பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜனாதிபதியாகும் வாய்ப்பு

கலைஞர் கருணாநிதிக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு முன்பு சில இடங்களில் வந்தது மிகசிறந்த அரசியல்வாதியும் , காலங்களை மிக கச்சிதமாக கணக்கிடுபவருமான அவர் தனக்கே உரித்தான வரிகளில் சொன்னார் “என் உயரம் எனக்கு தெரியும்யா” என சொல்லிவிட்டு மறுத்தார் அதாவது மாநில அரசியல்வாதியான தான் அங்கு அமர்வது ஒரு விதமான கைவிலங்கு என்பதும், பல காரணங்களுக்காக அதை விரும்பவில்லை ஆம் இந்திய தேசியத்தில் ஒருமாதிரி குறிக்கபட்ட திமுக ஜனாதிபதி பதவியில் அமரமுடியாது, அமரவைக்கபட்டாலும் ஆயிரம் சிக்கல் வரும் இதை […]

ஏன் புத்தகம் எழுத கூடாது?

நீங்கள் ஏன் புத்தகம் எழுத கூடாது, சம்பாதிக்க கூடாது என சிலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் நமக்கு அதிலெல்லாம் கொஞ்சமும் விருப்பமுமில்லை, அப்படி ஒரு தகுதி இருப்பதாக கருதவுமில்லை இதில் வீணாக எழுதுவதால் உனக்கென்ன லாபம் என்பது அவர்களின் அக்கறை.. தமிழக புராணங்களில் இரு காட்சிகள் உண்டு ஒன்று பாஞ்சாலியின் அட்சய பாத்திரம், இன்னொன்று மணிமேகலை கையில் இருந்த பாத்திரம் இரண்டும் அள்ளி அள்ளி கொடுக்குமாம் ஆனால் அது பாஞ்சாலி படைத்ததும் அல்ல, மணிமேகலை உருவாக்கியதும் அல்ல‌ எங்கிருந்தோ […]

அட்சய திரிதியை

சயம் என்றால் தேய்தல் என்று பொருள், அட்சயம் என்றால் தேயாத, குறையாத என்ற பொருள். பாரதத்தில் பாஞ்சாலியிடமும் மணிமேகலையில் மணிமேகலையிடமும் அப்படி ஒரு அட்சய பாத்திரம் இருந்ததாக சொல்கின்றது குறிப்புகள் அம்மாவசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திரிதியை, திரி என்றால் மூன்று என பொருள். ஆங்கிலத்திலும் அதுவேதான். இந்த சித்திரை மாத பவுர்ணமி போலவே இந்த பிறை தோன்றும் திரிதியையும் விஷேஷமானது அள்ள அள்ள குறையாத திரிதியை என இந்த அட்சய திரிதியை கொண்டாடபடுகின்றது இந்நாளில் பரசுராமர் […]

எண்ணெய் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன்

இந்துக்கள் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன் என்ற வெறி கொள்கையுடன் சுற்றும் பாஜக போல எண்ணெய் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன் என திரியும் நாடு அமெரிக்கா இதற்கு ரகசிய ஆதரவு ஐரோப்பிய கும்பல் ஏன்? 1967 அரபு இஸ்ரேல் போருக்கு பின் இனி இஸ்ரேலை வெல்லமுடியாது காரணம் பல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அவர்களுக்கு பின்னணி என புரிந்த அரபு நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளுக்கு எண்ணெய் இல்லை என ஸ்ட்ரைக் அறிவித்தன‌ அமெரிக்காவிடம் எண்ணெய் உண்டு என்றாலும் அதை தொட […]

அங்கிள் சைமனின் அட்டகாசம்

அங்கிள் சைமனின் அட்டகாசம் திருக்குறளை திருத்துவது வரை சென்றாயிற்று அன்னாரின் குறள்விளக்கத்துபடி மாடு என்பதை மேய் என திருவள்ளுவரே சொல்லிவிட்டாராம், ஆம் “மாடல்ல மற்றவவை” என சொல்லியிருக்கின்றாராம் மாடு என்றால் 4 கால் மாடு என அன்னார் எந்த திருகுறளில் படித்தாரோ தெரியாது, மாடு என்பதற்கு செல்வம் , உயர்ந்த பொருள் என பொருள்படும் தமிழில் கோமாதா, ஆ என்றெல்லாம் ஏகபட்ட பெயர்கள் மாட்டுக்கு உண்டு, மாடு என்பது இந்த கூட்டத்தை மட்டும் குறிக்கும் சொல் அல்ல, […]

ஈழபோராட்டம் என அதன் வரலாற்றை நோக்கினால்

ஈழபோராட்டம் என அதன் வரலாற்றை நோக்கினால் ஆப்கானிஸ்தானில் கூட நடக்காத ரத்த கொடூரங்கள் எல்லாம் இங்கு நடந்திருக்கும் அதில் விசித்திரம் என்னவென்றால் சிங்களனை விட தமிழ்புலிகளால் கொல்லபட்ட தமிழரே குறிப்பாக போராளி குழுவினரே அதிகம் இலங்கையில் முதன் முதலில் ஆயுதம் தூக்கிய குழு டெலோ (Tamil Eelam Lebarate Organisation) குட்டிமணி தங்கதுரை ஜெகன் எல்லாம் அக்கோஷ்டியே அங்கு 14 வயது சிறுவனாக வந்தவன் பிரபாகரன், துப்பாக்கியினை அவன் தொட்டுபார்த்ததே அங்குதான், அங்கு இருந்த இன்னொருவன் சபாரத்தினம் […]

வயது ஏற ஏற

வயது ஏற ஏற பல கவலைகள் அதிகரிக்கின்றன, அதில் உடல்நலம் என்பது ஒருவகை என்றால் சில முதியோர்களை பார்க்கும் பொழுது இன்னும் கவலை அதிகரிக்கின்றது உடல் நோய்களை விடுங்கள், அதைவிட முக்கியம் மனநலம் குறிப்பாக‌ ஞாபக சக்தி மங்குவதால் வரும் பாதிப்பு பல மனிதர்களை பார்க்கின்றேன் இளம் காலத்தில் மிடுக்கான காவல் அதிகாரிகளாகவும், பேராசியர்களாகவும் வலம் வந்தவர்கள் அவர்கள் ஒரு நூலகம் அளவுக்கு நினைவு சக்தி கொண்டிருந்தவர்கள், எங்கிருக்கின்றோம் என தெரியாத அளவு ஒடுங்கி அமரும் காட்சிகள் […]

நாணத்தால் தேசம் தலைகுனிகின்றது

ஆயிரம் அரசியல் இருக்கட்டும் ஆனால் ராஜிவின் மரணத்தை இங்கு கொஞ்சமும் கொச்சைபடுத்த முடியாது நிச்சயம் இலங்கை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டி இந்நாடு பாதுகாப்பாக இருக்கவே அவர் விழைந்தார், ஒரு படுபயங்கர தீவிரவாத இயக்கம் நிச்சயம் இந்திய இறையாண்மைக்கு சவால்விடும் என மிக அணுக்கமாக கணித்திருந்தார் இந்தியாவுக்கு ராஜிவ் காட்டிய வழிபெரிது இன்றைய கணிணி இந்தியாவினை அன்றே கனவு கண்டவர் அவர், அதுதான் டிஜிட்டல் இந்தியா என இவர்களால் சொல்லபடுகின்றது ஈழவிவகாரத்தில் வாஜ்பாய் என்ன மோடி கூட […]

உலக அளவில் அது அணல் வீசுகின்றது

ஒரு விஷயத்தை நீங்கள் பார்த்துவிட்டு கடந்திருப்பீர்கள், இங்கு பெட்டி செய்தியாக வந்திருக்கும் ஆனால் உலக அளவில் அது அணல் வீசுகின்றது அதாவது அமெரிக்க விமானம் ஆற்றில் விழுந்தது ஆனால் பயணிகள் எல்லோரும் காப்பாற்றபட்டனர் என விஷயம் செய்தியாக முடிந்திருக்கலாம் ஆனால் விவகாரம் சர்ச்சையானது, ஆம் சர்வதேச ஊடகங்கள் விஷயத்தை கிண்டுகின்றது அமெரிக்கா நெளிகின்றது அதாவது கியூபா அருகே குமாண்டனாமோ எனும் தீவு உள்ளது, அதில் அமெரிக்க கியூப ஒப்பந்தபடி அமெரிக்கா பலத்த சிறையினை கட்டி இருக்கின்றது கியூபாவும் […]

வருடா வருடம் சுஜாதா விருது வழங்கும் மனுஷ்

சுஜாதா ஆதிக்கசாதி இந்துத்வ எழுத்தாளர் என திமுகவின் அடிமைகள் பல பொங்குகின்றன‌ ஆனால் அவை திமுகவின் ஆஸ்தான இம்சை கவிஞன் மனுஷ் கொண்டாடும் சுஜாதாவினை, ஆம் வருடா வருடம் சுஜாதா விருது வழங்கும் மனுஷ் என்பவரை பற்றி சத்தமே இல்லை மனுஷ் என்பவர் தன்னை உருவாக்கியது சுஜாதா என பல இடங்களில் சொல்லியிருக்கின்றார், தன்னை பின்னாளில் காத்தது திமுக ஆனால் உருவாக்கியது சுஜாதா என்பதே அவரின் வாக்குமூலம் ஆக திமுக உபிக்கள் என்ன திட்டத்தில் இருக்கின்றார்கள் என்பது […]