பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கரும்பு விவசாயி சின்னமாம்

மெழுவர்த்தி சின்னம் பிடுங்கபட்டு அங்கிள் சைமன் கட்சி இருட்டில் தள்ளபட்டது, விடுவாரா சைமன் இப்பொழுது புதிய சின்னத்தை வாங்கிவிட்டார் அது கரும்பு விவசாயி சின்னமாம் இவர்கள்தான் கரும்பு விவசாயம் சரியில்லை, சீனி சரியில்லை , மாட்டு எலும்பெல்லாம் கலக்கின்றார்கள். நாங்கள் ஒரு செடியின் விதையிலிருந்து இயற்கை சர்க்கரை தயாரிப்போம், பனங்க் கருப்பட்டி எனும் இயற்கை சர்க்கரை கொடுப்போம் என என்னவெல்லாமோ சொன்னார்கள் ஆனால் விதி மறுபடி கரும்பு வடிவிலே வந்திருக்கின்றது, இனி என்னாகும்? அங்கிள் சைமன் கோஷ்டி […]

கள்ளழகர் திருவிழா

கள்ளழகர் திருவிழா நிச்சயம் மதுரைக்கு மட்டுமான திருவிழா அல்ல‌ கிட்டதட்ட 5 மாவட்ட மக்கள் திரளும் பெருவிழா, தென் தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டங்களில் ஒன்று, பல லட்சம் மக்கள் கூடும் பெருவிழா அது அலகாபாத் கும்பமேளா என்றால் அங்கு அன்று தேர்தல் நடத்தபடுமா? காசியில் விழா என்றால் நடத்துவார்களா? நிச்சயம் இல்லை, வடக்கே ஒரு நியாயம் தெற்கே ஒரு நியாயம் என்பதெல்லாம் சரியல்ல‌ அந்த தேர்தலை கொஞ்சம் முன்னரோ இல்லை பின்னரோ மாற்றினால் மக்களுக்கு இரு திருவிழாக்களையும் […]

கருப்பு எம்ஜிஆர்

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார், ஆனால் பேசமாட்டார்- சுதீஷ் ஆக கருப்பு எம்ஜிஆர் முன்பொரு காலத்தில் அந்த எம்ஜிஆர் எப்படி இருந்தாரோ அந்த நிலைக்கு சென்றுவிட்டார் என்ன ராசியோ தெரியவில்லை சின்ன எம்ஜிஆர் கம்பி எண்ணிகொண்டிருக்கின்றார், கருப்பு எம்ஜிஆர் பேசமுடியாமல் ஆகிவிட்டார் இன்னும் பல அழிச்சாட்டிய எம்ஜிஆர்களை காணவே இல்லை, அவர்களும் செத்திருக்கலாம் அந்த மனிதரின் பெயர் ராசி அப்படி போலிருக்கின்றது

உலகில் மறுபடியும் பரபரப்பு

மிக அமைதியான நாடு நியூசிலாந்து, பெரும் வம்பு சண்டைக்கு எல்லாம் செல்லாது ஆனால் மனிதாபிமான விஷயங்களுக்கு பாடுபடும் ஒரு நல்ல நாடு அந்த நாட்டையும் சண்டாள தீவிரவாதம் விட்டுவைக்கவில்லை, இன்று அங்கும் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது முதல் தீவிரவாத தாக்குதலை தன் நாட்டில் எதிர்கொண்டிருகின்றது நியூசிலாந்து உலகில் மறுபடியும் பரபரப்பு தொற்றிகொண்டிருக்கின்றது

அவனது அமைச்சரவையே காட்டும்

“கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும்,கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி,தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம்மலைப் பெயல் காட்டும் துணை..” ஆற்றில் வரும் பெருவெள்ளம் மலையில் பெய்த மழையின் அளவினை சொல்லும், நல்ல தலைவனின் கல்வியின் அளவை அவன் நிர்வாகத்தை, செல்வ‌ பெருக்கத்தை நீதி கூறும் முறையையும் அவனது அமைச்சரவையே காட்டும்

தேர்தல் துளிகள் 15/03/2019(1)

தங்கபாலு நேரடியாக உண்மையினை மேடையில் சொல்லிவிட்டார் மற்ற காங்கிரசார் அறிக்கை என்ற பெயரில் சொல்வார்கள் ஆம், ஒருநாளும் டெல்லியின் உண்மையான கருத்தை இங்குள்ள காங்கிரசார் ஒழுங்காக புரிந்துகொண்டதுமில்லை இங்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுமில்லை பாஜக நிலையும் இதுவேதான் உண்மையினை மறைக்காமல் மேடையிலே சொல்லிவிட்ட தங்கபாலுவுக்கு வாழ்த்துக்கள் அதெல்லாம் இருக்கட்டும் ராகுல்காந்தி “தலைவிக்கு சீட் இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட…” “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பிகாமம் செப்பாது கண்டது மொழிமோபயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்செறி எயிற்று […]

சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

மும்பை.சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய நடை பாதை பாலம் சரிந்து 7 பேர் பலி 30 காயம் அந்த நிலையத்தை கட்டியது வெள்ளையன் அதற்கு விக்டோரியா டெர்மினல் என பெயரும் வைத்தான் இந்த சிவசேனா கோஷ்டி பெயரை மட்டும் மாற்றியது மராமத்து பணிகளை செய்யவே இல்லை, அதை எல்லாம் செய்ய பிரிட்டிஷ்காரனா வருவான்? பிரிட்டிஷார் போல் பராமரிக்காமல் , சும்மா பெயரை மட்டும் மாற்றுவது என்பது அயோக்கியதனம், எதற்கும் சென்னை சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

அக்கா கேட்ட கேள்வி

அக்கா தமிழிசையினை எப்படி கலாய்த்தாலும் இப்பொழுது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு காங்கிரசாரிடமே பதில் இல்லை ராகுலை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் நிச்சயம் காட்டமான ஆனால் படுநியாயமான கேள்விகள் பழைய வரலாறுகள் குறிப்பாக இனதுரோகி என உங்களை அழைத்த சக்திகளுடன் உங்களுக்கு கூட்டணி ஏன் என்பதெல்லாம் காங்கிரசார் கேட்க வேண்டிய கேள்விகள் ஆனால் பாஜக தலைவரான தமிழிசை கேட்டிருக்கின்றார் அக்கா கேட்ட கேள்வியில் மிக அருமையான கேள்வி காமராஜரை ஏன் காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? என்பது இதற்கு ராகுலிடமும் பதில் […]

பின்னாளில்தான் அறியபடுவார்கள்

“பத்தினி, சேவகன், பாத்து இல் கடுந் தவசி,பொத்து இல் பொருள்-திறத்துச் செவ்வியான், பொத்து இன்றி வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான், – இவர் செம்மை செத்தால் அறிக, சிறந்து..” பத்தினியும், சேவகனும், குற்ற மில்லாத கடும் முனிவரும், , நல்ல அரசனும், சான்றோனும் பின்னாளில்தான் அறியபடுவார்கள்

நினைவில் வைத்து கொள்வது நல்லது

“பண்டாரம், பல் கணக்கு, கண்காணி, பாத்து, இல்லார், உண்டு ஆர் அடிசிலே, தோழரின் கண்டாரா, யாக்கைக்குத் தக்க அறிவு இல்லார்க் காப்பு அடுப்பின்,-காக்கையைக் காப்பு அடுத்த சோறு..” பண்டாரங்களையும், பூசாரிகளையும், தேவதாசிகளையும் , கணக்கு பிள்ளையினையும் மிகுந்த காவலோடு கண்காணிக்க வேண்டும் இல்லாவிட்டால் சோற்றுக்கு காக்கைகளை காவல் வைத்ததது போல் நிலமை சிக்கலாகிவிடும் இதை அதிமுக கூட்டணி நினைவில் வைத்து கொள்வது நல்லது