பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நம்மள ஏன் கண்டுக்கல?

நானும் திமுகவையும் அதன் தலமையினையும் எப்படி எல்லாம் திட்டிருக்கேன் ஒன்னா ரெண்டா.. எவ்வளவு மோசமா நானும் தம்பிகளும் என் தமிழ்பிள்ளைகளும் திட்டியிருக்கோம் இப்போ தேமுதிகா கட்சின்னா மோதுறவங்க, நம்மள ஏன் கண்டுகிடவே இல்ல… ஒரு வார்த்தை கூட இல்லை, ஒரு வசவு கூட இல்ல. சுத்தமா நம்மள கண்டுக்கிட்டது இல்ல அவ்வளவுதான் நம்ம மரியாதையோ.. ரொம்ப வெட்கமா இருக்கு, இனி அண்ணன் கொடுத்த சயனைடு குப்பிய கடிச்சிற வேண்டியதுதான்

முதல்வராகும் ஆசை

நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவியுடன் வீற்றிருந்தான், சோழமன்னன் தன் மனைவியோடு வீற்றிருந்தான், ஏன் ராவணனே தன் மனைவி மண்டோதரியுடன் வீற்றிருந்தான் என்ற காட்சிகள் பழங்காலத்தில் உண்டு பின்னாளில் அது மாறிற்று மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு தமிழகம் மாறிய புதிதில் ராஜாஜி போன்ற தலைவர்கள் மனைவியோடு வந்தவர்கள் அல்ல‌ காமராஜருக்கு மனைவியே கிடையாது, ஆம் ஒரு மனைவி கூட கிடையாது அண்ணாவின் மனைவி ராணி என்றொருவர் உண்டு என்பதே சிலருக்கு தெரியாது முதன் முதலில் மனைவியோடு வலம் வந்தவர் புரட்சி […]

என் வலி எனக்கு தான் தெரியும்

“கலைஞர் தொட்டது எதுவும் உருப்படாதுண்ணு ஒருநாள் ஆத்திரத்தில சொன்னேன் உன் கல்யாணத்தையே நான் தான் நடத்தி வச்சேன்னு சட்டுன்னு உண்மைய‌ சொல்லிட்டாரு அவரு இப்போ என் பொண்டாட்டி பேட்டி பார்த்த பிறகு புரியுதாடா, நான் ஏன் அப்படி சொன்னேன்னு. அவர் பண்ணி வச்ச கல்யாணம்டா அந்த‌ கோபத்துலதாண்டா கடைசி வரைக்கும் திமுக பக்கமே போகாம இருக்கேன் என்னோட வலி எனக்கு மட்டும்தாண்டா தெரியும்..”

நல்ல மனைவி – தயாளு அம்மாள்

இந்த பிரேமலதாவின் ஆணவ பேட்டியினை இப்பொழுதுதான் காண முடிந்தது இந்த தயாளு அம்மாள் இருக்குமிடம் நோக்கி கைகூப்பி வணங்க தோன்றுகின்றது தமிழகத்தில் எந்த பெண்ணுக்கும் இல்லாத வரலாறு தயாளு அம்மாளுக்கு உண்டு 1950களில் இருந்து அவர் கையால் உண்ணாத அரசியல் தலைமுறை தலைவர்கள் யாரும் இதுகாலம் வரை இல்லை, கலைஞரின் அருகிருந்தே அவரை காத்தவர் அவர், அவருக்கு வேராக இருந்தவர் ஏன் முக ஸ்டாலினே தயாளு அம்மாள் அனுபவம் முன் நிற்க முடியாது. பெரியார் காலம் முதல் […]

பிரிட்டனின் சம்மட்டி அடி

இந்த ஐ.நா, போர்குற்றம், முள்ளிவாய்க்கால், தமிழருக்கு நியாயம் என அலைந்த கோஷ்டிகள் தலையில் சம்மட்டியால் அடித்திருக்கின்றது பிரிட்டன் போர்குற்ற விசாரணை அறிக்கையில் பல்டி அடித்து சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வைத்துவிட்டது அதன் அறிவிப்பு தமிழருக்கு உதவியாக இல்லை மாறாக சிங்கள தரப்பை காப்பாற்றுவதாகவே அமைந்திருக்கின்றது லண்டனில் இருந்துகொண்டு இந்தியா ஈழத்தை அழித்தது என ஒப்பாரிவைக்கும் கோஷ்டிகள் ஏதும், பாரிசில் , கனடாவில் இருந்து இப்பொழுது எதிர்த்ததாக தெரியவில்லை எதிர்த்தால் மிதித்து இலங்கைக்கு விரட்டிவிடுவார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் […]

தேர்தல் துளிகள் 08/03/2019

ஜெயலலிதா என்கிற அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் : ராஜேந்திர பாலாஜி மோடி ஒரு “தாயுமானவர்” என்கின்றார் அமைச்சர் “அம்மாவும் நீயே.. அப்பாவும் நீயே..” என விரைவில் அவர்கள் பாடினாலும் பாடலாம். ஆக மே மாதத்திலிருந்து அனாதை ஆக போகின்றார்கள், பாவம் ********* “இவுகள தூக்கி போட்டாலும் அரசியலுக்கு போகாம ஓடி வந்து ஒளிஞ்சுக்கிறதுலும் அர்த்தம் இருக்கு ஒருவேளை இவர் போயிருந்தா பிரேமலதா மாதிரிதான நாமளும் வாங்கிகட்டணும், நம்ம மானத்த […]

உலக மகா பொய்

கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது அவரைக் காண முதலில் அனுமதி கேட்டது விஜயகாந்த் . கடைசி வரைக்கும் ஸ்டாலின் அனுமதி தரவில்லை: பிரேமலாதா உலகமாகா பொய் என்பது இதுதான், பச்சைபொய் என்பது இதுதான் உடல்நலம் சரியில்லா நிலையிலும் கலைஞரை காண யாருக்கும் தடை இல்லை, அப்படி விதிக்கபடவுமில்லை எல்லோரும் சென்று பார்த்தார்கள் ஏன் மிக சாதாரணமான அற்பபதரான‌ என்னாலே அவரை சந்திக்க முடிந்தது அதிகாரமிக்கோரும் செல்வாக்கு மிக்கோரும் சமூகத்தின் மிக கீழ்மட்டமான என் போன்றோரும் அவரை காணமுடிந்தது கலைஞர் […]

விசா மறுப்பு

பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயித்தை விசாரிக்க அமெரிக்க அதிகாரிகளுக்கு விசா மறுத்தது பாகிஸ்தான் இந்த ஹபீஸ் சயித் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலில் மட்டுமல்ல 2008 மும்பை தாக்குதலிலும் பெரும் தொடர்பு கொண்டவன் அவனை விசாரிக்க தடை போட்டிருக்கின்றது இம்ரான்கான் அரசு. இம்ரான்கான் இன்னொரு மண்டேலா என சொல்லிகொண்டிருந்த பயலை எல்லாம் பிய்ந்த செருப்போடு தேடிகொண்டிருக்கின்றேன்

சர்வ தேச பெண்கள் தினம்

1908 – மார்ச் 8. நியூயார்க் நகர ஆலைகள் அனைத்தும் செயலற்று போயின, உலகம் அதுவரை கண்டிராத புதிய பரபரப்பு, இப்படியும் நடக்குமா? என வியந்த அதிசயம். காரணம் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எல்லாம் வீதியில் திரண்டு ஊர்வலமாக போராட‌ புறப்பட்டனர். பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம்பளம் வேண்டும், வேலை நேரத்தினை எட்டு மணி நேரமாக குறையுங்கள் , என்றெல்லாம் கோரிக்கை வைத்து உலக வரலாற்றிலே அதிரடியாக பெண்கள் புரட்சி நடந்தது. இந்த போராட்டத்தின் […]

வாழ்த்துக்களை சொல்லி வைப்போம்

மிக பெரும் எதிர்பார்பினை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் பெண்கள் இவர்கள், பெரும் எதிர்காலம் உண்டென இப்பொழுதே கணிக்கபட்டிருக்கின்றது டெல்லியில் இவர்கள் குரல் விரைவில் அதிர வைக்கலாம் இந்தியாவுக்கு அவரும், தமிழகத்திற்கு இவரும் பெண் ஆளுமை அரசியல்வாதிகளாக வரலாம் என சில கணிப்புகள் சொல்கின்றன. இப்பொழுதே வாழ்த்துக்களை சொல்லி வைப்போம் (இருவருக்குமே உடன்பிறப்புகள் மிக‌ சொதப்பும் வாய்புகள் அப்படியே பொருந்தியிருப்பது ஆச்சரியம்..).