பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒன்று உறுதியாக சொல்லலாம்

ஆட்சியிலும் கட்சியிலும் இல்லாத சஞ்சாய்காந்தி ஒரு காலத்தில் ஆடிய ஆட்டம் வரலாற்றில் இருக்கின்றது தேசியம் என்ற பெயரில் சில நேரம் எல்லை மீறி இந்திரா ஆடிய ஆட்டமும் அங்கேயே கல்வெட்டாக பதிந்திருக்கின்றது அவர்கள் இருவர் அளவும் இன்னொருவர் ஆடமுடியாது, அட்டகாசம் செய்யவும் முடியாது அதை எல்லாம் மறைத்துவிட்டு பாஜக பாசிச கட்சி என்பதும், காங்கிரசுக்கு பச்சை கொடி காட்டுவதும் என்ன வகையோ தெரியவில்லை சஞ்சாய் இந்திரா காலங்களை விட இக்கால பாஜக ஆட்சி ஒன்றும் கொடியது அல்ல‌ […]

ராணுவ அரசியல் இல்லையா?

ராணுவ நடவடிக்கையினை அரசியலாக்கிய முதல் கட்சி திமுக‌ ஆம் இலங்கைக்கு படை அனுப்பிய‌ தமிழரான அதாவது அப்பொழுது இந்திய ராணுவ தளபதியாக இருந்த சுந்தர்.ஜியின் திட்டத்தை, அவர் அனுப்பிய படையினை விமர்சித்து இங்கு அரசியல் செய்தவர்கள் இவர்கள்தான் ஆம் இலங்கைக்கு படை அனுப்பிய இந்திய ராணுவ தளபதி தமிழர், இங்கே அந்த ராணுவத்தை எதிர்த்து கூப்பாடு போட்டதும் தமிழர்காவல் திமுக‌ சொந்த நாட்டு ராணுவத்தை கற்பழிப்பு படை, தமிழ்ர் ஒழிப்பு படை என சொல்லி அயோக்கிய அரசியல் […]

விரைவாக வாரும்

சுவர் இல்லாமல் சித்திரமில்லை, நீர் நிலையாய் நிற்க நாங்கள் எல்லாம் வரைந்து மகிழ்ந்தோம் கல் இல்லாமல் சிலை இல்லை, உம்மை நொறுக்கி அடித்து உடைத்து அழகிய சிற்பம் வடித்தோம் மரம் இல்லாவிட்டால் பறவைகள் எங்கு தங்கும்? நீர் நீட்டிய கிளைகளில் மகிழ்ந்து ஆரவாரமாக மகிழ்ந்தோம் நீர் களத்தில் இருந்தவரை அந்திமாலை பறவை கூட்டமாக எவ்வளவு ஆரவாரமாக நாங்களெல்லாம் இருந்தோம் இப்பொழுதெல்லாம் நீங்கள் கனத்த அமைதி, அதனால் வற்றிவிட்ட நதிகரையில் இருப்பது போல் ஒரு வெறுமை மனதில் அமர்கின்றது […]

சிறுநீரிலிருந்து யுரியா

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சிறுநீரில் இருந்து யூரியா எடுக்க வேண்டும் என சொன்ன விஷயம் செல்லூர் ராஜூ போல விமர்சிக்கபடுகின்றது அவர் சொன்னது வியப்பல்ல, அது உலகெல்லாம் நடக்கும் விஷயமே அதாவது மேல் நாடுகளில் வீடுகளும் அதன் அமைப்பும் திட்டமிட்டு கட்டபடுவதால் மனித கழிவுகள் இந்திய வீடுகளை போல குழிக்குள் இறங்குபவை அல்ல, மாறாக தூரமாக ஆழ்பதிந்த குழாய் மூலம் கொண்டு செல்லபட்டு அவை சில வேலைகளுக்கு பின் உரம் ஆக்கபடும் அது விவசாயத்திற்கு பயன்படுத்தபடும், […]

வெடிக்கும் சர்ச்சை

ராணுவ சீருடை அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்: வெடிக்கும் சர்ச்சை எப்படி ராணுவத்தில் இல்லாதவர்கள் அந்த உடை அணியலாம் என கடும் எதிர்ப்பு கிளம்புகின்றது பாகிஸ்தான் மேலான தாக்குதலை அடுத்து இப்படி அவர்கள் ஆதாயம் தேடுவதாக எதிர்கட்சிகள் கிளம்புகின்றன‌ ராணுவ உடை அணிந்த முதல் பாஜக உறுப்பினர் யார் தெரியுமா? மோடி இன்னொன்று இந்த ராணுவ சீருடையினை திமுக கூட்டணியால் விமர்சிக்க முடியாது, இதோ வைகோவின் படத்தை பாருங்கள்..

நிலத்தடி நீர் வரம்பு

நிலத்தடிநீரை வரம்பு மீறி உறிஞ்சி வற்றச் செய்வதைத் தடுக்கவும், நிலத்தடிநீர் பயன்பாட்டுக்கு ஒழுங்காற்று முறைமை வலுவாக ஏற்படுத்தவும் ‘தண்ணீர் காப்புக் கட்டணம்’ விதிக்க உத்தேசித்திருக்கிறது மத்திய அரசு. ராணுவத் தேவை, விவசாயத் தேவை, வீடுகளின் குடிநீர்த் தேவை ஆகியவற்றுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும் அது முடிவு செய்திருக்கிறது நிச்சயம் செய்ய வேண்டிய விஷயம் இது ஆனால் விடுவார்களா? “என் நிலத்து நீரை எடுக்க உனக்கு ஏன் வரி? அணை கட்டினாயா? நீர்மட்டம் உயர்த்தினாயா? குளத்தில் நீர் […]

புட்டீன் கடிதம்

நவீன துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவெடுத்திருந்தது இந்தியா, பேச்சுவார்த்தை எல்லாம் நடத்தினார்கள் ஆனால் புல்வாமா இன்னபிற சம்பவங்களால் நிலமை மாறிவிட்டது இந்த நேரத்தில் ரஷ்யா காத்த மவுனம் இந்திய தரப்பு எதிர்பாராதது, புட்டீன் அப்படி கனத்த மவுனமாக இருந்தார் இன்று வாய்திறந்திருக்கின்றார், அதுவும் கடிதமே அனுப்பியிருகின்றார் அதன்படி ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் ரஷ்ய பங்களிப்புடன் இங்கே தயாரிக்கபடும் , அதனால் இந்திய பாதுகாப்பு வலுப்படும் என சொல்லியிருக்கின்றார் ஆக அமெரிக்காவுக்கான இந்திய டீல் இப்பொழுது […]

பணம் நமக்கு சாவு அவர்களுக்கு

“உங்கள் எப்16 விமானத்தை எங்கள் நாட்டு மிக் வீழ்த்திவிட்டது பார்த்தீர்களா? ஆமாம் நன்றாக இன்னும் வேலை செய்கின்றது இனி பாகிஸ்தானுக்கு எப்117 எப்பொழுது கொடுப்பீர்கள்? நீங்கள் இந்தியாவுக்கு AMRAAM லேட்டஸ்ட் எப்பொழுது கொடுப்பீர்களோ அப்பொழுது நாங்கள் AMRAAM R- 77ல் இருக்கின்றோம் அது R-100 ஆகும் பொழுதுதான் R-77 கொடுப்போம் நாங்கள் 6ம் தலைமுறை விமானம் F 200 செய்துவிட்டபின்புதான் F117 கொடுப்போம் ஆக அவர்களால் நமக்கு எவ்வளவு லாபம் பார்த்தீர்களா? பின்னே நமக்கு பணம் அவர்களுக்கு […]

வேலை வந்தாயிற்று

சென்னை வருகின்றார் மோடி ஆக வைகோ , திமுக கோஷ்டிக்கு வேலை வந்தாயிற்று மோடியால் கருப்பு பலூன் செய்பவர்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு தெரியுமா? கருப்பு கொடி நெய்பவர்களுக்கு அதைவிட பெரும் வேலை வாய்ப்பு பலூன் சந்தை கூட மோடியால் புத்துயிர்பெற்றிருகின்றது என்பதுதான் மோடியின் சிறப்பு இதற்குத்தான் தென்கொரியாவில் விருது கொடுத்திருப்பார்களோ? சொல்லமுடியாது கருப்பு பலூன் செய்வதிலும் பறக்கவிடுவதிலும் தென்கொரிய தொழில்சாலை பங்கும் இருக்கலாம் போல தமிழக மீடியாக்கள் அது செய்யும் விவாதங்கள் அதில் வரும் விளம்பர […]

நிச்சயம் சரி அல்ல

ஒரு பொறுப்பான குடியரசு தலைவர் இப்படி ஜக்கிசாமி ஆட்டத்திற்கு எல்லாம் வருவது நிச்சயம் சரி அல்ல‌ பொற்கோவில் தாக்கபட்டபொழுது சீக்கியர் எதிர்த்தும் ஜனாதிபதியாக காண சென்றார் ஜெயில்சிங், தீவிரவாதி சுட்டதில் அவரின் காதோரம் உரசி சென்றது தோட்டா அப்படிபட்ட நாட்டுபற்று மிக்க ஜனாதிபதிகள் இருந்த தேசத்தில் ஒரு சாமியாரின் நிகழ்சிக்கு ஜனாதிபதி வருவது ஏற்றுகொள்ள கூடியது அல்ல‌ நாமே கேட்கின்றோம் புயலாலும் தூத்துகுடி சம்பவத்தாலும் தமிழகம் பாதிக்கபடும் பொழுது இங்கு வராத அதுபற்றி பேசாத ஜனாதிபதி சாமியார் […]