பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா

இப்படி இரு கதை சுற்றிகொண்டிருக்கின்றது, ஈழ சிக்கலை அறிந்தவருக்கு தெரியும் இதெல்லாம் மாபெரும் பொய் இலங்கையில் ஆயுதபோராட்டம் 1975க்கு பின்புதான் வந்தது, அதுவும் குட்டிமணி எல்லாம் போராட வந்தது 1977களில் அப்பொழுது அவர்கள் அவ்வளவு பிரபலமில்லை, 1982ல் பிடிபட்ட குட்டிமணி கோஷ்டி வெலிக்கடை சிறையிலே கொல்லபட்டது கலைஞர் அரசு 1975லே டிஸ்மிஸ் செய்யபட்டது, அதன் பின் அவர் முதல்வரானது 1987ல் அப்பொழுது அமைதிபடை காலம் வந்தது, அவர்தான் அதை திரும்பபெற்றார் விபிசிங் மூலமாக‌ ஆக 1975ல் பதவியினை […]

ஜீயர் தன் வார்த்தைகளை திருத்திகொள்ள வேண்டும்

இஸ்லாமியர் ஆட்சியில் அவர்களுக்கு பயந்து அத்திவரதர் சிலை நீருக்குள் மூழ்கவைக்கபட்டது என விவகாரத்தை தொடங்கிவிட்டார் ஜீயர் விஷயம் வில்லங்கமாகின்றது, இஸ்லாமியர் என்ன கொள்ளைக்காரர்களா என ஒரு கூட்டம் பொங்குகின்றது இஸ்லாமியர் என்றாலே கொடூரமானவர்கள் என்றும் கொள்ளை அடிப்பவர்கள் என்றும் ஆலயங்களை நொறுக்கி தீக்கிரையாக்குவார்கள் என்றும் ஏகபட்ட பேர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மை அது அல்ல, அக்காலத்தில் மதகுருக்களின் மறைமுக ஆட்சியில் ஆலயமே செல்வங்களின் பொக்கிஷங்களின் கஜானாவாக இருந்தது ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் […]

கப்பல் படலம் முடிந்து , பணய கைதிகள் படலம் தொடர்கின்றது

இப்போதைக்கு சுவாரஸ்யமான விஷயம் ஆளாளுக்கு கப்பலை பிடித்து வைத்து கொண்டு பிரிட்டனும் ஈரானும் ஆடும் ஆட்டம்தான் ஆட்டம் கிட்டதட்ட முதல் சுற்று முடிந்து இருவரும் களைத்து மல்லாக்க கிடக்கின்றார்கள் என்ன நடந்தது முதல் சுற்றில்? பிரிட்டனுக்கு இது பெரும் அவமானம் சந்தேகமில்லை, ஆனால் அமெரிக்காவும் வரிந்துகட்டி வரவில்லை, அதிரடியாக கப்பலை விடுவிக்க நடந்த லண்டன் கூட்டம் முடிவு அறிவிக்கபடாமல் முடிந்தது, ஈரானும் அசைவதாக தெரியவில்லை ஏன் பிரிட்டன் நடவடிக்கை எடுக்கவில்லை? அங்குதான் இருக்கின்றது பிரிட்டனின் வியாபார கணக்கு, […]

கள்ளகாதலனே எங்காவது ஓடி உயிரை காப்பாற்றிகொள்..

சென்னையில் கள்ளகாதலன் மனைவியுடன் சேர்ந்து கணவனை கொன்ற பெண் கைது வழக்கமாக கள்ளகாதலுடன் சேர்ந்துதான் கணவனை கொல்வார்கள், பெரும் புரட்சியின் முதல்படியாக கள்ளகாதலன் மனைவியே கொலைக்கு துணை சென்றிருகின்றாள் அந்த பெண்களுக்குள்எவ்வளவு அழகான புரிந்துணர்வு? இவன் போன பிறவியில் கோவலனாக இருந்திருப்பானோ என்னவோ? இரு பெண்கள் வெற்றிகரமாக ராக்கெட் செலுத்தியிருக்கும் நாட்டில், இரு பெண்கள் சேர்ந்து ஒருவனை கொலைசெய்திருக்கின்றார்கள் ஆண்கள் எல்லாம் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் வழக்கமாக அடுத்த ஆண்களிடம் பேசாதே என மிரட்டுவதை போல […]

அந்த கோஷ்டி சொன்னால் சத்தம் உரக்க கேட்கும்

வைகை ஆற்றில் அந்த கோஷ்டி ஏதோ செய்ய போகின்றதாம், உடனே இந்த கோஷ்டியும் ஏய் வைகையினை காக்க போகின்றோம் என கிளம்பிவிட்டது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வைகை நதியினையே காணவில்லை, மணல் கூட இல்லை இது வைகை நதி என அறிவிப்பு பலகை மட்டும் இல்லை என்றால் அப்படி ஒரு நதி இருப்பதே இப்போதைக்கு தெரியாது வறண்ட ஆற்றில் என்ன செய்ய போகின்றார்கள்? கிரிக்கெட்டோ கால்பந்தோ ஆடிவிட்டு வரலாம் அவ்வளவுதான். வைகை ஒன்றும் வடக்கத்தியாருடன் […]

ஹிஹிஹி பழசெல்லாம் எதுக்கு வைகோஜி, சரி கட்சிய மறுபடி எப்போ உடைப்பீங்க?

“வைகோ ஜி, இந்த கவர்மென்ட் எனக்கு மினிஸ்டர் போஸ்ட் தரலை, அதனால இவங்கள எவ்வளவு திட்டமுடியுமோ அவ்வளவு திட்டுங்க‌ அதுக்குத்தான் சாமி என்னை அனுப்பியிருக்காங்க.. வைகோஜி, அந்த ஈழவிவகாரம் இன படுகொலை எல்லாம் தாண்டி என்ன நீங்க சந்திச்சது ரொம்ப சந்தோஷம் அட நாம இரண்டுபேருமே அங்க ரகசியமா ஆடினவங்கதான, எல்லாம் முதலாளி உத்தரவு. ராஜிவ் கொலையில கூட நாம ரெண்டு பேரும்… ஹிஹிஹி பழசெல்லாம் எதுக்கு வைகோஜி, சரி கட்சிய மறுபடி எப்போ உடைப்பீங்க? இப்போதானே […]

சமூக நீதி கோஷ்டிகள் கனத்த அமைதி

இஸ்ரோ விஞ்ஞானிகளை கவனித்தால் ஒன்று புரிகின்றது அந்த விக்ரம் சாராபாய், சத்தீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற வரிசையாகட்டும் இந்த ரவிஅருணன், மயில்சாமி அண்ணாதுரை , சிவன் போன்றோரின் வரிசையாகட்டும டெசி தாமஸ், வனிதா முத்தையா, ரிது காரிடலாகட்டும் யாரும் பிராமணர் அல்ல, மிக முற்படுத்தபட்ட சாதியும் அல்ல. இட இதுக்கீடு ஒன்றால் உயர வந்தவர்களும் அல்ல‌ அவர்களின் கல்வியும் விடா முயற்சியும் கடின உழைப்பும் அதற்கு மேல் அவர்களின் விதிப்பலனும் அவர்களை கொண்டு சேர்த்திருக்கின்றது விதிபலன் […]

புதிய கல்வி கொள்கை ஒப்பாரி

காமராஜர் ஆட்சி நன்றாக இருந்தது, ஆனால் அது சரியில்லை என திமுகவும் திராவிட கோஷ்டிகளும் ஒப்பாரி வைத்தன, பெரும் அழிச்சாட்டியம் இன்றும் காமராஜர் ஆட்சி நல்லாட்சியாகவே கருதபடுகின்றது இந்தியினை எதிர்த்து அழிச்சாட்டியம் செய்தது திமுக, இன்று இந்தியின் அவசியம் புரிந்து தமிழர்கள் ஓடி ஓடி படித்துகொண்டிருக்கின்றனர் இந்திராவினை எதிர்த்து ஏன் தாக்கிய கட்சி திமுக, இன்றளவும் இந்தியாவின் மிகசிறந்த பிரதமர்களில் ஒருவர் இந்திரா என உலகம் சொல்கின்றது விடுதலை புலிகள் கையில் எடுக்க கூடா அடங்காபிடாரிகள் என்றது […]

திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்?

எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது.. திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்? பெரியார் எவ்வளவு பெரும் விஞ்ஞானி, ஈரோட்டில் பெரியர் 1900களிலே ராக்கெட் விட்டு ஆடியிருக்கின்றார். அந்த மாபெரும் கண்டுபிடிப்பினை பிராமணர் அலட்சியம் செய்ததுதான் அவரின் பிராமண வெறுப்புக்கு காரணம்.. 1903ல் ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கும் முன்பே விமானம் கண்டறிந்தது பெரியார் & கோ படுபாவி வெள்ளைக்காரன் அந்த நுட்பத்தை விமானத்தை ராக்கெட்டை கடத்திகொண்டு ஓடிவிட்டான் பெரியார் வைத்திருந்த விமான நுட்பத்தை வெள்ளையனுக்கு திருட்டுதனமாக கொடுத்தது […]

சுப்பிரமணிய சிவா

அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் […]