பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி மீது விமர்சனம்

மோடி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும், சர்ச்சைகள் இருக்கட்டும், அது வேறு விஷயம் ஆனால் நாட்டின் பிரதமர் கையால் விருது வாங்கமாட்டேன் என புறக்கணிப்பது நாட்டுபற்று ஆகாது, அது கண்டிக்கதக்கது, இது இந்நாட்டின் பிரதமர் எனும் உச்சபதவியினையே அவமதிப்பது ஒரு நீதிமன்றம் ஒருவனை அழைக்கும்பொழுது செல்லாவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும், பிடித்து உள்ளே தள்ளிவிடும் தேசம் இது, ஆனால் பிரதமரின் அழைப்பினை புறக்கணித்தால் அவர் புரட்சியாளன், புதுமை பித்தன் இன்னும் பல அழிச்சாட்டிய பட்டங்கள். இவரை […]

கீர்த்தி சுரேஷுக்கு கோயில்

கீர்த்தி சுரேஷுக்கு கோயில் கட்டபோவதாக செய்தி # எவரெஸ்ட் சிகரத்தில் எத்தனை பேர் கொடி நாட்டினாலும் டென்சிங்கிற்கு இருக்கும் வரலாறே தனி, எத்தனை கப்பல் இந்தியா வந்தாலும் வாஸ்கோடமாகா கப்பலுக்கு இருக்கும் மரியாதையே தனி எத்தனை டோனி வந்தாலும் முதலில் கோப்பையினை வென்ற கபில்தேவின் முத்திரையே தனி அப்படி எத்தனை நடிகைகளுக்கு கோயில் கட்டினாலும், குஷ்பூவிற்கு நிலைத்து நிற்கும் புகழே தனி எத்தனை கோபுரங்கள் கட்டபட்டாலும் ராஜகோபுரம் நிச்சயம் குஷ்பூவே கோயில் கட்டபட்ட நடிகை எல்லாம் குஷ்பூவாக […]

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம்

கீழடி பொருட்களை மைசூருக்கு கொண்டு செல்கின்றார்களாம், கீழடியில் பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒன்றும் இல்லை என சொல்லிகொள்கின்றார்கள் இப்படி பல ஆயிரம் கால வரலாற்று இடம் என சொன்னால் யார் செல்வார்கள்? யார் பாதுகாப்பார்கள் ஆனால் பலகோடிரூபாய் பெறுமான இடம் என்றால் பிளாட் போட்டு விற்றுவிட்டு அமைதியாக இருப்பார்கள் அப்படிபட்ட தமிழகம் இது அதனை இது பழம்பெருமை மிக்க இடம் என சொன்னால் தமிழன் பாதுகாப்பானா? நெவர். மாறாக என்ன செய்ய வேண்டும், அருமையான யோசனை என்னவென்றால் […]

கமலஹாசன் – கௌதமி

களத்தூர் கண்ணமாவில் நடிக்கும்பொழுது கமலஹாசனுக்கு 6 வயது, அவரது நடிப்பில் கவரபட்ட மெய்யப்ப செட்டியார் செல்லமாக, “என்ன வேண்டும்?” என கேட்டார் கமலஹாசன் கைகாட்டியது செட்டியார் காரினை, அதுபோன்ற ஒன்றை அவர் பரிசளித்தும் மகிழ்வித்தார் நடிப்பில் 6 வயதிலே கார்வாங்கிய ஒரே நடிகர் கமலஹாசனே, பின்னாளில் ஏதோ ஒருவிழாவில் சிவாஜிகணேசன் “வாய்யா கோடீஸ்வரா..” என கமலை அழைத்த செய்தியும் உண்டு அப்படிபட்ட கமலஹாசன் கவுதமி சொத்தினை ஆட்டையினை போடும் அவசியம் என்ன? ஆனால் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக […]

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம்

One Rank One Pension (OROP) ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் – அதே தயக்கம் வெள்ளையர் ஆண்ட காலத்திலே இந்தியாவில் ராணுவம் உண்டு, அது இந்தியர்களை அடக்கி வெள்ளையரை காப்பாற்ற வைக்கபட்டிருந்த அமைப்பு, பின்னாளில் 1947க்குபி அந்தபடை அப்படியே இருந்தது, இந்தியாவுடன் இணையமறுத்த சின்ன சின்ன சமஸ்தானங்களை இணைப்பதில் அதுதான் உதவியது, இல்லை என்றால் ஐதரபாத் சமஸ்தானம் இணைந்திருக்காது, கோவா சேர்ந்திருக்காது. அப்படியே காஷ்மீரால் பாகிஸ்தானுடன் மோதிகொண்டே ஒரு சராசரி ராணுவமாக இருந்தது இந்தியராணுவம். காரணம் […]

தமிழுக்கு தனி மாநில அந்தஸ்து கிடைத்ததை கொண்டாட யார் இருக்கின்றார்?

பல மாநில அரசுகள் தங்கள் மாநிலம் உருவான நாள் என கொண்டாடிகொட்டிருக்கின்றன‌ அதாவது பல நூறு ஆண்டுகள் கழித்து இது இந்தமொழி பேசும் மக்களின் மண் என ஒரு அங்கீகாரம் கிடைத்ததாகவே கருதுகின்றன‌ கோரி காலம், மொகலாயர் காலம் , பிரிட்டிசார் காலம் என பல கடந்து வந்த அங்கீகாரம் அவை, சுதந்திர இந்தியாவில்தான் சாத்தியமாயிற்று அது உண்மையும் கூட, அதாகபட்டது இம்மொழி பேசும் மக்களின் தாயக பூமி இது என பட்டா போட்டு கொடுத்தது போன்ற […]

இந்திரா காந்தி : நினைவு நாள்

இந்த நாள் அன்று அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார். தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது. டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் […]

மலேசிய தீபாவளி..

மலேசிய தீபாவளி வழக்கம் போல கோலாகலம், கட்டணத்தில் வாங்கும் இந்திய‌ டிவி சேனல்களை கூட சில நாட்களுக்கு அரசு இலவசமாக கொடுத்திருக்கின்றது. அரசு தொலைகாட்சியில் இந்திபடங்களும் கூடவே லிங்கா, சிவாஜி என இம்சைகள். கபாலி ஏன் போடவில்லை என கேட்டால் நிலை மகா சிக்கல் ஆகிவிடும், அது வரவும் வாய்ப்பே இல்லை. ஒரு சேனலில் நெடுநாளைக்கு பின் விசுவின் நிகழ்ச்சி பார்க்க முடிந்தது, அவர் குரலே கிட்டதட்ட பாக்யராஜ் போல மாறி இருந்தது தெரிந்தது, எப்படி இருந்த […]

தீபாவளி வாழ்த்துக்கள்!!!

https://youtu.be/9NOPgZcxrOc தீதீ தீதீ தீதீ தீபாவளி  போடு தீதீ தீதீ தீதீ தீபாவளி    தீபாவளி இந்தியாவின் நம்பர் ஒன் பண்டிகை, ஆயிரம் பண்டிகைகள், தேர்தல் போன்ற திருவிழாக்கவள் போல நிறைய வந்தாலும் வந்தாலும் தீபாவளிக்கு போட்டி தீபாவளி மட்டுமே. மகா முக்கியமான காரணமாக சொல்லபடுவது பகவான் நாராயணன் நரகாசுரனை வதம் செய்தார் என்பது மகா ஆதாரமான நம்பிக்கை என்பது முதலாவது. இன்னும் பல வகையான காரணங்களை சொல்வார்கள், ராவணனை வதைத்த ராமபிரான் அயோத்தி திரும்பியபொழுது மக்கள் […]

நரகாசுரன் சிறப்புப் பதிவு

  கடவுளை நம்புகிறவன் காட்டுமிராண்டி, முட்டாள், மடையன், கடவுள் இல்லவே இல்லை என சொல்வார்கள். ஆனால் அதே கடவுளால் கொல்லபட்ட நரகாசுரனை நம்புவன் சுயமரியதைக்காரன், திராவிடன், பகுத்தறிவுவாதி, இன உணர்வாளன், அறிவுள்ளவன் எனவும் சொல்கின்றார்கள் எப்படி இருக்கின்றது திராவிட கொள்கை? வீரப்பன் நல்லவன், அவனை கொன்ற ஜெயலலிதா அவனை விட நல்லவர் என்ற வித்தியாசமான சிந்தாந்தமும் நம் சிற்றறிவுக்கு எட்டாது. இப்படி அரிய தத்துவங்களை உலகிற்கு சொல்லிக்கொண்டிருக்கும் இயக்கம் இது. இன்னும் என்னென்ன தத்துவங்களை சொல்லபோகின்றார்களோ?? வருங்காலத்தில் […]