பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் நேரமல்லவா

இந்த ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா, சங் பரிவார் எனப்படு சங்கிகள், மண்ணின் மதம் என சீறும் மங்கிகளுக்கு எல்லாம் சிந்து நதி என்பது பெரும் கனவு எப்படியாவது அகண்ட பாரதம் அமைத்து, சிந்து நதி இந்தியாவில் ஓடுகின்றது என சொல்லவேண்டும் என்பது அவர்களின் லட்சியங்களில் ஒன்று யார்தான் அக்கனவினை காணவில்லை? அலெக்ஸாண்டர் கண்டான், என் ராஜ்யத்தில் சிந்து ஓடவேண்டும் என படையெடுத்தான், அவனுக்கு பின் ஏராளமானோர் படையெடுத்தனர் பின் பிரிட்டிஷ் சாம்ராயத்திலும் அந்நதி ஓடியது அந்த […]

சர்வதேச அரசியல் விளையாட்டா நதி விவகாரம்?

பாகிஸ்தானை அடித்து துவைத்து வழிக்குகொண்டுவருவதை விட , ஏராளமான உயிர்கள் பலியாகி அவர்கள் அமைதியாவதை விட மிக எளிதான குறுக்குவழி உண்டு கத்தியின்றி ரத்தமின்றி அவர்களை கதறவைக்க முடியும் ஆம் பாகிஸ்தானுக்கான ஒரே மற்றும் மிகபெரும் நீர் ஆதாரம் சிந்து நதி. அது ஒரே நதி அல்ல மாறாக சட்லெஜ், பியாஸ், ராவி, ஜீலம் , சிந்து என ஐந்து நதிகள் கலந்து பாகிஸ்தானுக்குள் ஓடும் பிரமாண்ட நதி அந்நதியாலேதான் இந்நாடு இந்தியாவாகவும் அந்த நதிக்கரை மதம் […]

புல்லட்டில்

1970களில் முக ஸ்டாலின் மிசாவில் அடிவாங்கும்பொழுது ஒருவர் எடப்பாடி கிராம வீதிகளில் புல்லட்டில் சுற்றிகொண்டிருந்தார் அந்த சாதாரண புல்லட் சவாரிக்காரன் பின்னொரு நாளி முக ஸ்டாலினுக்கு பெரும் அரசியல்தலைவலியாக மாறுவான் என யாராவது நம்பியிருக்க முடியுமா? காலம் யாரை எப்பொழுது எங்கே நிறுத்தும் என்பது நம் கையில் இல்லை என்பதும், குறித்த நேரம் வரும்பொழுது பல தத்துவங்கள் விளங்கும் என்பதும் இதுதான் விதியின் கரங்கள் இழுக்கும் பொழுது தெரியாது, எங்கவாது நிறுத்து வைத்து அது சிரிக்கும்பொழுதுதான் தெரியும் […]

அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்

தம்பி, ஒண்ணு நுட்பமா விளங்கிகிடனும், நடக்குறது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், நாம போட்டி போட்டு 40 தொகுதிலியும் ஜெயிச்சிட்டா நம்மள பிரதமராக்கிருவாங்க‌ அப்புறம் தமிழர் பிரச்சினைய பேசமுடியாது, காஷ்மீர பாரு, பீகார பாருண்ணு தமிழர் பிரச்சினையில இருந்து நம்மள காலிபண்ணிருவானுக‌ ஈழவிடுதலைக்காக அண்ணன் கொடுத்த துப்பாக்கி பயிற்சி எல்லாம் நான் பாகிஸ்தான் போரில் வீணாக்கணும் அதுமட்டுமா ராஜபக்சே வந்தா கைகொடுக்கணும் கும்பிடனும், அதுதான் இவங்க திட்டம், தாங்குமா? நடக்குமா? ஈழபிரச்சினை காவேரின்னு நமக்கு ஏகபட்ட வேலை இருக்கு அதை […]

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (2)

பயப்படாம வாங்க “அண்ணே புரொகிராம் சொல்லுங்க.. இப்போ இந்திய கம்யூனிஸ்ட்கிட்ட பேசபோறோம் 3 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் அப்புறம் 3.30க்கு வாசன் வருவார் அப்புறம் 4 மணிக்கு மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் தொகுதி புடுங்க வருது அப்புறம் 5 மணிக்கு திருமா வருவார், அவரோட மல்லுகட்டனும் அப்புறம் 6 மணிக்கு வைகோ வருவார், அவருக்கும் தொகுதி கொடுக்கணும்.. அப்புறம் அதுக்கப்புறம் நம்ம கட்சிக்குள்ள சண்டை வரும், கனிமொழி குரூப் , தயாநிதி குருப்புண்ணு அடுத்த பங்கீடு அண்ணே அதை […]

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (1)

திமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது: முக ஸ்டாலின் பேச்சு இதுவரை தோற்ற படு தோல்வி பற்றி கேளுங்கள், அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் என வடிவேலு பாணியில் பதில் வரும் கூட்டணி உடன்பாடு காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு அந்த பத்து தொகுதியில் ஒன்றை தலைவி குஷ்புவிற்கு ஒதுக்க வேண்டியது காங்கிரசின் கடப்பாடு கட்டாய திருமணம் அதிமுக கூட்டணி கட்டாய திருமணம் : திருநாவுக்கரசர் மிஸ்டர் திருநா, […]

இன்றைய துளிகள் (1)

மக்கள் நீதி மய்யம் மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் ஓராண்டாக என்ன செய்தார், மய்யம் எங்கே வளர்த்திருக்கின்றது என பார்த்தால் ஒன்றுமே இல்லை கட்சி தொடங்கும் பொழுது அருகில் இருந்த ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்களை கூட இப்பொழுது காணவில்லை சொல்லிகொள்ளாமல் ஓடிவிட்டார்கள் போலிருக்கின்றது திரையில் கமலஹாசன் ஜெயித்திருக்கலாம் ஆனால் அரசியலில் கேப்டன் விஜயகாந்த் பக்கம் கூட அவரால் வரமுடியாது என்பதுதான் நிஜம் பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் சுமை வெள்ளையன் கல்வி […]

தேர்தல் துளி – 20 பெப்ரவரி 2019 தொடர்ச்சி

கொஞ்சம் அரசியல் ஆசையில் இருந்த விஜயகாந்தினை , அவர் மண்டபத்தை இடித்து அரசியலுக்கு தள்ளிய கட்சி திமுக‌ விஜயகாந்த் சிவந்த கண்களோடு அரசியலுக்கு வர முக்கிய காரணம் அது வந்ததும் “தெய்வத்தோடும் மக்களோடும் மட்டுமே கூட்டணி ” என முழங்கினார் திமுக அதிமுக என இரு கட்சிகளையுமே எதிர்த்து நின்றார், அவர் குடிகாரர் என்றெல்லாம் கலாய்த்தார்கள் அவரோ தனித்துதான் நின்றார், முதலில் கூட்டணி எல்லாம் இல்லை. ஒரு கட்டத்தில் அரசியல் சிக்கல் புரிய ஆரம்பித்தது, அவரை மிக […]

இன்றைய துளிகள் (2)

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து நியூசிலாந்து நாடு முதலாவதாக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இந்தியராக அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை நீதி நியாயத்தை உணர்ந்த தேசமாக நியூசிலாந்து இருப்பதால் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இத்தேசம் வணங்குகின்றது இனி நம் சகோதர நாடு நியூசிலாந்து அப்படியே மசூத் அசார் ஒரு சர்வதேச தீவிரவாதி என அறிவித்த ரஷ்யாவிற்கும் கோடி நன்றிகள் ****** நாளை உலக தாய்மொழி தினமாம் நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ் தமிழுக்கு […]

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகசிறந்த பயன் என்னவென்றால் அரசியல்வாதிகளின் பழைய பேச்சையும் அறிக்கையினையும் அப்படியே வைத்திருந்து இப்பொழுது கொடுப்பது ஒவ்வொரு பயலும் எப்படி எல்லாம் பல்டி அடித்துகொண்டிருக்கின்றான் என்பதை கண்முன் காட்டும் தொழில்நுட்பமே நீ வாழ்க.. இந்திய / தமிழக அரசியல்வாதிகளின் மாபெரும் எதிரி இன்று தொழில்நுட்பம் ஒன்றே அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என இளங்கோ அக்காலத்திலே சும்மா சொல்லவில்லை அறக்கடவுளின் விஞ்ஞான வடிவம் இன்றைய‌ தொழில்நுட்பம் என்பது ஆகசரியானது , ஒவ்வொரு போலி அரசியல்வாதியின் முகத்தையும் […]