பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 18/03/2019 (1)

கடும் முயற்சி சாதி அடையாள தலைவர் என்ற அபிமானத்தை மாற்ற கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் தினகரன் இதனால் தினகரனின் கிட்னியின் கிட்னிகள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றன, இது மறவர் கட்சி அல்ல நாடாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கின்றோம், இது சாதிமதற்ற கட்சி என கிட்னிகளுக்கு ஏக மகிழ்ச்சி “ஆக பணம் நிறைய வைத்திருந்தால் எந்த சாதியாலும் உங்களுக்கு சீட் கொடுக்க தயக்கமே இல்லை, அப்படித்தானே?” என கேட்டால் அவர்களிடம் பதிலே இல்லை வாழ்வா? சாவா? அமெரிக்க வெளியுறவு துறையோ, […]

சமூக நீதி?

இந்த தேர்தலில் 7 தனி தொகுதிகள் உண்டாம், அதாவது தலித் வேட்பாளர்கள் மட்டும்தான் அதில் நிற்கலமாம் சரி மீதி உள்ள 32 தொகுதிகளின் நிலை என்ன என்றால் அதிலும் தலித் வேட்பாளர்கள் தடையின்றி நிற்கலமாம் சில விஷயங்களை நோக்கினால் ஸ்மார்ட் போனை கண்ட சிவகுமார் போல் கோபம் வரத்தான் செய்கின்றது ஆனால் இதை எல்லாம் பற்றி பேசினால் சமூக நீதிக்கு எதிரான சதிகாரன் ஆகிவிடுவோம்

என்ன செய்தது?

ஈழதமிழர்கள் கொல்லபடும் பொழுது பாஜக என்ன செய்தது :அங்கிள் சைமன் வாய்யா வாய்யா.. ஒரு கட்சி விடாமல் அடிவாங்க வேண்டும் அப்படித்தானே 1987ல் கலைஞரின் டெசோவில் வாஜ்பாயும் இருந்தார், பிரபாகரன் சகோதர கொலைகளில் , தமிழ் போராளிகுழுக்களை கொல்ல தொடங்கிய பொழுது இனி ஈழமும் உருப்படாது பிரபாகரன் லட்சகணக்கானோரை சாகடிக்காமல் போகமாட்டான் என சொல்லிவிட்டு ஒதுங்கியவர் வாஜ்பாய் ஆம் பாஜகவும் ஒரு காலத்தில் ஈழதமிழருக்கு ஆதரவாக இருந்தது, அதை கெடுத்தவன் உங்கள் அண்ணன் பிரபாகரன்

தென்னக தொகுதிகள் – பா.ஜ.க

கன்னியாகுமரி, சிவகங்கை, துத்துக்குடி ராமநாதபுரம் என தென்னக தொகுதிகளை குறிவைத்து நிற்கின்றது பாஜக‌ கன்னியாகுமரி, சிவகங்கை, தூத்துகுடிக்கு வேட்பாளர்கள் தெரிவாகிவிட்டது, அதில் சிவகங்கையிலும் தூத்துகுடியிலும் அக்கட்சி டெப்பாசிட் இழப்பதும் உறுதியாகிவிட்டது கோவையிலும், குமரியிலும் அவர்கள் வெல்ல வாய்ப்பு உண்டு சரி இந்த ராமநாதபுரத்தில் நிறக போவது யார்? எல்லா தலைவர்களும் வந்தபின் யார் மீதி இருக்கின்றார்கள்? எமது ஊகம் சரியாக இருந்தால் நயினார் நாகேந்திரன் அந்த ராமநாதபுரத்தில் நிற்கலாம் சாதி, பணம் , பக்தி என பல […]

இன வெறி பயங்கரவாதம்

நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலில் ஒரே ஒருவனை மட்டும் குற்றவாளி என அறிவிக்கின்றார்கள், மீதி 20 பேரும் விடுதலையாம் என்ன காரணத்திற்காக சண்டாளன் சுட்டிருக்கின்றான் என்றால் இது “இனவெறி பயங்கரவாதம்” ஆம் கருப்பர்கள் கொல்லபட வேண்டியவர்கள், வெள்ளையர்கள் ஆளபிறந்தவர்கள் எனும் அந்த பழைய வெறியில் ஊறியவன் அந்த வெறியிலே சுட்டிருகின்றான் இவ்வளவிற்கும் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் குடியேற்ற நாடுகள். வெள்ளையருக்கு என்ன உரிமையோ அது மற்ற இனங்களுக்கும் உண்டு ஆனால் ஆளபிறந்த குணம் கொண்டவர்கள் அல்லவா? சுட்டுவிட்டார்கள் இந்த இஸ்லாமிய […]

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு

எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு, அதை மீறினால் சிக்கல்தான் தன் எல்லையினை மீறிய அலெக்ஸாண்டர் 33 வயதிலே செத்தான், ஜெர்மனிக்கு மன்னனாக வாழ்ந்திருக்க வேண்டிய ஹிட்லர் எல்லை மீறி ரஷ்யாவிடம் அடிவாங்கி செத்தான் ஏன் மெரினா புரட்சியே ஜல்லிகட்டுக்கு அனுமதி வழங்கியபின்னும் இளநீர், மோர் இன்னும் என்னென்னமோ சொல்லி திசைமாறி வன்முறையாய் முடிந்தது இந்த பொள்ளாச்சி விவகாரமும் அப்படித்தான் அறிவுமயங்கி இல்லை அஞ்சி இல்லை ஏதோ ஒரு நெருக்கடியில் அந்த கயவர்களிடம் பெண்கள் சிக்கியிருக்கின்றார்கள் நடக்க கூடா விஷயமெல்லாம் […]

இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?

காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்தது என இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன, மிக பெரிய பொய் இது வரலாற்றில் என்ன நடந்தது? வெள்ளையன் ஆட்சி எப்படி முடிந்து இந்தியா பிறந்தது? அதுவும் உலகபோர் எனும் உலகமே தரித்திர கோலத்தில் நின்ற நேரமது ஆம் பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன் அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு […]

வரலாற்றிலே புதிது

நாம் கணித்ததுதான் நடந்தது நெல்லை தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்துவதில் திமுக பலத்த யோசனைக்கு தள்ளபட்டிருக்கின்றது, உத்தேச வேட்பாளர் என இருவர் பெயரை வெளியிட்டிருக்கின்றார்கள் இது அரசியல் வரலாற்றிலே புதிது அதாவது நெல்லை திமுகவில் நாடார் வோட்டு மட்டும் வெல்லாது, ஆனானபட்ட சரத்குமாரே புகழின் உச்சியில் நின்றபொழுது தொகுதி அது அப்படிபட்ட திமுகவில் ஏகபட்ட கோஷ்டிகள் உண்டு, ஆவுடையப்பன், அப்பாவு இன்னும் ஏக கோஷ்டிகள், இது போக அவ்வப்போது வந்து செல்லும் கருப்பசாமி பாண்டியன் என பல‌ இதில் […]

நடிகர் & சன் ஆச்சர்யம்

ரஜினி அமைதியாய் இருப்பதில் அர்த்தமுண்டு, அஜித்குமார் என்பவர் அமைதியாய் இருப்பதிலும் அர்த்தமுண்டு ஆனால் அந்த நடிகர் & சன் அமைதியாய் இருப்பதுதான் ஆச்சரியம் பாஜகவினாலும் அதிமுகவினாலும் விஜயும் அவர் தந்தையும் பட்டபாடு கொஞ்சமல்ல‌ ஆனால் அவர்களுக்கு ஆணி அடித்து புதைக்க வேண்டிய நேரத்திலும் ஏன் அமைதியாய் இருக்கின்றார்கள் என்றால் அதுதான் அரசியல் இப்பொழுது வந்தால் திமுக காங்கிரஸிடம் சிக்கி கொள்வோம் என்றும், பின்னொருநாளில் திமுகவும் காங்கிரசும் தந்தை மற்றும் மகனின் காலில் விழுந்து கதறவேண்டும், தங்களை மாபெரும் […]

மதுரையில் சு.வெங்கடேசன்

மதுரையில் சு.வெங்கடேசன் எனும் வரலாற்று எழுத்தாளர் நிற்பது வரவேற்கதக்க விஷயம் மதுரை எனும் மிக புராதணமான ஊரின் வரலாற்றையும் கீழடி போன்ற பகுதிகளின் ஆய்வுகளையும் வெளிகொண்டு வர அப்படினயான ஆட்கள் டெல்லிக்கு சென்றே தீரவேண்டும் அவரை முழு மனதொடும் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆதரிக்கின்றோம், அவர் வெற்றிபெறட்டும் மதுரை அதற்குரிய இடத்தை உலகில் பெறட்டும் கம்யூனிஸ்டுகள் செய்திக்கும் மிகபெரும் நல்ல விஷயம் இது, என்ன இருந்தாலும் கோடிகள் இல்லாதோரும் தகுதி இருந்தால் வாய்பளிக்கபடும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள் ஆரியபடை […]