பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதுதான் தேசிய உணர்வு

இந்த ராகுல் காந்தி நிச்சயம் வாழ்த்துக்கு உரியவர் அவரை வாழ்த்தி தீர வேண்டும் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அந்த நூறு ஆண்டு முன்பு நாட்டிற்காக செத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்றிருக்கிறார் இதுதான் நாட்டுப்பற்று இதுதான் தேசிய உணர்வு இதுதான் இந்தியன் என்ற நிலைப்பாடு தேசப்பற்று என்பதற்கு இலக்கணம் எழுதும் ஒரு பயலும் அங்கு செல்லவில்லை எல்லாம் வீணான வேடம் போலி விளம்பரம் ஒரு நல்ல இந்திய தலைவன் என்ன செய்ய வேண்டுமோ அதை ராகுல் செய்திருக்கிறார் கொஞ்சமும் […]

நாளைக்கு சித்திரை 1

நாளைக்கு சித்திரை 1 தமிழ்புத்தாண்டு வாழ்த்து என சொல்லாவிட்டால் தலைகாட்ட முடியாது, சொல்லிவிட்டால் தலைஞர் சமாதிபக்கம் செல்ல முடியாது ஆனால் சொல்லாமல் தேர்தல் நேரம் சமாளிக்கவும் முடியாது பூரா பயலும் ஒரு வெறியோடு சுற்றிகொண்டிருக்கின்றான், தொலைத்துவிடுவான் வெரி டெலிகேட் பொசிஷன்.. சத்திய சோதனை ம்ம்.. இப்படி செய்யலாம் இனி புத்தாண்டு வாழ்த்துக்கு பதிலாக‌ ஒவ்வொரு மாதபிறப்புக்கும் வாழ்த்து சொல்லிவிடலாம் , சிக்கல் இல்லை இனி புத்தாண்டே தமிழனுக்கு கிடையாது மாத பிறப்பு மட்டுமே..

பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது?

முத்துவேலருக்கு பல தலைமுறைக்கு முன்பே சமூக நீதி காத்த ஆரிய பார்ப்பானிய அட்டகாசத்தை ஒடுக்கிய திராவிட போராளி சிலை முன் கனிமொழி ஆசி பெற்ற காட்சி (அது மன்னன் சிலை, அவன் காலத்தில் அவன் கடவுள்,அவனே சர்வாதிகாரி, அவனே பாசிஸ்ட் பார்ப்பான் முதல் சூத்திரன் வரை அவனுக்கு கட்டுபட்டே இருந்தனர், திமுக குறீயிட்டில் சொல்ல வேண்டுமென்றால் அவன் ஆதிக்கவாதி, அடக்குமுறையாளன் இதை எல்லாம் சொன்னால் அவர்கள் பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது? அதுவும் தேர்தல் நேரத்தில். ஒரு பாசிஸ்ட் […]

உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள்

39 தொகுதிக்கு ஏகபட்ட‌ வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றார்கள் இதில் நாடாளுமன்றத்தில் உருப்படியாக பேசகூடிய வேட்பாளர்கள் யாரென பார்த்தால் வெகு சொற்பம் கனிமொழி, தயாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஈவிகேஸ் இளங்கோவன், சு.வெங்கடேசன் என சில முகங்கள்தான் இருகின்றன அதுவும் திமுக கூட்டணியில்தான் இருகின்றன‌ அன்புமணி போன்ற சிலமுகங்கள் எதிர்தரப்பில் இருக்கின்றன‌ ஆனால் அதே கூட்டணியில்தான் ஜெகத்ரட்சகன் போன்ற சர்ச்சை நபர்களும் இருக்கின்றார்கள், துரைமுருகன் மகன் மக்களவையில் சம்பள பணம் எண்ணிகொண்டிருந்தால் நன்றாயிராது தரமில்லா திமுக வேட்பாளர், ஏற்கனவே […]

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது

தும்பிகளுடன் பேசுவது எப்பொழுதுமே சுவாரஸ்யமானது “ஏண்டா உங்க இலக்கு இனவிடுதலை ஆமாண்ணே இனம்ணே காப்பாத்தணும்ணே இந்தியா உங்களுக்கு ஏற்புடையது அல்ல, ஈழ அழிவுக்கெல்லாமும் தமிழக சீரழிவுக்கெல்லாம் இந்தியா காரணம் கண்டிப்பாண்ணே இப்படித்தான் உண்மை சொல்லணும் பின்ன ஏன் இந்த எம்பி தேர்தலில் நிற்கின்றீர்கள்? டெல்லிக்கு சென்று என்ன செய்வீர்கள்? அண்ணே இது உரிமை மீட்புண்ணே டெல்லிய ஆட்டிருவோம் சரி அதெல்லாம் அப்புறம்டா அங்க போய் என்ன செய்வீங்க? கச்சதீவு மீட்பு , அணுவுலை முடக்கம் இப்படி எல்லாம் […]

தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் என்னென்ன விருதெல்லாம் வருமோ?

ரஷ்யாவில் பல விருதுகள் உண்டு சில சோவியத் காலம் சில அவர்களின் புகழ்பெற்ற அரசனான பீட்டர் காலத்தில் ஏற்படுத்தபட்டது அப்படி பீட்டர் த கிரேட் எனும் புகழ்பெற்ற ரஷ்ய மன்னன் அந்த விருதினை அறிவித்தான் அதன் பெயர் “ஆர்டர் ஆப் ஆன்ட்ரூ” அதாவது அந்திரேயா அல்லது ஆன்ட்ரு எனப்படும் புனிதரை கொண்டாடிய ரஷ்ய திருச்சபையின் உருவில் கொடுக்கபட்ட விருது அது தோமா இந்தியாவுக்கான அப்போஸ்தலர், பீட்டர் வாடிகனுக்கான அப்போஸ்தலர் என்பது போல ஆன்ட்ரு ரஷ்யாவுக்கான அப்போஸ்தலர் ஆண்ட்ரு […]

நாட்டுக்கு நல்லது

இந்த வருடம் இந்த குருத்து ஞாயிறு பெரிய வெள்ளி எல்லாம் தேர்தலையொட்டி வருகின்றது பொன் ராதாகிருஷ்ணன் குருத்தோலையுடன் “ஓசான்னா..” பாடபோகின்றார் அப்படியே பெரிய வியாழன் கிறிஸ்தவ சடங்கான பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் 12 பேருக்கு என்ன 12 ஆயிரம் பேருக்கும் பாதம் கழுவி முத்தி செய்ய அவர் ரெடி தமிழிசை அக்கா முக்காடு இட்டுகொண்டு “பொறுத்தருளும் கர்த்தாவே எனது ஜனத்தின் பாவங்களை பொறுத்தருளும்” என சிலுவை பாதை சொல்ல போகின்றது “உம் ரத்ததால் சிகப்பு தாமரை மலரட்டும் […]

வழக்கம் போல காணவே இல்லை..

ராஜிவ் கொலைவழக்கு பற்றி ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில் இப்படி ஒரு காட்சி வரும் இந்த சின்ன சாந்தன் என்பவன் இப்படி சொல்வான் “அய்யா அவர் யாரென்று தெரியாது வெள்ளை ஆடை அணிந்து வருவார், அவரும் சிவராசனும் வை.கோ அடுத்த முதலமைச்சர் என்பதையும் அவர் முதலமைச்சர் ஆனபின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சீரியசாக பேசிகொண்டிருப்பார்கள்” கவனியுங்கள் சீரியசாக பேசுவார்களாம் என்னது வைகோ முதலமைச்சராவார் என அந்த புலிகூட்டம் அவ்வளவு நம்பியதா , பின்னர் ஏன் மொத்தமாக அழிந்துபோக மாட்டார்கள்? […]

தேர்தல் துளிகள் 12/04/2019(1)

‘ஆக’ ன்னு சொல்லாம அடுத்த வார்த்தை ஸ்டாலினை பேச சொல்லுங்க பார்ப்போம் : சீமான் ராசா, அவர் உளறினாலும் உண்மையினை உளறுகின்றார் நீர் கத்தி கத்தி பேசினாலும் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை அவர் ஆக என பேசுவது இருக்கட்டும், நீர் ஒரு உண்மையினை பேசிவிடும் பார்க்கலாம் என்னதான் தமிழகத்தில் தாமரை மலராது கருகும் என திமுகவினர் சொல்லிகொண்டே இருந்தாலும், கலைஞர் வீட்டில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது ஆம் முக ஸ்டாலின் மகளின் பெயர் “செந்தாமரை” அக்கா […]

தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல

“தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல; விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,” என தி.மு.க., தலைவர் ஸ்டாலின்… தேர்தல் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் பொய் சொல்ல வைக்குமா? திராவிட நாடு பத்திரிகையினை விடுங்கள் “அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” என் பரபரப்பு வாழ்க்கையினை தொடங்கினார் கலைஞர் புராணங்களும் இதிகாசங்களும் அவரிடம் படாதபாடு பட்டன‌ ராமனின் கதை என இலக்கிய சுவை மிகுந்த […]