பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் துளிகள் 12/03/2019 (1)

” அங்க உங்கள விட்டா யாரு இருக்கா?” அட போடா கிறுக்கு பயலே.. என்ன கொண்டாடின அளவுக்கா உன்ன தமிழ்நாட்டு பய கொண்டாடிட்டான்? எப்படி எல்லாம் என்ன இந்த தமிழ்நாடு கொண்டாடிச்சின்னு உனக்கு தெரியுமா? எம்ஜிஆரை விட எனக்கு ரசிகன் அதிகம்ப்பூ.. எனக்கு தேர் என்ன? 60 பவுணுல சங்கிலி என்ன? எப்படி எல்லாம் இருந்தேன் தெரியுமா? வீட்டை விட்டு நான் வெளியே வந்தா, கன்னியாகுமரி வரை அதே கூட்டம் இருக்குமே , எனக்காக கலையாம இருக்குமே, […]

இந்த இலங்கையர்களை எப்படி விடுவிக்க முடியும்?

அகில உலகிலே தன் சொந்த நாட்டில் வந்து தாக்குதல் நடத்திய அந்நியநாட்டு தீவிரவாதி 4 பேரையும் விடுவிக்க சொல்லும் ஒரே கோஷ்டி இதுதான் தன் கணவன் ராணுவத்தில் இறந்தபின் தன் மகனையும் இந்திய ராணுவத்திற்கு அனுப்பும் மனைவியர் வாழும் நாடு இது தன் ஒரு மகன் நாட்டிற்காக செத்தால் அடுத்தமகனை அனுப்பும் தேசமிது அந்த நாட்டில் இந்த அற்புதம்மாள் போன்றவர்கள் இருப்பதும் உண்டு அற்புதம்மாள் மேல் ஒரு வருத்தம் எப்பொழுதும் உண்டு, ஒரு நாளாவது அம்மணி தன் […]

அடேய் அதிகம் பேசாதீர்கள்

அடேய் அதிகம் பேசாதீர்கள் இந்திய வரலாற்றிலே ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் உபரி நிதிக்கு ஆட்டையினை போட முயன்ற ஒரே அரசு இதுதான் ரிசர்வ் வங்கி ஆளுநர்களுடன் கால்பந்து ஆடிய ஒரே அரசு இதுதான் போரும் இல்லை, உலக பொருளாதார நெருக்கடியுமில்லை, கச்சா எண்ணெய் கடும் உயர்வுமில்லை பெரும் இயற்கை அழிவுமில்லை அவ்வாறான ஒரு இடர்பாடுமே இல்லா நேரத்தில் உபரி நிதியினை கோரினால் இவர்களின் நிர்வாகமும் ஆட்சியும் எப்படி இருந்திருக்கும்?

முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம்

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்களாம், இனி முகநூல் டிவிட்டரில் எல்லாம் அரசியல் பேச கூடாதாம், பல வித எச்சரிக்கைகள் இந்திராவின் மிசா காலங்களில் அரசியல் கூட்டங்களுக்கு தடை என்றபொழுது கல்யாண வீடுகளும், காது குத்து வீடுகளும் அரசியல் மேடைகளாயின‌ இன்னும் என்னென்ன வழியில் எல்லாமோ தமிழகத்தில் அரசியல் பேசி ஆனானபட்ட இந்திராவுக்கே தலைசுற்ற வைத்த தமிழகம் இது மோடி ஆண்ட கதை என பழங்கதையினை சொன்னால் அது அரசியலா ஆகும்? வரலாற்று கதைதான் ஆகும் தமிழகம் இதற்கெல்லாம் அஞ்சாது […]

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை

பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? – ஸ்டாலின் அறிக்கை மிக சரியான கேள்வியினை எழுப்புகின்றார் ஸ்டாலின், தமிழகத்தில் பல கட்சிகள் கள்ள மவுனம் காக்கும் பொழுது எதிர்கட்சி தலைவர் மிக பொறுப்பான கேள்வியினை கேட்டிருப்பது மிக நல்ல விஷயம் நீதி கிடைக்கும் வரை அவரின் போராட்டம் தொடரட்டும், அவருக்கு துணை நிற்க வேண்டியது தமிழகத்தார் கடமையாகும் தன் இயலாமையின் உச்சத்தில் அப்பெண் கண்ணீர் மல்க “உன்னை நம்பித்தானே வந்தேன்?” என்றும், […]

சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலை

இப்பொழுதும் பொள்ளாச்சி கொடூர சம்பவத்தில் எந்த கட்சியினை இழுக்கலாம் என அரசியல் செய்ய சிலர் ஆசைபடுகின்றார்களே தவிர, நடந்துவிட்ட கொடூரத்தை பற்றி யாரும் பெரிதாக கவலைபட்டதாக தெரியவில்லை இது நிச்சயம் சமூக சீர்கேடு அல்லது இன்னும் பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லா நிலையின் எதிரொலியே அன்றி வேறல்ல‌ நிச்சயம் பாதிக்கபட்ட பெண்கள் தப்பி வந்ததும் அவர்கள் மனம் துடித்திருக்கும், தன் நிலையினை யாரிடாமாவது சொல்லி அவர்களை பழிவாங்கவோ இல்லை தன் மன கொதிப்பிற்கு பரிகாரம் தேடவோ அவர்கள் துடித்திருப்பார்கள் […]

Where Are You?

இது மிகபெரும் விவகாரமாக வெடித்துவிட்டது, இனியும் மீடியாக்களும் அரசும் மவுனம் காப்பது சரி அல்ல‌ நிர்மலா தேவி விவகாரம் போல பல மர்மங்கள் இருக்கும் போல தெரிகின்றது நிர்மலா தேவி என்றால் பொங்கிவந்து விசாரணை அறிக்கை அமைத்த கவர்ணரை இப்பொழுது காணவே இல்லை மிஸ்டர் கவர்ணர், Where Are You?

தேர்தல் துளிகள் 10/03/2019

அன்புமணி, பிரேமலதா வரிசையில் பத்திரிகையாளர்களிடம் சிக்க வேண்டியவர் வைகோ மிகபெரும் குற்றசாட்டுகளை திமுகமேல் சாட்டியவரும், ஏன் அடியெல்லாம் கூட வாங்கியவர் அவர்தான் ஆனால் அவரை யாராவது பேட்டி எடுப்பார்களா? குறுக்கு கேள்வி கேட்பார்களா என்றால் இல்லை ஏன் என்றால் அப்படித்தான். அதுதான் பத்திரிகை அரசியல் என்ன விட்டு அம்மா கட்சி கூட போகாத விஜி………” “இந்த விஜயகாந்த எல்லோரும் தெருவுல போட்டு அடிச்சாங்க, அப்பவும் அவருக்கு நான் இருக்கேன்னோ, என் கூட கூட்டணி வைக்கணும்னோ தோணலியே ஏன்? […]

அரசியல் கள்ளத்தனம்

தமிழ்மொழி தேர்வு எழுதமாட்டோம், தமிழ் வேண்டாம் உருது மொழிதான் எங்களுக்கு வேண்டும் என ஆம்பூர் பக்கம் இஸ்லாமியர் ஆர்பாட்டம் செய்கின்றார்களாம் இந்த திமுக உட்பட தமிழுணர்வு, தமிழ் காக்கும் இயக்கங்கள் எல்லாம் இப்பொழுது வாய்திறக்கும் என நினைகின்றீர்கள்? தமிழுணர்வு கோஷ்டி , பெரியார் கோஷ்டி எல்லாம் மகா அமைதி இதுவே இந்திபடி என்றால் பொங்குவார்கள், கொழும்பில் சிங்களன் ஏதும் சொன்னால் பொங்குவார்கள் ஆனால் தமிழ்நாட்டில் இஸ்லாமியர் தமிழ் வேண்டாம் என சொன்னபின்பும் அமைதிகாக்கின்றார்கள் அல்லவா? இதுதான் அரசியல் […]

மிகப் பெரிய மகளிர் வன்கொடுமை

பொள்ளாச்சி பக்கம் நடந்திருப்பது மிகபெரிய மகளிர் வன்கொடுமை மகளிருக்காக பொங்கும் அமைப்புகள் ஏதும் இங்கு வராது, அந்த சிறுமி ஆசிபாவுக்கு நிகரான கொடுமைகள் இங்கு நடந்திருக்கின்றது தேர்தல் இன்னபிற பரபரப்பில் இருக்கும் பத்திரிகைகளும் இன்னும் பல மீடியாக்களும் இதை கண்டுகொள்ளவில்லை எனபதுதான் சோகம்.. முகநூல் உட்பட பல சமூக வலைதளங்களில் வலைவிரித்த கும்பல் பெண்களை ஏமாற்றி பெரும் பாதகத்தினை செய்திருகின்றது குற்றவாளிகள் அப்படியே மறைக்கபட்டு அப்படியே தண்டனை பெறாமல் வெளிவரவும் கூடும் கொடநாட்டு கொலைகளே மறைக்கபடும் மாநிலத்தில் […]