பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி யாருக்காக ஆட்சி செய்கின்றார்

உலக‌ கோடீஸ்வரர் எனும் அந்தஸ்தை இழக்கின்றார் அனில் அம்பானி : செய்தி அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு டாலருக்கு அதிகமான சொத்து இருந்தால்தான் உலக பணக்காரர் வரிசையில் சேர்ப்பார்களாம் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிந்து வருவதாலும் பல சிக்கல்களில் அக்குழுமம் சிக்கியிருப்பதாலும் அந்த நிலையினை அவர் தக்க வைப்பது கடினம் என்கின்றன செய்திகள் ஆக உலக பணக்காரராக இருந்த அம்பானியே மோடி ஆட்சியில் தெருவுக்கு வந்து கொண்டிருக்கின்றார் அம்பானி அதானிக்காக மோடி ஆட்சி செய்கின்றார் என சொல்பவனை எங்கு […]

கால்பந்தாக மிதிபடுவது தமிழக மக்கள்

இந்தியாவில் 7 அணுவுலைகள் இயங்குகின்றன, தமிழ்நாட்டில் இருக்கும் கல்பாக்கம், கூடங்குளம் போக கன்னடம், மகராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான் , நொய்டா என மீதி 5 உண்டு இந்த 5 அணுவுலையின் கழிவுகளும் இதுநாள் வரை அங்கேதான் வைக்கபடுகின்றன, இன்னும் தொடரும் இப்பொழுது நாட்டின் மொத்த அணுகழிவும் கூடன்குளத்துக்கு வரும் என ஒரு கும்பல் கிளம்பிவிட்டது அப்படியானால் மீதி 5 அணுவுலையின் கழிவுகள் இதுநாள்வரை எங்கே? என்றால் நிச்சயம் அங்கேதான் கன்னடத்திலும், மராட்டியத்திலும், குஜராத்திலும், ராஜஸ்தானினும், டெல்லியிலும் உள்ள […]

நடிகர் சங்கத்துக்கு ஏதாவது அவர் செய்ய துடிப்பது புரிகின்றது

எம்.ஜி ராமசந்திரனால் என் “கலையுலக வாரிசு..” என அடையாளம் காட்டபட்டவர் பாக்யராஜ் தமிழக சினிமா உலகில் தவிர்க்கமுடியா மாபெரும் அடையாளம் அவர் நடிகர் சங்கத்தில் இதுவரை பட்டும்படாமலும் இருந்த அவர் திடீரென பெரும் கோபத்துடன் களமிறங்கிவிட்டார் நடிகர் சங்கத்துக்கு ஏதாவது அவர் செய்ய துடிப்பது புரிகின்றது, அது நியாயமானதும் கூட அவரின் நடிகர் சங்க‌ கருத்துக்களையும், நடிகர் சங்க பிரச்சினைகளையும், விஷால் ,நாசர் தரப்பின் சர்ச்சையான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் நீண்ட நெடிய சினிமா வரலாறு கொண்ட […]

மண்ணை இழந்த வலிதான்

அகதி எனும் நிலை அனுபவித்தாலன்றி தெரியாது, சொந்த மண்ணிலில் உயிர்வாழமுடியாது என்ற நிலையில் அந்நிய மண்ணுக்கு அடைக்கலமாக செல்லும் கையறு நிலை அது சாதிய கொடுமை, வன்கொடுமை, இன வெறுப்பு என எல்லாவற்றையும் தாண்டியது ஒருவனுக்கு சம்பந்தமே இல்லாத அந்நிய நாட்டில் வாழ்வது வழிதவறிய மான்குட்டி போக்குவரத்து நெருக்கடி மிக்க சாலைக்கு வந்தது போன்ற நிலை அது வழிதெரியாத பறவையொன்று பல பறவைகள் நிரம்பிய மரத்தின் கிளையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் வலி அது எதுவுமே நமக்கு உரிமையும் […]

இதெல்லாம் ஒரு தொழிலா

முதல்படம் சீனாவின் நான் ஜிங் நகரில் பெரும் சாலையில் வைக்கபட்டிருக்கும் கூடைபந்து விளம்பரம் இரண்டாவது படம் அதை காப்பியடித்து நம்ம ஊர் இயக்குநர்கள் செய்திருக்கும் அப்பட்டமான விளம்பரம் பொதுவாக விஜய் ரசிகர்கள் பள்ளி மாணவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி புத்தகங்களை கூட சரியாக புரட்டாதவர்கள் என்பதும் இயக்குநர்கள் நம்பிக்கை அவ்வளவு அறிவு இருந்தால் ஏன் விஜய்படம் பார்க்க வருகின்றார்கள் என அவராக நினைத்து கொண்டு காப்பியடிப்பார் விஜயின் ரசிகர்களும் அந்த நம்பிக்கையினை அப்படியே காப்பாற்றுவார்கள் வழக்கமாக மேற்கு […]

அது சர்வ நிச்சய உண்மை

அது சர்வ நிச்சய உண்மை பெரியாரின் திருமணத்துக்கு முன்பே திராவிட கழகத்தில் சலசலப்புகள் இருந்தன, கண்ணதாசனே தன் வனவாசத்தில் பெரியாரின் கொடுமைகள் பற்றி கலைஞர் சொன்னதாக சில வரிகளை எழுதியிருந்தார் சுதந்திரம் நெருங்க நெருங்க அண்ணாவுக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடுகள் விழுந்தன‌ சுதந்திர நாளை பெரியார் துக்கநாள் என சொல்ல அண்ணா இன்பநாள் என்றார் அந்த முரண்பாட்டு நடுவில் “அய்யா ஆணையிடுகின்றார் அண்ணா ஊளையிடுகின்றார்” என எழுதியவர் கலைஞர் மணியம்மை திருமணத்தை முன்னிட்டு அண்ணா கோஷ்டி கிளம்பியது […]

அதை எம்மிடம் எதிர்பார்க்காதீர்கள்

இப்பக்கம் அரசியல் , விளையாட்டு, சினிமா, இலக்கியம், விஞ்ஞானம், வரலாறு , நடப்பு செய்தி என எல்லாமும் போர்ஸ்ட் மார்டம் செய்யப்படும் ஒரு கட்சி , ஒரு தலைவன் அபிமானம் அப்படியெல்லாம் ஏதுமில்லை தலைவி குஷ்புவினை தவிர‌ பிடித்தவர்கள் வரலாம், இல்லையெனில் நடையினை கட்டலாம் மாறாக சங்கி, பாஜக அடிவருடி இன்னும் நயினாரிடம் பணம் வாங்கியவன் என சொல்பவன் எல்லாம் கிளம்பவும் உங்களுக்காகவும் நயினாருக்காவும் பாஜகவுக்காகவும் ஒரு பயலும் எழுதவில்லை,அது அவசியமுமில்லை நாம் எல்லாவற்றையும் எழுதுகின்றோம், அதை […]

ஒன்றுமே இல்லை என்பதுதான் சோகம்

இஸ்ரேல் அன்றிருந்தே வறண்ட பூமி, ஒரு காலத்தில் அங்கு பஞ்சம் வந்துதான் அவர்கள் எகிப்தெல்லாம் சென்று அடிமையாகியிருந்திருகின்றார்கள் அவர்கள் வரலாற்றில் பஞ்சம் அடிக்கடி எக்காலமும் உண்டு ஜோர்டான் ஆறு என்பதை தவிர வேறு ஆதாரமில்லை, அதுவும் சிரியா ஜோர்டான் என பல நாடுகளுக்கு பாத்தியபட்டது அவர்கள் கடல்நீரை சுத்திகரிப்பதில் அர்த்தமுண்டு ஆறுகளே இல்லா சவுதி அரேபியா செய்வதிலும் அர்த்தம் உண்டு தமிழக நிலை அப்படியா இருந்தது ஏரியும் கால்வாய்களும் குளங்களுமாக செழித்திருந்த பகுதி சென்னை, ஆங்கிலேயன் நீர்வழி […]

இன்றைய துளிகள் 19/06/2019

அவனே பேரரிஞன் கூத்தாடிகளை கலைஞர்கள் என அரவணைத்து அவர்களை வைத்து அரசியல் செய்த அண்ணாவினை விட‌ “டேய் கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே அது ஆபத்து.. அவனை அரசியலுக்கு இழுக்காதே” என பகிரங்கமாக எச்சரித்தானே,அந்த எம்.ஆர் ராதாவே அறிஞன் அவனே பேரரிஞன் அவனே திராவிட தலைவன் அவரு கடவுளரு..புரியூதா.. பெரியார் மண்ணுடோவ்.. திராவிடம் டோவ்… அடுத்தால் என்ன? ராஜராஜ சோழன் வெறும் மன்னன், ஆனால் தள்பதி பாகிஸ்தான் தீவிரவாதிய சுட்டுருக்கார், பேய் பிசாசு கூட சண்டை போட்டிருக்கார் அவரு […]

மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

தென் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் – மத்திய உளவுத்துறை எச்சரிக்கை இது சாதாரண எச்சரிக்கை அல்ல, ரெட் அலர்ட் எனப்படும் மிக உச்சகட்ட எச்சரிக்கை அதிபயங்கர தாக்குதலை தமிழகத்தில் குறிப்பாக கொங்கு பகுதியில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் எச்சரிக்கை சொல்கின்றது எனினும் மொத்த கவனத்தை அங்கே திருப்பிவிட்டு வேறு எங்காவது தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருத்தல் நலம் இது பயமுறுத்தும் விஷயம் அல்ல என்றாலும் இப்படி ஒரு எச்சரிக்கை […]