பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கரகாட்டக்காரன் 2?

கரகாட்டக்காரன் 2 படத்தில் நடிக்கப்போவது யார்? படக்குழு ஆலோசனை கரகாட்டகாரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போகின்றாராம் அமரன் இது நிச்சயம் சரிவராது, அந்த படத்தை அப்படியே விடுவதுதான் கங்கை அமரனுக்கு நல்லது கரகாட்டகாரன் வெற்றிக்கு முக்கியமான காரணம் இளையராஜா, கவுண்டமணி மற்றும் செந்தில் மகா முக்கிய காரணம் இளையராஜா, மற்றும் படம் வந்த காலசூழல் அக்காலகட்டம் இளையராஜாவும் கங்கை அமரனும் தொட்டதெல்லாம் துலங்கிய காலம் ஒருவகையில் அது தில்லானா மோகனம்பாள் படத்தின் அப்பட்டமான காப்பி என்றாலும், […]

கருணாநிதி இல்லாத முதல் உலககோப்பை கிரிக்கெட்

கோப்பையினை வெல்லும் என கணிக்கபடும் அணிகளில் இப்பொழுது இங்கிலாந்தும் ஒன்று என்னதான் கிரிக்கெட்டை உலகிற்கு கொடுத்தாலும் உலக கோப்பையினை அவர்கள் வென்றதில்லை பலமுறை பைனலுக்கு வந்த வரலாறு உண்டெனினும் கோப்பையினை தொட்டதில்லை இம்முறை வலுவான அணி , சொந்தமண் என களமிறங்குகின்றார்கள் முதல் வெற்றியினை பெற்றிருக்கின்றார்கள் கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்பதால் மிகபல சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.. பெரும் கிரிக்கெட் ரசிகரான கலைஞர் கருணாநிதி இல்லாத முதல் உலககோப்பை கிரிக்கெட் இது என்பது ஒரு கண்ணீர் சோகம்..

இந்தியாவுக்கு அதை அறியாமலே கொம்பு சீவி விடுகின்றது

இந்தியாவுக்கு அதை அறியாமலே கொம்பு சீவி விடுகின்றது அமெரிக்கா, ஒரு வகையில் பார்க்க போனால் இது நாட்டுக்கு அவ்வளவு நல்லதல்ல‌ சீனாவினை சீண்ட இந்தியாவுக்கு பல நவீன ஆயுதங்களை கொடுக்கின்றது அமெரிக்கா, நிச்சயம் அவை மகா நவீனமானவை சீனாவுக்கு எதிராக இந்தியாவினை ராணுவ ரீதியாக வளர்ப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம், 1962 சீனபோரின் பொழுதே ஓடிவந்து நின்றது ஆனால் அன்றைய அரசுகள் சிந்தித்தன , நேரு போன்றவர்கள் இரு பக்கமும் பகையாகும் என சிந்தித்தனர், அமெரிக்க ஆதரவினை […]

பிரியங்கா கணக்கு

காங்கிரஸில் வழக்கமாக கோஷ்டி பூசல்தான் வெடிக்கும் சத்திய மூர்த்தி பவன் முதல், டெல்லி அக்பர் ரோடு வர எங்கெல்லாம் காங்கிரஸ் அலுவலகம் உண்டோ அங்கெல்லாம் கோஷ்டி சண்டை உண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை எந்த காங்கிரஸ் அலுவலகமும் அதற்கு தப்பமுடியாது அட அலுவலகம் என்ன? கட்சி கொடி ஏற்றினால் கூட ஒரு கோஷ்டி கொடியேற்றும்பொழுது ஒரு கோஷ்டி கொடி இறக்கும் ஒரு கோஷ்டி கயிற்றில்தொங்கும், ஒரு கோஷ்டி கொடிகம்பத்தை பிடுங்கும் இன்னும் ஏக அழிச்சாட்டியங்கள் அங்கு […]

Surface to Air Missile

அடுத்த தலைமுறைக்கான SAM எனப்படும் Surface to Air Missile வகை ஏவுகனையான ஆகாஷ் 1 ஏவுகனையினை வெற்றிகரமாக சோதித்திருக்கின்றது இந்தியா ஆகாஷ் ஏற்கனவே உண்டு என்றாலும், மேம்படுத்தபட்ட வகையாக ஆகாஷ் 1 என வந்திருக்கின்றது இந்த வகை ஏவுகனைகளால் வானில் வரும் எதிரிவிமானம் ,சிறிய ரக ஏவுகனைகளை கூட தடுக்க முடியும் கலாம் காலத்தில் அக்னி,நாக்,பிரித்வி, திரிசூல், ஆகாஷ் எனபல ஏவுகனை திட்டங்கள் தீட்டபட்டன, செயல்படுத்தபட்டன‌ இப்பொழுது அது மேம்படுத்தபட்டு அடுத்த தலைமுறைக்கு வந்துவிட்டது விஞ்ஞானிகளுக்கு […]

மனோரமா

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில பெண்களே அடையாளமிட்டார்கள், ஆனால் ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள் சுந்தராம்பாள், கணம்பாள், டி.ஆர் ராஜகுமாரி என ஒரு வரிசை உண்டு. சாவித்திரி சரோஜா தேவி, சவுகார் ஜாணகி என அடுத்த வரிசை உண்டு , ஜெயலலிதா அரசியலில் நடிக்க வந்தார். அவரின் அப்போல்லோ நடிப்பினை மட்டும் உலகம் பார்க்கவில்லை மற்றபடி எல்லா நடிகைகளும் ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள் அல்லது ஓடியவர்கள் ஆனல் தமிழ் சினிமாவில் இறுதிவரை நிலைத்து நின்று […]

ஜப்பான் சென்றிருக்கின்றார் டிரம்ப்

இந்த இயக்குநர் ஹரி படத்தில் வரும் ஹீரோ வில்லன்கள் போல ஈரானும் அமெரிக்காவும் ஆக்ரோஷமாக “ஏய்ய்ய்ய்..டேய்ய்” என கத்திகொண்டிருக்கும் நேரம் ஜப்பான் சென்றிருக்கின்றார் டிரம்ப் அவரிடம் இந்த வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் கட்டபொம்மனை பற்றி புகார் கொடுக்கும் விகே ராமசாமி போல் “துரை அவர்களே, அந்த வடகொரிய பயல் நேற்றும் ஏவுகனை சோதனை நடத்தினான் துரை அவர்களே, எசமான் இவ்வளவு கண்டித்தும் அவன் இதை செய்தால் என்றால் அவ்வளவு தைரியம் அய்யா துரை சமூகம், […]

மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சை

மராட்டிய மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஓடிகொண்டிருக்கின்றது அங்கு பின் தங்கிய சமூகத்து மாணவி தாயல் பாட்வி விவகாரம் அது. அந்த மாணவி படிப்பில் சுட்டி என்பதாலும் இட ஒதுக்கீட்டு முறையாலும் மருத்துவ கல்லூரியில் நுழைந்திருக்கின்றாள் ஆனால் உயர்சாதி மாணவர்கள் அவளை சாதி ரீதியாக படாதபாடு படுத்தியிருகின்றார்கள் லட்சியத்தில் மிக உறுதியாக நின்ற அவள் முடிந்தவரை சமாளித்திருக்கின்றாள். ஆனால் ஒரு கட்டத்தில் அச்சீண்டல்களும் அவமானமும் அதிகரிக்க அதிகரிக்க தற்கொலை செய்து கொண்டாள் ஏழை பிற்படுத்தபட்ட மாணவி ஒருத்தி மருத்துவ […]

இந்தியா எதையோ கணக்கிட்டு களத்தில் இறங்குகின்றது

இலங்கையினை எப்படி எரிய வைக்க வேண்டும் என்ற ராஜதந்திரத்தில் கைதேர்ந்தநாடு இந்தியா முன்பு தமிழன் என்ற இனவிவகாரத்தை சொல்லி பெரும் நெருப்பை பற்றவைத்தார்கள், அதில் எதிர்பாரா விதமாக இந்தியாவின் கரங்களும் சுட்டுகொண்டது வேறு விஷயம் இப்பொழுது மதரீதியாக இலங்கையில் கொள்ளிவைக்கும் காரியத்தில் இறங்கி இறக்கின்றார்கள் பழைய காலத்தில் தமிழன் என்ற தொடர்பை விட சைவ சமய தொடர்பே இங்கும் அங்கும் தொப்புள் கொடியாக இருந்தது அதை மறுபடி கையில் எடுக்கின்றார்கள் சங்கிலிமன்னன் என்பவன் நம்ம ஊர் ராஜராஜ […]

ஹாய் மோடி, கங்ராட்ஸ்

ஹாய் மோடி, கங்ராட்ஸ். உன்னால மட்டும்தான்யா இப்படி எல்லாம் ஜெயிக்க‌ முடியுது அது இருக்கட்டுமுங்க ஒரு உதவி என்ன அமெரிக்க விசாவா? உடனே வாய்யா இல்லீங்க, ஜூன் 2 ஈரான்ல இருந்து வர்ற எண்ணெய நிறுத்தணும்னு சொல்லிட்ட்டீங்க. நானும் தேர்தல் முடியட்டும்னு இருந்தேன், தெரிஞ்சோ தெரியாமலோ வந்துட்டேன் ஏதாவது பண்ணுங்க எசமான் அதெல்லாம் முடியாது, சவுதில இருந்து வாங்கிக்க. அவன் நம்ம பையன் எவ்வளவு கேட்டாலும் தருவான் இல்லீங்க ஈரான பகைக்க முடியாதுங்க, வேற ஐடியா இருந்தா […]