பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக அற்புத கவிஞர் வைரமுத்து

கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும் எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம் ஆம் இளையராஜாவுக்கும் அவருக்கும் சர்ச்சை வந்தது, ஆனால் இளையராஜா இல்லாவிட்டாலும் தன்னால் தேசிய விருது வாங்கிவிட முடியும் என ஐந்து முறை காட்டிய கவிஞன் அவர் இளையராஜா இல்லா வைரமுத்து சாதித்ததும், வைரமுத்து இல்லா இளையராஜா தடுமாறுவதும் […]

படாதபாடு படுகின்றது அமெரிக்கா

ஈரானின் ஹோர்ம்ஸ் பகுதியினை சோமாலியாவின் ஏடன் வளைகுடா போல பாதுகாப்பற்ற பகுதியாக அறிவிக்க படாதபாடு படுகின்றது அமெரிக்கா ஏன் அப்படி அறிவிக்கபட வேண்டும் என்றால் அங்குதான் வில்லங்கம் இருக்கின்றது ஒருவேளை அப்படி அறிவிக்கபட்டால் அங்கு பன்னாட்டு படை நிறுத்தபட வேண்டும் புரிகின்றதா? ஈரானுக்கு எதிராக உலக நாடுகளை முன்பு சதாமுக்கு எதிராக திரட்டியதை போல் திரட்ட தயாராகின்றது ஆனால் ஒருநாடும் அமெரிக்கா பின்னால் செல்லவில்லை என்பதுதான் சோகம், இது அமெரிக்காவுக்கு பலத்த அதிர்ச்சி என்பதால் கனத்த மவுனம் […]

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்

தமிழகத்தின் மிக சிறப்பான தேரோட்டங்களில் ஒன்று நெல்லையின் நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் மதுரை அழகர் திருவிழா, திருவாரூர் தேரோட்டம் போன்ற பிரசித்திபெற்ற விழாக்களின் வரிசையில் வரும் கொண்டாட்டம் அது ஆனிதேரோட்டம் என அழைக்கபடும் அந்த நெல்லையின் பெருவிழா இன்று நடக்கின்றது. சமய பேதமின்றி எல்லா மக்களும் உற்சாகமாக கலந்து கொள்ளும் திருவிழா அது. அந்த பெரும் கலாச்சாரமும் பெருமையுமிக்க விழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு வாழ்த்துக்கள் அந்த நெல்லையப்பர் எல்லோரையும் அன்று பெரும் மழையில் இருந்து நெல்லை காத்தது போல […]

உடல்நலம் சரியில்லை

இரு நாட்களாக சங்கத்துக்கு உடல்நலம் சரியில்லை , சளி காய்ச்சல் இன்னும் இந்த இரண்டும் என்ன சிக்கலை எல்லாம் இழுத்து வருமோ அதை எல்லாம் இழுத்துவந்துவிட்டது உணவும் ருசியில்லை, தலையில் யாரோ ஏறி உட்கார்ந்தது போல் வலி, நுரையீரல் பக்கம் யாரோ அமர்ந்திருந்து தொண்டைகுழி, ஈரல் என எல்லாவற்றையும் பிடித்து பிடித்து இழுக்கின்றார்கள். இதற்கு ஆவி பிடித்தல், போத்தல் அடித்தல் என என்ன செய்தாலும் அது 7 நாள் கண்டிப்பாக இருந்தே தீரும் என பிரபல டாக்டர் […]

அவரவர் உணவு அவரவர் உரிமை

“வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்துஅரலை வெண்காழ் ஆலியில் தாஅம்காடுமிக நெடிய என்னார் கோடியர்..” இந்த சங்க‌ பாடலின் பொருள் என்னவென்றால், தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – […]

எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை

யூதருக்கும் அரேபியருக்கும் ஒரே மாதிரியான அடையாளம் இருந்தது, அதாவது அவர்களும் மீசை தாடி, குல்லா ஜெருசலேம் நோக்கி தொழுதல், சுன்னத் என ஏக ஒற்றுமைகள் இருந்தன‌ யார் இஸ்லாமியர், யார் யூதன் என கண்டுபிடிக்கமுடியா அளவு சிக்கல் இருந்த நேரம், இஸ்லாமியரை அடையாளபடுத்த புதுவழி கண்டார்கள் விஷயம் ஒன்றுமில்லை, மீசையும் தாடியும் வைத்தால் யூதன், மீசையின்றி தாடி மட்டும் வைத்தால் இஸ்லாமியன் ஜெருசலேம் நோக்கி தொழுதால் யூதன், மெக்கா நோக்கி தொழுதால் இஸ்லாமியன் சிக்கல் தீர்ந்து இன்றுவரை […]

இதெல்லாம் திராவிட நியாயங்களாம்

இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பொங்குபவர்கள் யாரென்றால் திக, திமுக, திருமா இன்னபிற‌ இங்கே இட ஒதுக்கீடு வேண்டுமாம், தாழ கிடப்பவர்கள் மேலே வர வேண்டுமாம் இதைத்தான் இலங்கையில் இலங்கை அரசும் சொன்னது, ஈழதமிழர் கல்வியில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெரும்பான்மை சிங்கள சமூகம் தாழகிடக்கின்றது, அவர்கள் மேல் எழும்ப இட ஒதுக்கீடு அவசியம் அதை சொன்னவன் தர்மபாலா, சிங்களருக்கு அவன் தெய்வம் தமிழகத்தில் அவன் இனவெறியன் ஆனால் இங்கு அதே இட ஒதுக்கீட்டை சொன்ன […]

இன்னமும் கேளுங்கள்

10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம் திராவிட , அம்பேத்கரிய‌ கோஷ்டிகள் அட 10% என்ன? 100% கூட நீங்களே எடுத்துகொள்ளுங்கள், ஆனால் பிரபல வக்கீல், டாகடர் இன்னபிற ஆலோசகர்கள் என பிராமணர்கள்தான் வந்து நிற்பார்கள் கடைசியில் கட்சி வழக்கோ, கட்சி தலைவரின் உடல்நலமோ, இல்லை கட்சியின் சொத்து கணக்குக்கான ஆடிட்டிங் எனப்படும் தணிக்கைக்கு எல்லாம் பிரமாண வக்கீல், டாக்டர், ஆடிட்டர் வித்தகரிடமே வந்து நிற்கின்றார்கள் 60 ஆண்டுகால இட ஒதுக்கீட்டில் ஒரு நிபுணரை கூட உருவாக்க முடியவில்லை […]

அன்று கற்றவர்கள் இருந்த அவை

இந்த வைகோ பாராளுமன்றம் சென்றால் கிழித்தெறிந்துவிடுவார், பைபிளில் வரும் சாம்சன் போல மாளிகையின் தூணை எல்லாம் பிடுங்கிவிடுவார் என ஏகபட்ட ஒப்பாரிகள் உண்மையில் வைகோ அங்கு சென்றால் என்ன செய்வார்? ஓரு புல்லும் புடுங்கமாட்டார். இந்திராவின் காலத்தில் வைகோ பேசினார் என்றால் அவரை பேசவிட இந்திராவுக்கு அவசியம் இருந்தது. ஈழவிவகாரத்தினை பாராளுமன்றத்தில் பேசுகின்றோம் என இலங்கைக்கு கண்சிமிட்டும் அவசியம் இருந்தது, அதற்கு மேல் திமுகவினை உடைக்கும் அரசியலும் இருந்தது ஏகபட்ட திட்டங்களுடனே வைகோ பேசவைக்கபட்டார், காலம் அப்படி […]

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது, தந்தையின் முதலாம் ஆண்டு என்பது வாழ்வில் எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது தொட்டில் கட்டி ஆட்டிய தந்தைக்கு கல்லறை கட்டும் அளவு வாழ்வில் பாதியினை கடந்தாகிவிட்டது, காலம் யாருக்கு காத்திருக்கும், சூரியனை நிறுத்தி வைக்க நாம் என்ன நித்தி சாமியா? அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும், அந்த நாளில் மனம் கலங்கத்தான் செய்தது, சம்பிரதாய பிரார்த்தனைகள் மற்றும் இதர விஷயங்கள் செய்தாலும் மனம் நிறையவில்லை […]