பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மனுஷ் கவிதையில் இறங்கிவிட்டார்

சித்தார்த்தா செத்தாலும் செத்தான் மனுஷ் கவிதையில் இறங்கிவிட்டார் நடிகை செத்துகிடந்தாலும் அவள் படத்தை பார்க்கின்றார்களாம், ஓட்டல் ஓணர் செத்தாலும் அங்கு தோசை சாப்பிடுகின்றார்களாம், காப்பிகடை முதலாளி செத்தாலும் காப்பி சாப்பிடுகின்றார்களாம் கலைஞர் எனும் மாபெரும் செத்ததுக்கு இவர் என்ன செய்தார்? எழுதி எழுதி தள்ளிகொண்டிருந்தார்

ஆதாரம் கேட்டால்

திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிராக கலாபனை செய்தான் என சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால் வெள்ளை பாதிரி எழுதியது இதோ என தூக்கிகொண்டு வருகின்றார்கள் வெள்ளையன் எழுதியது எப்படி இருக்கும்? தாய்க்கு சமமான வேலு நாச்சியாரை மருதுபாண்டியரோடு இணைத்து அவன் கட்டிவிட்ட அவமான கதைகள் போலத்தான் இருக்கும் தன்னை எதிர்த்த கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என கதைகட்டியது யார்? அவனே.. தன்னை எதிர்த்த யாரைபற்றி வெள்ளையன் நல்லவிதமாய் எழுதினான்? இன்றும் செங்கிஸ்கான் அவனுக்கு கொடியவனே, ஐரோப்பாவினை ஆண்ட கலீபாக்கள் பற்றி […]

சூத்திராள் வைரம் பாய்ந்த மரமண்டை

ஐம்பது வருடமாக பிராமண எதிர்ப்பு, திராவிடம் என சொல்லி ஒரே ஒரு குடும்பம் மட்டும் ஆளும் திறமை அவர்களுக்குத்தான் உண்டு, அதில் நிதிக்கும் குறைவில்லை. இன்னும் 7 தலைமுறைக்கு அக்குடும்பத்திடம் திட்டமும் இருக்கின்றது சூத்திராள் மரமண்டை, அதிலும் திமுக , திக சூத்திராள் வைரம் பாய்ந்த மரமண்டை

அது அவனை தவிர யாருக்கும் சாத்தியமில்லை

“எனக்கு நீங்கள் எல்லோரும் எப்படியோ அப்படித்தான் அன்பு தம்பி கருணாநிதியும், கடலில் பிரிவில்லை கழகத்தில் பேதமில்லை ஆனால் மற்ற தம்பிகளிடம் இல்லா சிறப்பான குணம் ஒன்று அவனிடம் உண்டு ஏன் என்னிடம் கூட அக்குணம் இல்லை நமக்கெல்லாம் கனவு வரும், கனவு இருந்தால் முயற்சி வரும் அந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் மகிழ்வோம் தோல்வியில் முடிந்தால் தளர்வோம் தம்பி கருணாநிதிக்கு கனவுகள் அதிகம் அதற்கெற்ற உழைப்பும் அதிகம், ஆனால் ஒருவேளை தோற்றுவிட்டால் அதை ஜீரணத்து உடனே மீண்டுவரும் […]

என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது

“கலைஞர் கருணாநிதி நிச்சயம் மிகபெரும் ஆற்றல் மிகுந்தவர், மிக பெரும் குடும்பம் அதைவிட பெரிய கட்சி அதைவிட பெரிதாக அதற்கு வரும் சிக்கல்களை எல்லாம் சமாளிக்கின்றார் குடும்பத்தை நடத்தி, கட்சியும் நடத்தி அவ்வப்போது இலக்கிய கூட்டமும் நடத்தி, சினிமாவும் பார்த்து அதற்கு வசனமும் எழுதி , ஒரு பக்கமாக இந்துக்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சீண்டி.. அரசியல், பத்திரிகை, இலக்கியம், எழுத்து என எல்லா பக்கமும் அசராமல் சுற்றும் கலைஞர் கருணாநிதி மாபெரும் அதிசயம் ஆனால் அவரின் அந்த ஒப்பற்ற […]

குஜராத்துக்கு ஒரு நீதி, கோவைக்கு தனி நீதி..

தமிழகத்தை குஜராத்திகள் அழிக்கின்றார்கள், எல்லா தொழிலும் அவர்கள் கைக்கு சென்றாயிற்று என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது இந்த ஜவுளிகடை கோஷ்டி மட்டும் இதுபற்றி வாய்திறக்குமா என்றால் திறக்காது எட்டடுக்கு மாடியும் முழுக்க ஏசியும் முகலாய மன்னர்களை போன்ற பாங்குமாய் தமிழக ஜவுளிகடைகள் எப்படி ஜொலிக்கின்றன? குஜராத்திய மில்கள் கொடுக்கும் லாபம் அது மிக சல்லி விலையில் அவை அள்ளிவிடுகின்றது, அது இங்கு கொள்ளை விலைக்கு விற்கபடுகின்றது தமிழக ஜவுளிகடைக்காரர்கள் கொழிக்க குஜராத் செய்துகொண்டிருக்கும் சேவை கொஞ்சம் அன்று எதற்கெடுத்தாலும் […]

இனி காட்சிகள் சட்டென மாறலாம்

ஈரானின் கடற்பகுதியில் போரீஸ் ஜாண்ச‌ன் ஒரு பக்கம் கப்பல்களை அனுப்புகின்றார் அமெரிக்கா தன் கூட்டாளிகளுடன் கப்பல் கப்பலாக திரள்கின்றது ஆனால் எல்லோரும் சொல்லும் வார்த்தை எங்கள் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவது என சொன்னாலும், உண்மை காரணம் வாய்ப்பு கிடைத்தால் ஈரானை நொறுக்குவது ஈரான் என்ன விடுதலைபுலி பிரபாகரனா? யாருமே இல்லாமல் வல்லரசுகளுடன் மோதி சாவதற்கு? அது மிக அழகான காரியத்தை செய்துவிட்டது, ரஷ்யாவிஐ அழைத்து வந்துவிட்டது இனி ஈரானிய கடற்பகுதியில் ரஷ்ய ஈரானிய கடல்பயிற்சி தொடங்கும், அத்தோடு […]

எல்லாவற்றையும் கடந்து சென்றவர் கலைஞர்

கலைஞர் மேல் அவதூறு கிளம்புவது முதல் முறை அல்ல, வரலாறு எங்கும் காணகிடக்கின்றது எப்பொழுதெல்லாம் அம்மனிதன் மீது குற்றம்சாட்ட வழி இல்லையோ அப்பொழுதெல்லாம் என்னவெல்லாமோ 1960களிலே கேட்டார்கள் பேசவே நாகூசும் வார்த்தைகள் எல்லாம் அவர் மீது வீசபட்டன‌ அவரே சொன்னது போல “விவரமறிந்த வயதியிலிருந்தே இழித்தும் பழித்தும் பேச கூடிய சாதியில் பிறந்தவன் நான், எவ்வளவோ அவமானங்களை சாதி இழிவில் சுமந்து பெரியாரின் கொள்கையால் கடந்தவன் இழித்தும் பழித்தும் பேசபடும் சொற்கள் எனக்கு புதிதல்ல” கலைஞரின் அணுகுமுறை […]

“அட இவனும் இவன் இம்சையும் ..”

“ஏ டிரம்ப் பேச வருகின்றீரா இல்லையா?..” என ஏவுகனை சோதனை செய்து அழைத்தது வடகொரியா “இருப்பா,நீ எல்லாம் ஒரு ஆளா? ஈரானை நொறுக்கிவிட்டு வருகின்றோம்” என்பதுபோல அசால்ட்டாக இருந்தது அமெரிக்கா “ஓஹோ.. அப்படியா” என சொல்லிவிட்டு தன் இரு ஏவுகனைகளை மறுபடியும் ஜப்பானை நோக்கி வீசியிருக்கின்றது வடகொரியா அடேய் ஏவுகனை சோதனை செய்யமாட்டேன் என சொன்னாய் அல்லவா? என அமெரிக்கா கேட்க‌ “அண்ணே, நீண்ட தூர ஏவுகனைதான் சோதிக்க கூடாதுன்னு சொன்னீங்க, ஏண்ணா அது அமெரிக்காவுக்கு வந்துரும் […]