோர் துணையின்றி வந்தவர்கள் என்பதால் சில விஷயங்களை சொல்லி உதவ வேண்டியதாயிற்று, பக்கா ஏற்பாடோடுதான் வந்திருக்கின்றார்கள், ஆனால் எங்கோ எதுவோ குழம்பிற்று. பார்த்து சிலவிவரங்களை சொல்லிவிட்டு வந்துவிடலாம் என சென்றால், நமது மக்கள் அல்லவா? அதுவும் நெடுநாளைக்கு மேற்கு கன்னியாகுமரி […]

புதிய ₹ 2000 நோட்டு

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கதை என்னவென்று தெரியவில்லை, அதில் காந்தி இருக்கின்றாரா இல்லையா எனும் சர்ச்சை ஒருபுறம். இருப்பார் என நம்புவோம். அதனை விட முக்கியம் இந்திய சின்னமான 4 சிங்க அசோக முத்திரை இருக்கின்றதா? இல்லை அதிலும் ராமரின் வில்லும், கிருஷ்ணனின் சக்கராயுதமோ புல்லாங்குழலா இருக்கின்றதா என்பது. சொல்லமுடியாது, அண்டார்ட்டிக்கா பென்குயின்களிடம் பேசமுடியாது என்பதால் மற்ற எல்லா நாடுகளுக்கும் சென்று பாரதபெருமை பேசியிருப்பவர் பிரதமர் மோடி, இனி எங்கள் பணத்தில் இப்படி அடையாளம் இருக்கும், ஏற்றுகொள்வீர் […]

கமலஹாசன் பிறந்த நாள்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜம்பபான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). ஒருவர் கண்ணை உருட்டியே நடிப்பார், இரு கண்களும் ஒவ்வொரு […]

திப்பு சுல்தான்

உலகிற்கு எல்லாம் ஒரு நீதி என்றால் இந்தியாவிற்கு தனி நீதி, அதுவும் கன்னட நீதிமன்றங்களுக்கு தனியாக ஒரு சட்ட்டமும் நீதியும் போலும் நீதிபதி குமாரசாமியின் கணக்கிலே அது தெளிவாக தெரிந்தது, இப்பொழுது திப்பு சுல்தானுக்கு தீர்ப்பிட்டு மறுபடியும் தங்களை நிரூபித்திருக்கின்றார்கள் நிறைய வாட்டாள் நாகராஜ் நீதிபதிகளாக அங்கு இருக்கின்றார்களா? அல்லது அங்கு கால்வைத்தவுடன் புத்தி மாறுகின்றதா என தெரியவில்லை, மண் ராசி அப்படி. ஆனால் அதே மண்ணில்தான் அடிபணியா ஒரு மாவீரன் இருந்தான் அந்த‌் திப்பு சுல்தான் […]