பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவரை நினைவுகூர்வதில் பெரும் மகிழ்ச்சி

தமிழுக்கு அவ்வப்போது அற்புத கவிஞர்கள் வருவார்கள், காலம் அந்த கொடையினை வழங்கும் அவர்களிடம் தமிழ் பொங்கும், அருவியாய் கொட்டும், வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவேரி வெள்ளமாய் கொட்டும், குற்றால அருவியாய் வழிந்தோடும் எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும் அப்படி வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின்தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, […]

வாழ்க நீ எம்மான்

அந்த கண்ணதாசன் எவ்வளவு எழுதினாலும் அவனின் காதல் பாடல்கள், பெண்களின் மனதையும் அழகையும் நளினத்தையும் சொல்லும் பாடல்கள், காதல் தவிப்பினை சொல்லும் பாடல்களின் அழகே தனி. ஆயிரம் ரோஜா தோட்டங்களில் மொகலாயரின் ரோஜா தோட்டம் தனித்து நிற்பது போலவும், ஆயிரம் ஆலயங்களில் தஞ்சை ஆலயம் தனித்து நிற்பது போன்றதுமான வரிகள் அவை. காதலின் ஒவ்வொரு படிநிலைக்கும் எழுதினான் அவன். அது காதல் பூக்கும் தருணமாகட்டும், வெளிபடுத்தும் இடமாகட்டும், அதிலே கலந்து உருகுமிடமாகட்டும், அது வெற்றி என்றால் கொண்டாடும் […]

வலுவான எதிர்காலம் கொண்டவனை அறிவுடை சமூகம் விடாது

சுதா ரகுநாதன் எனும் பிரமணாள் கருப்பு ஆப்ரிக்க குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய போகின்றார் என்பது சிலருக்கு விவாதமாம் இதில் என்ன ஆச்சரியம்? பிரமாணர் பொதுவாக ஆச்சாரங்களை விட வருங்கால பாதுகாப்பினை பெரிதாக எண்ணுபவர்கள், அறிவுடை சமூகத்தின் இயல்பு அது யூத இனம் பல இடங்களில் அதைத்தான் செய்தது இந்த பிராமணர் தங்களுக்கு தோதான இடங்களில் , நல்ல எதிர்காலமுள்ள இடங்களில் கொஞ்சமும் ஆச்சாரம் அது இது என எதுவும் எக்காலமும் பார்த்ததில்லை உதாரணம் கலைஞர் கருணாநிதி வீட்டிலே […]

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே சரியில்லை

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே சரியில்லை, இதில் பங்கேற்ற யாரும் தனிதனியாக பேசினாலே தாங்காது, இவர்களை மொத்தமாக பேசவைத்தால் என்ன ஆகும்? ஒரு சுவாரஸ்யமுமில்லை, செயற்கை தனம் நன்றாக தெரிகின்றது இந்நிகழ்ச்சி சுவாரஸ்யமாக என்ன செய்யலாம்? துறைவாரியாக அனுப்பலாம் இலக்கிய பிக்பாஸ் யார்? என இந்த ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, இன்னபிற அல்ட்ராசிட்டி 15 பேரை உள்ளே தள்ளினால் எப்படி இருக்கும்? அரசியல் பிக்பாஸ் யார் தெரியுமா? என ஸ்டாலின், எடப்பாடி,தமிழிசை, சீமான், எச்.ராசா, […]

ஏனோ ஒரு மாதிரி பின்வாங்குகின்றது அந்த மழை

தென்மேற்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை, நிச்சயம் தமிழ்நாட்டுக்கு அது பலனற்றது எனினும் மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டிய மாவ‌ட்டங்களும் குமரியும் அதனால் பலன் பெறும் தஞ்சைக்கே அந்த மழை கன்னடத்தில் கொட்டினால்தான் நீர் வரும்.. தஞ்சை என்ன? இங்கு ஒவ்வொரு ஆறுக்கும் அம்மழைதான் மூலம்.. தமிழகத்தையும் ஆந்திராவினையும் தவிர மொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையினை நம்பி வாழும் பகுதிகள் அம்மழை கொட்டாவிட்டால் கங்கை பொங்காது, பொங்காத கங்கை நெருப்பில்லா அடுப்புக்கு சமம் கிட்டதட்ட 10 மாநிலங்களும் வங்கதேசமும் […]

என்சாய் சங்கீஸ்..

பரிதாபத்துகுரிய சங்கி கூட்டத்திற்கு ஒரு விஷயம் என்னும் தெரியவில்லை தெரிந்தால் சும்மா இருக்கமாட்டார்கள் , பாவம் அவர்கள்தான் என்ன செய்வார்கள்? தெரிந்தால்தானே ஆடுவார்கள். ம்ம் …நம்மால் முடிந்த உதவியினை செய்துவிடுவோம் அதாவது சங்கிகளே, உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் டிரம்பினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்திருக்கின்றார் மோடி. பிரிட்டனின் ஹெரால்ட் பத்திரிகை மக்களிடம் கணக்கெடுத்து அந்த தகவலை வெளியிட்டுருக்கின்றது ஆக உலகின் சக்திவாய்ந்த தலைவர் மோடி என ஐரோப்பா சொல்ல தொடங்கிவிட்டது இனி சங்கிகள் சும்மா இருப்பார்களா? […]

கதறுங்கடா.. நன்றாக கதறுங்கள்

இந்திரா உலகினை ஆட்டிய காலங்களில் அமெரிக்க அதிபர் நிக்சன் அவரை “சூனியகார கிழவி” என சொன்னது பெரும் சர்ச்சையானது அதாவது எப்பொழுதெல்லாம் இந்தியாவில் பலமான அரசு அமையுமோ அப்பொழுதெல்லாம் அமெரிக்கா முணுமுணுக்கும் இந்திரா காலத்துக்கு பின் வாஜ்பாய் காலத்தில் புஷ் அப்படி வம்பிழுத்தார் ஆனால் மன்மோகன் சிங் என்பவரை ஆசியாவின் மிக சிறந்த அறிவாளி என கொண்டாடும் ஏன் என்றால் அப்படித்தான், அமெரிக்க அரசியல் அப்படி இப்பொழுது மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசு என முணுமுணுப்பினை […]

இன்றைய துளிகள் 21/06/2019(1)

எரியும்டா எரியும் “அண்ணே ஒரு சின்ன புள்ள வாக்குசாவடில அவங்க அப்பா கைய பிடிச்சி எங்க விவசாயி சின்னத்துக்கு வாக்கு போட வச்சிருக்குண்ணே, அண்ணன் சீமான் அத உருக்கமா வீடியோவுல சொல்லிட்டாரு, கண்ணீர் வந்துட்டுண்ணே, நாங்க அந்த அளவு மக்கள் மனச உருக்கிட்டோம்ணே ஓஹோ அதெல்லாம் பார்க்க மாட்டீங்களே? பொறாமை புடிச்சவரு நீங்க‌, இனி என்னாகும் தெரியுமா? என்னாகும்? அதுக்கு விவரம் தெரியும் போது கண்டிப்பா எங்களுக்குத்தான் வோட்டு, அந்த குடும்பமே எங்களுக்கு வோட்டு போட வச்சிரும், […]

இன்றைய துளிகள் 21/06/2019

நிச்சயம் வன்மமிக்கது யோகாவினை கொண்டாடி தொலைக்கட்டும் ஆனால் இந்திரா பிறந்தநாளை கழிப்பறை தினம் என்பதும், ஹோவர்க்கர் நினைவுநாளை உலக யோகா தினம் என்பதும் எம்மாதிரியான விஷயங்கள் அதுதான் சரியல்ல, நிச்சயம் வன்மமிக்கது. “அண்ணே என்னெண்ணே பெரிய யோகா? நாங்கெல்லாம் எவ்வளவு செய்வோம் தெரியுமா? அப்படியா? எப்பொழுது? எல்லாம் இரவு 7 மணிக்கு பிறகு யார் உங்கள் குரு? அவரெல்லாம் எதுக்குண்ணே? வோட்கா உள்ளே போனால் யோகா தானாக வரும்..” யோகா தாரகை “யோகா தாரகை” ஷில்பா ஷெட்டியினை […]

அதிமுகவினர் அழும் அதே அழுகை..

அதிமுகவினர் எப்பொழுதும் திமுக ஊழல் கட்சி, திருட்டு கட்சி என சொல்லிகொண்டே இருப்பார்கள் அவர்களின் ஊழலை நிரூபியுங்கள் என கேட்டால் கடைசி வரை பதிலே வராது திமுகவின் ஊழல் எதில் நிரூபிக்கபட்டு யார் சிறைக்கு சென்றார்கள்? ஆதாரம் பிளீஸ் என்றால் அவர்களால் கொடுக்கவே முடியாது மாறாக அது திருட்டு கட்சி என மட்டும் கத்தி சொல்வார்கள், கோபமாக சொல்வார்கள் , கடைசியில் அழுதும் சொல்வார்கள் அப்படியாக ஈரான் ஒரு ரவுடி நாடு , தீயசக்தி நாடு என […]