ஏன் என்றால் அப்படித்தான்..
வேதாரண்யத்தில் இருந்து வெறும் 36 கிமீ தூரத்தில் இருக்கின்றது யாழ்பாணம் , அங்கும் தமிழர்தான் அவர்களும் தமிழ்தான் பேசுகின்றார்கள் ஆனால் அதெல்லாம் திராவிட பூமியில் வராது போலிருக்கின்றது ஏன் என்றால் அப்படித்தான்..
சுத்தமான இந்து இந்தியன்….
வேதாரண்யத்தில் இருந்து வெறும் 36 கிமீ தூரத்தில் இருக்கின்றது யாழ்பாணம் , அங்கும் தமிழர்தான் அவர்களும் தமிழ்தான் பேசுகின்றார்கள் ஆனால் அதெல்லாம் திராவிட பூமியில் வராது போலிருக்கின்றது ஏன் என்றால் அப்படித்தான்..
அடடே.. 1700களில் வந்த இயேசு சபை குருக்கள், கல்லூரி அமைத்த பச்சையப்ப முதலியார், இந்து பள்ளி கல்லூரிகளை அமைத்த ஆதீனங்கள், கல்விக்கு அள்ளி கொடுத செட்டியார்கள் என ஏகபட்டவர்கள் திராவிடர்களாக இருப்பார்கள் போலிருக்கின்றது கல்லூரி ஆசிரியராக இருந்த பாரதியுமா திராவிடன்? ஏம்ப்பா ஜெஸியூட் பாதர்ஸ் , நெற்றி நிறைய பட்டை போட்டு வரும் சிவநேச செட்டிகளா நீங்கள் எல்லாம் கிறிஸ்தவர் அல்ல திராவிட கோஷ்டின்னு இங்கே ஒருவன் சொல்லிகொண்டிருக்கின்றானே அது பற்றி உங்கள் கருத்து?
இப்படி ஒரு படத்தை திமுகவினர் பரப்பி கொண்டிருக்கின்றனர் உண்மையில் அவர்கள் கட்சி நிலைதான் இப்படி இருகின்றது, முழங்க வேண்டிய திருச்சி சிவா போன்ற சிங்கங்கள் “மியாவ் மியாவ்” என கத்திகொண்டிருக்கின்றன இன்னும் பல புலிகள் “வள் வள்” என குரைக்கின்றன, உயர பறக்க வேண்டிய கழுகுகள் குப்பை கிண்டுகின்றன சில கரடிகள் விறுவு பூனை போல மலங்க மலங்க விழிக்கின்றன.. ஒரு பூனை புலிபோல அதுவும் நோயாளி புலி போல “ஆக..ஆக..ஆக” என முணங்கிகொண்டிருக்கின்றது, அதுதான் தலமையாயாம் […]
ரஜினி என்னமோ சொல்லிவிட்டார் அது ஈயம் பூசியது பூசாதது என பல திமுகவினர் கிளம்பியாயிற்று இதை தொடங்கி வைத்தவர் யார் தெரியுமா? சாட்சாத் கலைஞர் கருணாநிதி அவரின் பதில் எல்லாமே தலையினை பிய்க்கும் அளவுக்குத்தான் இருக்கும், திராவிடம், ஈழம், பெரியாரியம் இன்னும் ஏகப்பட்ட இடங்களில் ஈயம் பூசியது அவர்தான் உதாரணத்துக்கு ஈழபோரில் பிரபாகரன் கொல்லபட்டால் வருந்துவீர்களா? “பிரபாகரன் அல்ல யார் கொல்லபட்டாலும் வருந்துவேன்” ஆயிரகணக்கில் சாகின்றார்களே “ஆம், வருந்தி கொண்டே இருக்கின்றேன்” தமிழக காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு […]
இந்த மனுநீதி ஆட்சிமுறை எங்கே இருந்தது என கேட்டால் அதுதான் பிராமண சட்டம் அதுதான் ஆண்டது என்கின்றார்கள் பிராமண அரசன் என எவனுமில்லை தமிழக வரலாற்றுபடி சேர சோழ பாண்டியன், களபிரர், பல்லவர், சாளுக்கியர், கடை ஏழு வள்ளல்கள்,நாயக்கர், இஸ்லாமியர், வெள்ளையன் என யார் ஆட்சியிலும் மனுநீதி அரச கட்டளையாக இருந்ததுமில்லை அவரவர் சட்டங்களை எழுதினார்கள் பாண்டியனோ, சோழனோ, பல்லவனோ, நாயக்கனோ ,இஸ்லாமிய நவாப்போ மனுதர்ம கொள்கையில் சிறிய சட்டம் கூட இயற்றவில்லை இப்பொழுதும் அப்படி சட்டமில்லை […]
தமிழகத்தில் இஸ்லாமியர் அக்காலத்தில் இருந்து உருது மற்றும் அரபுமொழி படிப்பார்கள், அது தவறே இல்லை 1960க்கு முன்பு வரை லத்தீன் கத்தோலிக்க ஆலயங்களில் வழக்கில் இருந்திருக்கின்றது, அந்த இடத்தை பின் ஆங்கிலம் பிடித்து கொண்டது இங்கு அரேபிய மொழிகள் கற்கலாம், ஐரோப்பிய மொழிகள் கற்கலாம், ஆனால் இந்தி மொழியும் சமஸ்கிருதமும் கற்கவே கூடாது விடவே மாட்டார்கள். தமிழன் அரேபியனாகலாம், ஐரோப்பியனாகலாம் ஆனால் அவன் இந்துவும் இந்தியனுமாக ஆகிவிடவே கூடாது
திமுக ஏன் முன்னாள் நாம் தமிழர் கட்சி என அழைக்கபடுகின்றது என்றால் இந்த வெற்று சவுடாலுக்குத்தான் 1950களில் திமுக முழக்கங்கள் இன்றைய தும்பிகளின் ரீங்காரத்தைவிட சுவாரஸ்யமானவை
பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் முன்னாலே 1900களுக்கு முன்னாலே ஒருவர் தாழ்த்தபட்டவருக்காக பேசினார் முதன் முதலில் பறையர் மகாசன சபையினை தொடங்கினார், முதன் முதலில் பறையர் என்ற இதழை அந்த மக்களுக்காக நடத்தினார் அன்று அச்சு ஊடகங்களே அதிகம் இல்லா நிலையில் அவரின் இந்த முயற்சி நிச்சயம் அதிசயமானது, தாழ்த்தபட்டோருக்கான இந்தியாவின் முதல் குரல் அவருடையது அன்றே கல்வி கற்றிருந்தார், சிந்தித்தார். தென்னாப்ரிக்கா எல்லாம் சென்று மக்களின் அடிமை நிலையினை உணர்ந்தார் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக அவர் ஒலிக்க ஒலிக்க […]
ஒரு பெரியாரிஸ்ட் எப்படி பெருமைக்குரிய காங்கிரஸ் உறுப்பினராக இருக்கமுடியும்? பிரியாணி மாஸ்டருக்கு சைவ சித்தாந்த கழகத்தில் என்ன வேலை? ராகுல்காந்தி தானொரு பெருமைக்குரிய ஆர்.எஸ்.எஸ்க்காரன் என சொல்லமுடியுமா? இந்த கிறுக்கு செறுக்கி பயவுள்ளைக்கு ஒன்றுமே தெரியாது போல….. ஒருவேளை அட்மின் பயல் சரியில்லையோ?, அவனை மாறுகால் மாறுகை வாங்கிவிட வேண்டியதுதான்